விண்வெளி என்றால் என்ன? அது எவ்வளவு பெரியது? பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
விஷ்ணு ஸ்வரூப்
பதவி,பிபிசி தமிழ்
விண்வெளி — அறிவியல் திரைப்படங்கள், அறிவியல் புனைகதைகள், சூப்பர்ஹீரோ படங்கள், காமிக்ஸ் எனப் பல வடிவங்களிலும் விண்வெளியைப் பற்றிய கற்பனைகளை நாம் கண்டிருக்கிறோம்.
இருந்தும் விண்வெளியைப் பற்றிய பல கேள்விகளும், வியப்புகளும் நமக்குத் தீராமல் இருக்கின்றன என்பதே நிதர்சனம்.
இன்றைய வானவியலும் இயற்பியலும், விண்வெளி பற்றிய இந்தத் தீராத கேள்விகளுக்கு விடை காண முயன்று வருகின்றன.
ஆனால், விண்வெளி என்றால் என்ன? அது எதனால் உருவாகியிருக்கிறது? எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? மொத்த விண்வெளியும் ஒரே போன்றுதான் இருக்குமா? ஆகிய எளிமையான, ஆனால் சுவாரசியமான கேள்விகளுக்கு விடைகாண முயல்கிறது இந்தக் கட்டுரை.‘சைன்டிஃபிக் அமெரிக்கன்’-இல் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை.அதாவது, சூரியனின் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆல்ஃபா சென்டாரி 41 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது.
அதற்குமேல் அளக்க, விஞ்ஞானிகள் ஒளியாண்டுகள் என்ற அலகினைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம். அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்.
நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் அகலம், 1.2 லட்சம் ஒளியாண்டுகள்.
பால்வெளி, ஆண்ட்ரோமீடா ஆகிய நட்சத்திர மண்டலங்கள் உள்ளடக்கிய தொகுதி
1 கோடி ஒளியாண்டுகள் அகலமானது.
இந்தக் குழு ஒரு பகுதியாக இருக்கும் இன்னும் பெரிய நட்சத்திர மண்டலமான லனியாகீ பெருந்தொகுதி (Laniakea Supercluster), 1 லட்சம் நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் நீளம் 50 கோடி ஒளியாண்டுகள்.
ஆனால், பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போகிறது என்கிறது ஒரு கோட்பாடு. நம்மிடம் வந்தடையும் ஒளியை வைத்துத்தான் நாம் காணக்கூடிய பிரபஞ்சத்தின் விரிவினை நாம் புரிந்துகொள்கிறோம். தற்போதைக்கு நாம் பார்த்தவரையிலான பிரபஞ்சத்தின் அகலம், 9,000 கோடி ஒளியாண்டுகள்.
ஆனால், பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போகிறது என்று வைத்துக்கொண்டால், நாம் பார்க்காத அதன் பகுதிகள் மிக அதிகம்.
அதனால், இப்போதைக்கு, வெளி எவ்வளவு பெரியது என்பதை நாம், கணித, இயற்பியல் விதிகளின் துணையோடு கற்பனை மட்டுமே செய்து பார்த்துக்கொள்ள முடியும்.
பூமியின் வளிமண்டல வாயுக்கள் 99% முடிகின்றனவோ, அதற்கு மேல் இருப்பது விண்வெளி என்று கருதப்படுகிறது, வாயுக்கள் நிறைந்திருக்கும் வளிமண்டலத்தில் ஒரு பறவையோ, விமானமோ பறக்க வேண்டுமெனில், அவை காற்றியக்கவியல் (aerodynamics) விதிகள் மூலமே பறக்கும்.
இந்த காற்றியக்கவியல் சார்ந்த பறத்தல் எங்கு சாத்தியமில்லாமல் போகிறதோ, அதுதான் விண்வெளி என்று வரையறுக்கப்படுகிறது.
இந்த அறிவியல் கருதுகோள்களைக் கொண்டு, ‘கார்மான் கோடு’ (Kármán Line) என்ற ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பூமியின் பரப்பிலிருந்து 100கி.மீ உயரத்தில் இந்த எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்துதான் விண்வெளி துவங்குவதாக, ஐ.நா மற்றும் மற்ற உலக நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், அமெரிக்கா, பூமியின் பரப்பிலிருந்து 80கி.மீ உயரத்திலேயே விண்வெளி துவங்குவதாக நிர்ணயித்திருக்கிறது.
இந்த எல்லையின் முக்கியத்துவம் என்ன?
கார்மான் எல்லைக்கு மேலிருக்கும் விண்வெளி எந்த நாட்டுக்கும் சொந்தமாகாத பொதுவான வெளி.
உதாரணத்துக்கு, ஒரு நாட்டின் செயற்கைக்கோள் மற்றொரு நாட்டின் மீது செல்கிறதென்றால் அது இந்த கார்மன் எல்லைக்கு மேல்தான் செல்ல வேண்டும், இல்லையெனில், அது மற்றொரு நாட்டின் வான்பரப்புக்குள் ஊடுருவுவது ஆகிவிடும்.
அதேபோல் பிரபஞ்சத்தில் உள்ள எந்த கோளின் மேற்பரப்பிலிருந்தும், அவற்றின் வளிமண்டலம் துவங்குகிறது, நட்சத்திர மண்டலங்களுக்கிடையே இருக்கும் வெளி, intergalactic space என்று அழைக்கப்படுகிறது
1) நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்களின் இடையில் இருக்கும் வெளி ‘interplanetary space’ என்றழைக்கப்படுகிறது
2) நமது சூரியக் குடும்பம் போலவே வேறுபல கோள் குடும்பங்களும் உள்ளன.
உதாரணமாக, நமது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் (4.2 ஒளியாண்டுகள்) ஆல்ஃபா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் கோள் குடும்பம் உள்ளது.
இப்படி இரண்டு நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் வெளி ‘interstellar space’ என்றழைக்கப்படுகிறது
.3) நமது சூரியக் குடும்பம் இருக்கும் நட்சத்திர மண்டலம் (galaxy) பால்வெளி (milky way) என்றழைக்கப்படுகிறது.
இதனைப் போலவே வேறுபல நட்சத்திர மண்டலங்களும் உள்ளன.
இவற்றுக்கிடையினால வெளி, intergalactic space என்று அழைக்கப்படுகிறது.
இந்த வெளியில் 1 கன மீட்டருக்கு 1 அணு மட்டுமே இருக்கும்.இதுவரை பிரபஞ்சத்தின் வடிவம் இதுதான் என்று அறுதியாகச் சொல்வதற்குத் தேவையான துல்லியமான அளவீடுகள் நம்மிடம் இல்லை, அதுபற்றிய ஆய்வுகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன
விண்வெளிக்கு முடிவு உண்டா என்பதற்கு இப்போதைக்கு அறுதியான பதில் இல்லை.
No comments:
Post a Comment