Thursday, March 21, 2024

தினம் தினம் (ஏதோ) ஒரு தினம் வந்து போகும்: கவிஞர் தணிகை

 தினம் தினம் (ஏதோ) ஒரு தினம் வந்து போகும்: கவிஞர் தணிகை



இன்று கவிதை தினமாம், நாளை(உலக தண்ணீர் தினம்: மார்ச் 22 சர் . ஆர்தர் காட்டன் பற்றி அறிக‌) தண்ணீர் தினமாம், நாளை மறு நாள் பகத் சிங் நினைவு நாள் (மட்டுமல்ல) தணிகையின் தினம் கூட.(மார்ச் 23)  கருக் கொண்டு உயிராகி சீர் உடல் கொண்டு வெளி வந்த 22646 ஆம் நாள். அதில் லீப் ஆண்டு மட்டும்:16 .63ஆம் அகவையில் அடி எடுத்து வைத்து மறுபடியும் பூமியில் இருந்து கதிரை சுற்ற ஆரம்பித்திருக்கிறேன். 

சிலர் குறுகிய காலமே இருந்து புகழ் அடைந்து வாழ்வின் பொருளை அடைகிறார். பகத் சிங்.சிலர் 104 வயது எங்கள் ஊர் பெரியவர் போல விழாவுக்கு வந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து சிவ புராணம் முழுதையும் பார்க்காமல் இந்த வயதிலும் தெளிவாக ஓதி இருக்கும் இடத்தை மேன்மைப் படுத்தி அனைவரையும் வாழ்த்துகிறார்.அரிய சந்திப்புகள் அரிய நிகழ்வுகள் நிகழ்ந்தபடியேதான் இருக்கின்றன.


எல்லாம் கணக்குச் சொல்கின்றனர்.கணக்கு வைத்துக் கொள்கின்றனர். கணக்குத் தீர்ந்து போகும் வரை.சுதந்திர சரிதம் நிகழ்ந்த நாட்டில் வேடிக்கைப் பேச்சுகள் எண்ணிறந்தன. அதில் இதுவும் ஒன்று.தினம் இறந்து புதிதாகப் பிறந்து பார்க்கச் சொல்லும் தத்துவங்கள்.


நான் ஏன் பிறந்தேன்? என அனைவருமே கேட்க: தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று எனும் வள்ளுவம்.


உண்மை ஒளியை ஏந்திச் செல்வோம் சத்திய நெறியை தாங்கிச் சொல்வோம்.போலிகளுடனும் புரட்டுகளுடனும் சேராமல் தனித்தியங்குதலும் இயற்கையின் மொழியை புரிந்து வாழ்தலும் வாழ்வின் பொருள் என்போம்.


இங்கு பத்தாண்டு கழிந்து ஒரு மனமாற்றம் நிகழ்ந்ததைக் கண்கூடாகக் கண்டோம்.அசோகர் மனம் மாறியதாக, அலெக்ஸாண்டர் மனம் மாறியதாக ஆரம்ப கால சரித்திரங்கள்...புத்தர் மனம் தெளிந்தார் சித்தர்கள் மணம் பரப்பினார் எல்லாம் இவ்வுலகிலே. 


என் அருள் என்றார் ஒருவர். அவர் இயற்கையை படைத்தவர் போல, இயற்கை அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டது சில நாட்களிலேயே. எல்லார்க்கும் ஒரு இடம் உண்டு. அதை நாம் கண்டடையும் வரை சென்று கொண்டே இருப்போம்....


மனிதம் யாவும் ஒரே குலம் என்றார் கணியன் அதையே அறிவியலறிஞரும், ஆன்மீக அறிஞர்களும் சொல்கின்றனர் தாம், நான் என்பது அழிய...நீ யார் என்றால் மனிதர் என்று சொல்லச் சொல்லிக் கொடுத்திருப்பது அறிவு.


உலகெலாம் ஒரே குலம், ஒரே மாண்பு என மனிதம் மாறும் போது அனைவர்க்கும் தாகத்துக்கு நீர் கிடைக்கும், பசிக்கு உணவு கிடைக்கும், சமமான கல்வி கிடைக்கும், தரமான மருத்துவம் கிடைக்கும் உறவுகள் சீர் பெறும், உலக வறுமையும் பிணியும் போக்கப் படும் அப்படிப் பட்ட மானுடத்துக்கு பாடுபட்ட உயிர்களுக்கு எல்லாம் நன்மை செய்ய விழைந்த , விழையும் விழையவிருக்கும் அத்தனை மேன்மையான  உயிர்கள் அனைத்துக்கும் இந்நாளின் வணக்கங்களும், வாழ்த்துகளும், நன்றிகளும் காணிக்கையாக...


கர்வம் மனிதத்திடம் மட்டுமே உள்ளதாக புவி சொல்கிறது.

 நாடுகளின் கோடுகள் கூட இயற்கைக்கு இல்லை.ஆகாயம், காற்று, தீ, நிலம் , நீர் அவற்றில் எழுந்த யாவைக்கும் யாவும் சொந்தம். நன்றி வணக்கம்.

வாழ்த்துகளுடன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment