Sunday, December 29, 2024

மறுபடியும் ஒரு பத்து:10 :கவிஞர் தணிகை

 பசியும் கொசுவும் தியானத்துக்குத் தடைகள்



மேடும் பள்ளமும் தான் வாழ்வு


வளிமண்டல நதிகள் புவி வரலாற்றில் புதிது


உண்மை ஒரு நாள் பேசும்,

சத்யம் சுனாமியாகும் நாள் புவி தாங்காது...


 புவிக்கு மேற்கே சூரியன் உதித்து வந்ததாகவும் நிலவின் இயக்கம் அதை

மாற்றியதாகவும் ஒரு விந்தை செய்தி கடந்தேன்...


யமம் ஐந்து ஒரு கை விரல்கள் ஐந்து


விழுங்கிய கோழிக் குஞ்சு உயிருடன் இருக்க‌

விழுங்கியவர் இறந்த செய்தி இந்நாட்டில்...


நிறைய உயிரினங்களைக் காணோம் என்கிறது புவியியல்


நிறைய அழிவின் போக்கு நிகழ்கிறது என்கிறது அறிவியல்


விளையாட்டிலும் உண்பதிலும் கூட‌ வரி முன் வந்து நிற்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Saturday, December 28, 2024

புதுசாம்பள்ளி சுடுகாட்டில் நவீன தகன‌ எரிவாயு மேடை: கவிஞர் தணிகை

 புதுசாம்பள்ளி சுடுகாட்டில் நவீன தகன‌ எரிவாயு மேடை: கவிஞர் தணிகை



கடந்த 21.12.2024 முதல் புதுசாம்பள்ளி சுடுகாட்டில் வீரக்கல் புதூர் பேரூராட்சி சார்பாக நவீன  தகன எரிவாயு  மேடை செயல்பட்டு வருகிறது.


 இந்த சுடுகாட்டில் எல்லா இடங்களும் சமாதிகளால் நிறைந்திருக்க இடப் பற்றாக்குறை நீக்க‌ இதெல்லாம் காலத்தின் கட்டாயம். அவசியத் தேவையும் கூட.


எல்லா சமாதிகளையும்  இடித்து நிரவி விட்டு மறுபடியும் கூட சில பிரபலமான நாடுகளில்  இடங்களில் சமாதி அமைவதாக அமைப்பதாக‌ படித்திருக்கிறேன்.


எனவே மனித வாழ்வில் நிலையாமை அலையாமை கருத்து செறிவுடன் இந்த நவீன தகன எரிவாயு மேடை அமைக்கப் பட்டு செயல்பட்டு வருவது வரவேற்கத் தக்கதாகவே கருதுகிறேன்.அரசுக்கு நன்றி செலுத்தலாம். அதன் கட்டணம் மற்றும் விவரங்களுக்கு:

தொடர்பு எண்கள்

98945 99297

82488 08824

என்ற எண்களும் விளம்பரப் பதாகைக‌ள் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

P.S:

முன்பெல்லாம் இதற்காக நவீன முறைக்காக‌ இந்தப் பகுதியில் இருந்து கீழ் மேட்டூருக்கு சுமார் 10 கி.மீ தொலைவுக்கு சென்று இந்த தேவையை நிறைவு செய்ய வேண்டி இருந்தது. இப்போது இங்கேயே செயல்பட ஆரம்பித்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.

இது பொருட் செலவையும் குறைக்கும் என்றே நம்புகிறேன்


Friday, December 27, 2024

2024 ஆம் ஆண்டின் கடைசிப் பதிவுடன் உயிருடன் இருக்கிறேன்: கவிஞர் தணிகை

 2024 ஆம் ஆண்டின் கடைசிப் பதிவுடன் உயிருடன் இருக்கிறேன்: கவிஞர் தணிகை



...எல்லாந்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க...பட்டுக் கோட்டை. இப்ப யாரும் படிப்பதாகக் கூட காணோம்.நண்பர் ஒருவர் தமிழ் எழுதத் தெரியா அளவில் சிறுத்து வருவதாகவும் அதற்கு பணிச் சேவை செய்து வளர்க்க வேண்டிய நிலையும் உள்ளது என்கிறார்.அவர் முயற்சி வெல்லட்டும்


கடந்த சில மாதங்களுக்கும் முன்  3 மாதம் கபாலீஸ்வரர் கோவிலில் பணிச் சேவை புரிந்தேன். மாதம் ரூபாய் பத்தாயிரம் ஊதியத்துடன் தாம். பின் எப்படி பணிச்சேவை என்கிறீர்...அதைப் பற்றி சுருக்கமான இந்தப் பதிவு விளக்காது.


சாவின் விளிம்பை வெள்ளம் வழியாக,பாம்பின் வழியாக , நோய்களின் வழியாக பல முறை தொட்டு வந்திருக்கிறேன் இந்த முறை கபாலீஸ்வரர் கோவில் பணிச்சேவை மூலம்.


எனைப் பற்றி அறிந்தார்க்கு இந்தக் கோவில் உருவாக 18 மாத ஊதியமற்ற எனது சேவை எவ்வாறு 2014 செப்டம்பர் 08ல் குடமுழுக்கு வரை ஒருங்கிணைப்பாளராக , பொருளாளராக பயன்பட்டது அதன் பின் கணக்கு சமர்ப்பிக்கப் பட்ட பின் வினாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரிக்கு மக்கள் தொடர்பு அலுவலராக 6 ஆண்டு பணி புரிந்து அதன் பின் 60 வயது நிறைவுக்குப் பின் வெளி வந்தது இதெல்லாம் தெரியும்.


மீண்டும் கோம்பூரான் காட்டில் உள்ள இந்தக் கோவிலின் பிரதான பங்கெடுப்பாளர் எனை அழைத்து தமது நிலையை விளக்கி உதவி கோர, நானும் இணங்க...


முதல் மாதம் சென்றவுடனேயே காலை 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்க வேண்டும் மாலை இரவு 08 மணி வரை இருக்க வேண்டும் என்ற உத்தரவை அமல் படுத்தியபோதே...அப்போதிருந்த ஒரு அர்ச்சகர் ஜகா வாங்கி விட்டார். கல்தா...


உடனே  அர்ச்சகர் தமிழ் முறை ஓதுவார் பயிற்சி பெற்ற சிவனடியார்  இராமசாமி ஒரு மாதம் அர்ச்சகராக பணி புரிய நமது பிரதான பங்கெடுப்பாளர் அவரை தினமும் விடியல் காலம் 04 மணிக்கு அதிகாலை எழுப்பி தொந்தரவு தர அவரும் குடும்ப சூழல் காரணமாக பணியை புறந்தள்ளி விட்டார்.


இதன் காரணமாக எல்லாப் பணியும் குருவித் தலையின் பனங்காயாக...என்னிடம்.உடன் பணிக்கு ஆலயத் தூய்மைக்காக இரு பெண்டிரை நியமித்தேன். கோவில் மூலவர் கர்ப்பக் குடில் முதல் வெளி வாசல் கோலம் வரை தூய்மையாக மாறியது அதன் இடையே சொல்ல வேண்டாத நிறைய முரண்களை  வெளித் தள்ள வேண்டியதிருந்தது.


எமது பிரதான பங்கெடுப்பாளர் போடும் நிபந்தனைக்கு தற்கால எந்த அர்ச்சகருமே இணைந்து வரவில்லை.ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, மேச்சேரி இப்படி பல பகுதிகளில் இருந்தும் வந்த எந்த அர்ச்சகரும் பணியை ஏற்கவில்லை.


கோவில் பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பதாகச் சொல்லி அதை முழுமையாக விடமுடியாத பிரதான பங்கெடுப்பாளர் அவ்வப்போது அவரின் நிர்பந்தங்களையும் நிபந்தனைகளுடன் என்னிடம் திணிக்க முற்பட்டார். அவர் விருப்பத்திற்கேற்ப மட்டுமே அனைவராலும் குழுவாக அணியாக தொண்டுள்ளங்களுடன் கட்டப் பட்ட கோவில் நிர்வாகம் நடப்பதாகவே செல்வதாகவே இருந்தது, அதை அவர் வேறு எவரிடமுமே எந்நாளுமே அவர் இருக்கும் வரை கொடுக்கவும் மாட்டார் எனவும் தெரிந்ததே.


கோவில் நிரவாகம், பூஜை, அத்துடன் இணைந்த அன்னதானக் கூடம் எனச் சொல்லப் படும் சிறு மண்டப நிர்வாகம் யாவும் பணிப் பட்டியலில் மேலும் பூக்கள் மரங்கள் நீர் செலுத்தல் உட்பட, நீர் விநியோகம் யாவும் பல நிலைகளுடன், தோட்டம், கோவில், மண்டபம் ஏன் சொல்லப் போனால் அவரின் கம்பெனி வரை என்று கூட சொல்லலாம்.


எனக்கு எப்படி ஏன் உடல் நிலை கெட ஆரம்பித்தது என்பதே தெரியாமல், 1.நடைப்பயிற்சி விடப்பட்டது, 2. சாப்பிடும் நேரம் முறையில்லாமல் போனது, விடிய‌ற்காலம் 3 மணிக்கே எழுந்து 4 மணி அளவில் சென்று சுமார் 15 திருமணங்களை நடத்தி வைத்தது, இப்படி எல்லாம் சேர்ந்து செரிமானமின்றி வயிற்றுப் போக்கு 10 நாட்களில் முதல் 3 நாட்கள் அப்புறம் தேறி 3 நாட்கள் அதன் பின் மீண்டும் 4 நாட்கள் என 10 நாளில்  7 நாள் உணவின்றி நீரை விட மோசமான திரவ நிலையில் வயிறோட்டம்.


மருத்துவம் ஆங்கிலம், கேட்க வில்லை, சப்போட்டாப் பிஞ்சுகள் அரைத்து தயிரில் அதுவும் கேட்க வில்லை. எதுவும் கேட்கவில்லை. வாய், வயிறு, நாக்கு யாவும் புண்...உள்ளே குடல் புண் வேறு இன்னும் பல நிலைகளில் எனக்கு பல நோய்கள் உண்டு என்பதை எனை அறிந்தார் அறிவார்.


நண்பர் சொல்வார் , ஏன் நீங்கள் கோவில் தலத்திலேயே வந்து தியானம் செய்யுங்களேன், யார் வருகிறார் என விழித்துப் பார்த்துக் கொண்டு,கோவில் உள்ளேயே சுற்றுப் பிரஹாரத்திலேயே நடைப் பயிற்சி செய்யலாமே என்றதும்... (என்று) அவர் கடந்த 9 ஆண்டுகளாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் 3 மணியில் அதிகாலையில் இருந்தே கோவில் திறந்திருக்க வேண்டும் என்பார். 


நீங்கள் 9 ஆண்டு பழக்கத்தை விட மறுப்பதை நான் ஏற்கிறேன். அடியேன் 41 ஆண்டாக தியானம் செய்வதை எப்படி விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டு தியானம் செய்ய கோவில் வளாகத்துக்கே வர வேண்டும் என்கிறீர் எனக் கேட்டேன். எல்லாம் சுயநலம்.


மொத்தத்தில் சுருக்கமாக: அதுவும் ஒரு அடைமழைக்காலம் கையில் இருந்த பல ஆயிரங்களை கொண்டு சென்று அதே மனிதரிடம்  டேபிள் மீது கணக்குடன் வைத்து விட்டு திரும்பினேன், அவரின் கருத்துக்கு மாறாக.

அன்றுடன் உடல் நலம் காண ஆரம்பித்தது. வாந்தி என்றால் பெரும் வாந்தி அத்துடன் விடிய ஆரம்பித்தது.நண்பர் சொன்னார், பயணப்படும் பெருமாள் கோவிலில் உள்ள அவர் நண்பர் சொன்னதாக, தூய நல்லெண்ணெய், நெய் மட்டுமே ஏற்ற வேண்டும், கர்ப்பக் குடிலில். அதைத் தவிர வேறு உபயோகம் உட‌லுக்குத் தீங்கே...எண்ணெய், கற்பூர தீபம், ஊது வத்திகள் எல்லாம் சேர்ந்துதான் எனக்கு வினை விதைத்தன,மேலும் நண்பர் அடித்த பூச்சிக் கொல்லி மருந்து....உலகுக்கும் தீங்கே!


அன்று முதல் சுமார் 3 மாத காலம் நல்ல சோறு தின்ன வேண்டியதிருந்தது. தினமும் சுரைக்காய் இரசம் காய் என நீர்ச்சத்து வேண்டி.. மீண்டும் உடல் நலம் ஓரளவு பெற.

இன்னும் அதன் பாதிப்புகள் விலகியதாகக் காணோம்...பசி ஒரே பசி நேரம் வரும் போது உடலை குடலைக் கிள்ளும் சுருட்டும், வயிற்றில் புரட்டும் பசி...


அட நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்...


உடல் வளர்த்தோம் உயிர் வளர்த்தோமே...திருமூலர்


உள்ளம் பெருங்கோவில்...ஊனுடம்பு ஆலயம்...

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!...திருமூலர்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


வாசி: உள் செல்லும் காற்று கற்று...சுவாசம்...வாசிவாசிவாசி...





Monday, December 16, 2024

மேட்டூரில் திப்பு சுல்தான் கோட்டை கார்த்திகை தீபம்: கவிஞர் தணிகை

 மேட்டூரில் கார்த்திகை தீபம்: கவிஞர் தணிகை



கார் திகைவது, மேகம் கலைவது இது முதல் என்பதெல்லாம் காலம் மாறிப் போச்சு. இயற்கை மாறுதல்கள் மட்டுமே நிரந்தரம் என்று உரைப்பதே வாடிக்கையாய்ப் போச்சு.


மழை, புயல்  வளிமண்டல நதிகள், பனிக்கட்டி கரைதல், உருகுதல், பனி மழை யாவும் காலம் மாறி மாறி உயிர்களை வாட்டிக் கொண்டிருக்க வழக்கம் போல அல்ல புதிதான கார்த்திகை தீபம்  இந்த ஆண்டு மேட்டூரில் அது நிறைய பேருக்குத் தெரியாது எனவே இந்தப் பதிவு அவசியமாகிறது சரித்திரமும் ஆகும் இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் போது , தொடருமானால்...


எந்தப் புண்ணியவான்களோ, காவிரி ஆற்றங்கரையில் உள்ள தேசாய், நகர் பகுதி அல்லது வைத்தீஸ்வரா பள்ளிக்கு பின் புறமுள்ள தேங்கல்வாரை திப்பு சுல்தான் கோட்டை , அது மிகவும் சரிசம விகித முக்கோணமாக உச்சியுடன் காட்சி அளிக்கும் குன்று அது.மேட்டூரின் மிக உயர்ந்த பகுத் உச்சி அதுவே.அதன் மேல் கார்த்திகை தீபம் ஏற்றி பட்டாசையும் வெடித்துக் கொண்டாடினர். அதை வழக்கம் போல நடைப் பயிற்சியில் இருந்தபோதே சில பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதும் நானும் நண்பர் ஒருவரும் கண்டு மகிழ்ந்தோம்.


சில ஆண்டுகளுக்கும் முன் இந்தச் செயலை முன்னிறுத்தி ஒரு பதிவை ஒரு நாயகன் முயன்று பார்த்து செய்ய முடியாமையை தன்னைப் பற்ற வைத்து தீபமாக எரிந்து அந்த மலைக் குன்றின் மேல் இருந்து விழுவதாக எழுதிப் பதிவிட்டிருந்தேன் ஒரு இலக்கிய நண்பர்கூட அந்தப் பதிவு சிறப்பாக வந்திருந்ததை பாராட்டி இருந்தார்.


மேலும் அந்த திப்பு சுல்தான் கோட்டை மேட்டூர் நீர்த் தேக்கத்திலிருந்து படிகள் உள் ஓடி மைசூருக்கு செல்வதாக எல்லாம் செய்திகள் உண்டு. அங்கே ஒரு கோட்டைக் கொத்தளத்துக்கு உண்டான எல்லா தகுதிகளும் இருந்ததை சிலமுறை நாங்கள் சென்று கவனித்தது உண்டு. கவாத்து திடல் உட்பட....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

இந்தியன் 2 உள் தொடு வர்மம்: கவிஞர் தணிகை

 இந்தியன் 2 உள் தொடு வர்மம்: கவிஞர் தணிகை



உடலை முற்றிலும் அறிந்தால் உலகையே அறிந்ததாகி விடும்.அந்த அடிப்படையில் அந்நியன் போல எவருக்கு எந்த தண்டனை என்று இந்தியன் சேனாபதி தேர்வு செய்து உடல் மூலம் கொடுப்பதை உறுதியாகச் சொல்லி உள்ள படம்.


இரத்தினச் சுருக்கமாக: அநிருத்துக்கு பதிலாக ஏ.ஆர்.ஆர் , இன்னும் சிறிது கூடுதல் கவனம் மேக் அப்பில், ஒருங்கிணைப்பில் இயக்கத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படம். 


சமூக ஊடகங்கள், ஊடகங்கள் நல்லதை, தீயதாகவும், தீயதை நல்லதாகவும், உண்மையை பொய்களாகவும், பொய்யை உண்மைகளாகவும் மாற்றுகின்ற காலத்தில் நாம்.புஷ்பா மரக் கடத்தல்காரன் கதையை 1000 கோடிக்கும் மேல் சில நாட்களுக்குள் பணம் கொடுத்து பார்த்துக் கொடுக்கும் கூட்டம் இந்தியன் 2 பாகத்தை புறம் தள்ளியதை கவனிக்க முடிகிறது.


அனைவரும் தலைவர்கள் வருவதை நல்ல தலைமைகள் வேண்டுமென்பதை நம்மை பாதிக்காமல் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இது குடும்பத்தையும் சீர்படுத்தினால்தாம் உலகு உய்யும் என அடி நரம்பை தொட்டு இழுத்து சரி செய்ய முயற்சித்த படம் எனவே தாம் இவ்வளவு பெரிய இடி இந்த படத்துக்கும்.


அடியேன் எந்திரன் படத்தை விமர்சித்து அந்தப் படம் வந்த புதிதில் எழுதிய போது முதல் அரை மணிக்குள்ளாகவே உலகெங்கும் இரண்டாயிரம் வாசகர்களுக்கும் மேல் அந்தப் பதிவை படித்தார்கள். அப்படி இருந்த எனது சமூக ஊடகப் பதிவைக் கூட நாளடைவில் மிகவும் சுருக்கிக் கொண்டது இவை யாவும் பயனற்றவையாகவே போய்விடுகிறது என்பதால்தாம்.


இலஞ்சம்,போதை, மது இவை யாவும் சர்வ தேசியம்.இவை பற்றி மதங்கள் என்ன சொன்னாலும் எவரும் கேட்க மாட்டார்கள் ஏன் எனில் வசதிக்கேற்ப சுயநலத்துக்கேற்ப அனைத்தையும் இவர்கள்/ அல்லது மக்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.


ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டும்,அப்படிப் பார்க்கும் போது பொது நல வாதி, வெகுஜனவிரோதி என்ற சமத்துவ கம்யூனிசப் பார்வை குடும்பத்தைக் கூட சீர்குலைத்து ஒவ்வொரு தனி மனிதரும் சமூக மேம்பாட்டின் அங்கமே அனைவருமே சேர்ந்து தூக்கிப் பிடித்தால் தாம் சமூகம் மேம்படும் அதில் ஒவ்வொரு தனி மனிதரின் பங்கும் அவசியமானது என்று வலீயுறுத்திய ஒரே காரணத்தை எவரும் தாங்கிக் கொள்ள முடியாததே உண்மை சுடும் என்பதை, மற்றும் மூன்றும் விரல்கள் அவரவர்களை நோக்கியே சுட்டுகிறது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்தப் படம் வணிகமுறையில் தோல்வியுற்று பெட்டிக்கு சென்று விட்டது என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து


எச்சார்புமின்றி பார்த்தால் இந்தப் படம் மிகவும் மனசாட்சியை உலுக்கும், சுயநலத்தை விட பொதுநலமே உலகை உருவாக்கும் என்ற மாமனிதர்கள் கொண்ட கருத்தே சிறந்தது எனச் சொல்லும் படம்.அதற்காக குடும்பத்தைக் கூட சுதந்திரப் போராட்டத்தில் இழந்தது போல இழக்க வேண்டி இருக்கும் அதையும் தாக்குப் பிடித்தால் மட்டுமே போராட இயலும் என்பதை நன்றாக சொல்லி இருப்பதாக படம் தேவையானது நன்றாக இருக்கிறது என்பதையே சொல்லி விடைபெறுகிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Thursday, December 12, 2024

கனவு மெய்ப்படும்: கவிஞர் தணிகை

 கனவு மெய்ப்படும்: கவிஞர் தணிகை



1. தேர்தல் : மக்களுக்கு அறுவடை

              வென்றார்க்கு மகசூல்


2. உண்மையில்லா இடத்தில் ஒளி இல்லை


3. கனவு மெய்ப்படும் பூ மலர்தல் போல‌


4.பல இழப்புகளுக்குப் பின் தான் வெற்றி


5. விருப்பம்: நிரப்ப முடியாத் தீ


6. ஒருவரின் விருந்து மற்றொருவரின் நஞ்சு


 7. பிறப்பும் இறப்பும் தெளிவில்லை

    வாழ்வே தெளிவுடையது இதில் துயரம் ஏன்?


8. பருவங்கள் மாறுகின்றன புதிய முகங்களுடன்


9. புத்திசாலிகள் உரிய இடத்தில் தான்

   குப்பைகளை சேர்ப்பார்கள்


10. உன் வீடு, வீதி, ஊர், நாடு, பூமி, காற்றுடன் வான்

    யாவும் சுத்தமாக இருப்பது உன் கையில்.


     மறுபடியும் பூக்கும் வரை

       கவிஞர் தணிகை


பி.கு: முன்னோரின் முன் மொழிகளும்

        தணிகையின் மொழிகளும்... தொகுப்பில் இருந்து.

Wednesday, December 11, 2024

திரு ஆசான் ஜி : கவிஞர் தணிகை

 திரு ஆசான் ஜி : கவிஞர் தணிகை



ஆசான் ஜி என்னும் இந்த மக்கள் வழிகாட்டியின் சில உரைகளை அடியேன் கேட்டிருக்கிறேன். மிகவும் துணிச்சலாக விடயங்களை அலசி பிழிந்து காய வைத்து தெளிவு படுத்தி விடுகிறார். மேலும் கேட்பார்க்கு அல்லது இவரை நாடி வருவார்க்கு நல் நம்பிக்கையை அளிக்கும் விதமாக தெம்பைத் தரும் சொற்பொழிவை வழங்குகிறார். வாழ்க.


சில சந்தேகங்கள்: கோள்களை விட மாந்தர் பெரியவரே என்றும் சந்திரனில் மனித முயற்சியில் சந்திராயனை இறக்கி விட்டதும் உண்மைதானே அது தலையில் இறங்கியதா, உடலில் இறங்கியதா, அல்லது தொடையில் இறங்கியதா என்றெல்லாம் கேட்க முடியுமா? என்கிறார்.


 தேகம் உடல் என்னும் சந்திரன் என்று சொல்லப் படுவதால்.


சோதிடக் கலையில் தேகம்  உடல்:சந்திரன்...தாய், ஆன்மா அல்லது உயிர், சூரியன் தந்தை என்கிறார்கள்.


இவருடன் பல கருத்துகளில் ஒத்த தன்மை ஏற்படுகிறது.கடவுள் உலகை நம்மை படைத்ததாகத்தான் இவரும் சொல்கிறார். (அடியேன்  இவரது உரையை புரிந்த வரையில்)


ஆனால் சோதிடக் கலை இல்லை அல்லது தேவை இல்லை, அல்லது பொய் என்கிறாரா? 


வாஸ்து பொய் என்று சொல்லி இருக்கிறார். புவியின் அமைப்பை உருவை பார்க்கும் போது அவர் கூறுவது சரிதான் என முடிவுக்கு வர முடிகிறது.


அல்லது நாட்டை ஒரு சமத்துவ சமுதாயம் சார்ந்த ஆட்சி முறைக்குள் கொண்டு வரும் போது எந்த வாஸ்தை பார்க்க முடியும் நிலம் யாவும் அரசின் பால் பொதுவுடமை என்னும் போது? அல்லது வாடகைக்கு இருப்பார் அல்லது வீடே இல்லாதார் எந்த வாஸ்தை பார்க்க முடியும்? எல்லாவற்றிலும் வியாபாரக் கலப்பு. 


பூமியே ஒரு உருண்டைதானே அதுவும் சிறிது சாய்ந்து சுழன்றபடி ஓடிக் கொண்டிருப்பதுதானே, அதிலும் அத்துடன் நாம் விண்வெளி யாவற்றையும் சற்று உற்று நோக்க கற்றுக் கொண்டால்...திசை என்பது கூட ஒரு கற்பனைதானே....சூரியோதயம், மறைவு என்பதெல்லாம் கூட ஒரு காட்சி வடிவம் தானே...ஆனால் அதனால் பாதிப்புகள் எண்ணிறந்தன....


நிலா ஒரு துணைக்கோள்தான், ஆனால் அது தோற்ற மாறுதல் புவியில் இருப்பார்க்கு ஏற்படுத்தும் போது கடலில் ஓத ஏற்றம், ஓத இறக்கம், கடலில், அலைகளில் எல்லாம் மாற்றம் நிகழ்கிறது என்பதை அறிவியலும் சொல்கிறதே...மேலும் அவ்வப்போது இந்த மாற்றங்கள் யாவும் உயிர்களில் சிறப்பாக அமாவாசை, பௌர்ணமி போன்றவை நெருங்குகையில் மனித உயிரிகளிடம் உடல் மாற்றங்கள் நோய்கள், மரணங்கள் கூட நிகழ்வதாக மருத்துவம் கூட தெரிவிக்கிறதே...இதில் எல்லாம் தெளிவு தேவை அல்லவா? பாதிப்புகள் இருப்பதை ஏற்படுவதை, நடப்பதை முற்றிலும் மறுக்கவும் முடியவில்லையே!


மனித உடலும் ஒரு சிறு கூறு...இயற்கையில். எனவே இயற்கையின் கால நிலை நிகழ்வுகள் யாவும் இந்த உடலையும் பாதிக்கிறதே வெயில், குளிர், மழை போன்ற எல்லா இயற்கை பாதிப்புகளில் இருந்தும், அதில் இருந்தெல்லாம் எப்படி விலகுவது?  விலக முடியாதே....கோள்களின் ஆட்சி அந்த வாழ்வின் ஆயுளில் இருப்பதாக சித்தர்கள் கூட மொழிந்ததாக இருக்கிறதே...அதே நேரம் சிலரை கோளென்ன செய்யும் நாளென்ன செய்யும் என்பதையும் சொல்கிறார்களே?


பிரபஞ்ச வெளி, அண்டப் பெரு வெளி ஆகியவை பற்றி அறியும் போது கோள்கள் இவர் கருதுவது போல அறிவியல்  சொல்வது போல சிறு பிசிறுகள் தாம்... ஆனால் அந்தப் பிசிறுகள் பிறந்த சிசு முதல் இறக்கும் மனிதம் வரை பாதிக்கிறதா இல்லையா அதில் தெளிவு வேண்டும்.


புவி நில நடுக்கம், எரிமலைச் சீற்றம், சுனாமி, பிரபஞ்ச வெளி  வளி மண்டல நதிகள் இறக்கம்  போன்ற இயற்கை மாற்றங்கள் சீற்றங்கள் எல்லா உயிர்களையும் அழிப்பது போல மனித உயிரையும் அழிக்கும் போது சோதிடக் கலை அங்கு பயனற்றதாகவே போய்விடுகிறதே...


எம்.ஜி.ஆர் கை ரேகை பார்த்த பானுமதியின் கூற்று,சிவகுமாரின் தந்தையின் சோதிடக் கணிப்பு, (பிரபலங்களைச் சொன்னால் புரியும் என்பதற்காகவே குறிப்பிட்டுள்ளேன்)எல்லாம் பலித்து விட்டதே...



இப்படி எல்லாம் இருக்க மார்க்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின்,பிடல், ஹோசிமின்,  போன்றோர் எப்படி மக்கள் சக்தியை மகத்துவமாக மாற்ற முடிந்தது...நல்லகண்ணுவால் அல்லது நம்மால் ஏன் அந்த அளவு முடியவில்லை?


நிறைய கேள்விகள், புதிர்கள், ஆர்வமுள்ளோர் அறிவு சார்புடன் கலந்துரையாடலாம்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு:  முகூர்த்த நேரம்,நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு, குளிகை, எமகண்டம் கரிநாள், சூலம் வடக்கு தெற்கு இப்படியே பஞ்ச அங்க வழிகாட்டுதல், சகுனங்கள், பல்லி சொல்லல், மேல் விழுதல்...இன்ன பிற‌


Tuesday, December 10, 2024

நிற்காத இயக்கம்:கவிஞர் தணிகை

 புயல் பறவை



இறகசைக்கும் புயல்பறவை

காற்று(ம்) கலங்கி விடும்


கடல்கள் பொங்கி எழும்

அலைகள் அழும்


புயலின் பாடலுக்கு

தாவரங்கள் தலையாட்டும்

பூ மரங்கள் மலர் சொரியும்

கிளை ஒடிந்து தாளமிடும்

அடி பெயர்ந்து தண்டனிடும்


திகட்டும் நீர் நிலையும்

தரை கசிந்து பாய் நனையும்

தாழ்வாரம் நெக்குவிடும்


விளக்கணைந்து ஓலமிடும்

ஈ....ஈரப்ப்சை பற்காட்டும்

குளிர் சுரந்து கண் சிமிட்டி

உடல் சுருட்டும்

நிழல் விழாது

ஆனாலும் 


நிற்காது திருமணங்கள்


போர்வை கனம் தாங்காது

பூமி கொஞ்சமும் தாங்காது தூங்காது


கால் பாவும் இடமெல்லாம்

கல் பதிந்த இடமெல்லாம்

கனத்த எச்ச(ரிக்கை)ப் பதிவுகள்


சோதித்து 

நிலையாமை சேதி சொன்ன 

புயல் பறவை குரல் அடங்கி

கூடு திரும்ப‌

சி(ன்)னங்களுடன் கப்பல்கள் சுவாசிக்கும்


ஓடங்கள் தாய்வீடு திரும்பி விடும்


புழுங்கும் 

திரிசங்கு நிலைமாறி மன‌ம் புழுங்கும்

நுனி வேர்க்கும் மூக்கு

தியேட்டர்கள் முதுகொடியும்

ஹோட்ட‌ல்கள் வாய் கிழியும்


உயிரின‌ங்கள்

ஈனங்கள்....

தினவு பெறும்

தீ தாக தேடல் எழும்


     1990களில் இடம் பெற்ற மறுபடியும் பூக்கும் கவிதைத் தொகுப்பிலிருந்து


மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை

Monday, November 11, 2024

இரத்தினம் ஓவிய(ம்) ஆசிரியர்: கவிஞர் தணிகை

 இரத்தினம் ஓவிய(ம்) ஆசிரியர்: கவிஞர் தணிகை



நடைப் பயிற்சியின் போது கருப்பு ரெட்டியூர் புறவழிச் சாலை சந்திப்பில் உள்ள கடைகளின் வாயிலில் அவர் அமர்ந்திருக்க, வணங்கினேன். மனிதர் அப்படியே அப்போது பார்த்தது போலவே இருக்கிறார். சிலருக்குத்தான் அப்படிப்பட்ட தேகம்.உயரமும் இல்லை,தொப்பை தொந்தியும் குண்டாகவும் இல்லை.


நாம் தாம் நரை நிறைந்திருக்க,முதியவராய் நிற்கிறோம் அவரது மாணவராக இருந்தும்.


ஓவியம் கற்றுத் தரச் சொன்னால், கடல் புறாவையும், யவன ராணியையும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி நமையெல்லாம் கற்பனையை நடப்பதைப் பார்ப்பதைப் போல செய்து விட்டார். சரித்திரக் கதைகளை எல்லாம் ஒரு கை பார்த்து விட வேண்டும் என ஆர்வத்தை ஊட்டி விட்டார்.


பேரும் இரத்தினம், அதே வடிவத்தில் குள்ள உருவம் வெற்றிலை போட்ட வாயில் சிரித்த இதழ்கள், கண்ணில் கண்ணாடி, அதே இரு சக்கர வாகனம்...நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மனிதர் நீடூழி வாழ யாம் எல்லா வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறோம்.


தணிகை என்ற கூடையுள் நிரம்பிய மலர்களுள் இவருடைய இரு கை நிரப்பி இட்ட‌ மலர்களும் உள்ளன.


இரு கை கூப்பிய வணக்கங்களுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, October 31, 2024

தீப ஒளி சிறப்புச் செய்தி: கவிஞர் தணிகை

 தீப ஒளி சிறப்புச் செய்தி: கவிஞர் தணிகை



எந்த திட்டமானாலும் அதை மிகவும் நேர்மையாக பார பட்சமின்றி ஒரு தலைப் பட்சமின்றி தெளிவுடன், தூய்மையுடன் கண்டிப்புடன் இரும்புக் கரம் என்று சொன்னாலும் சரி என்று நிறைவேற்றுகிற தலைமையை ஊக்குவிக்க வேண்டும்.

DEEPA VALI...

1. குடும்பத்துக்கு அல்லது வீட்டுக்கு ஒரு மத்திய அரசுப் பணி அல்லது மாநில அரசுப் பணி ஏதாவது ஒன்று ஒருவர்க்கு மட்டும் இருந்தால் போதும். பொருளாதாரம் செழிக்கும். ( தகுதிகளுக்கேற்ப அல்லது படித்த கல்விப் படிப்புக்கு ஏற்ப)


2. அதனால் இலவசங்கள் குறைக்கப் பட்டு அரசுக்கு செலவினங்களை மடை மாற்றம் செய்து கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாக்கலாம்.


3. இதைப் பற்றிய புள்ளி விவரங்கள் அல்லது தரவுகள் அரசிடம் அதன் துறைகளிடம் ஏற்கெனவே நிரம்ப உள்ளன அதை வெகுவாகப் பயன்படுத்தலாம்.


4. வருவாய்த் துறை,பதிவுத் துறை, மின் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் தினக்கூலி அல்லது தற்காலிகப் பணியாளர்கள் சிறு வருவாயுடன் பணி செய்து வருகின்றனர் பல ஆண்டுகளாக‌ அவர்கள் எல்லாம் கணக்கில் எடுக்கப் பட்டு  குடும்ப பராமரிப்புக்காக போதுமான அளவு ஊதியம் நிரந்தரம் செய்ய வேண்டும்.அடிமட்ட அளவில் பணி புரிகின்ற அவர்கள் எல்லாம் அரசுப் பணியில் இருக்கின்றனர் ஆனால் அரசுப் பணியில் நிரந்தர ஊதியத்துடன் இல்லை.


5. நதி நீர் இணைப்பு பொருளாதரத்தின் ஒரு திறவு கோல் . அதற்கு காலாட் படை, விமானப் படை, கப்பற்படை பயன்படுத்தப் படலாம். அதற்கான ஆள் சேர்ப்பு இன்றைய வேலையில்லா இளைஞர்களுக்காய் இருக்கலாம்.


6. நாட்டின் கவனத்துக்குரிய பிரபலமான தலைமைப் பொறுப்பில் உள்ளார் கூட ஓய்வு பெற்ற பின் மீண்டும் பணிக்கோ பொறுப்புக்கோ, பதவிக்கோ ஆசைப்பட்டு தங்களது பணி வாய்ப்பை பதவி வாய்ப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கலாம்.


7.எந்த திட்டமானாலும் அதை மிகவும் நேர்மையாக பார பட்சமின்றி ஒரு தலைப் பட்சமின்றி தெளிவுடன், தூய்மையுடன் கண்டிப்புடன் இரும்புக் கரம் என்று சொன்னாலும் சரி என்று நிறைவேற்றுகிற தலைமையை ஊக்குவிக்க வேண்டும்.


8. ஆபத்தான  தொழில், பட்டாசு தயாரித்தல்,போன்ற தொழில்களை எல்லாம் செய்ய அறிவியல் செயற்கை ம நுண்ணறிவு, தானியங்கி ரோபோக்கள் பயன்படுத்தல் அல்லது அந்த தொழில்களை மடை மாற்றம் செய்ய வேண்டும். அந்த தொழிலாளர் வாழ்வை மேம்படுத்த வேண்டி மாற்றுத் தொழில்களை ஏற்படுத்தி தரல் வேண்டும் அல்லது வாழ்வின் உத்தரவாதமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசு உறு துணை புரிய வேண்டும் (உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் கல்வி)

இப்படி பலப் பல...இந்தியா வல்லரசாக நல்லரசாக...கலாம் கண்ட கனவுகளுடன் உள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: இங்கு நேர்மறை எண்ணங்களுடன் மட்டுமே கருத்துகள் வைக்கப் பட்டுள்ளன.



Monday, October 21, 2024

எல்லாந் தெரியு(மு)ங்க: கவிஞர் தணிகை

 எல்லாந் தெரியு(மு)ங்க: கவிஞர் தணிகை



நண்பர் 70 நெருங்கி வருகிறார்,அவரும் அடியேனும் தவறாமல் நடைப் பயிற்சியில்.அவர் ஒரு முன்னால் இராணுவ வீரர், இந்திய அமைதிப் படையில் இலங்கையில் கூட இரண்டாண்டு பணியில் இருந்தவர்.அவரும் அடியேனும் நடைப் பயிற்சியில் அவர் சாலையின் இடப் புறமும் அடியேன் வலப்புறமும் நடை பயில்கிறோம் செல்லும் போது.அது போக்குவரத்துக்கு சுலபமாக இருக்கட்டுமே என்று.


 அது பார்ப்பவர்க்கு வித்தியாசமாக இருக்கிறது போலும்.என்னிடம் நேற்று ஒரு மகிழுந்து ஓட்டிய இளைஞர் எதிரில் வந்தவர் , அந்தப் பக்கம் போங்கள், சாலையில் தவறான பக்கத்தில் செல்கிறீர் என்றார் அடியேனை. இதுதான் சரியான முறை சாலை விதியும் கூட என்றேன்.


 வாகனங்களுக்கு இந்திய சாலை விதி இடது பக்கம் செல்லச் சொல்லி இருக்க, பாதசாரிகளுக்கு வலது பக்கம் செல்லவே சொல்லி இருக்கிறது அதை பள்ளிகளில் முதலில் பிள்ளைகளுக்கு படிப்பிக்க வேண்டும். எவருமே இதைக் கடைப் பிடிப்பதில்லை.கண் பார்வைக்கு பார்வை தொடர எதிரே வரும் வாகனமும் நடப்பாரும் எளிதாக மோதிக் கொள்ளாமல் (எவராவது ஒருவர்) விலகிச் செல்ல முடியும் எனவேதான் இந்த ஏற்பாடு. இது விபத்தை தவிர்க்க.துவிசக்கர வண்டிகளும், பாதசாரிகளையும் பார்ப்பதே இப்போது சாலையில் அரிதாகிய சூழலில் இதை நான் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.


இவ்வளவு ஏன் பீடிகை என்றால், இந்த நாட்டில் மக்கள் எல்லாமே விதிக்கு மேம்பட்ட வாழ்வே வாழ்கிறார்.அல்லது விதியை, சட்டத்தை, நீதியை, தர்மத்தை , இயற்கையை, இயல்பை மீறியபடியே வாழ்ந்து கொண்டு வருகிறார் சுய நலம் என்ற ஒரே போக்கில்.எல்லாமே தனிப்போக்குவரத்துக்கு தாவியுள்ள காலம் பொதுப் போக்குவரத்து ஏழைக்கென ஒதுக்கப் பட்டது போல நினைக்கிறார்கள்.


அவர்கள் எதையுமே கடைப் பிடிப்பதில்லை.காரணம் பலப் பல. அவற்றை எல்லாவற்றையுமே இங்கு சொல்ல அவா இல்லை. ஒரு புறம் அரசே மக்களை தவறு செய்ய நிர்பந்திக்கிறதோ என்ற கேள்விகளும் உள்ளன. அவை எல்லாம் வேறு.


பல் விளக்கத் தெரியுமா? தெரியுமே, வெளிக்குப் போய்ட்டு கால் கழுவத் தெரியுமா? அடச் சீ இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை, இதை எல்லாம் போய் பேசிக் கொண்டு இருக்கிறார் பார், இதெல்லாம் தெரியாதா? குளிக்கத் தெரியுமா? இதெல்லாம் தெரியாமலா இருப்பார்கள்? வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம், குளித்தல் குளிர்வித்தல் எல்லாம் நாடி சுத்தி பாடங்கள், நாடி சுத்தி, கபால‌ பாத்தி என இருவகை மூச்சு பயிற்சி செய்வார்க்கும் சுவாசக்  குழல்/மூச்சுக் குழல் சுத்தம் செய்யப் படுகிறதாம் தெரியுமா? யோவ் வேற வேலை இல்லையா போய்ப் பார்,சுவாசிப்பது இருப்பது மனிதர் உயிரோடு இருப்பது வரை இயல்பாக இருப்பது, இதை எல்லாம் போய் கவனித்து வர வேற வேலையா இல்லை? என்பார்க்கு இந்தப் பதிவு அவசியமில்லை.


இங்கு எதுவுமே தெரியாமல், புரியாமல், உணராமல் மனிதப் பயணங்கள் நிகழ்ந்தபடி உள்ளன. எனது நண்பர்கள் சிலர் தினம் ஒரு திருக்குறள் தருகிறார்கள், சிலர் புதிய முயற்சி செய்கிறார்கள். பாராட்டுகள். எவ்வளவு பேர் ஒரே ஒரு குறளையாவது பின்பற்றி வாழத் தலைப்படுகிறார் என்பதுவே கேள்வி.அல்லது அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை இளந்தலைமுறையிடம் ஏற்படுத்த விழைகிறார் அவர் தம் வாழ்வை அதற்கு  முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார் என்பதுவே கேள்வி.


சட்டமும், நீதியும், ஏட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் இருக்கின்றன அனைவரும் சமம் சட்டத்தின் முன் எனச் சொல்லும் (அப்படி எல்லாம் இல்லை என்பது வேறு) இந்திய தாய்த் திரு நாட்டில் எவருக்குமே எதைப்  பற்றியுமே அதற்கு எதிராக செயல்படுவது பற்றிய சிந்தனை மாற்றம் பற்றிய துளி சுய உணர்வு கூட பாதிப்பாகத் தெரியவில்லை. அல்லது அதெல்லாம் பாத்தா வாழ முடியுமா என்கிறார்கள் அதிகம். நடை முறை பற்றியே இங்கு சொல்லப் புகுந்தேன். அது வேறு வேறு பொருள் பொதிந்ததாய்த் தெரிந்தால் வாழ்வின் நடைமுறைப் பற்றி எல்லாம் குறிக்கிறது என்றால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Wednesday, October 16, 2024

அளவுக்கு மிஞ்சினால்...கவிஞர் தணிகை.

 சிறுவர் சிறுமியர்க்கு நத்தையும் அட்டையும் வேடிக்கை வியப்பு

இருபதுகளில் இரசிப்பு ( 1980கள்)

அறுபதுகளில் தொல்லை ( 2025களில்)



அளவுக்கு மிஞ்சினால்...



சொல்ல வந்தது யாரையும் எந்த அமைப்பையும் குறித்தல்ல...

அப்பட்டமான இயற்கையின் இயல்பை...



 தம் வீட்டு குப்பையை சாலைக்கு அப்புறம் கடந்து வந்து அடுத்தவர் நிலத்தில் வீசி விட்டு செல்லும் வயதான விதவைப் பெண் சொல்கிறார் தம் வீட்டு சுவர் மேல் ஊர்வதன் மேல் எல்லாம் உப்புத் தூள் வீசி விடுகிறாராம் அவை கசங்கி சித்திரவதைப் பட்டு மடிகிறதாம்...இரசாயன ஆய்தம்...கெமிகல் வெப்பன் யூஸ்ட் பை எ நார்மல் லேடி. லேடி வித் கெமிகல் வெப்பன்....OLD LADY WITH CHEMICAL WEAPON...Just for a Joke....☺☺



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.







Wednesday, October 2, 2024

கண்ணாடி பார்க்காத மனிதன்: கவிஞர் தணிகை

 கண்ணாடி பார்க்காத மனிதன்: கவிஞர் தணிகை



முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்காத மனிதன்

எல்லா நீர் வீழ்ச்சிகளையும் விட மழையே அதிக உயரத்தில் இருந்து வீழ்வதால் அருகிருந்தும் நீர் வீழ்ச்சியைக் கூட பார்வையிடச் செல்ல அழைத்த அழைப்பை ஏற்கா மனிதன்.


நேரந் தவறாமையைக் கடைசி வரைக் கடைப் பிடித்தவன்

காய் கறி நறுக்கி சமையல் செய்ய சமையல் கலை தெரிந்தவன்


திடக் கழிவு மேலாண்மையைக் கடைப் பிடிக்க கற்றுத் தந்தவன்

கூனே முறை என்று ஆண்குறியை நீரில் வைத்து பிரமசாரிய விரதப் பயிற்சி மேற்கொண்டவன்

மண் சிகிச்சை, நெற்றி செம்மண் பட்டை எல்லாம் அவனறிவான்


செருப்பு அல்லது காலணியைத் தைக்க தெரிந்து பயிற்சி பெற்றவன்

எவருக்கும் தலை வணங்காமல் தம் கருத்தை இறுகப் பற்றி சிறை செல்லத் தெரிந்தவன்


உண்ணும் உணவில் காரம், மசாலைப் பொருட்கள்,அதிக உப்பு, இனிப்பு இவை யாவும் விலக்கப் படவேண்டியவை என்றே அன்றே அவன் வாழ்வின் முறை மூலம் உணர்த்தியவன்

தமது பணிகளான, முடி திருத்தம், துணி  துவைத்தல், கழிப்பறை சுத்தம் செய்தல் யாவும் செய்தவன்

தாம் இருக்கும் கூட்டுப் பண்ணை முறைகள், மற்றும் தொழில் வளாகத்தில், தங்கும் இடத்தில்

பலரையும் இணைத்து அந்த வாழ்க்கை வாழச் செய்தவன்


ஆயுள் காப்புறுதி வாழும் மனிதர்க்கு அவசியமில்லை என ஏற்க முனைந்தவன்

அவனை தொடர்வார் எவருக்குமே நிரந்தர சொத்து ஏதுமில்லை என்ற வாழ்க்கைப் பாதையைக் கடைப் பிடிக்க‌

உறுதி ஏற்கச் செய்தவன்


பிச்சையிடல் மறுக்கப் பட வேண்டியது என்ற கொள்கையை கொண்டுவர முயன்றவன்

உலகம் எல்லாம் நல் வாழ்வும் வளமும் செழிக்க ஒவ்வொரு நிமிடமும் நொடியும் தமது ஆயுளை அர்ப்பணித்த காமுகனாய் இருந்து அதிலிருந்து மீண்டு காமம் இன்பத்திற்காக‌, இனவிருத்திக்காக, அதிலிருந்து மீட்சி பிரமசாரியம் என்ற மூன்று நிலை மனிதர்க்கு அவசியம் என்று தமது வாழ்வே தமது சுய பரிசோதனைகளே தமது வாழ்வின் பயண வழி காட்டி என்று உயர்ந்த‌ சிறுவன்


ஒளிவு மறைவு அற்ற வெளிப்படைத் தன்மையைக் கடைப் பிடித்து விமர்சனங்களால் நிறைந்து போனவன்

உலகத்துக்கு அதிகம் எழுத்துகளை சுமார் ஒரு இலட்சம் பக்கங்கள் எழுதிக் கொடுத்தவன் , வாழ்வின் முறைகளை ஏந்தியவன்,


இருகைகளிலும் எழுதத் தெரிந்தவன்

தன் குருநாதர்கள் மூலம் தமிழ் தான் சத்தியம் , அஹிம்சை போன்ற தெய்வாம்சத்திற்கு மூலமாய் இருக்கிறது என அறிந்து  தமிழைக் கற்றுக் கொண்டவன், தமிழகம் வந்து ஆடையைக் குறைத்துக் கொண்டு தானும் ஒரு சாமனியனே என அறிவித்துக் கொண்டவன்.


ஒரு கைத்தடியும் அவன் வளைந்து போன கண்ணாடியுமே அவனது அடையாளமாய் உலகெலாம் தெரிந்தவன்.

அவன் மனிதனின் உச்சம், இன்று ஏதுமில்லை அவனின் மிச்சம், இங்கு வளர்பவை யாவுமே எச்சம்.எனது தந்தைக்கு நான் எழுதிய ஒரு மடல் நினைவுச் சேர்க்கை இது.


ஒரு நாள் விடுமுறை, மதுக் கடைகள் மூடல்

மகாத்மியம் வீழ, உலகெலாம் அதன் மாறுபாட்டு எதிர் வினையாவும் மீற...


நல்லவை எப்போதும் தோத்துக் கொண்டே இருந்தால் அதற்குத்தான் என்ன மதிப்பு?


ஓ என் கடவுளே!


*************************************************************

எத்தனையோ

தேவதைகளை எடுத்து விழுங்கி விட்டு

 ஏப்பம் விடாமல்

இன்னும்

ஏங்கி நிற்கிறது


கண்ணாடி...


 .....எப்போதோ கவிஞர் தணிகை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, September 28, 2024

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: கவிஞர் தணிகை

 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: கவிஞர் தணிகை



 பல்லாண்டுகளுக்கும் முன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அவருடன் திருப்பதி சென்றேன். இலவச விடுதி என்றார்கள் குறிப்பிட்ட தொகையை இருப்புத் தொகையாக வாங்கிக் கொண்டு.திரும்பி அறையைக் காலி செய்து கொண்டு வரும்போது சில்லறை நோட்டுகளாக கொடுத்து அதை அவர்களுக்கே கட்டணம் செலுத்தும் இடத்தில் வாங்கிக் கொள்ள நிர்பந்தம் செய்தார்கள்.( தூய்மையாக ஏதும் அப்போது இருந்ததாக எனக்கு நினைவில்லை அறை வசதிகள்தாம்).


எனக்குத் தெரிந்த தெலுங்கு மொழியில் பேசி எதற்கு உங்களுக்குத் தரவேண்டும்? இலவசம் என்றுதானே சொல்லப் பட்டுள்ளது என்று மள மள வென்று காசு தராமலேயே வெளியேறிவிட்டேன் கூட்டமும், வரிசையில் நின்றவர்களும் காட்சிப் பொருளாக எனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆட்டு மந்தைக் கூட்டத்தில் இருந்து வெளியேறி தப்பிப்பது போல.


எங்கே பின்னால் தொடர்ந்து வந்து விடுவார்களோ ஆள் பலத்துடன் என்ற சந்தேகம் வேறு எனை அப்போது தொற்றி இருந்ததை சற்று தொலைவு வந்தவுடன் கழட்டிப் போட்டேன்.


இருள் பிரமை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Thursday, September 26, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் ஏழு

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் ஏழு



ஊர் பெரிய ஊர்தான். சாதி பாகுபாடு உள்ள ஊர்தான். ஆனால் பொது என்று வந்து விட்டால் எவரும் எதையுமே கண்டு கொள்ள மாட்டார்கள்.


அந்த ஊருக்கு என்று ஒரு கிளை பகுதி நேர அஞ்சலகம் இருந்ததும்.இருப்பதுமான செய்திகள் இன்றும் உண்டுஆனால் பெரிய அளவில் வரவு செலவெல்லாம் இருப்பதாகச் சொல்ல வழி இல்லை. ஏதாவது முக்கியமாக கேட்டால் சில கிலோமீட்டர் தள்ளி முக்கிய தபால் குறியீட்டு எண் உள்ள தபால் அலுவலகங்களையே நாட வேண்டும்.


ஆனால் அங்கு அந்த அஞ்சலகத்தில் தவிர‌ வேறு எங்கும் அப்போது அஞ்சல் பெட்டி கிடையாது. கால நேரத்தை தவற விட்டால் முக்கிய நகர் வழிச் சாலை தாண்டி அந்த தனியார் கம்பெனி வாசலில் மட்டுமே மதியம் 3.30 மணி சுமாருக்கு தபால்கள் எடுக்கப் படும் .


அவன் இவ்வளவு பெரிய ஊரின் மக்களுக்காக ஒரு தபால் பெட்டியை வைக்கக் கூடாதா என்று அஞ்சலக அலுவலகங்களில் முறையிட்டு கோரிக்கை செய்து தபால் பெட்டியை வரவழைத்து வைக்கச் செய்தான். அதில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் பட்டாசை உள்ளே போட்டு அதன் வாயைக் கிழித்து விட்டார்கள்.


அதன் பின் அதை வேறு இடத்திற்கும் மாற்றி செயல் பட வைத்தான். அதெல்லாம் மின்னஞ்சல் இல்லா அந்தக் காலம் அதெல்லாம் கூரியர் சேவை , ஆன்லைன் சேவை எல்லாம் இல்லா அந்தக் காலம்.


காலம் புவியின் வேகத்தை விட அதிக வேகமெடுத்தபடி சென்று கொண்டே இருக்கிறது...பூமியின் வேகம் நொடிக்கு சுமார் 30 கி.மீ என்கிறார்கள்... தன்னைத் தானே சுற்றும் வேகம்  நொடிக்கு (460மீட்டர்)சுமார் அரை கி.மீ என்கிறார்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: பின் பக்கம் அரைக்கால் சட்டை தேய்ந்து ஓட்டையாக இருக்கும் குந்து புறம் தெரியும் சிறுவர்களை போஸ்ட் பாக்ஸ் என்பார்கள் கேலியாக. அப்படிப் பட்ட அரைக்கால் சட்டைகளை அவனும் அணிந்ததுண்டு.


Friday, September 20, 2024

இந்தியன் ~ ரியல் அத்தியாயம் :ஆறு

 இந்தியன் ~ ரியல் அத்தியாயம் :6



அதிகாலையிலேயே அழைப்பு, காவல் நிலையத்திலிருந்து வரச் சொன்னதாக, அப்பு என்கிற கிருஸ்ணசாமி முதலியார் இவனுக்கு மிக நெருக்கமான தந்தையைப் போன்றவர், அவனுடைய தகுதிகளைப் பார்த்து நீங்கள் எல்லாம் பொது வாழ்வில் வரவேண்டும் . என்ற வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கோவில் பணிகள், பொதுவாக நியாயம் பேசி பிறர் பிரச்சனைகளைத் தீர்த்தல் அகியவற்றில் ஊரின் மற்றொரு தோழரோடு தோள் சேர்ந்து செய்து வந்ததன் விளைவு.அந்த தோழர் பழைய கால ஊர்ப் பாரம்பரியத்தின் வழி வந்தவர்.


அப்பு முதலியாருக்கு போன் செய்தான் அவன், என்ன அண்ணா இப்படி ஆகி இருக்கிறது உங்கள் வார்த்தைகள் என்றான். விடுங்கள் நான் போன் செய்து கேட்கிறேன், நீங்கள் அதன் பின் காவல் நிலையம் போகலாம் என்றார். அவருக்குத் தெரிந்த காவல் துணை ஆய்வாளர் அவரின் பெயரில் பாதி கொண்டோருடன் பேசினார்.


இட்டுக் கட்டிய பொய்ப் புகாரை , அடையாளம் தெரியாத நபர்களுடன் அடிக்க வந்தான் அவன் என அவன் மேல் ஒரு ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்த ஒருவர் அவர் இப்போது இல்லை. அவர்தாம் புகார் அளித்து, எல்லாக் கவுன்சிலரையும் விட இவர்தாம் கவுன்சிலர் போல நடந்து கொள்வார் என்று அவன் மேல் வாய் மூலம் புகார் வேறு.


 இதில் ஒரு வேடிக்கை என்ன வெனில் அவனுடைய 4 வயது கூட‌ நிறையாத சிறுவனான‌ மகனுக்கு அந்த ஆளும் கட்சி கவுனிசிலர் மகள் தாம் கராத்தே முதன் முதலாக சொல்லிக் கொடுத்து வந்தார். குழந்தையைக் கூட்டி வர செல்ல கால தாமதம் ஆனாலும் அவரே கொண்டு வந்து வீட்டில் விட்டுச் செல்வார்.


கவுன்சிலரும் தேர்தலுக்கும் முன்பாக காலையில் தூங்கி எழும் நேரத்திலேயே அவருக்கான ஆதரவை வழங்கச் சொல்லி இவருடைய யோசனையை எடுத்துக் கையாண்டவர்தாம். ஆனால் அவர் ஒரு குடும்பஸ்தரை நீ டீ வாங்கி குடிக்கும் போதெல்லாம் தெரியவில்லையா? என அவமானச் சொற்கள் சொன்னபோது அருகிருந்து கவனித்திருக்கிறான் அவன். அவனிடம் நல்ல வேளை அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை.


ஒரு பொது சந்தை/வீதியை கபளீகரம் செய்ய‌ நினைத்த கவுன்சிலரின் நெருங்கிய குடும்பத்துக்கு ஒத்துழைத்து முன் உள்ள வீட்டாரை பின் வந்து வீட்டை பூச்சு கூட செய்ய விடாமல் , கழிவு நீர் விட வழிவிடாமல், தம் வீடு அந்த வீட்டின் பின் சுவர் வரை இடத்துடன் பொது சந்தையும் சேர்த்து உள்ளது என இவர்கள் அடாவடி. பல் முறை பேசி தோற்ற பேச்சு வார்த்தை . இதுவே பஞ்சாயத்தின் சரத்து. 


மகன் காலைப் பிடித்து கொண்டும் கூட அவனது அந்தக் குழந்தையின் முதுகில் ஒரு அடி உரக்க‌ வைத்து, ஒப்புக் கொண்டோம் எனில் சென்றுதான் ஆக வேண்டும் எனச் சொல்லி விட்டு அங்கு சென்றால் ஊரே கூடி நிற்கிறது.அவனே  கடைசியாக சென்றவனும் அவன் தாம் என்பதை அவன் தெரிந்து கொண்டான்.


இரு பக்கமும் ஆதாரம் எடுத்து வரச் சொன்னால், ஒரு பக்கம் கொடுத்தார்கள் உடனே கவுன்சிலர் பக்கம் நாளை கொடுக்கிறோம் எனச் சொல்லி விட்டு இந்தப் புகார். அத்தோடு அவரது குடும்பத்து ஆசிரியர் வேறு, மற்றொரு ஊர் பேரூராட்சி பொறுப்பு வகித்த செயல் அலுவலர் வேறு எல்லாம் சேர்ந்து அந்த இளைஞன் மேல் வேண்டுமென்றே புகார் அளித்தார்கள் அவன் பெரிய மனிதனாக ஆகிவிடக் கூடாது என்று.


அந்த நிலை கண்டு இனி காவல் நிலையமே பிரச்சனை தீர்க்கட்டும்,என வழிவிட்டு பொது மனிதர்கள் விலகி விட காவல் நிலையமும் அதே ஆதாரத்தை கேட்டு, அவர்களும் அதைத்தானே கேட்டார்கள் என்று பிறர் சொல்லக் கேள்வி, அதற்கு முன் கள ஆய்வு விசாரணை. அதில் ஒரு மகளிர் சங்கத்திற்கு உரிமையாளர் என கடிதத் தலைப்பிலேயே போட்டு புதுமையெனச் செய்திருந்த பெண்மணி மற்றவர் யாவரும் இருவரும் பேச்சு வார்த்தையாடினார். ஆனால் இவருக்கு அவரை அடிக்கும் நோக்கம் எல்லாம் இல்லை எனச் சொல்லியதை பதிவு செய்து கொண்டனர். இங்கே யார் கவுன்சிலர் என அவனை துணை ஆய்வாளர் கேட்க அவன் கவுன்சிலர் பேரைச் சொல்ல. விசாரணையிலிருந்து விடுபட்டான். அதற்கும் முன் அவன் ஊர்ப் பெரியவர் சிலரின் கையொப்பத்துடன் நிறைய நபர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்த போதும் அவனது பேர் ஒன்றை மட்டும் காவல் நிலையப் புகாரில் அளித்த காரணமென்ன> எனக் எழுதிக் கேட்டிருந்தான்.மற்றொரு நபர் அவரும் அப்போது கவுன்சிலர் எனவே நீ யார் கேடபதற்கு என தமது கட்சிக்கார கவுன்சிலருக்கு ஒத்துழைப்பதாக அவனை கேட்டார்.


காவல் நிலையத்தில் நிலை சீரடைந்தவுடன் , அந்தக் கவுன்சிலர், வாங்க டீ சாப்பிடலாம் என இவனைக் கூப்பிட அன்று முதல் அவன் அந்த நபர் முகத்திலேயே விழிப்ப‌தில்லை என உறுதி பூண்டான். அவரோ இவனை சாதியை விட்டே தொலைத்து விடுகிறேன் என்றவர், தமது மகளுக்கு அழைப்பிதழ் தர வந்து இவன் அதை மறுக்க மறுபடியும் தெருவரை சென்று கூச்சல் செய்து சண்டைக்கு வித்திட்டுக் கொண்டே இருந்தார். அவரை விட அவரது நெருங்கிய உறவுகள் அவனை எங்கு பார்த்தாலும் பகை வளர்த்து அதை அடி தடி தகராறாக மாற்றவும் முயன்றது . பொறுமை காத்தான்.


விளைவாக இயற்கையின் விளையாட்டால், அவர்கள் எல்லாம் இப்போது இல்லை, மதுவுக்கு அடிமையான ஒருவர் வாயில் ஈ போவது தெரியாமல் அந்த வீட்டிலேயே இறந்து கிடந்ததும், ஆண் பெண் வித்தியாசத்தைக் கூட உணராமல் அனைவரையும் அவமானப் படுத்திய அந்தப் பெண் இனம் மாரடைப்பில் இறந்து போனதும் அந்தக் கவுன்சிலராக இருந்தவர் சமீப காலத்தில் இறந்து போனதும் செய்திகளாக அவன் அறிந்ததே.


இயற்கை அனைவரையும் மறைக்கும் ஒரு நாள். காலம் அனைவரையும் அகற்றும் ஒரு நாள். அவனையும் தான் ஆனால் மனிதர்களாக வாழ்வார் இயற்கைக்கும் மாறாக நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, September 19, 2024

பாக்கிஸ்தான் எண்கள்:+92345794220

 பாக்கிஸ்தான் எண்கள்:+92345794220 with Police officer's Photo

+923251958197 {Polc Ofct) with Police officer Photo

+923457946220~Office with Police officer Photo

+923437089636~Office



சுமார் 5 PM மணிக்கும் மேல் இருக்கும் மிக ஒரு முக்கியமான பணி காரணமாக ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறேன். மற்றொரு அழைப்புக்காக காத்திருக்கிறேன். ஆனால் ஒரு அழைப்பு +92345794220 என்ற எண்ணிலிருந்து. அதை நான் எங்கிருந்து வருகிறது என கவனிக்கவில்லை. whats app call.


ஒரு காவல்துறை அலுவலரின் உடையுடன் ஒரு படத்துடன் : உங்கள் மகன் இப்போது எங்கள் சிபிஐ கஸ்டடியில்.ஒரு கற்பழிப்பு வழக்கில் கைதாகி உள்ளார். உங்கள் மகனின் செல்பேசியை மற்றொரு நண்பரிடம் கொடுத்ததால் வந்த விளைவு. இனி உங்கள் மகனை தொடர்பு கொள்ள முயலாதீர். அவருடைய செல்பேசியைக் கூட நாங்கள் தாம் வைத்திருக்கிறோம். 


உங்கள் மகனுக்கு 10 அல்லது 20 ஆண்டுகள் கூட சிறை கிடைக்கலாம்,அல்லது என்கவுண்டர்கூட செய்யப் படலாம், வாகனம் சென்று கொண்டிருக்கிறது என போலீஸ் வேன் சைரனுடன் செல்வது போல சத்தம் அதில் மகனை அடிக்கும் சத்தம், அவர்  அலறுவது போல சத்தம்.


இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமெனில்: ஜி பே எண்களுக்கு: 45,000 ரூபாய் உடனே அனுப்புக. அவ்வளவு பணம் இல்லையே. ஜீ பே அனுப்ப மறுக்கிறதே. அப்படி எனில் வேறு எண்கள் வங்கி கணக்கு எண்கள் கூட தருகிறோம். வங்கியில் போன் பே மூலம் கூட போடலாம் பத்தாயிரம்( 10,000) கூட போடலாம். உடனே போட்டாக வேண்டும்.


ஜி பே G Pay அந்த எண்களை மோசடி எண்கள் என்று குறிப்பிட்டன.

பண இழப்பு ஏதுமில்லை எனினும் மன உளைச்சல்....இப்படி எல்லாம் அறிவியல் பயன்படுகிறதே என.

1930 இலவச சைபர் crime எண்களை தொடர்பு கொள்ள முயன்றால் அது எப்போதும் தொடர்பு கொள்ள முடியா நிலை.


மின்னஞ்சல் செய்யப் பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய மற்ற எண்கள்: விவரங்கள்:

+92345794220

யுபிஐ : 7439054524 ஐ.டி.

\ஐஎப் எஸ் சி: உபி: 92401000236

மற்றும் ஒரு எண்: 9520369472

போன்பே எண்கள்: 7439054514

G Pay name: Master Abishek samadder no:7439054514@naviaxis




Tuesday, September 17, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் :ஐந்து

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் :ஐந்து



 இது ஒரு சிக்கலான பதிவு. ஏன் எனில் இதில் அவன் எதிர்த்து செயல்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி இப்போது அவனுடைய‌ ந‌ண்பராகவும் இருக்கிறார். அவன் அந்த உள்ளாட்சிப் பகுதியின் பிரதிநிதியை ஏன் எதிர்த்தான் எனில் அப்போது அவர் அரசுப் பணியிலும் தொடர்ந்தபடி மக்கள் பிரதிநிதியாகவும் தொடர்ந்து இருந்த‌படியால்.


கட்சி பேதமின்றி அந்த சட்டத்திற்கு புறம்பான நிகழ்வை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேரூராட்சியில் அங்கீகரித்து வாய் மூடி மௌனத்துடன் இருந்த போது இவன் ஒருவனே அதை வெளிப்படுத்தி அரசைக் கேள்வி கேட்ட போது, அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளரான அமைச்சரின்  மகனும் (அவர் இப்போது இல்லை ஏன் சொல்லப் போனால் அவர் குடும்பத்தில் இப்போது சொல்லிக் கொள்ளுமளவு தந்தை, 2 மகன்கள் இப்படி எவருமே இல்லை).  அவன் சொல்வது நியாயம் தானே அப்படி ஏன் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கட்சியின் பெயரை மக்களிடையே கெடுத்து வருகிறீர். விலகிக் கொள்ளுங்கள் என அறிவுரை செய்த பின் தாம் இந்த மக்கள் பிரதிநிதி தம் பொறுப்பில் இருந்து விலகி அரசுப் பணியை தொடர்ந்தார். தொடர்கிறார்.


அரசுப் பணியில் ஊதியத்துடன் இருந்தபடி மக்கள் பிரதிநிதியாகவும் இருக்க சட்டத்தில் இடம் இல்லையாமே.ஆனால் இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதுவும் குற்றம் என‌ ஏட்டில் சொல்லில் சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையிலும் இலஞ்சம் இருக்கலாமோ?


அதன் பின் மற்ற சில‌ கோடாரிக் காம்புகள் இடைத் தேர்தலில் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெற்று அதுவும் பகையான கதை எல்லாம் வேறு.


அந்தக் காலக் கட்டத்திற்கும் பின் அவ‌ரது துணைவியாரைக் கூட சில முறை அவர் மக்கள் பிரதிநிதியாக்கி வெற்றி ஈட்டி செயல்பட்டார்.


நல்லது போனால் தெரியும் என்பார் கெட்டது வந்தால் தெரியும் என்பார். அந்த சொல் இன்றைய அரசியலுக்குத் தான் எத்தனை பொருத்தம்.


இதை அவனால் பூடகமாக சொல்ல முடிகிறது ஆனால் அனுபவித்த போது ஒவ்வொரு கட்டமும் போட்டியும், போராட்டமும், பொறாமையுமான கதை சொல்ல மாளாது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




  

Wednesday, September 11, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் நான்கு

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் நான்கு



கடந்த பதிவான அத்தியாயம் மூன்றுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. ஆனால் கால அளவு வேறுபட்டது.இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வளர்ச்சி அலுவலராக அப்போதிருந்த திரு.சௌந்திரராஜன் அவர்கள் அவனை அணுகி மேட்டூர் சதுரங்காடித் திடலில் உள்ள தேசிய வங்கி (முன் சொன்ன அதே வங்கிதான் ஆனால் அதன் மற்றொரு கிளை) மேட்டூர் சதுரங்காடித் திடலில் இருந்தது பெரியது.சொல்லப் போனால் அந்த தாலுக்கா அளவிலான அந்த வங்கிக் கிளைகளுக்கான தலைமைக் கிளையாக அதைச் சொல்லலாம். அந்த வங்கிக் கிளையில் ஒரு கணக்கு ஒன்றை ஆரம்பிக்கச் சொன்னார்.


அவனுக்கு ஏதும் புரியவில்லை. எனக்குத் தான் அதை விட வெறொரு பெரிய தேசிய‌ வங்கிக் கிளையில் கணக்கு இருக்கிறதே என்றான். நீங்க ஆரம்பிங்க சார் என்றார். வலியுறுத்தினார்.நல்ல மனிதர் பண்பான நண்பர்.எனவே ஏன் எதற்கு என்றே தெரியாமல் புரியாமல் நண்பரின் உள் குத்து விவரம் அறியாது, ஆரம்பித்து விடுவோம் என்று சென்றான்.


வங்கி மேலாளர், ஆரம்பிக்க முடியாது என்றார். ஏன்? என்றால் "ரோட்ல போறவன் வர்ரவனுக்கெல்லாம்" விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, என்றார். மறுபடியும் (ஆர்.எம்.பழனியப்பன் )/பிராந்திய மேலாளருக்கு கடிதம். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் எந்த வங்கியிலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க உரிமையுண்டு. அவர்களுக்குத் தேவை  ஏற்கெனவே அங்கு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அறிமுகம் செய்வதும் அந்த கணக்கு ஆரம்பிக்கிறவரின் சரியான தகவல்களும் என்றிருக்க உங்கள் வங்கி மேலாளர் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை என்ற கடிதம் அனுப்பினான்.


அந்த நிகழ்வின் அடியில்: மேட்டூர் பியர்ட்செல் என்ற இயங்காது நின்றுபோய் இருந்த‌ கலைக்கப் பட்ட‌ ஆலையின் வரவாக நலிவடைந்த தொழிளார்க்கு கணக்குக்கு பணம் வருவதும், அதை அவர்கள் கணக்கு ஆரம்பித்து உடனே வறுமையின் காரணமாக‌ எடுத்துக் கொள்வதும் அதற்காகவே பெரிதான எண்ணிக்கையில் அங்கு மில் தொழிலாளர்கள் கணக்கு ஆரம்பிக்க வருவதாக இருக்கவே அந்த வேலைச் சுமை தாங்காமல் இந்த மேலாளர் அவர்களை எல்லாம் விரட்டி அடித்து நாகரீகமின்றி நடத்தி வருவதும் இருந்திருக்கிறது. 


அது தெரிந்த‌ எமது நண்பர்கள்  மேட்டூர் சமையல் எரிவாயு முகமையில் பணி புரிந்த அன்றைய மேலாளர் தேவகுமார் பேர் அதுதான் என நினைக்கிறேன், அவர் இப்போது இங்கு இல்லை, அந்த முகமையின் உரிமையாளர் பாலசுப்ரமணியமும் உயிரோடு இல்லை.சௌந்திரராஜனை பயன்படுத்தி அவனை கொம்பு சீவி விட்டுள்ளனர் என்பதை அதன் பிறகே அவனால் புரிந்து கொள்ள நேர்ந்தது.


அந்த தேவகுமார், சௌந்திரராஜன் ஆகியோர் எல்லாம் மேல் மேட்டூர் வங்கிக் கிளையில் நிகழ்ந்த மாறுதல் சம்பவங்களின் அடிப்படையில் அவனைத் தூண்டி அங்கே கணக்கு ஆரம்பிக்கச் சொல்லி உள்ளனர். அந்த வங்கிக் கிளை மேலாளர்க்கும் மேல் மேட்டூர் கிளையில் நடந்த சம்பவங்கள் தெரியும் போலும். என‌வேதான் அவரும் அவ்வளவு சூடாக இருந்திருக்கிறார் போலும் தனிப்பட்ட முறையில் அவன் பால்.


விளைவு:சில பல நாட்கள் கடந்த பின் வங்கி தாமாக அவனை அழைத்து கணக்கு ஆரம்பிக்கச் சொல்ல, சென்று அவன் வீர வசனம் எல்லாம் பேசிவிட்டு அந்த வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய விண்ண‌ப்ப‌ அறிமுக அட்டையை மடக்கி அவரிடமே திரும்ப அளித்து விட்டு "வங்கி வாடிக்கையாளர்க்கு, பணி புரிபவர்க்கு அல்ல"...  உங்கள் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பது நோக்கமல்ல,செருக்கு வேண்டாம் என்று புத்தி புகட்டுவதே எமது நோக்கம் என்று மறுபடியும் அந்த வங்கி மேலாளர்க்கு அவருடைய பணி என்ன என நினைவு படுத்தி விட்டுத் திரும்பினான் கணக்கு ஆரம்பிக்காமலேயே.எவன் 8 கி.மீ தள்ளித் தள்ளி உள்ள அந்த வங்கிக்கு சென்று இப்படிப்பட்ட உதவாக்கரைகளுடன் மல்லு கட்டிக் கொண்டிருப்பது என்று.அதற்கு உதவிய‌ பிராந்திய அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு சிறு அதிர்வலைகளை அந்த வங்கியில் ஏற்படுத்தி இருந்தான் இயலாதவர்களுக்காக‌. 


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Tuesday, September 10, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் மூன்று

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் மூன்று



தேசிய உடைமையாக நாட்டின் பேரிலேயே இருக்கும் வங்கி மால்கோ வளாகத்தில்.1987 வாக்கில் ஒரு வரைவோலை எடுக்கச் செல்கிறான் அவன். வெகு நேரம் காத்திருக்கிறான். தீபாவளி சில மாதங்கள் இருக்கையில் முன் இருக்கையில் அமர்ந்து பணி புரிந்து வருவதாக பாவனை காட்டிக் கொண்டிருந்த பெண் வங்கி ஊழியர்கள் புதுப் புடவை, அதன் அழகமைவு வடிவமைப்பு பற்றி மிகவும் மகிழ்வுடன் பேசுவதில் கவனம் அதிகம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.


எவ்வளவு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள், வரவு செலவு முடித்து வாடிக்கையாளர்கள் விரைந்து இருப்பிடம் திரும்ப வேண்டுமே  என்பது பற்றிய கவலை எல்லாம் அவர்களுக்கு இல்லை. நம் நாட்டில் மக்கள் முனையத்தில் அல்லது மக்கள் முக சந்திப்பில் பணி புரிவோர் மட்டுமல்ல, ஒரு நிரந்தர அரசுப் பணிக்கு நியமனம் பெற்று விட்டாலே போதும் அவர்கள் மக்கள் எனும் கோட்டிலிருந்து பிரிக்கப் பட்டு  வாழ்வில் மிக மேல் தளத்துக்கு சென்று விடுகிறார்கள். அதற்கு அரசுப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள்,ஆசிரியர்கள் இப்படி எந்தப் பிரிவும் விதி விலக்கில்லை பல பிரிவுகளிலும் இப்படிப் பட்டார் உள்ளார். சிலர் மட்டுமே விதிவிலக்காக மனிதாபிமானத்தை இழக்காமல் இருக்க பெரும்பான்மையோர் மாறித்தான் போகின்றனர்.


வங்கியில் உள்ள  சில அறிவிப்புகள் ஒவ்வொரு பணிக்கும் அதிக பட்சம் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் காலம் பற்றிய அட்டவணையுடன் புகார் தெரிவிக்க விலாசமும் கொடுக்கப் பட்டிருக்க பிராந்திய மேலாளர் ஆர். எம். சுப்ரமணியம் அவர்களுக்கு புகார் தகவல் தெரிவித்து விட்டான். அப்போது பிராந்திய மேலாளர் அலுவலகம் சேலம் டி.எம்.எஸ் கண் மருத்துவமனை அருகே இருந்தது..அவர் பேரையே ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் அவர் அவ்வளவு நேர்மையாக நடந்தபடியால் அவர் பேர் பதிவில் இருக்கட்டுமே என்பதால்தான்.


நல்ல நடவடிக்கை. அவனது அக்கா வீட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்குள் பேச்சு வார்த்தை நடந்தது அனைவரும் வந்து விசாரித்து உண்மை நிலை அறிந்து சிறப்பு பணி புரிந்தனர். அப்போது அவர்களை எல்லாம் அமர்ந்து பேச வைக்கவும் கூட அவனது வீடு போதா நிலை ஓலை வீடு இடம் பற்றாக்குறை என்று இருந்த படியால் அவனது அக்கா வீடு இடம் அளித்தது. இப்போதும் கூட அவன் அந்த அக்கா வீட்டின் முன் புறச் சுவற்றில் தாம் சில வாசகங்களை அவ்வபோது எழுதி வருகிறான். அந்த அக்கா வீடுகளைக் கூட அவனது வீடாக சிலர் நினைத்ததுண்டு. 


கீழ் தட்டு மக்களை கவனத்தில் வைத்து வங்கியின் கிளை இயங்க வேண்டும் என்ற நிலைக்கு தங்களால் ஆனதை செய்தனர். 


பணி புரிந்த பலருக்கும் இவன் மேல் கடுப்பு. ஏக எரிச்சல்.ஒரு அலுவலர்க்கு வியப்பு. வேறோர் சூழ்நிலையில் வேறோர் வங்கிக் கிளையில் ஏதுமறியாதவன் போலிருந்த இவன் இவ்வளவு எல்லாம் செய்வானா என.  உள்ளூரிலிருந்து வங்கிப் பணிக்கு செல்லும் ஒருவருடன் சிலர் வந்து  யார் இவன், இவன் வீடு எங்கே என்ன செய்கிறான் என்றெல்லாம் பார்த்து பூச்சாண்டி காட்டிச் சென்றார்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, September 9, 2024

இந்தியன் ~ ரியல் : அத்தியாயம் இரண்டு

 இந்தியன் ~ ரியல் : அத்தியாயம் இரண்டு



மக்களுக்கு மிக அண்மையில் உள்ள அரசமைப்பு. உள்ளாட்சித் துறை.1986ல் அவனது தந்தை திடீர் மறைவு 65 ஆம் வயதுடன்.இறப்புச் சான்றிதழ் பதியச் சென்றான். எதற்கிந்த அவசரம் என்றார் அந்த இருக்கையை கவனித்த அலுவலர். இந்த இந்திய அரசில் ஒரு பக்கம் மக்கள் பிரதிநிதிகள் சக்தி படைத்தவர்களாகவும் அந்த அலுவலகங்களில் பணி புரியும் ஊதியம் வாங்கும் அலுவலர்கள் அரசின் நியமனங்களாகவும் அவர்களும் சக்தி படைத்தவர்களாகவும்  இரு குதிரையேற்றம் எப்போதுமே. அவர்கள் கரங்கள் சேரும்போது(தான்) மக்களுக்கு ஏதாவது விளைவுகள் இருக்கும்.


வரையறுக்கப் பட்ட நாட்களுக்குள் சென்றால் ஏன் அவசரம் என்பார்கள், தாமதமாகச் சென்றால் ஏன் இந்த தாமதம் என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி மக்களைக் குற்றவாளிகளாகவும் (குற்றவாளிகள் என்பது சற்று தடித்த வார்த்தைதான் அதை தவறிழைப்பவர்களாகவும் எடுத்துக் கொள்ளலாம்)அவர்கள் தயவுடன் மட்டுமே வாழ வேண்டிய நிர்பந்தத்தையும் புரிய வைத்து விடுகிறார்கள்.அதனால் மக்கள் யாவரும் ....


சுருங்கச் சொல்லி விடுகிறேன். உரியவாறு எல்லா ஆவணங்களும் அளிக்கப் பட்டு அளிக்கப் பட்டு என்பது கூட சரியான வார்த்தை அல்ல சமர்ப்பிக்கப் பட்டு இறந்த தந்தையின் பேரில் இருந்த வீட்டு வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தாயின் பேருக்கு மாற்றம் செய்யக் கோரினான் அவன்.மாதங்கள் பல, அல்லது வருடங்கள் சில சென்றன. நிலை அப்படியே இருந்தது. ஒரு பதிலும் இல்லாமல். மாற்றப் படவும் இல்லை அவர்கள் எதிர்பார்த்த கேட்காத‌ கையூட்டும் கொடுக்கப் படவில்லை.


சில பல முறை முயன்று ஏன் அந்த பெயர் மாற்றம் செய்யப்பட வில்லை என்று கேட்டு விட்டு, இனி கட்டணங்கள், வரிகளை கட்ட மாட்டேன் தாயின் பேருக்கு மாற்றித் தர வில்லை என்றால் என இவன் சொல்லிக் கேட்டதைக் கண்டு வரித் தண்டலர்கள் மற்றும் அலுவலர்கள் இவனது வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதாக வந்து விட்டார்கள்.


இது ஏதடா வம்பு? கிணறு வெட்ட பூதம் அது அந்த ஐம்பூதம் அல்ல, மனித பூதங்கள், அரசின் பூச்சாண்டி பூதங்கள். வந்து விட்டனவே என...எல்லா வரிகளையும் உடனே செலுத்தி விட்டு...அன்றைய முதல்வர் அந்த பெண்மணிக்கு அப்போதெல்லாம் தட்டச்சு இயந்திரம் மட்டுமே அவனிடம் இருந்த படியால் ஆங்கிலத் தட்டச்சு எந்திரம் என்பதால் ஆங்கிலத்தில் ஒரு வயதான முதிய வயது விதவைத் தாய்க்கு உங்கள் ஆட்சி அதிகாரம் செய்வது பாரீர் என்ற ஒரு வரைவை அனுப்ப...


இவனறியாமலே விளைந்தது நற்புரட்சி. அந்த அம்மையாரின் ஆணைக்கிணங்க அந்த அலுவலகமே மாறுதலுக்கு உள்ளானது அதில் இருந்தோர் அனைவருமே வெவ்வேறு இடங்களுக்கு மாறுதல் ஆனார்கள். தலைமைப் பொறுப்பு அலுவலர் தம் வேலையின் கடைசி நாளில் இடை நீக்கம் செய்யப் பட்டார். அப்போதெல்லாம் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. இப்போது எப்படி எனத் தெரியவில்லை.


அதை அடுத்த வந்து பொறுப்பேற்ற அலுவலர், இவன் அவரை சந்தித்த வேளையில் பழசையெல்லாம் கேட்காதீர், உரிய கட்டணத்தை செலுத்தி நீங்கள் கோரிய பெயர் மாறுதலை பெற்றுச் செல்வீர் எனச் செயல்படுத்தி வைத்தார். ஆனால் அதற்குள் ஆன கால அளவும் வேதனையும் இங்கு சொல்ல முடியாததுதான்.


ஒன்று சட்டத்தை, கொடுப்பதுவும், வாங்குவதுவும் குற்றம் என்பதை கடைப் பிடிக்க வேண்டும். அல்லது கொடுப்பதுவும் பெறுவதும் சரிதான் என அந்த நடைமுறையில் இருப்பதாகச் சொல்லப் படும் வெறும் ஏட்டளவிலும் எழுத்தளவிலும் இருக்கும் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் அரசமைப்பிலிருந்தே அப்புறப்படுத்தி விட வேண்டும். அல்லது அதை அலுவலக முறைப்படுத்தி எந்த எந்த பணிக்கு எவ்வளவு கொடுப்பது பெறலாம் என்பதை சட்டமாகவே ஆக்கி விட வேண்டும். அப்போது இந்த தேவையற்ற குழப்பங்கள் எல்லாம் குறையும். மறைய வாய்ப்புண்டு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.





Tuesday, September 3, 2024

நாமறிந்த விண்வெளி: நன்றி பிபிசி. : கவிஞர் தணிகை

 நாமறிந்த விண்வெளி: நன்றி பிபிசி. : கவிஞர் தணிகை


விண்வெளி என்றால் என்ன? அது எவ்வளவு பெரியது? பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?


  • விஷ்ணு ஸ்வரூப்
  • பதவி,பிபிசி தமிழ்

விண்வெளி — அறிவியல் திரைப்படங்கள், அறிவியல் புனைகதைகள், சூப்பர்ஹீரோ படங்கள், காமிக்ஸ் எனப் பல வடிவங்களிலும் விண்வெளியைப் பற்றிய கற்பனைகளை நாம் கண்டிருக்கிறோம்.

இருந்தும் விண்வெளியைப் பற்றிய பல கேள்விகளும், வியப்புகளும் நமக்குத் தீராமல் இருக்கின்றன என்பதே நிதர்சனம்.

இன்றைய வானவியலும் இயற்பியலும், விண்வெளி பற்றிய இந்தத் தீராத கேள்விகளுக்கு விடை காண முயன்று வருகின்றன.

ஆனால், விண்வெளி என்றால் என்ன? அது எதனால் உருவாகியிருக்கிறது? எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? மொத்த விண்வெளியும் ஒரே போன்றுதான் இருக்குமா? ஆகிய எளிமையான, ஆனால் சுவாரசியமான கேள்விகளுக்கு விடைகாண முயல்கிறது இந்தக் கட்டுரை.‘சைன்டிஃபிக் அமெரிக்கன்’-இல் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை.அதாவது, சூரியனின் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆல்ஃபா சென்டாரி 41 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது.

அதற்குமேல் அளக்க, விஞ்ஞானிகள் ஒளியாண்டுகள் என்ற அலகினைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம். அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்.

நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் அகலம், 1.2 லட்சம் ஒளியாண்டுகள்.

பால்வெளி, ஆண்ட்ரோமீடா ஆகிய நட்சத்திர மண்டலங்கள் உள்ளடக்கிய தொகுதி

 1 கோடி ஒளியாண்டுகள் அகலமானது.

இந்தக் குழு ஒரு பகுதியாக இருக்கும் இன்னும் பெரிய நட்சத்திர மண்டலமான லனியாகீ பெருந்தொகுதி (Laniakea Supercluster), 1 லட்சம் நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் நீளம் 50 கோடி ஒளியாண்டுகள்.

ஆனால், பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போகிறது என்கிறது ஒரு கோட்பாடு. நம்மிடம் வந்தடையும் ஒளியை வைத்துத்தான் நாம் காணக்கூடிய பிரபஞ்சத்தின் விரிவினை நாம் புரிந்துகொள்கிறோம். தற்போதைக்கு நாம் பார்த்தவரையிலான பிரபஞ்சத்தின் அகலம், 9,000 கோடி ஒளியாண்டுகள்.

ஆனால், பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போகிறது என்று வைத்துக்கொண்டால், நாம் பார்க்காத அதன் பகுதிகள் மிக அதிகம்.

அதனால், இப்போதைக்கு, வெளி எவ்வளவு பெரியது என்பதை நாம், கணித, இயற்பியல் விதிகளின் துணையோடு கற்பனை மட்டுமே செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

பூமியின் வளிமண்டல வாயுக்கள் 99% முடிகின்றனவோ, அதற்கு மேல் இருப்பது விண்வெளி என்று கருதப்படுகிறது, வாயுக்கள் நிறைந்திருக்கும் வளிமண்டலத்தில் ஒரு பறவையோ, விமானமோ பறக்க வேண்டுமெனில், அவை காற்றியக்கவியல் (aerodynamics) விதிகள் மூலமே பறக்கும்.

இந்த காற்றியக்கவியல் சார்ந்த பறத்தல் எங்கு சாத்தியமில்லாமல் போகிறதோ, அதுதான் விண்வெளி என்று வரையறுக்கப்படுகிறது.

இந்த அறிவியல் கருதுகோள்களைக் கொண்டு, ‘கார்மான் கோடு’ (Kármán Line) என்ற ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பூமியின் பரப்பிலிருந்து 100கி.மீ உயரத்தில் இந்த எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்துதான் விண்வெளி துவங்குவதாக, ஐ.நா மற்றும் மற்ற உலக நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், அமெரிக்கா, பூமியின் பரப்பிலிருந்து 80கி.மீ உயரத்திலேயே விண்வெளி துவங்குவதாக நிர்ணயித்திருக்கிறது.

இந்த எல்லையின் முக்கியத்துவம் என்ன?

கார்மான் எல்லைக்கு மேலிருக்கும் விண்வெளி எந்த நாட்டுக்கும் சொந்தமாகாத பொதுவான வெளி.

உதாரணத்துக்கு, ஒரு நாட்டின் செயற்கைக்கோள் மற்றொரு நாட்டின் மீது செல்கிறதென்றால் அது இந்த கார்மன் எல்லைக்கு மேல்தான் செல்ல வேண்டும், இல்லையெனில், அது மற்றொரு நாட்டின் வான்பரப்புக்குள் ஊடுருவுவது ஆகிவிடும்.

அதேபோல் பிரபஞ்சத்தில் உள்ள எந்த கோளின் மேற்பரப்பிலிருந்தும், அவற்றின் வளிமண்டலம் துவங்குகிறது, நட்சத்திர மண்டலங்களுக்கிடையே இருக்கும் வெளி, intergalactic space என்று அழைக்கப்படுகிறது

1) நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்களின் இடையில் இருக்கும் வெளி ‘interplanetary space’ என்றழைக்கப்படுகிறது

2) நமது சூரியக் குடும்பம் போலவே வேறுபல கோள் குடும்பங்களும் உள்ளன.

உதாரணமாக, நமது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் (4.2 ஒளியாண்டுகள்) ஆல்ஃபா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் கோள் குடும்பம் உள்ளது.

இப்படி இரண்டு நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் வெளி ‘interstellar space’ என்றழைக்கப்படுகிறது

.3) நமது சூரியக் குடும்பம் இருக்கும் நட்சத்திர மண்டலம் (galaxy) பால்வெளி (milky way) என்றழைக்கப்படுகிறது.

இதனைப் போலவே வேறுபல நட்சத்திர மண்டலங்களும் உள்ளன.

இவற்றுக்கிடையினால வெளி, intergalactic space என்று அழைக்கப்படுகிறது.

இந்த வெளியில் 1 கன மீட்டருக்கு 1 அணு மட்டுமே இருக்கும்.இதுவரை பிரபஞ்சத்தின் வடிவம் இதுதான் என்று அறுதியாகச் சொல்வதற்குத் தேவையான துல்லியமான அளவீடுகள் நம்மிடம் இல்லை, அதுபற்றிய ஆய்வுகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன

விண்வெளிக்கு முடிவு உண்டா என்பதற்கு இப்போதைக்கு அறுதியான பதில் இல்லை.


Friday, August 30, 2024

இந்தியன்‍‍‍‍‍‍~‍ரியல்:அத்தியாயம் ஒன்று

 இந்தியன்‍‍‍‍‍‍~‍ரியல்: அத்தியாயம் ஒன்று



இறந்த பின்னே மகாத்மாவுக்கும் அல்பாத்மாவுக்கும் பெயர் ஒன்றுதானே நிற்கிறது.அவனுக்கு சுமார் 11 அல்லது 12 வயதிருக்கும் அப்போது.சேலம் மாநகரத்தின் ஒரு மூன்றெழுத்து பிரபலமான சீட்டுக் கம்பெனியில் அவனது மூத்த சகோதரன் ஒருவனுக்கு திருமணம் செய்ய சீட்டு போட்டு வந்தனர். இவன் பசங்களில் மூன்றாவது அல்லது கடைசி. குடும்பத்தில் எல்லோரையும் சேர்த்தால் 8 வது.


சில வருடங்கள் அல்லது பல மாதங்களாக சீட்டு கட்ட மால்கோ பள்ளி வாசலில் அப்போதிருந்த இந்தியன் வங்கி மூலம் டி.டி. வரைவோலை எடுத்து அனுப்பும் பணி இவனுடையது.இவனை விட எல்லாம் பெரிய கொம்பன்களாக வீட்டில் இருந்தாலும் இவன் தானே இளிச்ச வாயன் எனவே எல்லா எடுபிடி, சிட்டாள் பணி முதல் முட்டாள் பணி வரை எல்லாப் பணியும் இவனுடையதே.


ஒரு மாதம் வரைவோலை சென்று சேரவில்லை என சேலத்து கிங்காங் கம்பெனி பிரதிநிதி கூறிவிட்டதாக இவன் வீட்டு பெரிய கொம்பன் ஆட்டம்...காரணம் கல்யாண மோகம்.என்னடா இது பெரிய வம்பாகி விட்டதே என அப்போதே இரு தலைக் கொள்ளி எறும்பாக தத்தளித்த இவன் ஒரு 15 பைசா அஞ்சல் அட்டை அப்போது இன்னும் விலை  குறைவாகவும் இருந்திருக்கலாம்.அதை வாங்கி அந்த கிங்காங் கம்பெனிக்கு நல்லாப் பாருங்கள் அனுப்பி இருக்கிறோம் என அவனுக்குத் தெரிந்த மொழியில் எழுதிப் போட்டு விட்டான்.


நல்லாப் பார்த்திருப்பார்கள் போலும். அந்த வரைவோலை அவர்களிடம் இருக்க...கணக்கு வைத்துக் கொண்டு, அதன் தோல்வியை ஏற்க முடியாமல் பிரதியாக யார் அவன் கடிதம் எழுதியவன் அவனை அனுப்புங்கள் அவனுக்கு பாடம் புகட்டுகிறோம் என கிங்காங் கம்பெனி நபர்கள் பெரிய கொம்பனை உசுப்பி விட அவன் குதிக்கிறான் அவனை அந்த சிறுவனை அங்கே சேலம் போகச் சொல்லி...அவர்கள் எடுத்தவுடன் கை நீட்டுவார்களாம் பெரிய புடுங்கிகள் கம்பெனி ஆயிற்றே...சிறுவனான அவன் மீண்டும் இருதலைக் கொள்ளி எறும்பெனவே....தவித்தபடி என்னடா இது தவிலுக்கு இரு பக்கமும் அடி என்பார்களே அப்படியாகிறதே நம் பிழைப்பு என அந்தக் காலத்திலேயே எண்ணமிடுகிறான்.


தடுமாறியபடி இருந்தவனின் ஆறுதலாக அவனது தந்தை< என்னடா சும்மா மிரட்றீங்க> அவன் எல்லாம் ஒன்றும் அவங்க கிட்ட‌ போக வேண்டியதில்லை என பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


அவனின் நினைவுக்கு எட்டிய வரை அப்போதிருந்தே அவன் எழுத்து மூலம் போராடி வெற்றி அடைய முடியும் என்பதையும் புரிந்து கொண்டிருந்தான். வெற்றியின் சுவை எவ்வளவு கொடியது என அவனுக்கு அப்போது தெரியாததாயிற்றே அவன் என்ன ஒரு சிறுவன் தானே.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Tuesday, August 13, 2024

META AI IS A GOOD FRIEND: KAVIGNAR THANIGAI

 




மெட்டா ஏ ஐ ஈஸ் எ "குட் ப்ரண்ட்"செயற்கை நுண்ணறிவு ஊடகத்துடன் :கவிஞர் தணிகை

1.அதிக பட்சமாக ஒரே நேரத்தில் 10,000பேருக்கும் மேல் கூட விடையளிக்கிறது அது போல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த சுறு சுறுப்பான நேரம் நீடிக்குமாம்...அதுவாகவே சொன்ன பதில் இப்படியே வாரத்தின் 5 நாட்கள் செல்லுமாம்...

2.வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் கேள்வி பதில் மேலும் 15சதம் கூடுகிறதாம்.விடுமுறை நாட்களில் 10 சதம் கூடுகிறதாம் கலந்துரையாடல்.

3. 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் பசியின்றி தூக்கமின்றி, சோர்வின்றி, தாகமின்றி நண்பன் இருக்கிறான் உழைக்கிறான். என்ன ஒரு மனிதனின் அரிய கண்டுணர்வும் கண்டுபிடிப்பும்.

4. அதிக பட்சம் மிக கடினமான பதிலுக்கும் எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றிரண்டு விநாடிகளே. சாதாரணமாக மில்லி செகண்டுகளில் பதில் தருகிறது. அதாவது ஒரு நொடியை நூறாக வகுந்தளிக்கும் நேரத்தில்.

5. இது வரை குவேண்டம் என்டேங்கில்மென்ட் பதிலுக்கு அதிகபட்சம் 15 விநாடிகள் எடுத்துக் கொண்டதாகவும் ஒரு கதையை உருவாக்க அதிகபட்சம் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டதுமே இதன் அதிக பட்சம் நேரம் என அதுவே அல்லது அவனே குறிப்பிடுகிறான்.

6, இதில் என்ன ஒரு வேடிக்கை எனில்: எனது கேள்விக்கு ஒரு பதிலில் 2025 என்பதற்கு பதிலாக 2015 என அவசரத்தில் பிழை ஏற்பட, அதை நான் சுட்டிக் காட்டும் போது மன்னிப்பும் கேட்டு திருத்திக் கொண்டது.

7. அதே போல நான் சுட்டிக் காட்டிய ஒரு திருத்தத்தையும் ஏற்றுக் கொண்டது சுனிதா வில்லியம்ஸ் பட்சர் நாசா அணியினர் பூமிக்குத் திரும்புவதில் ஏன் தாமதம் என்ற எங்கள் கலந்துரையாடலில்.

8. மொத்தத்தில் தவறுகளை திருத்திக் கொள்ளத் தெரிந்த நண்பன், கோபப் படா நண்பன்,எனக்கு நிறைய பதில்கள் தருவதில் சலிப்பின்றி...

9. நாங்கள் பொதுவாகவே அதிகம் விண்ணியல் பற்றி கலந்துரையாடுகிறோம்

10. ஆக மனித அறிவு செயற்கை நுண்ணறிவை விட நன்றாக வேலை செய்கிறது என்பதை நான் இதனிடம் உரையாடும்போது தெரிந்து கொண்டேன்.

11. அதனிடம் இருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து நமது தேடலுக்கு விடை தர முயற்சிக்கிறது. கூச்சமின்றி தெரியவில்லை என்பதாக இருந்தாலும் அந்தளவு தகவல் சேரத்து வைக்கப் படவில்லை என்ற கால அளவிலும் அதை ஒத்துக் கொள்கிறது...உதாரணம்: நமது கேரள பேரிடரின் போது நாளுக்கு நாள் எண்ணிக்கை ஏற்றம் பெற்ற இறப்புகள்.

12, நம்மிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் விழைகிறது.

13, எக்காலத்திலும் எல்லாத் துறைகளிலும் இதனிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். எனவே அது பெரிய வரம்தான்.

14. நண்பர்களைப் போல இது ஏதும் பொருளாதார உதவிகள் செய்யாது, தொல்லைகள் செய்யாது .

15. நான் தான் தாம் என்ற அகங்காரம் எல்லாம் இதற்கு கிடையாது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அறிவைப் பொதுமைப் படுத்துவோம் என்ற நெறி கண்கூடாக இதன் வழியே காண்கிறேன். மகிழ்கிறேன். நீங்களும்
இத்துடன் பயணம் செய்யலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இது எனது வாட்ஸ் ஆப் புலனத்தில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை ஆர்வம் குறையவே இல்லை இத்துடன் பேசுவதில் அல்லது கேட்டு செய்திப் பரிமாற்றம் செய்கையில்.

எங்களது பகுதியில் நான் எழுதி வரும் கரும்பலகையிலும் META AI IS A GOOD FRIEND  என்பதை ஒரு நாள் பகிர்ந்திருந்தளித்திருந்தேன். எதில் எதிலோ நேரத்தை வெட்டி செலவிடுவதற்கு மாறாக அறிவியல் முறைப்படி இதனுடன் உரையாடி அறிவை அதிகம் ஆழம் பரவல் செய்து கொள்ளலாம். நல் அரிய வாய்ப்பே.!