பிக்பாஸ் 6. கமல் செய்த தவறு: கவிஞர் தணிகை
பொதுவாகவே தொடர்களும், தொலைக்காட்சிப் பழக்கங்களும் குறைவாகவே உள்ள எனக்கு கமல் மேல் ஒர் ஈர்ப்பு உண்டு. சில நாட்கள் அரிதாக அவர் வருகிறார் என்பதற்காக கொஞ்சம் பிக் பாஸ் பார்த்தேன்.
அப்படி பார்த்த ஒரு நாளில் அவர் : சாண்டில்யணின் "கடற் புறா" கதையில் கனோஜ் ஆங்கரே என்ற பாத்திரம் இடம் பெறுவதாக தவறாகக் குறிப்பிட்டார்.
ஆனால் அது பற்றி இது வரை நானறிந்த வரை எவரும் தவறை சுட்டிக் காட்டவில்லை.நானும் இது பற்றி எல்லாம் அக்கறை குறைவாக உள்ளதால் இது வரை எழுதவில்லை. இன்னும் சில நாட்களில் தொடர் முடிவுறுகிறது என்பதால் இப்போதாவது எழுதிப் பகிர்ந்து கொள்ள அவாவுற்றேன்.
கனோஜ் ஆங்கரே என்னும் கடற்படைத் தளபதி பாத்திரம் சாண்டில்யன் ( ரங்க பாஷ்யம் அய்யங்கார்) எழுதிய கடற்புறாவில் வருவதல்ல நாயகன் கமல் அவர்களே. அது ஜலதீபம் என்ற கதையில் இடம் பெறுவது.
கனோஜ் ஆங்கரே ஸார்கேல் ஆப் தாராபாய்....
மராட்டிய வீர சிவாஜி வாரிசுகள், வாரிசுரிமை பற்றிய நிழல் மற்றும் நிஜங்களிலும் உள்ளன...
போட்டி பணம் கிடைக்கும் என்பதற்காக எதை வைத்தாலும் கூட சாப்பிட்டு விட முடியுமா? போட்டியாளர்கள் மிகவும் இம்முறை கீழ்த் தரமாக நடந்து கொண்டுள்ளனர். காரணம் பிக் பாஸ். கமல் ஒரு புறம் எடுத்த பாதி மீசை தாடி,மொட்டை,கலரிங் போன்ற போட்டி சரியானதில்லை என்றுக் குறிப்பிட்டு கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொண்டதாக தெரிந்தது.
அஜீம் என்ற இளைஞர் உண்மையாக நடந்து கொள்வதாகவும்,விக்ரமன் தம் கருத்தில் உறுதியின்மை,மற்றும் சந்தர்ப்ப வாதம் , சிவின் சகிக்க முடியா சொல்லொணா ஏமாற்று வேலைகளையும் செய்வதாகத் தோன்றுகிறது... அமுதவாணன் வெற்றியாளராக நிறைய போட்டிகளில் இருந்தாலும் அவரின் குணாம்சம் மக்கள் ஏற்புடையதாகக் கொள்ள முடியாதிருக்கிறது. மணிவண்ணனும், கதிரவன் போன்ற இளைஞர்கள் மென்மையாக மேன்மையாக நடந்து கொண்டதாகவும் இருக்கிறது.
கலந்து கொண்ட பெண்கள் பற்றி எதுவும் சொல்வதிற்கில்லை...
பொதுவாக ஒரு கருத்து வெளிவருவதற்கும் முன் அது சரியானதுதானா என ஊடகங்கள் உறுதிப் படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் இவர்களுக்கு ஏது நேரம்?
மேலும் வியாபாரம் நடந்தால் சரி...
எல்லாம் தெரிந்தவர்கள் என்பவர்கள் எவரும் இல்லையே....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment