இந்தியன் ~ ரியல் அத்தியாயம் :6
அதிகாலையிலேயே அழைப்பு, காவல் நிலையத்திலிருந்து வரச் சொன்னதாக, அப்பு என்கிற கிருஸ்ணசாமி முதலியார் இவனுக்கு மிக நெருக்கமான தந்தையைப் போன்றவர், அவனுடைய தகுதிகளைப் பார்த்து நீங்கள் எல்லாம் பொது வாழ்வில் வரவேண்டும் . என்ற வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கோவில் பணிகள், பொதுவாக நியாயம் பேசி பிறர் பிரச்சனைகளைத் தீர்த்தல் அகியவற்றில் ஊரின் மற்றொரு தோழரோடு தோள் சேர்ந்து செய்து வந்ததன் விளைவு.அந்த தோழர் பழைய கால ஊர்ப் பாரம்பரியத்தின் வழி வந்தவர்.
அப்பு முதலியாருக்கு போன் செய்தான் அவன், என்ன அண்ணா இப்படி ஆகி இருக்கிறது உங்கள் வார்த்தைகள் என்றான். விடுங்கள் நான் போன் செய்து கேட்கிறேன், நீங்கள் அதன் பின் காவல் நிலையம் போகலாம் என்றார். அவருக்குத் தெரிந்த காவல் துணை ஆய்வாளர் அவரின் பெயரில் பாதி கொண்டோருடன் பேசினார்.
இட்டுக் கட்டிய பொய்ப் புகாரை , அடையாளம் தெரியாத நபர்களுடன் அடிக்க வந்தான் அவன் என அவன் மேல் ஒரு ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்த ஒருவர் அவர் இப்போது இல்லை. அவர்தாம் புகார் அளித்து, எல்லாக் கவுன்சிலரையும் விட இவர்தாம் கவுன்சிலர் போல நடந்து கொள்வார் என்று அவன் மேல் வாய் மூலம் புகார் வேறு.
இதில் ஒரு வேடிக்கை என்ன வெனில் அவனுடைய 4 வயது கூட நிறையாத சிறுவனான மகனுக்கு அந்த ஆளும் கட்சி கவுனிசிலர் மகள் தாம் கராத்தே முதன் முதலாக சொல்லிக் கொடுத்து வந்தார். குழந்தையைக் கூட்டி வர செல்ல கால தாமதம் ஆனாலும் அவரே கொண்டு வந்து வீட்டில் விட்டுச் செல்வார்.
கவுன்சிலரும் தேர்தலுக்கும் முன்பாக காலையில் தூங்கி எழும் நேரத்திலேயே அவருக்கான ஆதரவை வழங்கச் சொல்லி இவருடைய யோசனையை எடுத்துக் கையாண்டவர்தாம். ஆனால் அவர் ஒரு குடும்பஸ்தரை நீ டீ வாங்கி குடிக்கும் போதெல்லாம் தெரியவில்லையா? என அவமானச் சொற்கள் சொன்னபோது அருகிருந்து கவனித்திருக்கிறான் அவன். அவனிடம் நல்ல வேளை அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை.
ஒரு பொது சந்தை/வீதியை கபளீகரம் செய்ய நினைத்த கவுன்சிலரின் நெருங்கிய குடும்பத்துக்கு ஒத்துழைத்து முன் உள்ள வீட்டாரை பின் வந்து வீட்டை பூச்சு கூட செய்ய விடாமல் , கழிவு நீர் விட வழிவிடாமல், தம் வீடு அந்த வீட்டின் பின் சுவர் வரை இடத்துடன் பொது சந்தையும் சேர்த்து உள்ளது என இவர்கள் அடாவடி. பல் முறை பேசி தோற்ற பேச்சு வார்த்தை . இதுவே பஞ்சாயத்தின் சரத்து.
மகன் காலைப் பிடித்து கொண்டும் கூட அவனது அந்தக் குழந்தையின் முதுகில் ஒரு அடி உரக்க வைத்து, ஒப்புக் கொண்டோம் எனில் சென்றுதான் ஆக வேண்டும் எனச் சொல்லி விட்டு அங்கு சென்றால் ஊரே கூடி நிற்கிறது.அவனே கடைசியாக சென்றவனும் அவன் தாம் என்பதை அவன் தெரிந்து கொண்டான்.
இரு பக்கமும் ஆதாரம் எடுத்து வரச் சொன்னால், ஒரு பக்கம் கொடுத்தார்கள் உடனே கவுன்சிலர் பக்கம் நாளை கொடுக்கிறோம் எனச் சொல்லி விட்டு இந்தப் புகார். அத்தோடு அவரது குடும்பத்து ஆசிரியர் வேறு, மற்றொரு ஊர் பேரூராட்சி பொறுப்பு வகித்த செயல் அலுவலர் வேறு எல்லாம் சேர்ந்து அந்த இளைஞன் மேல் வேண்டுமென்றே புகார் அளித்தார்கள் அவன் பெரிய மனிதனாக ஆகிவிடக் கூடாது என்று.
அந்த நிலை கண்டு இனி காவல் நிலையமே பிரச்சனை தீர்க்கட்டும்,என வழிவிட்டு பொது மனிதர்கள் விலகி விட காவல் நிலையமும் அதே ஆதாரத்தை கேட்டு, அவர்களும் அதைத்தானே கேட்டார்கள் என்று பிறர் சொல்லக் கேள்வி, அதற்கு முன் கள ஆய்வு விசாரணை. அதில் ஒரு மகளிர் சங்கத்திற்கு உரிமையாளர் என கடிதத் தலைப்பிலேயே போட்டு புதுமையெனச் செய்திருந்த பெண்மணி மற்றவர் யாவரும் இருவரும் பேச்சு வார்த்தையாடினார். ஆனால் இவருக்கு அவரை அடிக்கும் நோக்கம் எல்லாம் இல்லை எனச் சொல்லியதை பதிவு செய்து கொண்டனர். இங்கே யார் கவுன்சிலர் என அவனை துணை ஆய்வாளர் கேட்க அவன் கவுன்சிலர் பேரைச் சொல்ல. விசாரணையிலிருந்து விடுபட்டான். அதற்கும் முன் அவன் ஊர்ப் பெரியவர் சிலரின் கையொப்பத்துடன் நிறைய நபர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்த போதும் அவனது பேர் ஒன்றை மட்டும் காவல் நிலையப் புகாரில் அளித்த காரணமென்ன> எனக் எழுதிக் கேட்டிருந்தான்.மற்றொரு நபர் அவரும் அப்போது கவுன்சிலர் எனவே நீ யார் கேடபதற்கு என தமது கட்சிக்கார கவுன்சிலருக்கு ஒத்துழைப்பதாக அவனை கேட்டார்.
காவல் நிலையத்தில் நிலை சீரடைந்தவுடன் , அந்தக் கவுன்சிலர், வாங்க டீ சாப்பிடலாம் என இவனைக் கூப்பிட அன்று முதல் அவன் அந்த நபர் முகத்திலேயே விழிப்பதில்லை என உறுதி பூண்டான். அவரோ இவனை சாதியை விட்டே தொலைத்து விடுகிறேன் என்றவர், தமது மகளுக்கு அழைப்பிதழ் தர வந்து இவன் அதை மறுக்க மறுபடியும் தெருவரை சென்று கூச்சல் செய்து சண்டைக்கு வித்திட்டுக் கொண்டே இருந்தார். அவரை விட அவரது நெருங்கிய உறவுகள் அவனை எங்கு பார்த்தாலும் பகை வளர்த்து அதை அடி தடி தகராறாக மாற்றவும் முயன்றது . பொறுமை காத்தான்.
விளைவாக இயற்கையின் விளையாட்டால், அவர்கள் எல்லாம் இப்போது இல்லை, மதுவுக்கு அடிமையான ஒருவர் வாயில் ஈ போவது தெரியாமல் அந்த வீட்டிலேயே இறந்து கிடந்ததும், ஆண் பெண் வித்தியாசத்தைக் கூட உணராமல் அனைவரையும் அவமானப் படுத்திய அந்தப் பெண் இனம் மாரடைப்பில் இறந்து போனதும் அந்தக் கவுன்சிலராக இருந்தவர் சமீப காலத்தில் இறந்து போனதும் செய்திகளாக அவன் அறிந்ததே.
இயற்கை அனைவரையும் மறைக்கும் ஒரு நாள். காலம் அனைவரையும் அகற்றும் ஒரு நாள். அவனையும் தான் ஆனால் மனிதர்களாக வாழ்வார் இயற்கைக்கும் மாறாக நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment