Friday, November 29, 2019

24.11.19ல் பாலமலையில் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை

24.11.19ல் பாலமலையில் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை

Image may contain: 1 personImage may contain: one or more people, outdoor and nature


கடந்த ஞாயிறு 24.11.19 அன்று எங்களது 12 பேர் கொண்ட மருத்துவக் குழுவினருடன் பாலமலைக்கு மருத்துவ முகாம் நடத்த சென்றிருந்தோம்.அதில் சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் குழுவினருடன் எங்களது சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த முகாமை பொது உறவு அலுவலர் பி.ஆர்.ஓ என்ற முறையிலும் பாலமலையுடன் 34 ஆண்டுகள் தொடர்புடையவன் என்ற முறையிலும் அடியேன் ஒருங்கிணைப்பு செய்து நடத்தினேன். இந்த முகாமிற்கு பாலமலையில் உறுதுணையாக இளைஞர் ஆசீர் வாத இயக்கம் என்ற சேவை நிறுவனமும் தனது  பங்கு பணியை சிறப்பாக யுவராஜ் திருமதி யுவராஜ் ஆகியோரை வைத்து நடத்திட துணை புரிந்தது.
Image may contain: 2 people, people sitting
சேலம் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் பேபிஜான் இந்த மருத்துவ முகாமை நடத்திட முன் மொழிந்து முடுக்கி விட்டுக் கொண்டே இருந்தார் அதற்கு வழிமொழிதலுடன் சமூக பல் மருத்துவத் துறையின் பேராசிரியர் மருத்துவர் என். சரவணன் அவர்களும் ஒத்துழைப்பு செய்தார்.
Image may contain: one or more people and people sittingImage may contain: 1 person, sitting and closeup
மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சண்முகம் மற்றும் சமூக மருத்துவத் துறைத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் அந்தக் கல்லூரியின் மருத்துவர் ரூபேஷ், அங்கயற்கண்ணி, மற்றும் மருத்துவர்களும்  பல் மருத்துவக் கல்லூரியின் ஸ்ரீநாத், ராம்குமார் ஆகிய மருத்துவர்களும் பேரார்வத்துடன் வந்து முகாமை நடத்திக் கொடுத்தனர்.
Image may contain: one or more people and people sittingImage may contain: one or more people and people sitting
அது பெருமழைக்காலம் என்பதாலும், பெரும்பாலான மக்கள் கீழே கூலி வேலைக்கு சென்றுவிட்டதாலும், முறையான அறிவிப்பு இருந்த போதிலும் சுமார் 50க்குள்ளான பாலமலை கிராம மக்களே வந்திருந்து பயன்பெற்றனர் என்ற போதிலும் அந்த மலைக்குச் சென்று தொலை தூரப் பணித் திட்டம் சார்பாக மாதம் தோறும் இந்த மருத்துவ முகாமை நாலாம் ஞாயிறுகளில் செய்துவரும் பல்மருத்துவக் கல்லூரியின் பணிகளில் முதன் முறையாக சேவையில் மருத்துவக் கல்லூரியும் இணைந்து செயல் பட்டதும் இனி வரும் காலங்களில் செயல் பட இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
Image may contain: one or more people and people standing

முதலில் அன்றைய தினத்தில் பாலமலையில் ஏறுவதே பெரும்பாடாகியது. தனி மலையேறும் ஜீப்பில் அனைவரும் சென்றோம். அதற்கு முன் ஒரு ஜீப் மரத்தில் மோதியதால் பாதை தடைபட்டிருந்ததை  பெருரக வாகனங்கள் தலையிட்டு அவற்றை எடுத்து விட்டு சரி செய்து அதன் பின் சென்றோம். இந்த செய்தியை முதலில் சொல்லி இருந்தால் எமது மருத்துவர்கள் பயந்து விடுவார் எனச் சொல்லவே இல்லை. மறுபடியும் இறங்கும்போதும் அந்த மண்பாதை செப்பனிடும் பணி நடந்ததால் வன இலாகா சங்கிலி இட்டு பாதையை தடுத்திருந்தது வாகன போக்குவரத்து நடைபெறாமல்.
Image may contain: one or more people and people sitting
நாங்கள் முகாமை நடத்தி விட்டு வந்த பின் மருத்துவர்கள் அவசரப்பட்டு சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தனர். மேல் ஏறி வந்த மலையிலேயே தங்கி பணி புரியும் விருது பெற்ற நர்ஸ் இனி வாகனப் போக்கு வரத்து இரவு 7 மணிக்கு மேல் இருக்கலாம் என தாம் கேள்விப்பட்ட தகவலை பரிமாறினார்.
Image may contain: one or more people and people sitting
நல்ல வேளை அப்படி எல்லாம் இல்லாமல் நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்த ஜீப் மறுபடியும் வந்து எங்களை ஏற்றிக் கொண்டு கீழ் இறக்கிவிட்டது. சாலை தார் சாலையாக அரசு ஆணை திட்டம் எல்லாம் வந்து விட்டது இன்னும் 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் இந்த சாலை வசதி மேம்படலாம் என்ற வாய் வழிச் செய்தியும் கிடைத்தது.
Image may contain: one or more people and outdoor
அங்கே சென்றுவிட்டால் இணையம், தகவல் தொடர்பெல்லாம் இருக்காது. சுண்டக் காடு என்னும் இடம் வந்தால் மட்டும் சில பி.எஸ்.என்.எல் போன்ற இணைப்புகள் கிடைக்கலாம். அல்லது அதுவும் கிடைக்காமலும் போகலாம்.
Image may contain: one or more people, people sitting and indoor
மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3924 அடி உயரத்தில் இருக்கிறது என்பதாலும் அங்கே சிறு சிறு கிராமங்களாக 20க்கும் மேல் இருப்பதாலும் சுமார் மக்கள் தொகை 4000க்கும் மேல் இருப்பதாலும் அந்த மலையை அந்த பாலமலை வருவாய்க் கிராமத்தை தவிர்க்க முடியாமல் பணிகளைச் செய்ய வேண்டி இருக்கிறதே என அரசு செய்தும் செய்யாமலும் இருக்கிறது.
Image may contain: one or more people, people sitting and phone
அப்படிப்பட்ட இடத்தில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி ஒரு சேட்டிலைட் மையத்தை ஏற்படுத்தி மருத்துவ உதவிகளை தேவைப்படுவார்க்கு கொண்டு சேர்த்து வருவது மனிதகுல சேவையன்றி வேறில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மக்கள்தாம் சாதி என்றும், மதம் என்றும் கட்சி என்றும் பிரிந்து போய் ஒன்று சேராமல்  முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ ? என பாழ்பட்டுக் கிடக்கிறார்கள் இன்றைய எல்லா கிராமங்களிலும் போய்ச் சேரவேண்டிய நன்மைகளுக்கு முட்டுக் கட்டை போடுவது எல்லாப் பக்கங்களிலும் வழக்கமாக இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் தீய பழக்கங்கள் தவறாமல் சென்றடைந்து மனித குலத்தையே நாசம் செய்து வருகிறது.
Image may contain: one or more people, people sitting, table and indoor
நிலை தேற வேண்டி மனித குலம் மேம்பட வேண்டி எம்மாலானதை செய்கிறோம் நம்மாலானதை செய்வோம் என்ற நம்பிக்கையுடன்.
Image may contain: 3 people, people smiling, people sitting, sunglasses and closeup
என்றும்
Image may contain: one or more people and people sittingImage may contain: 2 people, people sitting
மறுபடியும் பூக்கும் வரை

உங்கள்

கவிஞர் தணிகை. 
Image may contain: one or more people and people sittingImage may contain: outdoor and nature

No comments:

Post a Comment