Friday, January 13, 2023

கற்கண்டல்ல கண்ணாடித் துண்டு: கவிஞர் தணிகை

 கற்கண்டல்ல கண்ணாடித் துண்டு: கவிஞர் தணிகை



எதையும் தெரிந்து கொள்ள விரும்பும் துறு துறு என இருக்கும் குழந்தை. மூன்று அல்லது 4 வயதுள் இருக்கும், அப்பாவின் பிடியிலிருந்து விடுவித்து சாலையில் கற்கண்டு போலவே துண்டுகளாக கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளை எடுக்க பாய்ந்து ஓடியது...


அந்த இந்தியாவின் மாபெரும் தேசிய வங்கியின் முது பெரும் மேலாளாரக சில மாதங்கள் மட்டுமே இருந்து அப்போது கல்கத்தாவிற்கு மாறுதலாகிப் போன இளங்கோ இந்தக் குழந்தைக்கு வங்கிக்கு சென்ற போதெல்லாம் கிறிஸ்டல் கல்கண்டு(படிக கற்கண்டுத் துண்டுகள்) கொடுத்தது, ஒருவேளை அதை நினைத்தே இந்தக் குழந்தை இப்படி ஓடி எடுக்க நினைத்திருக்கலாம்...


2003 இதே போல புத்தாண்டு தின நினைவுடன் மா.ஜார்ஜ் மனோகரன் என்ற தனிப்பிரிவு மேலாளர் பெரிய விவிலிய நூலை பரிசளித்து அதைப் படிக்கும் அட்டவணையுடன் பகிர்ந்தது... கவனச் சிதறல் செய்து பெரியவர்கள் பேசுவதற்கு இடையூறாக இருக்கும் சிறுவனுக்கு ஒரு சிறு நோட் பேடு மற்றும் பேனா அல்லது பென்சிலை கொடுத்து எழுது, வரை, கிறுக்கு என வழிகாட்டியதையும்...


இப்படி நன்னினைவுகளுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மதுபானக் கடைகள் வந்த பிறகே இப்படி சாலை எங்கும் கண்ணாடித் துண்டுகள் சிதற ஆரம்பித்ததையும், இவை கற்கண்டல்ல கண்ணாடித் துண்டுகளே என்பதையும்


சினிமா என்பதற்கும் வாழ்க்கை என்பதற்கும் கூட இந்த இடைவெளிகள் உண்டு என்பதையும், ப்ளாஸ்டிக் உண்ணும் கால்நடைகளும், கண்ணாடித் துண்டுகளைக் கூட விழுங்கும் நிலையும் பறவைகளுக்கும் வரலாம் என்பதையும் அரசு, அரசியல்  எல்லாம் இதன் உள் எல்லாம் விரவிக் கிடப்பதை எல்லாம் கூறினால் புரியும் வயதில் இல்லையே இந்த சிறுவன்...என்றெண்ணிய தந்தை...


அதை எல்லாம் எடுக்கக் கூடாது, சாலையில் கிடப்பவை கற்கண்டுகள் அல்ல, கண்ணாடித் துண்டுகள் ஆபத்தானவை என்று மட்டுமே கூறினார்... பதில் சொன்ன அவருக்கே அவரது பதிலில் திருப்தி இல்லை...


சினிமா அரசியல் எல்லாம் கண்ணாடித் துண்டுகள் என்றால் வாழ்க்கை கற்கண்டுத் துண்டுகள் ஏன் ஒவ்வொரு நாளும் ஒரு வைரத் துண்டாகக் கூட இருக்கலாம்... அதன் மதிப்பறிவோர்க்கு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment