1. சுமார் 30 கோடி பேருக்கும் மேல் பயனடைந்து பணி புரிந்து வருவதாக குறிப்புகள் உள்ளன
2. ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பது 150 நாட்களுக்கும் கூட அதிகப் படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது( ஆதாரங்கள் இருப்பதாக தேடல் நடத்தவில்லை)
3. மாநிலத்துக்கு மாநிலம் சுமார் 220 ரூபாய் முதல் 340 ரூபாய் வரை கூட வழங்கப் படுகிறது நாள் கூலி.
4. நரசிம்ம ராவ் பிரதமராக 1991ல் ஆரம்பித்த இந்த திட்டம் சட்டமாகவே 2005ல் ஆனதாக குறிப்பு உள்ளது.
5. 731 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டு வருவதாகவும் அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன
ஆனால் இந்த திட்டத்தில்
1. போலித்தனமாக பெயர்கள் சேர்க்கப் பட்டு பணம் கையாடப் படுவதாகவும் செய்திகள் உள்ளன
2. விவசாயம் இந்த திட்டத்தால் பாதிக்கப் படுவதாக உழவுத் தொழில் புரிவோர் ஒரே கருத்தை சொல்லி வருகின்றனர்
3. இந்த திட்டத்தால் பெரும் பயன்கள் ஏதுமில்லை பணி புரிவோர் பெரும்பாலும் வேலை செய்வதாக நடித்து வருகின்றனர் உண்மையான குறித்த நேரம், உழைப்பு இதில் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் நிறைய பொது நலத் திட்டங்கள் உருவாகியுள்ளதாகவும் சாட்சியங்கள் இருக்கின்றன புள்ளி விவரங்களாக புகைப்படங்களாக...
4. சில ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இந்த திட்டத்தை விவசாயத் தொழிலுடன் இணைத்து செய்ய முற்படும்போது (நில உடமையாளர்கள் கொடுக்கும் ஊதியம், பங்கு, போன்றவற்றுடன்) ஏரி, சாலை, நீர்த் தேக்கம் பணிகளில் எங்களுக்கு இந்தளவு கடின பணி இல்லை எனவே இந்தப் பணிக்கு வர மாட்டோம் என மறுக்கப் பட்டு இந்தக் கூட்டுறவு விவசாய முன்னேற்றப் பணிகளுக்கு வருவதில் இதன் பணியாளர்கள் ஆர்வம் காட்டாமல் அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் செய்திகள் இருக்கின்றன
5. இதில் பணி புரிய வயது வரம்பு இல்லை 18 வயதுக்கும் மேல் எந்த வயதில் இருந்தாலும் அனுமதிக்கப் படுவர்
ராஜஸ்தானில் 105 பெரியவர் பணி புரியும் தகுதி இருக்கிறது என்று அனுமதிக்கப் பட்டிருக்கிற செய்தி இருக்கிறது.
நண்பா
முன்னால் இல்லை இல்லை மேனாள் நீதிபதி என்ற முறையில்
இந்த திட்டம் பற்றி உள் ஆய்வை நடத்தி மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை தரலாமே...
சத்துணவுத் திட்டம் என்னதான் மேல் கீழ் மட்ட தவறுகள் இருந்த போதும் பெரும்பாலும் பிள்ளைகளுக்கு உணவு போய்ச் சேர்கிறது என்பது போல
இதில் பல குறைபாடுகள் நிகழ்ந்த போதும் ஏழைகளுக்கு பணம் சேர்கிறது என்ற நோக்கத்தில் எடுத்துக் கொள்வதா?
அல்லது சரியான உழைப்பை வழிப்படுத்தாமல் ஏமாற்றுகிற உணர்வை அரசே ஊட்டி விட்டு வாக்கு வங்கிக்காக பணம் தருவதாக கொள்வதா?
முடிவாக நான் மேலோட்டமாக அணுகி உள்ளேன். நீங்கள் ஆர்வமுடையோர் இது பற்றி நன்றாக ஆய்வு செய்து புள்ளி விவரங்களுடன் தெளிவு படுத்துவதை வரவேற்கிறேன்.மதுவும் அரசு வருவாயும் நுகர்வோர் உடல் நலக் கேடும் தெளிவாகத் தெரிகிறது ஆனால் இது போன்றத் திட்டங்களில் இன்னும் தெளிவு தேவைப்படுகிறது...
ஒரு பொறியிலிருந்து அக்கினிக் குஞ்சாய் புறப்படு...
உச்ச நீதி மன்றம், சிதம்பரம் நடராஜர் கோவில்,தீட்சிதர்கள், கணக்கு காண்பிக்க மறுப்பு, தமிழக அரசு,அமைச்சர் சேகர் பாபு. இதைப்பற்றிய நினைவை எல்லாம் உதறி விட்டு ஒரு பதிவு...
நன்றி
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு: தமிழ் நாட்டில் விவசாயத் தொழிலுக்கு ஆள் கிடைக்க மாட்டேன் எனச் சொல்லப் படுகிற கூக்குரல் கேட்டதால் இந்தப் பதிவு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வெற்றித் திட்டமா? கவிஞர் தணிகை
No comments:
Post a Comment