Wednesday, January 11, 2023

இன்பமாய் வளரட்டும் 2023: கவிஞர் தணிகை

 இன்பமாய் வளரட்டும் 2023: கவிஞர் தணிகை



பொதுவாக ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதில்லை.தமிழ் புத்தாண்டு என்பதை இரண்டாம் வாக்காக அரசியல் ஆக்கி இருந்தாலும் அவற்றை கொண்டாடுவதில் அவா. பொங்கல் ஒரு உழைப்பின் விழா அதை எதிர் நோக்கும் இந்நாளில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற  புதன் கிடைத்த பொன்னாளில் நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் 2023 பதிவின் கணக்கை ஆரம்பிக்கிறேன்...


கணக்கீட்டு அடிப்படையிலும் பெரும்பாலும் கி.பி.2023 என்ற கிரிகோரியன் ஆண்டில் 10 நாட்கள் ஓடக்கூடிய இன்றைய நாளில் இருந்தாவது எனது எழுத்து சிறிது பதிவாக இந்த பதிவு


எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை நான் பெறவே...என்றபடி ஸ்டாலின் என்ற இளைஞர் ஒர் மேசை மாத நாட்காட்டியுடன் திருப்பதி பிரசாதங்களுடன் எனது இந்த ஆண்டுக்கான நகர்த்தல் நினைவை ஆரம்பித்து வைத்திருந்தார்


குவெய்ட் நாட்டில் பணி பொருட்டு இருக்கும் குடும்ப நண்பர் செந்திலின் குடும்பத்தார் அவரின் ஆசிரியை துணைவியாரும் அவருடைய பொறியாளர் மகன் இனியனும் வருகை தந்தனர்...


மேட்டூர் சிட்கோவின் தலைவரும், கபாலீஸ்வரர் கோவிலின் எனது 18 மாத உழைப்புச் சேவையில் எனது பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் என்னுடன் உறுதுணையாக திருப்பணிக் குழுவின் தலைவருமாக‌ இருந்த அன்புச் சகோதரர் மாதப்பன் அவர்களின் மூத்த வழக்கறிஞர் மகளுடைய திருமணத்தின் அன்பான அழகான‌ அழைப்புமாக...

நூல் வழிச் சாலை நாகா என்னும் நாகச்சந்திரன்  நண்பர் வந்திருந்து தமது இரண்டாம் நூலை" நூலேணி"யை அளித்து சிறிது நேரம் தமது மேட்டூர் அணை பற்றி ஒரு நூலைக் கொண்டுவர வேண்டும் அது மண்ணின் மைந்தராக தமது கடமை என்றுக் குறிப்பிட்டார்.


நான் வேர்ட்பிரஸ்ஸில் "காவிரிக் கரையோரத்துக் காலச் சங்கிலிகள்" தொடர் செய்து சுஜாதா அவர்களின் இரத்தம் ஒரே நிறம் என்ற தொடர் நின்றாற் போல இடையே நின்று போனது நினைவு வந்தது. அதற்கும் இதற்கும் திருவில்லிப் புத்தூர் இரத்தினவேல் அய்யா ஊக்கம் கொடுத்த தொடர்பும் இருந்தது.


கருப்பு ரெட்டியூர் தமிழ் பசங்க எழுத்து பெரிதாக போட்டு திருவள்ளுவர், பாரதி, கலாம், இராஜ இராஜ சோழனுடன் இந்த முறையும் நாட்காட்டியை முயற்சியுடன் போட்டு எனக்கும் கொண்டு வந்து சேர்த்தனர் இப்படி குறிப்பிட நல்ல நிகழ்வுகளுடன் இந்த நாட்கள் நாட்காட்டியில் உருண்டோட...


இந்த தமிழ் பசங்க இப்படி இருக்கும் போது தமக்கு இரசிகர் மன்றமே வேண்டாம் எனும் அஜித் துணிவுக்காக இரசிகர்கள் தியேட்டர் கண்ணாடிகளை அனுமதிச் சீட்டு கிடைக்காத ஆத்திரத்தில் உடைத்தும், தூக்கி (கிரேன்) மேலே தசை நார்கள் பிய்ந்து  தொங்கிக் கொண்டு அலகு குத்தியும், பால் வழிய அவருடைய கட்டை உருவத்துக்கு வழிபாடு செய்வதுமான செய்திகளையும் ஊடகம் பகிர்ந்து வந்ததைப் பார்த்து தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்ற வேதனையுடனான‌ சொற்றொடரும்...சட்டத்துக்குப் புறம்பான இரசிகர் மன்றக் காட்சிகளும் அனுமதிச் சீட்டு கள்ளச் சந்தையில் ரூ. 2000 வரை விற்கப்படுவதான செய்திகளும் நஞ்சாக தமிழ் செய்திகள்...



மக்கள் பிரதிநிதிகள் VS நியமனப் பிரதிநிதிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டிகள் அரசியலை கேலிக் கூத்தாக்க...மத்தி ஒரே ஆட்சி வேட்கைக் கனவுடன் பரப்பை விரிக்க முயல...


கடந்த ஆண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி வழி 22,000 ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள கோடிக்கணக்கான விண்மீண்கள் உள்ள உடு திரள்(நட்சத்திர மண்டலம்‍‍  கேலக்ஸி) ...


பத்தாம் தேதி கிடைத்த‌ மாத ஊதியத்தில் இப்போது இல்லாது போன மேட்டூர் பியர்ட்செல் மற்றும் எங்கள் தந்தை சுப்ரமண்யம் அவர்கள் உழைப்பில் வளர்ந்த நினைவடக்கங்களுடன் 


நேற்று கூட  மேட்டூர் பேர் சொல்லும் மறைந்த  வீனஸ் மணி என்னும் ஒரு நல்ல கலைஞரின் மகன் உதய குமாருடன் சந்திப்பு. (உதயா) இவர் ஒரு நல்ல வாரிசாகவே உருவாகி 33 வயதான பின்னும் தந்தையின்றி திருமணத்துக்கு மேல் நடவடிக்கை எடுக்க தந்தையைப் போல் எவரும் இரார் என்ற ஏக்கப் பெருமூச்சுடன்...ஒரு சந்திப்பு...இவர் கோவில் சிற்பம் மற்றும் ஓவியம், வண்ணம் தீட்டுதல் பணியை சிறப்பாக செய்து வருகிறார் என ஊரெங்கும் பேச்சு...


இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அனைவர்க்கும் முக்கியமாக குறிப்பாக உழைத்து துன்புறும் அனைவர்க்கும் இன்பமாக இருக்கட்டும் இருக்கும் என்ற நேர்மறையான எண்ணங்களுடன்...


மறுபடியும் பூக்கும் வரை

உங்கள் அன்புடன்

கவிஞர் தணிகை


* எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...








No comments:

Post a Comment