திரௌபதி முர்மு இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்: கவிஞர் தணிகை
கலாம் கலாம் என்று ஒரு நதி நீர் இணைப்புக் கவிதையில் நிறைய கலாம்கள் வரும்படி இராமமூர்த்தி நகர் நிம்ஸ் எனப்படும் நியூ இண்டியா மெட்ரிக் பள்ளியில் கவிதை பொழிந்தேன்...இப்போது இல்லாத பொறியாளர் தெய்வத் திரு மணிகூட அதற்காக எனை மேடையிலேயே முத்தமிட்டார். அவ்வளவு நல்ல கவிதை அது...அதன் மறு செய்தி பார்வையில் சென்னையில் ஒரு கல்லூரிக்கு வகுப்பு எடுக்க வந்திருந்த கலாமுக்கு இஜட் ப்ளஸ் பாதுகாப்பு என்றும் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பேயி கலாமை குடியரசுத் தலைவராக முன் மொழிந்ததாக செய்தி.
நமக்கெல்லாம் அளவிலா மகிழ்வு. அப்போதும் ஒரு மூத்த நண்பர் இல்லை இது சரியில்லை, துணைக் குடியரசுத் தலைவர் என்று ஆன பின் தாம் நேரடியாக குடியரசுத் தலைவர் என்று நியமிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
காங்கிரஸ் வி.வி. கிரி போன்றோர் குடியரசுத் தலைவராக தேர்வின் போது சில சொதப்பல் வேலைகளை அந்தக் காலத்தில் இந்திரா பிரதமராக இருந்தபோது செய்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
எனைப் பொறுத்தவரை பா.ஜ.க இது வரை நியமித்த குடியரசுத் தலைவர் என்ற வரையில் அந்தப் பொறுப்பை மிகத் திறமையாக கையாள்கிறது என்றே நினைக்கிறேன். கலாம், பிரணாப் முகர்ஜிக்கு மாற்றான நிலை வரும்போதே திரௌபதி முர்மு பெயர் பரிசீலனை செய்யும் நிலையில் இருந்ததாக செய்திகள் இருக்கின்றன. ஆனால் மாண்புமிகு இராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப் பட்டார்.
இப்போது மாண்பு மிகு திருமதி. திரௌபதி முர்முவுக்கு இந்த வாய்ப்பு.
இவர் நமது தமிழகத்தில் இருந்து ஆளுனராக வலம் வரும் தமிழிசையை விட வயதில் மூத்தவர், மேலும் மிகவும் பின் தங்கிய பழங்குடியினத்தில் இருந்து வந்திருக்கிறார். எனவே தமிழிசை பெயரை இவரது பெயர் முந்தி இருக்கிறது. தமிழிசை என்னதான் ஆனாலும் அரசியல் முன்னிலையில் இருந்த குடும்பம் மேலும் மருத்துவக் குடும்பம். ஆனால் திரௌபதி முர்மு சாந்தல் (சாந்தால்) என்னும் பழங்குடி அல்லது ஆதிவாசி மரபை சார்ந்திருந்ததும் ஒரிஸ்ஸாவின் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் இருந்து பிறந்தவர் என்பதும் ஒரு மிகப் பெரும் வாய்ப்பாகி விட்டது.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடுவின் பேரும் அடிபட்டது...ஆனால் அது நடக்கவில்லை.
மகன்கள் , கணவர் இல்லாத திரௌபதி முர்மு ஒரு பட்டதாரி, பேரூராட்சி கவுன்சிலராக இருந்து துணைப் பஞ்சாயத்து தலைவர், சட்டமன்றப் பிரதி நிதியாக இரு முறை தேர்வு செய்யப் பட்டு, மாநில மந்திரியாகி அதன் பின் ஜார்கண்ட் ஆளுனராகி இருந்து இப்போது இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.பா.ஜ.கவில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு மற்றும் நல்ல சட்டமன்றப் பிரதிநிதி போன்ற விருதுகளும் பெற்றுள்ளார்.ரெய்ரங்பூர் என்ற அரவிந்தாஸ்மரத்தில் ஊதியமின்றி கல்வி கற்பித்திருக்கிறார் சேவை செய்திருக்கிறார்., மேலும் 1979 முதல் 1983 வரை ஒரிஸ்ஸா மாநில அரசில் இளநிலை உதவியாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.
எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு திருப்தி, மகிழ்வு. ஏன் எனில் நான் ஒரிஸ்ஸா , ம.பி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆதிவாசி பழங்குடியினர்க்கா என்னால் முடிந்த சேவை செய்தவன் அதற்காக அங்கெல்லாம் சென்று வாழ்ந்து வந்தவன். எனவே அவர்கள் எல்லாம் எவ்வளவு கடினமாக முயன்று மேல் எழும்ப வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
நான் ஒரிஸ்ஸாவில் 1985 என நினைக்கிறேன் கோராபுட் மாவட்டத்தில் பணிச் சேவை செய்ய , எனது நண்பர்கள் புல்பாணி, மயூர்பஞ்ச் ஆகியவற்றில் இருந்தனர். அப்போது ஒரிஸ்ஸா சத்தீஸ்கர் எனப் பிரியாமல் பிஹார் ஜார்கண்ட் எனப் பிரியாமலும் இருந்த காலம்.
கோயா, கோன்ட்ஸ், சாந்தல் தோடா, தொதுவா, படுகா, பனையா, இருளா இப்படி இந்தியாவில் சுமார் 480 பழங்குடியின மரபுகள் உண்டு. அதில் தனி மொழிகளே இருக்கும் பெரும் பிரிவுகளும் உண்டு. இந்த சாந்தல் இனப் பழங்குடியினத்தார் ஒரிஸ்ஸா, ஜார்கண்ட், பீஹார், மேற்கு வங்கம்,சத்தீஸ்கர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் பிரதிநிதியாக படித்து வளர்ந்தவர் இந்தியக் குடியரசுத் தலைவராக வாய்ப்பு பெற்றவராகி இருக்கும் திரௌபதி முர்முவுக்கு இந்த நேரம் கட்சி பேதமின்றி பாகுபாடின்றி அனைவரும் ஆதரித்து அதுவும் தேர்வு செய்வது நல்லது அதிலும் ஒரு மனதாக ஆதரிப்பது இந்தியாவின் மேன்மையை பறைசாற்றும்.
சுஷீல் குமார் ஷிண்டே கூட காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார் ஒருமுறை அவரும் பின் தங்கிய வகுப்பிலிருந்து மிகவும் முன்னேற்றம் பெற்றவர் அவரை எமது நண்பர் சுபாஷ்சந்திரன் தமது நிழலற்ற பயணம் என்ற புத்தகம் வழியே பறை சாற்றி இருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
குடியரசுத் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப் தானே யார் இருந்தால் என்ன பிரதிபா பாடீல் சினிமா பார்ப்பதற்கென்றே ராஸ்ட்ரபதி பவனத்தில் தொழில் நுட்ப வல்லமையுடன் தியேட்டர் எல்லாம் ஏற்படுத்திக் கொண்டு( செய்தியாக படித்ததுதான்) மக்கள் பணத்தை பாழாக்கவில்லையா என்றெல்லாம் கேள்விகளும் எழாமல் இல்லை...
கலாம் மக்கள் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். தமிழர்களுக்கென்று ஒரு தனி இடம் ஏற்படுத்தி இருந்தார்.
இந்த அம்மா கூட பழங்குடியனர்க்கு ஒரு மிகச் சிறந்த வாழ் நிலை நினைவலைகளை ஏற்படுத்தி தர வாய்ப்புகள் உள்ளன
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: இதைப் படிக்கும் எமது அன்பர்கள் அவரவரது பதில் கருத்துகளை
மறுபடியும் பூக்கும் என்ற வலைப் பூவில் நேரடியாக வழங்கலாம்.
A woman President after Pratheeba Patil.
ReplyDeletethanks for your feedback on this post. vanakkam
Delete