Friday, January 27, 2023

எம்.அண்ணாதுரைக்கான ஒரு பதிவு: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை

 எம்.அண்ணாதுரைக்கான ஒரு பதிவு: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை



இரத்தம், இரணம், ரௌத்திரம் (தெலுங்கு)

கட்டா குஸ்தி (தமிழ்)

லவ் டுடே ( தமிழ்)

அர்ச்சனா 34 நாட் அவுட் (மலையாளம்)

ஜெய ஜெய ஜெயஹே (மலையாளம்)


எனது  V M S D C கல்லூரி  நண்பர் ஒருவர் சொன்னபடி எழுதுவது அவசியமா? அதை வெளியிடத்தான் வேண்டுமா? படிப்பவர் மனதில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் கருத்து மோதல்களை நிகழ்த்தியபடி நான் எழுதுவதை நானே தணிக்கை செய்து கொண்டிருப்பதால் எனது எழுத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன்.


என்றாலும் எழுதியே ஆகவேண்டும் அது மனப் புழுக்கத்தைக் குறைக்கும், எழுதியே ஆக வேண்டும் அது பிறர்க்கு பயன்படும், பிறரை மகிழ வைக்கும்,  என்பதால், என்பதை மட்டும் எழுதுகிறேன்.


3000 பக்கம் குற்றப் பத்திரிகை சமர்ப்பித்து டில்லி போலீஸ் தற்காலக் காதல் குளிர் சாதனப் பெட்டியில் ஸ்ரத்தா துண்டுகளாகிப் போனது பற்றியே எழுத தலைப்பட்டு  இவ்வளவு அரசின் உழைப்பு அதில் விரயமாக்கப் பட வேண்டுமா ஜெ இறப்பு பற்றிய ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை தேவை ஆனால் ஸ்ரத்தா தேவையா என்றெல்லாம் கேடகத் தோன்றியது...ஆனால் அதை எல்லாம் யார் கேட்டு என்ன ஆகப் போகிறது? அரசுக்கு குடியரசு விழாவும் தேவைப்படுகிறது குடி அரசாகவும் இருக்க மதுக்கடைகளும் தேவைப்படுகிறது என்னும்போது எனது கடையை மூடிக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.


மேலும் நான் ஒரு தணி(கை) மனிதப் போராட்டத்தில் கடந்த ஓராண்டாகவே இருந்து வருகிறேன். அதில் வெற்றி தோல்வி இன்னும் இல்லை. எனவே அதை இடையூறு செய்யும் படியாகவும் எனது எழுத்து இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையும் கூட காரணமாக இருக்கலாம்.


சரி எம்.அண்ணாதுரை விடியல் நண்பருக்காக:


சில நல்ல சினிமாக்களைப் பார்த்தேன், காலம் கடந்த போதிலும்..RRR..இரத்தம்,இரணம்,ரௌத்திரம்...ராஜமௌலி,ராமாராவ்,ராம்சரண் கூட்டணி சக்கைப் போடு போட்டுள்ளது. தெலுங்கு. அதன் இசைக்கு கீரவாணிக்கு ராஜமௌலியின் உறவினர் இவரின் மனைவியும் அவரின் மனைவியும் சகோதரிகள், மேலும் அந்த முக்கிய பாடலை கீரவாணியின் மகனே பாடியும் உள்ளார் குலோபல் GLOBAL அவார்ட் கிடைத்தது மேலும் ஆஸ்கார் OSCAR விருதுக்கான பரிசீலனையில் உள்ளது...அந்தப் படத்தை எப்போதும் பார்க்கலாம்...கற்பனையிலேயே நன்றாக தேசம் தொட்ட கதையாக ...


கட்டா குஸ்தி (தமிழ்), அர்ச்சனா 34 நாட் அவுட்( மலையாளம்) ஆகிய படங்களை ஐஸ்வர்யா லட்சுமி என்பவரை நம்பியே எடுத்தாற்போல அவ்வளவு நேர்த்தி...பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் பூங்குழலி இவர்தான். கட்டா குஸ்தி நல்ல பொழுது போக்கு,அர்ச்சனா 34 நாட் அவுட் ஒரு பெண் எப்படி தனது முக்கியமான தலை போக வேண்டிய கட்டத்தை தலை போகாமல் காத்துக் கொள்கிறாள் தனது அறிவுத் திறன் கொண்டு என...Essential Cinema to face Critical situation.


கேரளத்துப் படங்கள் மிகவும் நமது வாழ்வுக்குள் எளிதாகப் புகுந்து கொள்கின்றன என்பதற்கு இது போன்ற படங்கள் எல்லாம் உதாரணம். எந்த வித வலிமையும், துணிவும் , சினிமா அரசியல் வாரிசு எல்லாம் தேவையில்லை என்பது போன்ற துணிச்சலில் அவர்களின் படங்கள் சட்டென பார்ப்பாருடன் மொழி பேதமின்றி மனிதர்களின் அன்றாட வாழ்வில் அவர் பிரச்ச்சனைகளில் நேர்த்தியான‌அணுகுமுறைகளுடன் கை கோர்த்துக் கொள்கின்றன.


லவ் டுடே (தமிழ்): அனைவரும் பார்த்தே ஆக வேண்டிய காலத்தின் பதிவு. தமிழில் ஒரு நல்ல தற்கால அவசிய சிந்தனையை இழைய வைத்துள்ளார் அந்தக் கோமாளிப் பட இயக்குனர் தாமாகவே கதாநாயகமாகவும் நின்று...


ஜெய ஜெய ஜெயஹே: திருமாணமாகும் வரை பெண்கள் வீட்டின் விளக்குகள் என்று சொல்லி எப்படி நிராகரிக்கப் படுகிறார்கள், ஆனபின்னும் அவர்கள் எப்படி அவர்கள் எண்ணமும் விருப்பமும், கோரிக்கைகளும் நிராகரிக்கப் படுகின்றன எனத் தெளிவாக்கி இருக்கிற படம். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆண்களே பெண்களை இழிவு படுத்தினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என ஒவ்வொரு கணவன்மாருக்கும், போலி மனிதர்க்கும் சூடு போடும் படம்...பெண்கள் எல்லாம் இப்படி கிளர்ந்து எழ ஆரம்பித்தால் குடும்பம் என்ற நிறுவனம் நிலைக்குமா? அவரவர்க்கு பொருத்தமான இணை அமையாதவரை எல்லாம் தனித்துவமாக நின்று விடுமே? ஆண் பெண் ஒருங்கிணைப்பு நிகழ இது போன்ற வீரியமிக்க பெண்களின் ஆற்றல்,விட்டுக் கொடுத்தல் இல்லாவிட்டால் என்ன ஆகும் என ஒவ்வொரு ஆணின் மனதிலும் கேள்விகள் எழ வைத்து சிந்திக்க வைக்கும் படம்...



இப்படி சில இன்றைக்கு போதும்...


இனி 

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

P.S: This post is Dedicated to SATHIS JJ PRINTERS too. Because he is also a Cinema lover and good cinema viewer and fan of my cinema writings.

No comments:

Post a Comment