Wednesday, November 6, 2019

5 நிமிடத்தில் பேருந்துக்கு பழுதான டயர் ட்யூப் மாற்றப்பட்டது: கவிஞர் தணிகை.

5 நிமிடத்தில் பேருந்துக்கு பழுதான டயர் ட்யூப் மாற்றப்பட்டது:
கவிஞர் தணிகை.

Image result for recent tyre change to heavy vehicle"

அன்று காலை முதலே எனக்கு போக்குவரத்தில் பிரச்சனை. வழக்கமாக வரும் எங்கள் கல்லூரி பேருந்து வரவில்லை. சகோதர நிறுவனத்தின் பேருந்தில் அலுவலர்கள்  அனுமதி இல்லாமல் நாங்கள் ஏற்றிச் செல்ல மாட்டோம் என ஓட்டுனர் பிடிவாதம் பிடித்து என்னதான் சமாதானம் கூறினாலும் ஏற்க மறுத்து ஏறி உள் சென்ற என்னையும் இன்னும் இரு மாணவர்களையும் இறக்கி விட்டு விட்டார்கள்.

அப்போது எங்கள் பிரச்சனையைக் கேட்ட ஏ.ஓ எங்களை காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று உரிய நேரத்தில் சேர்ப்பித்தார்.  ஆக காலைப் பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது.

மாலை அல்ல மதியம் சுமார் 4 மணி: பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் இறக்கி விட எதிரில் வந்து கொண்டிருந்த மஞ்சள் நிறப் பேருந்தில் இடம் இருக்கவே ஏறிக் கொண்டேன். அந்த நேரத்தில் புறப்படும் பேருந்துகள் எல்லாம் பேருந்து நிலையத்திலேயே இருக்கை இல்லாமல் நிறைந்துவிடுவதால் நான் கேட்டுக் கொண்டு ஏறுவது வழக்கம். அந்த பேருந்துகளும் அதன் நடத்துனர்களும் கூட பழக்கப்பட்ட முகங்களாகிவிட்டன.

எனவே எதிரில் வந்த பேருந்தில் இடம் இருந்ததால ஏறிவிட்டேன். அந்த பேருந்து தனியார் பேருந்து என்பதாலும் அதன் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காது. இருந்த போதிலும். என்ன செய்வது வேறு வழி...வீடு சேர்ந்ததும் பையை தூக்கி கடாசிவிட்டு குளித்து விட்டு நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டுவதுதான் எனது மாலையின் குறிக்கோள்.

பேருந்து ஓமலூரி பாலத்தில் ஏறும்போது பெரும் சத்தம். காற்று வெளிக்கிளம்ப பேருந்தை அதன் அருகே இருந்த பஞ்சர் கடையில் அருகே ஓரம் கட்டினர்.

உள்ளே திட்டியபடி காசை திரும்ப வாங்கிக் கொண்டு வேறு பேருந்து வந்தால் ஏறிக் கொள்ளலாம் என யோசனை செய்தவாறு கீழ் இறங்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு சிறு விடலைப் பயலைப் போல் இருந்த ஒரு சிறுவன் ஜாக்கியை எடுத்துக் கொண்டு வந்தான் . பின்னால் உள் சக்கரத்தின் டயரில் தான் வேலை. பேருந்துக்கு ஜாக்கி போட்டான். அதற்குள் மேலிருந்து ஒரு மாற்று டயர் கீழ் இறக்கப் பட்டது. ஏற்கெனவே அந்த பேருந்தே மாற்றுப் பேருந்துதான் அந்த மாற்றுப் பேருந்துக்கு வேறு டயர் மாற்றும் நிலை.

ஜாக்கி போட்ட பின் நடத்துனர் பயணிகளை கீழ் இறங்குவோர் கீழ் இருக்கவும் உள்ளே அமர்ந்திருப்பார் அங்கேயே இருக்கவும் அறிவித்தார். பையன் பீரங்கியை எடுத்து வந்து சுட்டான் ஒரு சத்தம். எல்லா போல்ட் நட்டுகளும் கழன்று இருந்தன. எல்லாம் காற்றின் மின் மயம். உடனே அந்த டயர் சக்கரத்தை கழட்டி வேறு எடுத்து மாட்டினார் ஒரே நெம்புதான் உள் ஏறிக் கொள்ள மறுபடியும் ஒரு பீரங்கியின் சுடல்...பட பட வென எல்லா நெட் போல்ட்களும் டைட் செய்யப்பட்டன.

அட வண்டி 5லிருந்து 10 நிமிடத்தில் மறுபடியும் தயாராகிவிட்டது. பேராச்சிரியம்.

முன் சென்ற 3 வண்டிகளையும் மீறி வேகம் எடுத்து உரிய நேரத்தில் கொண்டு சென்றுச் சேர்த்த வேகம் மயிர்க்கூச்செரியும் வேகம் . பேருந்து பறப்பதாக பெண்குரல்...மயிரிழை மோதினாலும் இருசக்கர வாகனங்கள் பறந்து விடும்...தனியார் மோகம்...விளைவு அபாயம்....

Image result for recent tyre change to heavy vehicle bus"


ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எத்தனை உயிர்கள் சேதமாகுமோ...ஆனால் பஞ்சர் போட்ட கால அளவு மிகவும் மிச்சம். அந்தக் காலத்தில் கடப்பாரை போட்டு ஏறி நின்று பேருந்தை தயாராக்க போல்ட் நெட் போட வீலை மாற்ற அரை நாளே செய்து விடுவதை அறிவியல் 5 நிமிடங்களில் முடித்துவிட்டது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment