இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடியும் இப்படி பண்ணலாமா? கவிஞர் தணிகை

பிரசாத் ஸ்டுடியோவில் இசை அமைக்க இடம் இது வரை இளையராஜாவுக்கு இருந்ததாகவும் இப்போது அந்த இடம் அவர்களுக்கே தேவைப்படுகிறது என அவரை காலி செய்யச் சொல்லியதாகவும் அதற்கு அவருக்கு ஆதரவாக பாரதிராஜா மற்றும் திரைப்படம் சார்ந்தவர் அங்கே சென்று அதை மறுத்து முதலில் பேசி அதன் பின் பேச்சு வார்த்தையில் போதிய கால அவகாசம் தந்து வெளியேறச் சொல்லலாமே என்றுதான் கேட்கிறோம் என்றெல்லாம் ஊடகச் செய்திகள்...ஊடகத்தை முதலில் எந்த அளவு நம்புவது என்றே நம்மால் முடிவுக்கு வர முடியாது ஏன் எனில் ஊடகங்களின் நிலை எல்லாம் அப்படி உரு மாறியுள்ளது.
என்றாலும் அந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் இளையராஜா அன்னக்கிளி மூலம் சினிமாவில் பிரவேசித்த ஆண்டு 1976 அது முதல் சுமார் 40 ஆண்டுக்கும் மேலாக இந்த துறையில் கொடி கட்டி பறப்பவர் தனக்கென ஒரு ஸ்டுடியோவை ஏற்படுத்திக் கொள்ளாமல் ப்ராசாத் விட்டு விட்டார் என்பதற்காக அதிலேயே இருந்து விடலாம் என கடைசி வரை நினைத்தது எப்படி நியாயமாக இருக்கும், நீதி, தர்மம் என்று பார்த்தாலும் உரியவர்கள் கேட்கும்போது வெளியேறித்தானே ஆக வேண்டும். அதுதானே சரியாக இருக்கும்.
அதற்கு மாறாக அவர் வெளியேறாமல் அதற்கு சப்பைக் கட்ட ஒரு குழுவினரும் போய் தவறுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். உழுபவனுக்கு நிலம் சொந்தம், குடியிருப்பவனுக்கு வீடு சொந்தம், அனுபவிப்பார்க்கு சொத்து சொந்தம் என்ற கதையாகவே இது இருக்கிறது. மேலும் இப்போது வடநாட்டு இந்தியர்கள் தமிழ் நாட்டில் குடியேறி தமிழ் நாட்டு இளையவர்களின் வேலை வாய்ப்பை பறித்து தமிழ் நாடு என்பது எங்கள் சொந்தம் என்று சொல்ல வழிவகை செய்ய மத்திய அரசும் மாநில அரசும் செய்து வரும் தகிடு தத்தம் போன்றது இந்தக் கதையும்.
இசை ஞானி இவரது பாடல் மேடையில் பாடுவதற்கே ராயல்டி கேட்டவர், அதிலும் முக்கியமாக வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்க்கு கிடைக்கும் பொருளாதார நலன்களில் தனது பாடல் இருக்குமனால் அதற்கு தனக்கும் பங்கு உண்டு எனக் கேட்டவர்,
இவர் ஏன் இவருக்கும் பின்னால் வந்தவர்கள் எல்லாம் தமக்காக ஸ்டுடியோ ஏற்படுத்திக் கொண்டு இசை அமைத்து வரும்போது இதிலேயே இருந்து வந்தார் என்பதை தெரிந்து கொள்ளும்போதே வியப்பாக இருக்கிறது கேட்கவே. இவர் படங்களுக்கெல்லாம் இலவசமாகவே இசையும் பாடலும் செய்கிறாரோ...வருவாய் மிகவும் குறைவோ என்றெல்லாம் கேட்கலாம் ஆனால் அது அவர் திறம், அவர் களம். அதெல்லாம் சரிதான். ஆனால் இந்த செய்தி நெருடலாகவும் முரணாகவும் உள்ளது. ஏன் எனில் சொந்தக்காரர் சொன்னால் தனக்கே அந்த இடம் வேண்டுமென்றால் இவர் வெளியேறிவிடுவதுதான் நமக்கு தெரிந்த நியாயம்.
அடுத்த நமது நாட்டின் மன்கி பாத் தலைவரும் நள்ளிரவில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து நாட்டையே டிஜிட்டல் மயமாகவும் பொருளாதார உதயமாகவும் மாற்றி படித்த படிக்காத இளையவர் யாவருக்கும் தொழில் வாய்ப்பு கொடுத்து பிரமாதமாக நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் ....பாரதம் என ஏன் இன்னும் சொல்லாமல் இந்தியா என்று சொல்லி வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்திய வம்சாவளியினரை தமிழ்க் குடிமக்களை இலட்சக்கணக்காக படுகொலை செய்த ஒரு இனத்தின் பிரதமரை வரவேற்று 3228 கோடி பணத்தை வாரி இறைத்திருக்கிறார். அந்த நாட்டை முன்னேற்றுகிறாராம். இந்த நாட்டை ஒழித்துக் கட்டி.
வைகோ ஒருவர்தாம் எதிர்க்குரல் கொடுத்திருக்கிறார்.
அந்த புத்தமதம் சார்ந்த அந்த புத்தமதக் கருத்துகளுக்கு எதிரான இலங்கை அதிபர் வரவு இந்திய நாட்டுக்கு நட்டம்.அவர்களுக்கு இலாபம்.கேட்டால் உலக ராஜாங்க முறைகள் சொல்லப்படும், சீனாவின் பால் சாராமல் இருக்க இந்தியா இப்படி செய்கிறது மேலும் அவர் பதவி ஏற்றதும் இந்தியாதானே முதலில் வந்தார் என்றெல்லாம்
இந்தியாவின் ஒன்னேமுக்கால் கோடி பேர் வெளி நாட்டில் சென்று வேலை செய்து கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கூட விட்டு விடாமல் வரி கட்டிய இந்திய பணத்தை ஜி.எஸ்.டி மூலம் வசூலான பணத்தை, ஏழை எளியவர்கள் பணத்தை எல்லாம் வாரி வாரி கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வங்கிக் கடன் என்ற பேரில் கொடுத்து விட்டு திவால் செய்வது, அந்நிய நாடுகளுக்கு வாரி விடுவது, வெளிநாட்டு மண்ணிலேயே வாழ்ந்து விடலாம் என பறந்துகொண்டே இருப்பது ...சொந்த மண்ணுக்கு சூன்யம் அந்நிய மண்ணுக்கு மான்யம் என்றபடி நாட்டை வழி நடத்துகிறீரே தாழ்த்தப்பட்ட இனம், ஒதுக்கப்பட்ட இனம், மிகவும் பிற்படுத்தப் பட்ட இனம், பொருளாதாரத்தில் நலிவடைந்தார் ஒதுக்கீடு என பிற்படுத்தப்பட்ட இனத்து படித்த இளைஞர்களின் வாழ்வை கேள்விக் குறியாக்கும் இந்த பிரதமரின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் குடும்பத்துக்கு இழப்பீடு தர சட்டத்தில் இடம் இல்லையாம்.
விலைவாசி பொருள்களை வாசிக்கவும் வாங்கிட யோசிக்கவும் விடாமல் சுவாசிக்கும் காற்றுக்கும் முதல் தேவைப்படும் நாடாக முதலாளிகளின் நாடாகவே மாறிட மிக அருமையான ஆட்சி...உங்கள் ஆட்சிதான் பிரதமரே... இது ஒரு வரிகட்டும் குடிமகன் ஒரு நாட்டின் தலைவனுக்கு தெரிவிக்கும் ஆதங்கம் அவ்வளவுதான். எவருமே இதில் உண்மை இல்லை என்றால் வந்து கலந்து பேசலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.