9489203900 வாட்ஸ் ஆப் நெம்பர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சேவை மேம்பாடு வேண்டி: கவிஞர் தணிகை
இந்தியாவெங்கும் பல ஆண்டுகளுக்கும் முன் வலம் வந்த காரணத்தால் தமிழகத்தின் போக்குவரத்து சேவையின்பால் என்றுமே பெருமை உண்டு.கர்நாடகா,கேரளா, ஆந்திரா அண்டை மாநிலங்களில் கூட இந்த சேவை மிகவும் குறைவான தரத்தில் உள்ள போது தமிழகத்தின் சேவை பாராட்டுக்குரியது தான்...ஆனாலும்
9489203900 என்ற எண்கள் ஒரு டவுன் பஸ்ஸில் எழுதப் பட்டிருந்தது சேவை மேம்பாடு வேண்டி அல்லது குறை தீர்க்க அல்லது தெரிவிக்க என...எனவே...
டவுன்பஸ்...நகரப் பேருந்து, புற நகர்ப் பேருந்து, கிராமங்களை இணைக்கும் பேருந்து என பலவாறாக ஓடிக் கொண்டிருக்கின்றன... அதிலும் பெண்களுக்கு கட்டணமின்றி...தமிழ் நாடு முழுவதும் கூட பயணம் செய்ய முடியுமளவு.
ஒரு முறை அல்ல சில முறை கவனித்த பின்
கீழ் வருபவனவற்றை சொல்லத் தலைப் பட்டிருக்கிறேன்:
நான் தாரமங்களம் செல்ல வேண்டும். அந்த எட்டரை மணி சுமாருக்கு புறப்படும் போதெல்லாம் நீண்ட நேரம் காத்திருந்த பின் செல்ல வேண்டியதாகிறது.
மேட்டூர் முதல் தாரமங்களம் வரை சுமார் 20 கி.மீ.தான். டவுன் பஸ்கள் பல உண்டு. ஆனால் சுமார் 8.40 மணிக்கு ஆர். எஸ் பகுதிக்கு வரும் 25 எண் என நினைக்கிறேன் ஜலகண்டாபுரம் போகும் வண்டி... நங்கவள்ளி வரை . அப்போதே நடத்துனர் சில இளம் பெண்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தாரமங்களத்துக்கு நேரடியான பேருந்து இல்லை, நங்கவள்ளி சென்றுதான் நீங்கள் செல்வது சரியாக இருக்கும் என்றார்.
ஏறிக் கொண்டோம்...எனைப் போல காத்திருந்த பல பயணிகள். சுமார்.9.12 மணிக்கு அது நங்கவள்ளி சென்றடைய அங்கே சென்று காத்திருந்தோம். தாரமஙகளம் பேருந்துக்கு...முக்கால் மணி நேரத்துக்கு எந்தப் பேருந்தும் இல்லை. எல்லா ஊருக்கும் அதாவது மேச்சேரி, கொங்கணாபுரம் வழி சங்ககிரி, திருச்செங்கோடு, மேட்டூர், ஜலகண்டாபுரம் இப்படி எல்லா ஊர்களுக்கும் பேருந்துகள் தொடர்ந்து ஒன்றல்ல இரண்டுக்கும் மேலாக சென்று கொண்டே இருந்தன...தாரமங்களத்துக்கு பேருந்து இல்லை.
மேட்டூரில் இருந்து வரும் 32 தாரமங்களம் என போர்டு போட்டுக் கொண்டு வரும் பேருந்தும் ஜலகண்டாபுரம் தான் செல்லும் எனச் சொல்லி விடுகிறார்கள்.
இப்படி முக்கால் மணி நேரம் அல்லது ஒரு மணி நேரமே கூட கழித்து, சுமார் 10.15 மணி இருக்கலாம் பவானியிலிருந்து வரும் தனியார் பேருந்து பேர் பாரத் ( யாத்விக்) என்னும் பேருந்து அனுமதிச் சீட்டில்VMT வி.எம்.ட்டி என ஆங்கிலத்தில் பேர் உள்ளது. எல்லாப் பயணிகளும் அதில் ஏறிக் கொண்டு தாரமங்களத்துக்கு பெண்கள் ஆண்கள் என ரூ.10 பயணக் கட்டணம்.கொண்டு செல்கிறது.
இது அரசுப் பேருந்துகளின் மைய மேலிடத்தின் அனுமதியுடன் தான் நடக்கிறதா?
இந்த வசூல் அரசு பேருந்துக்கு செல்வதன் மூலம் நாட்டுக்கு நல்ல வருவாய்தானே?
தினம் சுமார் ரூ.500 என்றால் கூட மாதம் ஒன்றுக்கு என்ன ஆகிறது?
நேரடியாக தாரமங்களத்துக்கு ரூ.15 கட்டணம் ஆனால் இப்படி செல்வதன் மூலம் 20 ஆகிறதே...அந்த 5 ரூபாய் பொதுமக்கள் பயணிகளிடம் இருந்து அதிகப்படியாக செல்வது ஒன்று அரசுப் பேருந்துக்கு செல்லட்டும் அல்லது மக்களுக்கு பயன்படட்டுமே? ஏன் தனியாருக்கு செல்கிறது? இதுவும் ஒரு வகையில் சுரண்டல் தானே?
எல்லாவற்றையும் விட பணம் கூட இரண்டாம் பட்சம், எவ்வளவு மக்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? காத்திருக்க வைத்து...மெத்த வளர்ந்தார் எல்லாம் நேரத்தை பயன்படுத்துவோரே... எல்லாம் வினாடிக் கணக்கில் இயங்க ஆரம்பித்த உலகத்தில் இன்னும் ஏன் நமது பேருந்து சேவையில் இது போன்ற ஏற்பாடு...மேலும் மேம்பட வேண்டும் நிறை(வு) வேண்டி குறை தீர இது அன்பான வேண்டுகோள்...யாரையும் குறை சொல்ல வேண்டும், காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சொல்லப் படுவதல்ல...
காந்தி அமரத்துவ தினம் அல்லது தியாகிகள் தினம் இன்று: மகாத்மாவின் வார்த்தைகளில் ஒன்று: நாம் செய்யும் செயல் இந்த நாட்டின் கடைசி மனிதனுக்கு பயனளிக்கிறதா எனப் பார்த்து செயல்பட வேண்டும் என்பார். அப்படிப் பட்ட காரணங்களுள் ஒன்றாகவே இந்த பதிவையும் கருதுகிறேன்.
வணக்கம்
நன்றி
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment