பாலகிருஷ்ணன் குழுவினர்: கவிஞர் தணிகை
கடவுளும் கழிப்பறை சுத்திகரிப்பு தொழிலாளியும் ஒரே நேரத்தில் தம் முன் வந்தால் முதலில் சுத்திகரிப்பு தொழிலாளியை வணங்குவேன் அவர் தம் கரங்களுக்கு முத்தமிடுவேன் என்று சொன்னாராம் அன்னை தெரஸா
அது போல நான் 6 ஆண்டுகள் பணிச்சேவை செய்த கல்லூரியில் முதலில் ஆரம்ப கட்டத்தில் சரியான நபர்களே வாய்க்கவில்லை. ஏன் எனில் கல்லூரிக்கு வரும் பொதுமக்களாகிய பல் மருத்துவத்துக்கு வரும் வயது வித்தியாச வேறுபாடுள்ள பல்வேறுபட்ட நோயாளிகள், பயன்படுத்தும் நிலை என்பதால் முன் இருந்த எவருமே அதை ஈடுகட்டி சிறப்பாக அவரவரது பணிகளைச் செய்ய வில்லை செய்ய முடியவில்லை . இது பெரிய பிரச்சனையாகவே இருந்தது ஆரம்பக் கட்டக் காலங்களில். (குழந்தைகள், சிறுவர்கள்,ஆண்கள் , பெண்கள், வயது முதிர்ந்தோர் , ஊனமுற்றோர் இப்படி எல்லா வகையானவர்களும் உண்டு) அந்த பொதுக்கழிப்பறைகளின் தூய்மை பொறுப்பு மேற்பார்வை வேறு என்னிடம் விடப்பட்டிருந்தது பொது உறவு அலுவலர் என்ற முறையில் எல்லா பணிகளிலும் மூக்கை நுழைக்கும் பொறுப்பு என்னிடம் இருந்தது. அதற்கு தலைமை எனக்கு வசதி வாய்ப்புகளை பொறுப்புகளை வழங்கி சுதந்திரமான செயல்படும் நபராக வைத்திருந்தது.
அதில் எனக்கு சீராகிய ஒரு பணி பற்றி நிறைவு. அது சில ஆண்டுகளுக்கும் முன் பாலகிருஷ்ணன், செல்வராஜ்,சதீஷ், தங்க பொண்ணு என்ற நால்வர் குழுவாக வந்து அந்த பணியில் இணைந்தனர். அனைவருமே தங்கள் பணியில் கவனம் செலுத்தினர். கழிவறை சுத்திகரிப்பு பணியாளர் என்று சொல்லாதீர்கள், ஹவுஸ்கீப்பிங் எனச் சொல்லுங்கள் என தங்களது விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் என்னிடம் வந்து எழுதிச் செல்லும் எல்லா விண்ணப்பங்களிலும் குறிப்பிடச் சொன்னார்கள் இந்தக் குழுவினர்.
மேலும் கல்லூரியில் இருக்கும் எல்லாக் கழிவறை தூய்மை மட்டுமல்ல, வேறு பணிகள் ஏதும் சொன்னாலும் கல்லூரி அவர்களை ஓய்வு நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் பயன்பட்டனர். அதிலும் முக்கியமாக பாலகிருஷ்ணன் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
ஏன் எனில் யானை போன்ற தோற்றம்,அந்தளவு உடல் பலமுள்ளவரும் கூட. ஆடி அசைந்து செல்லும் இரட்டை நாடி சரீரம் (உடல் வாகு) . பெரும் பாரமான பொருள்களை இடம் நகர்த்த இவரை அடிக்கடி கல்லூரிப் பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். சலிக்காமல் செய்வார்.
மேலும் ஏதாவது ஒரு பணியை குறிப்பிட்டு சொல்லி விட்டால் அதைச் செய்த பின் வந்து செய்து முடித்ததைக் குறிப்பிட்டு நம்மிடன் சொல்லி விடுவார்.
என்னிடம் மிக மரியாதையுடன் அனைவரும் நடந்து கொள்வார் என்ற போதிலும் இந்த பாலகிருஷ்ணன் போன்றவர்கள் மிகவும் நேசத்துடன் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அவரவர் ஏற்றுக் கொள்ளும் செயல்பணிகளில் செயல்படுவதில் ஒரு ஒழுங்கமைவு வந்து விட்டாலே யாவும் சிறக்கும் சீராகும் என்பதற்கு பாலகிருஷ்ணன் குழுவினர் ஒரு சான்று...
பொது உடமை கொள்கை உள்ள நாடுகளில் எல்லாம் இது போன்ற உடல் சார்ந்த பணிகளும், தூய்மை பணியாளர்களுக்கும் முன்னுரிமை, ஊதியத்தில் மற்றவர்களை விட அதிக சிறப்பு என்று கேள்விப்பட்டதுண்டு...
பி.கு: தங்களது வீடுகளில் அவரவர் இந்தப் பணிகளை வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினர்க்கு கற்றுக் கொடுப்பதில் கற்றுக் கொள்வதில் தவறு ஏதுமில்லை, செய்யும் தொழிலில் இழுக்கு என்பது ஏதுமில்லை. அவரவர் இடங்களை அவரவர் தூய்மை செய்து கொள்ளாமல் அடுத்தவரை அதைச் செய்ய நிர்பந்திப்பதும் கூட மனித குல வரலாற்றுக்கு சிறப்பு சேர்க்காத செயல்பாடுதான். சீனா ஜப்பான் போன்ற மிக முன்னேறிய நாடுகளில் இது போன்ற பணிகளில் அதிக கவனத்தை மக்களும், நாடும் அதன் அரசும் கொண்டிருப்பதாக கட்டியம் கூறும் சான்றுகள் உள்ளன.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு: தமிழில் கொடிகட்டிப் பறந்த நடிகை இலட்சுமியின் மகள் ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் தமது ஏழ்மை தீர்க்க(Toilet Cleaning) அந்தப் பணியச் செய்யக் கூட விரும்புகிறேன் சரியான ஊதியம் இருந்தால் என்று சில நாட்களுக்கும் முன் தான் தமது நிலை பற்றி கொடுத்த செய்தியை காண நேர்ந்தது தொலைக்காட்சி தொடர்தாம் தமக்கு முக்கியம் என்றும் சினிமா சோறு போடவில்லை, இப்போது சோப் மற்றும் தூய்மை பொருட்களை வீடு வீடாக விற்று வருவதாகம் படிக்க நேர்ந்தது.
No comments:
Post a Comment