எனது வாழ்வின் முறை மாறி 4 ஆண்டுகள் நிறைந்து விட்டன. நாளை ஏப்ரல் 1 வரும் போது எனது கல்லூரிப் பயணத்தில் 4 ஆண்டு முடிந்து 5 ஆம் ஆண்டு ஆரம்பிக்கிறது.இதே போல 2016 ஏப்ரல் 1 ஆம் தேதிதான் நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்த முதல் பணி நாள்
அன்றைய தினம்தான் மகன் மணியம் தனது மேனிலைப் பள்ளியின் இறுதித் தேர்வை முடித்து வந்ததும்.
இது பற்றி ஒரு அறிக்கையை கல்லூரி ஆண்டு மலரிலும் எழுதியுள்ளேன் வெளியிட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு தியானப் பயிற்சி பற்றி எழுதியதை வெளியிட்டிருந்தனர். இந்த ஆண்டு வந்த நாள் முதல் இந்த நாள் வரை என்ற தலைப்பின் கீழ் கல்லூரி சேர்ந்த அனுபவம் பற்றிக் குறிப்பிட்டு எழுதி உள்ளேன்.
இந்த கொரானா அலை ஆரம்பிப்பதற்கும் முன்பே அதன் முன் ஒரு வாரமாக எனக்கு பேருந்தில் கல்லூரி முடிந்து வருவதில் மனத் துன்பம் நேரிடுமளவு கூட்டம் இருந்தது. அதை உரியவரிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
5 ஆம் ஆண்டு ஆரம்பம் இப்படி ஆரம்பித்துள்ளது
அது எப்படி மாறுகிறதென்று போகப் போகத்தான் தெரியும்
2020 கலாம் கண்ட கனவு காலத்தின் பிடியில் சுக்கு நூறாக அல்ல அணு அணுவாக சிதைந்து போனது
ஆனால் அவரது நினைவை ஏந்திய நபர்கள் உலகெங்கும் நல்ல பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து எடுத்து செல்லும் மாபெரும் உலகத் தலைமை ஒன்று வேண்டும்.
அந்த அளவு தகுதி உள்ள தலைமை கிடைத்திடுமா? அல்லது கிடைப்பதை அப்படி நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
எழுதிக் கொண்டே இருப்பேன் உயிர்(ப்பு) உள்ள வரை: கவிஞர் தணிகை
விடை கொடுக்கிறேன் விசுவுக்கு என்ற எனது பதிவுக்கும் பின் ஒரு வாரம் ஆகிவிட்டது. பூமியின் மனிதர்கள் யாவருமே ஒரு கால மாற்றத்தில் பீதி அடைந்து கொண்டிருக்கும் போது எனது தீனமான குரலுக்கு என்ன மதிப்பிருக்கப் போகிறது என சற்று எண்ண மறுகல் என்னிடமுமிருந்தது.
ஆனால் எனது வலைப்பூவை மறுபடியும் யதேச்சையாக வேறு வேலையாகப் பார்த்த போது சுமார் நூறு பேருக்கும் மேல் அதைப் படித்துக் கொண்டிருப்பதாக நான் எழுதாத போதும் தெரிந்தது.
எனவே பயன்படுகிறதோ இல்லையோ எப்போதும் போல எழுதுவதை கைவிடக் கூடாது என மறுபடியும் பூக்கிறேன்
கடந்த ஒரு வார காலமாக அல்லது சரியாகச் சொல்ல வேண்டுமானால் கடந்த 20.03.2020 முதல் கடந்த 10 நாட்களாக நாட்கள் உலகெலாம் வேறானது. எனது வாழ்விலும் அப்படித்தான் திடீரென வாழ்வு முறை மாறாகப் போனாதால் எனது உடல் ஒத்துழைக்காமல் வயிற்றுப் போக்கு ஆரம்பித்து விட்டது.
அதன் காரணம் கடும் வெயில். மேலும் கல்லூரி செல்லும் போது இருந்த உணவு முறை மாறி தூக்க முறை மாறி நீர் அருந்துவது குறைவாக இருந்ததும் காரணங்கள்...
உடல் சூடாகி சிறு நீர் கழிப்பதில் எரிச்சலும், மஞ்சளுமாக நன்றாக தெரிந்து உடல் சூட்டை நன்றாகவே வெளித் தெரியுமாறு நன்றாகவே காண்பித்தது.
உடனே நீரைக் குடிப்பதை அதிகம் செய்து சரி செய்து விடலாம் என அதிகம் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை
58 ஆண்டை முடித்து விட்டு 23.03.2020 after that day 59ல் அடி எடுத்து வைக்கும் நாள் முதலே அதாவது 24 ஆம் தேதி முதல் கடுமையான வயிற்றுப் போக்கு....ஆரம்பித்தது. எனக்கு ஏற்கெனவே நிறைய உடல் பிணிகள் இருப்பதால் சடாரென ஆங்கில மருத்துவத்துக்கு போகவே மாட்டேன் என்பதால்...
பிஸ்மத், தொப்பூள் மையத்தில் சிறு தொந்தரவு என்பதற்கான டிஸ்கோரியா வில், போன்ற ஹோமியோபதி மாத்திரைகள், உடன் சப்போட்டா பிஞ்சை இரண்டைப் பறித்து மிக்ஸியில் அரைத்து தயிரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வைத்தேன் அத்துடன் எலக்ட்ரால் பவுடரை நீரில் கரைத்தும் குடித்து வர ஆரம்பித்தேன்.
பொதுவாக இந்த செயல்கள் எனக்கு ஒரு நாளில் அல்லது ஒரே காலை நேரத்தில் ஆரம்பித்தால் மதியத்துள் சரியாகிவிடும். ஆனால் இந்த அணுகுமுறை இரண்டு நாளாகியும் சரியாகவில்லை. சரியான மாதிரி இருந்ததால் மறுநாள் கூழுடன் சிறிது பாலையும் கலந்து குடித்து விட்டதே மறுபடியும் நீரை விட அடர்த்தி குறைந்த நிலையில் எந்த நீர் வடிவிலான சப்போட்டா பிஞ்சுக் கரைசலானாலும் எலக்ட்ரால் பவுடர் கரைசலானாலும் சிறிது நீரை பருகினாலும் அப்படியே வெளித் தள்ள ஆரம்பித்தது.
ஏற்கெனவே செய்த வழக்கப் படி மதியம் சிறிது சோற்றுடன் தயிர் பிசைந்து உண்டு பார்த்தேன் சில சுண்டைக்காய்களை உணவு விஷ முறிவுகளாக அது பயன்படும் என்று நம்பினோம். மேலும் காலையிலும் சில இட்லிகளை தயிர் பிசைந்தே உண்டு வர ஆரம்பித்தேன் . நாக்கு வெறுத்தது. உணவே பிடிக்கவில்லை.
சரியாக ஆரம்பித்து விட்டது என்ற நிலையில் 27 ஆம் தேதி இரவு மறுபடியும் ஆரம்பித்துவிட்டது. உட்கார்ந்து படித்ததும் எழுதியதும் தான் காரணம் சூட்டை மறுபடியும் கிளப்பி விட்டது என எங்கள் வீட்டில் என் மேல் மறுபடியும் பாய்ச்சல்...
இத்தனை முறை எத்தனை முறை எனச் சொல்லாமல் அது பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்க சகோதரிகள் முட்டையின் மஞ்சள் கரு சரியாக இருக்கும் என்றும், அதை ஒரு முறை உட்கொண்டு பார்த்தேன் அதை மற்றொரு சகோதரி அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பழரசங்களும் பழங்களும், ரொட்டியும் கடுங்காபியில் தொட்டு உண்பதுமே சரியாக இருக்கும் எனச் சொல்ல, அதைத் தேடினார்கள்.
உடனே எந்த தேடலுக்கான பொருட்களும் பழங்களோ, ரொட்டியோ உடனடியாக கிடைக்காத சூழல். கடைகளே சரியாக இல்லாத சூழல்....எப்படியோ வீட்டுத் துணைவி இரண்டு சிறு ரொட்டிகளை வாங்கி வந்தார். அதை இரண்டு நாளுக்கு காலையில் வைத்துக் கொண்டோம்.
அப்படியும் இப்படியும் எல்லாம் செய்து பார்த்து விட்டு, எலக்ட்ரால் பவுடர்களையே வாங்கி வாங்கி எத்தனை நாளுக்கு குடிக்க முடியும் வெறும் தண்ணீர் எப்போது குடிக்க ஆரம்பிப்பது இப்படி நிறைய போராட்டம்...அந்த வெள்ளிக் கிழமை 27 மார்ச் அன்று சரியான கோபம் . பல முறை சென்று வந்த பின் ஒரு அறைக்கு சென்று மகனும், மனைவியும் உறங்க ஆரம்பித்த பின் எகிறி எகிறி எம்பி எம்பிக் குதித்தேன். பல முறை...
அடுத்த நாள் சனிக்கிழமை...எண்ண்யெக் குளியல். அன்றும் எச்சரிக்கயான உணவு. 28, 29 .03.2020 வரை உணவில் எச்சரிக்கையுடன் மற்றும் பழங்களை வாங்கிக் கொண்டோம்...சுமார் 700 ரூபாய்க்கு பழங்கள் வாங்கினோம். இதெல்லாம் ஏழைக்காகும் நிலையா என்ற கேள்விகளுடன்...எல்லாமே பயம் உலகெங்கும் உயிர் பயம் எனவே பணம் செலவாவதைப் பற்றி கவலை கொள்ள ஒன்றுமில்லை.
ஆக ஒரு வழியாக எதிலும் அடங்காதிருந்த வயிற்றுப் போக்கு எகிறி எகிறிக் குதித்ததால் அடங்கிப் போயிற்று. குடல் ஏற்றம் என்பார்கள் முன்பெல்லாம் அதை சொல்லும் வார்த்தையில் கொள்ளாத்தம் என்பார்கள்...அதை சரி செய்ய முன்பெல்லாம் வயதான சில பெண்மணிகள் இருப்பார்கள். சாதாரண தண்ணீர் அல்லது சிறிது நல்லெண்ணெய், அல்லது விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு சென்றால் சரி செய்து விடுவார்கள். அதெல்லாம் இப்போது இல்லை, அவர்கள் எல்லாம் இப்போது இல்லை.
மொத்தத்தில் உடல் சூடா, நீர்க் குறைபாடா, அல்லது குடல் ஏற்றமா எது எப்படியாக இருந்த போதிலும் நல்ல வேளை இப்போது மீண்டு விட்டேன். சரியாக உண்டு ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது.இனியும் நிதானமாகவே உணவு முறையை உட்கொள்வதில் முன்னேற வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்துள்ளேன். 3 வது சுற்று ஆரம்பித்து விட்டது...மறுபடியும் சந்திப்போம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
2000 ஆம் ஆண்டில் தாரமங்களத்தில் ஒரு அரட்டை அரங்கம் அதில் நானும் இடம் பெற்றேன். எனது பேச்சை எடிட் செய்ய முடியவில்லை என்றார் விசுவின் அரட்டை அரங்க தயாரிப்புக் குழுவில் முதலாம் உதவியாளராக இருந்த பி.எஸ்.என்.எல் பணியாளராக இருந்த உதயம் ராம்.
சில நிமிடங்கள் இரு முறையாக எனது உரை வீச்சும் இடம் பெற்றிருந்தது அந்த ஒளிபரப்பில். அதில் பள்ளிகள் உள்ள அதே எண்ணிக்கையில்தானே சொல்லப் போனால் அதை விட அதிக எண்ணிக்கையில் தானே கல்லூரிகள் இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு இல்லை? பள்ளியில் படிக்கும் அதே எண்ணிக்கை மாணவ மாணவியர் எங்கு செல்கிறார்கள்? இடையில் என்ன ஆகிறது? என்று ஒரு கல்வித்தளத்தின் அடிப்படையை அசைக்கிற மாதிரியான ஒரு கேள்வியை முன் வைத்தேன்.
அந்த நாளில் தேர்வு பெற்ற பேச்சாளர்க்கு சில மாதங்கள் கணினி பயிற்சி இலவசமாகத் தருவதாக ஒரு தாரமங்களத்தில் இருந்த கணினி பயிற்சியகம் உறுதி கொடுத்தது. ஆனால் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
தற்போது அகடவிகடம் ராஜ் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பாஸ்கர் ராஜ் அவருடைய உறவினர் என்று கேள்விப்பட்டேன். அப்போதே தலையில் கைக்குட்டை எல்லாம் கட்டிக் கொண்டு படு சுறு சுறுப்பாய் இயங்குவார் அந்தக் குழுவில் அவர் தனித்தன்மையுடன் இருப்பார்.
கொஞ்ச நாளில் அவர் தனியாக பிரிந்து வந்து துணிச்சலுடன் ராஜ் தொலைக்காட்சியில் அகடவிகடம் என ஒரு பேச்சரங்கை ஆரம்பித்து இன்று வரை நடத்தி வருகிறார். அவர் நடத்திய பவானி அகடவிகடம் நிகழ்வில் நடிகர் சந்திரசேகர், வி.ஜி.பி. சகோதரர்களில் வி.ஜி.பி. செல்வராஜ் மற்றொரு ஜோஸ்யர் ஆகியோருடன் நிகழ்வை அப்துல் காதிரும் இருந்து பேசி நடத்தி வைத்தார். அதிலும் நான் கலந்து கொண்டு தேர்வு பெற்று பேசி இருந்தேன். அப்துல் காதிர் என்னுடைய பேச்சை மிக உயர்ந்த பேச்சு எனப் பாராட்டியது இன்று சொல்லியது போல் மறக்க முடியாமல் இருக்கிறது. தாரமங்களத்தில் பாஸ்கர் ராஜ் எனது முழுப் பேச்சையுமே கேட்காமல் ஒரே பாய்ன்ட்டில் முடித்துவிட்டு அரட்டை அரங்க நிகழ்ச்சிக்கு தனது இடது கை கட்டை விரலை தூக்கி காண்பித்து போதும் நீங்கள் தேர்வாகிவிட்டீர் என முடிக்கச் சொல்லி விட்டார் நான் மேலும் பேச முயன்றபோதும் மேலும் பாஸ்கர் ராஜ் பவானி அகட விகடத்தில் பேசிய பின் விசுவின் குழுவினர் தங்களது குழுவின் அரட்டை அரங்கத்தில் பேசித் தேர்வாக மறுமுறை முயன்றபோது வேண்டாத உளவாளியை பார்ப்பது போல பார்த்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. ....
விசுவை விட்டு எங்கோ சென்றுவிட்டேன்...அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு வெண்ணிற வேட்டி, வெண்ணிற முழுக்கை சட்டை மட்டுமே அணியும் வழக்கத்துடன் இருந்த ஒரு தேர்வாளர் அல்லது உதவியாளர் குறுகிய நாளில் இயற்கை எய்திவிட்டார். அவர் என்ன செய்தார் என்றால் அவர் தமது குழுவில் பேசிய அனைவரையுமே ஒரு முறை தேர்வு செய்து விட்டார். He is basically a Tamil profession Teacher.
எப்படியோ நாலைந்து சுற்றுகள் முடிவில் தேர்வாகி ஒத்திகை விசு வந்து அப்போதெல்லாம் பயங்கர பந்தா. பெரிய இயக்குனர். சன்டிவியில் முக்கியமான வி.ஐ.பி நிகழ்வு. அந்த அரட்டை அரங்கு மூலம் நிறைய சேவை எல்லாம் நடந்தது. இறுதித் தேர்விலும் நான் தேர்வாகி ஒளிப்பதிவுக்கு செல்ல பெயர் படிக்கப் பட்டேன். பாரதியின் வரிகளை : தேடிச் சோறு நிதம் தின்று...சொல்லி விட்டு கருப்பொருளைத் தொட்டேன் அதற்கு இவ்வளவு நேரமா என்றார்...எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில், மின்னலாக கூர்மையான வார்த்தையுடன் அவர்களுக்கு ஒரு ரிதமாக இருக்க வேண்டும்.
அவர்கள் நவரசத்தையும் சினிமாவில் இருப்பது போல பேச்சரங்கிலும் இருக்குமாரு பார்த்துக் கொண்டார்கள். நான் அதற்கு முன் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் இரவில் சாலையில் படுத்துறங்கி போர்வை இன்றி சிரமப்படும் பிச்சைக்காரர்களுக்கு எவரும் துணை வராமல் போர்வை கொடுத்து வந்து வீட்டருகே ஜல்லிக் கற்கள் சரித்து விழுந்து இடது கை முழங்கை மூட்டை இடம் பெயர்ந்திருந்ததற்கு கட்டு வேறு போட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுடனேயே தாரமங்களத்து அரட்டை அரங்கத்தில் பேச தேர்வு செய்யப்பட்டேன்.
விசு எனக்கு சில முறை கடிதங்கள் எழுதியிருந்தார் எனது கடிதத்திற்கு பதிலாக. அதில் அவரது கடித தலைப்பில் LITTLE THINGKS MAKES PERFECTION BUT PERFECTION IS NOT A LITTLE THING.லிட்டில் திங்க்ஸ் மேக்ஸ் பர்பக்சன், பட் பர்பக்சன் இஸ் நாட் லிட்டில் திங் என்று போட்டிருந்தது எனக்கு வாழ்நாள் எல்லாம் மறக்க முடியா தூண்டு உணர்வை தந்தது. முதன் முதலில் அந்த வாசகத்தை அந்த கடித தலைப்பில் இருந்துதான் கண்டு எடுத்துக் கொண்டிருந்தேன். எனது புத்தகங்கள் கூட அவருக்கு கொடுத்திருக்கிறேன் என்ற நினைவு.
எனக்கும் அவருக்கும் இரண்டு கடிதம் நன்கமைந்திருந்தது. 3 வது கடிதம் நான் எழுதிய விமர்சனப் போக்கிற்கு பதிலாக அவர்களது தரப்பை நியாயப் படுத்தி அப்படி எல்லாம் இல்லையே...என்றவாறு எழுதி இருந்தார்.
அவர் அந்த ஒளிப்பதிவை, ஒளிப்பதிவை என்ன வேண்டுமானலும் செய்து வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். அதற்காக எப்படி வேண்டுமானாலும் இயங்குவார் என்பது தெரிந்தது.
நான் அவருக்கு மடங்குபவனாக இல்லை. அந்த மனப்பாங்கை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என அவரது வேறொரு உதவியாளர் வழியே சொல்லியும் பார்த்தார்கள்...அதன் பின் தலைவாசல் ஒளிபரப்பு ஒன்றுக்கு அவர்களாகவே கடிதம் எழுதி அழைத்தார்கள்...அதிலும் எனக்கும் ஒரு சுற்றின் தேர்வுக் குழுவின் தலைவருக்கும் ஏக விவாதம்..விவாதம் இல்லாமல் மடங்கிப் போனால் தான் அந்தக் குழுவில் தேர்வாக முடியும் என்பது ஒரு இரகசிய விதி...
மேலும் சேலம் நிகழ்ச்சி ஒன்றின் போது 3 அல்லது 4 ஆம் சுற்றில் எளிமையான ஆடையுடன் இருந்தால் மட்டும் தேர்வாக வாய்ப்பு இதெல்லாம் அவர்கள் சொல்லாமலே சில இரகசிய விதிகளாக கடைப் பிடித்தார்கள்...மேலும் நான் பாஸ்கரராஜ் நிகழ்வில் பேசி இருந்ததை மறவாமல் இருந்ததால் மற்றொரு பேச்சாள என்னை விட வயதில் குறைந்த ஆற்றலிலும் குறைந்த வேடிக்கை காட்டும் ஒரு நபரை வைத்து என்னுடனேயே இருக்க வைத்து எனது கருத்துகளை எல்லாம் எடுத்துக் கொண்டு என்னை விலக்கி விட்டு தகுதியில் ஒப்பிட்டால் என்னை விட தகுதிக் குறைவான அந்த நபரை தேர்வு செய்தார்கள். காரணம் என்ன எனப் பார்த்தால் ஒளிப்பதிவுக்கும் பின் ஒளிபரப்பில் அந்தப் பேச்சாளரை மட்டை அடி அடித்து அமர வைத்தார் விசு... மொத்தத்தில் புகழ் என்பதும் வெற்றி என்பதும் நிகழ்ச்சியை நோக்கியதாய் நிகழ்ச்சியின் வெற்றியை நோக்கியதாய் அவரை நோக்கியே குவியப் படுத்தப் படல் வேண்டும் என்பதில் கவனமும் அக்கறையுடனும் அந்த ஒருங்கிணைப்புக் குழுவும் அணியும் பணி புரிந்து வந்தது.
அவர்கள் கொடுத்த சான்றிதழ் இன்னும் இருக்கிறது. பாஸ்கரராஜ் அதை விட ஒரு படி மேல் போய் போட்டோவுடன் பேசுவதை லேமினேட் செய்தே சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அவரும் புதுக்கோட்டை நிகழ்ச்சிக்கு அழைத்தார் அப்போது அது அந்த தூரம் உடல் நிலை சாத்தியப் படாததால் அந்த நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியாது போனது.அவரும் எனது பாலியல் விழிப்புணர்வு நூலை அளவுக்கு மிஞ்சினால் என்பதை பெற்று அது பற்றி செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் முக்கியத்துவம் சிறப்பு பற்றி பாராட்டினார்.
விசு சன் டிவியிலிருந்து ஆளும் கட்சியாக அம்மாவின் பக்கம் சார்ந்து ஜெயா டிவிக்கு வந்து நிகழ்ச்சி ஆரம்பித்து நடத்தி வர ஆரம்பித்திருந்தார். அதன் பின் அவருக்கும் என் போன்றோர்க்கும் எந்தவித தொடர்பும் இல்லாது போயிற்று. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்...
விசுவுக்கு விடை கொடுக்கிறேன் : கவிஞர் தணிகை
KAVIGNAR THANIGAI
2020ல் எனது மற்றுமொரு சுற்று 23.03.2020 முதல் ஆரம்பிக்கிறது: கவிஞர் தணிகை.
நாம் பிறந்த தினம் என்பதை ஆண்டுக்கு ஒரு முறை நினைவுக்கு கொண்டு வருகிறோம் அது திரும்பி வராது வெறும் எண்ணப் போக்கு என்ற போதும்... தலைவர்க்கு எல்லாம் அவர்கள் இல்லாத போதும் அந்த இரு தினங்களும் நினைவுறுத்தப் படுகின்றன. (இந்த நிலையில் ஏனோ ரங்கராஜ் பாண்டே கொடுத்த பரிசை ஏற்க மறுத்த நல்ல கண்ணுவை எனக்கு நினைவு வருகிறது... ரஜினி காந்த் இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் கலந்து கொண்டிருக்கிறார்.)
அது போல இன்று மறுபடியும் எனக்கும் ஒரு சுழற்சியின் புள்ளி மறுபடியும் ஆரம்பிக்கிறது.
தண்ணீர் தினம், இலக்கிய தினம், காடுகள் தினம், நாடுகள் தினம், பகத் சிங் நினைவு தினம் இப்படி பல நல்லவற்றை நினைத்துப் பார்க்கும் தினங்கள் நாம் இருந்தால் நினைத்துப் பார்க்கலாம். ஆம் நிறைய சாதனையாளர்கள் குறுகிய ஆயுள் வாழ்ந்திருந்தும் சாதித்திருக்கிறார்கள். நான் சில பெயர்களை சொல்லி விட்டால் உடனே அவர் மட்டுமே தானா இவர் இல்லையா என்றெல்லாம் தோன்றும் எனவே மகான்களை மகான்களாகவே பார்க்க பெயர் சொல்லாமல் விட்டு வைக்கிறேன்.
பெரிய முயற்சி எல்லாம் செய்யாமலே சில சிகரங்களை இயற்கை என்னையும் தொடவைத்திருக்கிறது. அதற்கு என் நன்றியறிதல் எப்போதும் உண்டு.
ஏ.ஆர் ரஹ்மான் சொல்வது போல எல்லாப் புகழும் இறைவனுக்கே...இறைவன் என்பதை அவன் அவள் அது என்பதெல்லாம் சொல்லாம் இறை கட உள் என்றே சொல்லி விடுவது என் பழக்கம்.
எல்லாக் கோவில்களும் மனித இனம் கூடி விடக் கூடாது என்று மூடி வைக்கப்பட்டுள்ள இந்த சிக்கலான கட்டத்தில் நாம் நிறைய கடவுள் சிந்தனை கடவுள் மறுப்பு சிந்தனை பற்றி எல்லாம் சிந்தித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
உலகின் மாபெரும் மதத்தின் தலைமையகம் இருக்கும் இடத்தின் நாட்டில் தான் வெகுவாக மனித உயிர்கள் பலி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அது மட்டுமல்லாமல் உலகெலாம் பரவி மட்டுப் படுத்த முடியாது மனித குலத்துக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இந்தியாவில் அதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன என்று சற்று முன்னர் பிபிசி செய்தி மூலம் அறிந்தேன்.
அப்படி அது அதன் நீட்சியை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 30 கோடி பேர் பாதிக்கப்படுவது உறுதி என்றும் இந்தியாவில் தான் மிகக் குறைவான சுகாதார நடவடிக்கைகள் உள்ளன என்றும் கேட்க அதிர்ச்சியாக இருக்கும் புள்ளிவிவரமாக 55,000 பேருக்கு ஒரு மருத்துவமனைதான் இருக்கிறது என்றும் பத்தாயிரம் பேருக்கு 8 டாக்டர்கள் தான் இருக்கின்றனர் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அதுவே அதிகம் உயிர் சேதமான இத்தாலியில் 41 மருத்துவர்கள் என்றும் கொரியாவில் (அனேகமாக இது தென்கொரியாவாக இருக்கும்) ஏன் எனில் வடகொரியாவில் ஒருவரும் பாதிக்கப்பட வில்லை என்றும் செய்திகள் வெளிவரவில்லை என்றும் இருப்பதால், அங்கு 71 மருத்துவர்கள் இருக்கின்றனர் என்றும் அதற்கு மேலும் பரிசோதனைக்கான கருவிகளே போதுமான அளவில் இல்லை என்றும் வெளிப்படையான செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் இதற்கு மேலும் எத்தனை உள்ளே வெளியே தெரியாத குறைபாடுகள் உள்ளனவோ...
T.G.R.S.MANIAM
S/O KAVIGNAR THANIGAI.
TGRS.MANIAM WITH HIS MOTHER
நல்ல தலைமை என்பது முன் மாதிரியாக விளங்குவது, ஆற்றோட்டத்தில் கலந்து நாம் சென்றுவிடுவதல்ல.
சீனாவை அச்சுறுத்தத் துவங்கும்போதே நாம் விழித்திருக்க வேண்டும்...அப்படி அதற்கான நடவடிக்கைகளாக வெளி நாட்டிலிருந்து வந்தாரை நமது மக்கள் சமூகத்தில் ஊடுருவ விடாமல் அவர்க்கு எனத் தனியாக விமானநிலையங்கள் சார்ந்தே தனிமைப்படுத்தி இருந்திருந்தால் அல்லது அவர்களை வரவிடாமலேயே செய்திருந்தால் இனி வரப்போகும் ஆபத்துகளை தவிர்த்திருக்கலாம்.
நான் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பது போல என் போன்றோர்க்கு எல்லாம் இந்த வாழ்க்கை இயற்கை அளித்த வரையறைகளை மீறிய கொடை. ஊதியத்துக்கும் மேல் போனஸ் அதாவது நல்ல பணியாற்றியமைக்காக எனக்கு கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையான வாழ் நாள் நீட்டிப்பு.
நிறைய களங்களைக் கண்டிருக்கிறேன்
நிறைய தளங்களைத் தாண்டி வந்திருக்கிறேன், வளர்ந்திருக்கிறேன்
என்னிடம் நிறைய பக்கங்கள் கோணங்கள் உண்டு
அத்தனையும் ஒவ்வொரு மனிதருக்கும் வாய்த்திருக்குமா என்றால் அது அரிதே.
ஆனால் என் நினைவுக்கெட்டிய வரையில் எவரையும் ஏமாற்றியதில்லை
எனக்கு நினைத்துப் பார்க்க இந்த நாளில் நிறைய பேர் உண்டு.
பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவுகள் , நட்பு இப்படி என்னிடமும் ஒரு வட்டம் உண்டு.
அவர்கள் யாவரையும் நினைத்து அவர்கள் குடும்பம் குலம் யாவும் தழைத்தோங்க இந்த எனக்குரிய முக்கியமான நாளில் எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்.
அனைவர்க்கும் என் வணக்கங்களும் நன்றியும்!
முடியவே முடியாது
என்ற
என் களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
``எல்லா நாடுகளுக்கும் நாங்கள் ஒரு சாதாரண தகவலை தெரிவிக்க விரும்புகிறோம் - பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
170 நாடுகளில் 13 ஆயிரம் பேருக்கும் மேல் உயிர்ப்பலி வாங்கிய, 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைத் தாக்கிய கொரோனா வைரஸ் பற்றி அவர் குறிப்பிட்டார்.
``சந்தேகத்துக்குரிய அனைவரையும் அனைத்து நாடுகளும் பரிசோதிக்க வேண்டும். இந்தத் தொற்று நோய்க்கு கண்ணை மூடிக் கொண்டு சிகிச்சை அளித்துவிட முடியாது'' என்று அவர் கூறியிருந்தார்.
இதுவரையில் 341 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு, 5 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், இந்த ஆலோசனையை இந்தியா காத்திரமாக எடுத்துக் கொண்டிருக்கிறதா? மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு, போதிய அளவுக்குப் பரிசோதனைகள் செய்கிறதா?
இதற்கான விடைகள் வெளியில் கிடைக்கின்றன. வியாழக்கிழமை வரையில், அரசுக்குச் சொந்தமான 72 பரிசோதனை நிலையங்களில் 14,175 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகக் குறைந்த எண்ணிக்கை. பரிசோதனைகளை குறைவாக வைத்திருப்பதற்கான காரணம் என்ன? அதிக ஆபத்து வாய்ப்புள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அல்லது தொற்று பரவியவருடன் தொடுதல் அளவில் தொடர்பு கொண்டவர் அல்லது தீவிர மூச்சுக் கோளாறு உள்ள நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், கோவிட - 19 அறிகுறிகள் தென்படுபவர்கள் மட்டுமே பரிசோதனைக்குத் தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நாட்டில், ஏன் இவ்வளவு குறைந்த அளவில் மட்டும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? இந்தத் தொற்று மக்கள் மத்தியில் இன்னும் பரவவில்லை என்பதுதான் அரசின் கருத்தாக உள்ளது. இந்தியா முழுக்க மார்ச் 1 முதல் 15 தேதி வரையில் அரசு மருத்துவமனைகளில், தீவிர மூச்சுக் கோளாறு பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த 826 பேரிடம் மருத்துவ ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த ``ஆதாரம்'' கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இருந்துள்ளது. மேலும் சுவாசக் கோளாறு பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனைகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
``சமுதாய அளவில் இது பரவுவதற்கு ஆதாரம் எதுவும் இப்போது இல்லை என்பதை மீண்டும் உறுதியாகக் கூற முடியும்'' என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழக (ஐ.சி.எம்.ஆர்.) இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார். இந்தியாவைப் பொருத்த வரையில், டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் கூறியது ``இப்போதைக்குத் தேவையற்றது'' என்றும், அவ்வாறு செய்வது ``அதிக அச்சத்தை ஏற்படுத்தும், மன உறுதியைக் குலைத்துவிடும், விஷயத்தை பூதாகரமாக்கிக் காட்டிவிடும்'' என்றும் அவர் கூறுகிறார்.
தேவையான அளவுக்கும் கீழ்தான் இந்தியாவில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஏனெனில், போதிய ஆள்பலம் இல்லாத, போதிய அளவு வசதி இல்லாத சுகாதார மையங்களில் மக்கள் குவிந்துவிடுவார்கள் என்று இந்தியா அஞ்சுகிறது.
பரிசோதனை உபகரணங்களை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தல் சிகிச்சை வசதிகளை மருத்துவமனைகளில் அதிகரித்துக் கொள்ளவும் இந்தியா அவகாசம் எடுத்துக் கொள்கிறது. ``பெருமளவில் பரிசோதனை செய்வது தீர்வாக இருக்காது என்று நான் அறிவேன். ஆனால் நம்முடைய பரிசோதனை எண்ணிக்கைகள் குறைவாகவே உள்ளன. நாம் இதை தீவிரமாக்கி, சமுதாய அளவில் பரவாமல் தடுத்தாக வேண்டும்'' என்று மத்திய சுகாதாரத் துறை முன்னாள் செயலாளரும் ``But Do We Care: India's Health System''-ன் ஆசிரியருமான கே. சுஜாதா ராவ் என்னிடம் கூறினார்.
அதேசமயத்தில், தற்செயலாகவும் மற்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் நடத்துவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும், குறைவாக உள்ள சுகாதாரத் துறை வளங்களை காலி செய்துவிடும் என்றும் நச்சுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சளி காய்ச்சல் நோய்க்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டும் ``பாதுகாப்பான பரிசோதனை'' செய்வதை அதிகரித்தால், சமுதாய அளவில் இந்தத் தொற்று பரவியுள்ளதா என்பதை அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். ``குறிப்பிட்டு கவனம் செலுத்திய பரிசோதனை நமக்குத் தேவைப்படுகிறது. சீனா அல்லது கொரியா போல நாம் செய்ய முடியாது. நம்மிடம் அதற்கான திறன் கிடையாது'' என்று மூத்த நச்சுயிரியல் நிபுணர் என்னிடம் தெரிவித்தார்.
பல வழிகளில், குறைந்த அளவிலான ஆதாரவளங்களை வைத்துக் கொண்டு, தொற்றுநோய்க்கு எதிராகப் போரிட இந்தியா முயற்சி செய்து வருகிறது. போலியோ, தட்டம்மையை ஒழித்தது, எச்.ஐ.வி. எய்ட்ஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது, மிக சமீபத்தில் தீவிர கண்காணிப்பு, பாதிப்பு வாய்ப்புள்ளவர்களை சரியாக அடையாளம் கண்டு, உரிய நேரத்தில் குறுக்கீடு செய்வதன் மூலம் H1N! - ஐ கட்டுப்படுத்தியது, அதைக் கட்டுப்படுத்த தனியார் துறையினருடன் இணைந்து செயல்பட்டது பற்றி நிபுணர்கள் பேசுகின்றனர்.
இருந்தாலும், சமீப கால வரலாற்றில், மிக மோசமான உயிர்ப்பலி வாங்கும் தொற்றுநோய்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் இருக்கிறது. நடவடிக்கை எடுப்பதற்குக் கிடைத்த வாய்ப்பில் ஒவ்வொரு நாளை இழப்பதும், தொற்று பரவுதல் அதிகரிப்புக்கான வாய்ப்பை உருவாக்குவதாக அமைந்துவிடும். இந்தியாவின் ஜிடிபியில் 1.28% என்ற மிகக் குறைந்த அளவில் தான் சுகாதாரத் துறைக்காக செலவிடப்படுகிறது. பெரிய அளவில் இந்தத் தொற்று பரவ நேரிட்டால், இந்தத் தொகை போதுமானதாக இருக்காது. பல நகரங்களில் பாதி செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன - பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது - இதில் இருந்து, சமுதாய அளவில் நோயின் தாக்கம் பரவத் தொடங்கிவிட்டதாக அரசுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதை இவை காட்டுகின்றன.
படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionசமுதாய அளவில் நோய் பரவத் தொடங்கவில்லை என்று அரசு கருதுகிறது.
தவிர்க்க முடியாத ஒரு போருக்கு ஆயத்தமாகும் நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள பரிசோதனை நிலையங்களில் 6 மணி நேரத்தில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுவிடும் என்றும், ஒவ்வொரு பரிசோதனை நிலையத்திலும் தினமும் 90 பரிசோதனைகளை செய்ய முடியும் என்றும், இதை இரட்டிப்பாக ஆக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வார இறுதிக்குள் மேலும் 50 பரிசோதனை நிலையங்கள் உருவாக்கப்பட்டுவிடும். இதன் மூலம் மொத்த பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 122 ஆக உயரும். இந்த அனைத்து பரிசோதனை நிலையங்களிலும் சேர்த்து தினமும் 8000 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய முடியும். இது கணிசமான அளவிலான எண்ணிக்கை உயர்வு ஆகும். இதுதவிர 50 தனியார் பரிசோதனை நிலையங்களும், இந்தப் பரிசோதனையை நடத்த அனுமதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் அதற்கான உபகரணங்களைப் பெற அவற்றுக்கு 10 நாள்கள் வரை ஆகும். (அரசு பரிசோதனை நிலையங்களில் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் பரிசோதனை நிலையங்களில் கட்டணம் வசூலிக்கப்படுமா என்று தெளிவாகத் தெரியவில்லை.)
இரண்டு அதிவிரைவு பரிசோதனை நிலையங்கள், தினமும் 400 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்டவை, அடுத்த வார இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மில்லியன் பரிசோதனை உபகரணங்கள் வாங்குவதற்கு இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. மேலும் ஒரு மில்லியன் உபகரணங்களைத் தருமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் இந்தியா கோரிக்கை வைக்கக் கூடும்.
``பரிசோதனை நிலையில், அரசின் செயல்பாடு பொருத்தமான விகிதத்தில் இருக்கும், தேவை மற்றும் திறன்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அப்படி இருக்கும்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி ஹென்க் பெகெடம் என்னிடம் தெரிவித்துள்ளார். ``பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது,பரிசோதனை திறன்கள் அதிகரித்து வருகின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
தீவிர மூச்சுக்கோளாறு, சளிக்காய்ச்சல் போன்ற நலக் கேடுகள் கண்காணிப்பு நடைமுறை மூலம் கண்டறியப்படுகின்றன. `நிமோனியா போன்ற' பாதிப்புகளையும் கண்டறிய வேண்டியதும் முக்கியமானது. ஏதும் காரணம் இல்லாமல் இந்தக் கோளாறுகள் தென்பட்டால், அவர்களுக்குப் பரிசோதனை நடத்துவது பற்றிப் பரிசீலிக்க வேண்டும்'' என்று அவர் கூறுகிறார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionபரிசோதனை உபகரணங்கள் வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகள், மருத்துவமனை வசதிகளை உருவாக்கிக் கொள்ளவும் இந்தியா அவகாசம் எடுத்துக் கொள்ளக்கூடும்.
இந்த நடவடிக்கைகள் போதுமானவையாக இருக்குமா என்பதை வரக் கூடிய வாரங்கள் மற்றும் மாதங்கள் தான் சொல்லும். ``சமுதாய அளவில் பரவாமல் இந்தியா தப்பிவிட்டது என்று நம்மால் சொல்லிவிட முடியாது'' என்று பார்கவா வெளிப்படையாகக் கூறுகிறார். ஒருவேளை எதிர்பாராத அளவில் தொற்று நோய் பரவி, நோயுற்ற அதிகமானோருக்கு மருத்துவமனை சிகிச்சை வசதி தேவைப்படும் நிலை ஏற்பட்டால், இந்தியா பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் 10,000 பேருக்கு 8 டாக்டர்கள் உள்ளனர். இத்தாலியில் இந்த எண்ணிக்கை 41 ஆகவும், கொரியாவில் 71 ஆகவும் உள்ளது. 55,000 மக்கள் தொகைக்கு ஓர் அரசு மருத்துவமனை இந்தியாவில் உள்ளது (பெரும்பாலான மக்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் செல்ல முடியாது.) மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளும் போக்கு நாட்டில் மிக மோசமாக உள்ளது. ஏதும் அறிகுறிகள் தென்பட்டால் டாக்டர்களிடம் செல்வதில்லை. மாறாக வீட்டு மருத்துவம் செய்து கொள்கிறார்கள் அல்லது நேரடியாக மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கிக் கொள்கிறார்கள். தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகள், பயிற்சி பெற்ற நர்சிங் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் தீவிர கண்காணிப்பு படுக்கை வசதிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது.
பருவமழைக் காலத்தில் இந்தியாவில் சளிக்காய்ச்சல் பாதிப்பு அதிகபட்சமாக இருக்கும். எனவே இந்த கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக மீண்டும் தாக்காது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நச்சுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
``இந்தியாவில் இதுகுறித்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும், ஸ்பெயினைவிட 2 வாரங்களும், இத்தாலியைவிட 3 வாரங்களும் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆனால், அறியப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். போதிய பரிசோதனை வசதிகள் அளிக்காமல், பெரிய எண்ணிக்கையில் முடக்கி வைப்பதால், எண்ணிக்கைகள் இன்னும் மோசமாகும்'' என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் மெர்கட்டஸ் மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்ருதி ராஜகோபாலன் தெரிவித்தார்.
சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இந்த நோய் பரவத் தொடங்கினால், மெத்தனமாக இந்தியாவின் சுகாதாரத் துறை கட்டமைப்பின் செயல்பாடு சிக்கலாகிவிடும். ``இது மிகவும் தனித்துவமான மற்றும் உண்மையான பொது சுகாதார சவால்'' என்று ராவ் கூறுகிறார். இப்போதும் இது ஆரம்ப கட்டம்தான்.
அது ஒரு மணி நேரம் முதல் ஒன்னரை மணி நேரம் பிடிக்கும் ஒரு பயணம். அதில் சுமார் அரை மணி நேரம் போய்விட்டது. சுங்கச் சாவடி வந்து சேர்ந்து விட்டது . அது ஒரு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி முனையம். .
கல்லூரி மாணவர்களும், அதன் ஆசிரியர்களுமாகக் கூட இருக்கலாம் அல்லது முதுகலை மாணவ மாணவியர் முனைவர் எனப் படிக்கும் நபர்களாகவும் இருக்கும் சிறிய பெரிய பெண்கள் எல்லாம் பேருந்தில் இருக்கை இல்லை என்றாலும் ஏறினர்.
அதில் சேரனின் ஆட்டோகிராப்பில் குறிப்பிட்டது போல ஒரு கேரளத்து சிவந்த பெண், வலது கையில் மெட்டல் செயின் அணிந்த வாட்ச்,பை, காதில் ஹியரிங் ஒயர், செல், சேலை நன்றாகவே இருக்கும் ரகம்.
சிறிது நேரம் நின்றபடி பயணம். அப்போதும் செல்போன் காட்சிகள் அவளுக்குத் துணையாக இருந்தது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து...
அவனது இருவரது இருக்கையில் இருந்த மற்றொரு நபர் இறங்கி விட்டார். அவள் வந்து அமர்ந்து கொண்டாள்.இருவரது ஆடையுள் இருந்த தொடையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம். அவனது அமைதி அவனைச் சுட்டது.
இப்போதெல்லாம் இருக்கையில் ஆணுடன் பெண் வந்து அமர்ந்து செல்வது பெரும் பாவமாக கருதப்படுவதில்லை.
அவள் கமல் நடத்திய வீணாய்ப் போன பிக் பாஸ் போன எபிசோட்டை அப்போதுதான் புதிதாகப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்
சிறிது நேரம் கழித்து பின் பக்க இருவர் இருக்கை ஒன்றும் காலியாக அவள் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டாள் , அவன் இறங்குமிடம் வந்தவுடன் இறங்கிக் கொண்டான் இருவரது வாழ்வும் தனித் தனியாகப் பிரிந்து போனது. நடந்தது அவ்வளவுதான். அதை விட்டு விட்டு வாழ வேண்டியதுதானே வாழ்க்கை...
ஆனால் அவன் அவளுடன் பேச நினைத்தது எல்லாம் என்ன வெனில், நீங்கள் யார், மாணவியா, ஆசிரியரா, எந்தக் கல்லூரி, நான் யார் என்றால்...இப்படி இருவரும் அருகருகே அமர்ந்த பின்னும் பேருந்துகளிலும், விமானங்களிலும், தொடர்வண்டிகளிலும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அனுபவம் பகிர்வுச் செய்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமல் அமைதியாக இருப்பதும் தேவையில்லாத மௌனம் காப்பதும் இரத்தமும் சதையும் உயிருமாக இருக்கும் ஒருவரை ஒருவர் சட்டை செய்யாமல் பயணங்கள் செய்து முடிப்பதும் இயற்கைக்கே பொருந்தாத செயலாயிற்றே...
ஏன் இந்த மனித குலம் இப்படி மானமிழந்து மதி அழிந்து போயிற்று...ஏன் இத்தனை வஞ்சனைகள், கொடூரங்கள் புலைத்தனங்கள் ஏன் இத்தனை சூது வாதுகள்...எந்த வழியிலிருந்தாவது கற்பழிக்கும் கொலைகாரர்கள் தோன்றி தூக்கு தண்டனை கைதிகளாகி, தந்தைகளே மகள்களைப் புணரத் தலைப்பட்டு வன்புணர்ச்சி செய்து அதை மகளே காவல் நிலையம் வரை சென்று என்ன இப்படி ஆகிப் போனது இந்த இனம்... ஏன் இப்படி ஒருவர்க்கொருவர் பேசித் தெரிந்து கொள்ள முடியாமல் கூட தடுத்து வைத்திருக்கிறது. அதனால் என்ன என்ன வம்பு வந்து விடுமோ என்ற தடைகளுடனும் அதனால் எத்தனை பேரிடர்களும் பெரும்பழிகளும், திருப்பங்களும் வந்து வாழ்வே முடைகளாகிவிடுமோ என்ற பயத்துடன் அல்லது எச்சரிக்கையுடனேயே போய்க் கொண்டே இருக்கிறதே.... பாவங்களை
மேலும் இப்போதெல்லாம் யாரிடமும், பேரோ, ஊரோ , அந்த மனிதரைப் பற்றியோ கூட தெரிந்து கொள்ள அவசியமில்லாது போனது பற்றி இவனுக்கும் வருத்தம் குறைய ஆரம்பித்து விட்டது....ஏன் எனில் அவரைப்பற்றி அறிந்து கொண்டு அதன் பின் அவர்கள் திடீரென இறந்து போக அந்தப் பிரிவை அந்த அதிர்ச்சியை, அந்த நம்ப மறுக்கும் மனதை நினைவை இழுத்துப் பிடிக்கவே முடிவதில்லை...இயற்கையின் கைகள் மேன் மேலும் எழுதிச் செல்ல அவனது இறங்கும் இடம் நெருங்கிய படியே இருக்கிறது...
எனவே எவரிடமும் இப்போது பேர் என்ன என்பதைக் கூட கேட்க எண்ணம் முளைவிடுவதில்லை... அது அவன் அவள் எல்லாம் அப்படியே போகட்டும்... ஆனால் இவனைப்பற்றி இவனது அனுபவம் பற்றி அது பிறர்க்கு பெரிதும் ஊக்கமாய், பயன்பாடாய் ஆகும் அவர்க்கு என்பது பற்றி இவனிடம் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அவன் இன்னும் பயன்படுவான் நிறைய மனிதர்க்கு, நிறைய உயிர்களுக்கு பயன்படுவான்.
நரைக்கும் பின்னே என்ன இருக்கிறது, அதை அடுத்து என்ன வண்ணம் மாறி விடப் போகிறது...கேட்பவர்க்குச் சொல்வதும், மாற்றங்கள் செய்வதுமன்றி...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
நாய் வளர்ப்பு என்பது முன்னால் தலைமுறையிடமிருந்து எனக்கு வந்தது. பல வகையான நாய்களை வளர்த்திய பின் தற்போது ஒரு நாட்டு நாயை வீட்டு நாயாக வளர்த்தி வருகிறோம்
வளர்த்தி வருகிறோம் எனில் அதன் பால் அக்கறை செலுத்த ஒருவருமில்லை. அவரவர்க்கு அவரவர் பணி. உணவு அளிப்பது எப்போதாவது குளிக்க வைப்பது அதன் கழிவுகளை அகற்றுவது மட்டுமே நான் செய்து வருவது.
அதை நடைப் பயிற்சி செய்ய வைக்கவோ, அல்லது அதன் பால் அக்கறை கொண்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பவோ நடைமுறைச் சிக்கல். எனவே
நாய் அதன் காலம் முடிந்தாற்போல உடலில் உரோமம் இழந்து உடல் எல்லாம் தளர்ந்து, சிவந்து கண்கள் பொங்க சோர்ந்து இறந்துவிடும் தருவாயில் இருக்க....
அதை கருணைக் கொலை எப்படி செய்வது என யோசிக்க ஆரம்பித்தோம். ஒரு சில நண்பர்கள் எர்த் ஒயர் இல்லாமல் சப்ளை ஒயரை மட்டும் கொடுத்து அதன் கழுத்து இரும்பு செயினில் மாட்டி விட்டால் ஒரு நொடியில் இறந்து விடும் என்றார்கள்.
சிலர் வளத்த நாயை அடித்துக் கொல்வதே சிறந்தது என்றார்கள்.
மகன் மருந்துக் கடையில் விஷக் கொல்லி வாங்கி அதை உணவில் அல்லது பாலில் வைத்து விடுவதே எளிய வழி என வாங்கி வந்து அவனது தாயிடம் கொடுத்து வைத்தான்.
அதற்கும் முன் இரண்டு வைத்தியங்கள் பார்த்தோம். ஒன்று ஒரே டோஸ் போதும் என சில மாத்திரைகள் , அதன் பின் வாரம் ஒன்று என 3 மாத்திரைகள் எல்லாம் கொடுத்துப் பார்த்து தேறுகிறதா என்று பார்த்தோம்.
அதைக் கொல்ல மனம் வராமல் அது தேறுவது போல என ஆறுதலுடன் இருந்தோம். மேலும் அதற்கு வாரா வாரம் குளிக்க வைத்து வேறு நாய்க்கு வாங்கி வைத்த நோட்டிக்ஸ் பவுடரை தெளித்து வைத்தேன் அடிக்கடி.
மறுபடியும் மங்க ஆரம்பித்த பின் துணைவியார் அந்த மருந்தை அது ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாம் கலந்து சாப்பாட்டில் வைத்துப் பார்த்தார். அவளை அது ஒரு ஏக்கமாகப் பார்த்துவிட்டு அந்த உணவை தொடவே இல்லை.
அதில் இருந்த உணவில் கலந்திருந்த பிஸ்கட் துணுக்குகளை, துண்டுகளை எடுத்து மட்டும் சாப்பிட்டது.
சாப்பிட்ட பின் வாந்தியும் எடுத்தது. ஒரு ஆச்சிரியம் என்ன வென்றால் முன்பு இருந்ததற்கு மாறாக அந்த நாய் இப்போது உடல் அளவில் தேறி நன்றாக செயல்பட ஆரம்பித்து விட்டது.
தெளிவடைந்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம் வாழ்வை நீட்டித்துக் கொண்டது. இருக்கும் வரை இருக்கட்டும்,அதுவாக இறக்கும் வரை இருக்கட்டும் என்ற எனது முன்னால் செய்த முடிவை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். ஊனுடம்பு ஆலயம் என்பார் சித்தர். உடலை வைத்துதான் நாம் உயிராற்றலை காப்பாற்றியாக வேண்டும்.
அந்த உடலை எப்படி எப்படி பயன்படுத்த முடியும் என ஒரு விளையாட்டு வீராங்கனை நிரூபித்துள்ளார். ஸ்காட்லாந்தின் கால்பந்து அணியின் தலைவி விளையாடும்போது தலை கீழாக குப்புற விழுந்து டைவ் அடித்து அதன் பின் விலகிய கால் முட்டி மூட்டை கையை சுத்தியாக பாவித்து அடித்தே சரி செய்து அதன் பின் விளையாட்டையும் விளையாடி இருக்கிறார் என்பது வியப்புக்குரிய செய்தியக உலகெலாம் வலம் வந்தது.
இது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவாவுற்றேன். இன்றுதான் அந்த எண்ணம் பலித்திருக்கிறது. வீடியோவைப் பகிர்ந்துள்ளேன். பார்த்து இன்புறவும்.
ராம்போ ஃபர்ஸ்ட் பிளட் போன்ற படங்களில் ஸில்வஸ்டர் ஸ்டால்லோன் அறுந்த சதையை தனக்குத் தானே தைத்துக் கொள்வது மிகவும் பிரபலாமாக அப்போது அந்தப் படம் வந்த புதிதில் பேசப்பட்டது. அதற்கே அப்படி என்றால் இதை எல்லாம் என்னவென்று சொல்வது?
சில்லுக் கருப்பட்டி படம் பார்த்த போதே அதைப் பற்றி எழுத நினைத்தேன் உங்களுடன் பகிர நினைத்தேன் ஆனால் அது அப்போது கை கூடி வரவில்லை. இப்போது கே.டி என்கிற கருப்பு துரையைப் பார்த்த பிறகு இரண்டைப் பற்றியும் இரண்டொரு வரிகளாவது எழுதியே தீரவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது
பிங்க் (இளஞ்சிவப்பு ) பை /பேக்,
2. காக்காக் கடி
3. ஆமைகள் டர்ட்டில்ஸ்
4. ஹே அம்மு
என்கிற 4 சிறுகதைகளை அப்படியே கதை படிக்கும் உணர்விலிருந்து கொஞ்சம் கூடக் குறையாமல் படமாக்கியிருக்கின்றனர். ஒரு சேரிப்பகுதியில் ஒர் பிளாஸ்டிக் குப்பைக் காட்டிலிருந்து படம் ஆரம்பித்து வெகு இயல்பாக நகர்கிறது. கொஞ்சம் கூட நடிப்புத் தெரியாத இயல்பான படக் காட்சிகள். பிரபலமான நடிகர்கள் என்று சொன்னால் அது ஹே அம்முவில் வரும் சமுத்திரக் கனியும், சுனைனா மட்டுமே.
மிக அழகாக கொஞ்சம் கூட முரண்கள் இல்லாமல் வெகு இயல்பாக அந்தக் கதைகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா நல்ல பயணத்தின் பாதைக்கு வந்த நேர்த்தி தெரிகிறது. இவர்கள் இலாப நோக்குடன் செய்தார்களா அல்லது ஆத்ம திருப்திக்காக செய்தார்களா என்பது படத்தைப் பார்ப்பவர்க்கு நன்கு தெரிகிறது.
ஹே அம்முவில் அந்த சிறுவன் சொல்கிறான்: அய்யோ அப்பா நான் இன்னும் தூங்கவே இல்லப்பா என்று நினைவில் நகைச்சுவையாக நின்று போய்விடுகிறது.
ஸ்க்ரோட்டம் பகுதியில் வந்து விடும் நோயால் அவதிப்படும் ஒரு இளைஞர் அவருக்கு உதவிடும் இயல்பான பெண் தோழி...
வயதான காலத்தின் துணை தேடும் காதல்...டர்ட்டில்...இப்படி எல்லாமே சிறிது நேர கால அவகாசத்துள்ளே நமது மனதில் இடம் பிடித்து விடுகின்றன
இதை எல்லாம் பேசுவதை விட பார்த்து அனுபவித்து விட வேண்டும்...பனங்கருப்பட்டியை கொஞ்சம் சில்லாக உடைத்து வாயில் போட்டு இனிப்பு கரைய ஊற வைப்பது போல...நல் நினைவை பதிய வைக்கும் படம்.
கே.டி. என்கிற கருப்பு துரை:
சொல்லவே வேண்டாம்... மு. ராமசாமி என்ற பெரியவரும் நாகவிசால் என்ற சிறுவனும் நூலும் பாவுமாக பின்னி நம்மையும் இணைத்துக் கொள்கிறார்கள். இணைத்துச் செல்கிறார்கள். மதுமிதா இந்த படத்துக்காக சிறந்த இயக்குனராக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சிறந்த ஆசிய பட விழாவில் 2019ல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சரியான தேர்வு.
அந்த நாக விசால் என்ற சிறுவனும் ஜக்ரான் என்ற இந்தியப் படவிழாவின் விருதை பெற்றுள்ளான் . கொடுத்துத்தானே ஆக வேண்டும்.
முதியவர்களுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி இளநி கொடுத்து கொல்லும் பழக்கம் முட்டாள்தனமானது இது இன்னும் சில இடங்களில் உண்டு. கோமா நிலையில் இருக்கும் கருப்பு துரை மிக நல்ல முயற்சி உள்ள அடையாளமுள்ள மனிதர் அவரது குடும்பத்தில் கடைக்குட்டிப் பெண் தவிர மீதம் உள்ள அத்தனை பேரும் அந்தப் பெரியவரை முடித்து விட நினைக்க அவர் கோமாவிலிருந்து விழிப்பு பெற்று அவர்கள் திட்டம் அறிந்து வீட்டை விட்டு புறப்பட்டு விடுகிறார் அவருடன் கதையும் புறப்படுகிறது நாமும் அத்துடன் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம்
தமிழ் பட வரலாற்றில் இது போன்ற படங்கள் எல்லாம் பேர் சொல்ல வேண்டும். வர வர வேண்டும் இன்னும் இத் போல பல படங்கள்....
ஒரு ரஜினியின் படத்துக்கு ஆகும் செலவில் இது போல நூறு படங்கள் எடுத்து விடலாம். அது போல தர்பார் ஓடவில்லை 60 சதம் திரும்பத் தரவேண்டும் என விநியோகஸ்தர் எல்லாம் ரஜினி வீட்டை சென்று கேட்பதற்கு பதிலாக இது போன்ற படங்களைச் செய்யலாம். ஒன்றும் அறிமுகமான முகம் என்று பெரியதாக ஒன்றுமில்லை இந்த மு.ராமசாமி பெரியவர் மட்டும் பருத்தி வீரனில் ஒரு காட்சியில் பாடுவார் பாருங்கள் அது போல இருந்தவர்க்கு முழு படமும் அல்வா சாப்பிடுவது போல இவரும் நாக விசால் என்ற சிறுவனும் ஒருவர்க்கொருவர் சளைக்காமல் நடித்து நமக்கெல்லாம் ஒரு நல்ல அரிய காட்சி விருந்தை வழங்கி இருக்கிறார்கள்
மிக அருமையான கதை, நேரம் போவதே தெரியாமல் இவர்களுடன் பயணம் செய்கிறோம். பிரியாணி சாப்பிடுகிறோம் நாம் சைவமாக இருந்தபோதும் இவர் சாப்பிடும்போது நாமும் சாப்பிடுவது போல...இவர்கள் கூத்து கட்டும்போது நாமும் கட்டுகிறோம். இவர்கள் அழும்போது நாமும் அழுகிறோம். சிரிக்கும்போது சிரிக்கிறோம் இப்படி படத்துடன் நம்மை பின்னி வைத்து விட்டார்கள் இயக்குனர், ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர் தயாரிப்பாளர் எல்லாமே...
தமிழ் சினிமாவுக்கு இது போன்ற சளைக்காத களைக்காத பல படங்கள் மதுமிதாவிடமிருந்து வரட்டும் வாழ்த்துகள். தெய்வம், இயற்கை நன்மை செய்யட்டும்.
பார்க்காதவர்கள் இது போன்ற படங்களைத் தேடிப் பாருங்கள்...கண்ட கண்ட வெறித்தனங்களுள் மூழ்கி விடாமல்.
இது போன்ற படங்களை எனக்குத் தேர்வு செய்து பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் இளைஞர் த.க.ரா.சு.மணியத்துக்கு நன்றி.