Wednesday, September 6, 2017

எனக்கு விடுமுறையும் ஓய்வும் இல்லை: கவிஞர் தணிகைஎனக்கு விடுமுறையும் ஓய்வும் இல்லை: கவிஞர் தணிகை

Image result for no leave and rest

நாய்க்கு ஒரு வேலையும் இருக்கிறது. நிற்பதற்கு பேருந்தில் நேரம் இருக்கிறது. நாய்க்கு வேலை இல்லை நிற்க நேரம் இல்லை என்ற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டுதான் எனது முதல் வரி. இராமலிங்க வள்ளலாரே தம்மை நாயேன் எனக் கூறி இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம். மாத்திரை விழுங்கும் நாம் எல்லாம் எம் மாத்திரம். மாத்தறே எமாத்தறே... அரசுப் பணியில், ஏன் தனியார் பணியில் இருப்பார்க்கும் கூட விடுமுறையும் பணி ஓய்வும் உண்டு ஆனால் சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்க்கு ஓய்வும், விடுமுறையும் என்றும் இல்லை. என்றுமே தேவையுமில்லை.

நாய் வாலை நிமிர்த்தவே முடியாது. என்னதான் எங்க வீட்டு புழக்கடை நாயை நாம் நல்லபடியாக அனுசரித்து சென்றாலும் அதைச் சங்கிலியில் கட்டி வைத்தாலும் சங்கிலியில் கட்டி வைக்காமல் விடுதலை செய்தாலும் கிடைப்பதை எல்லாம் நார் நாராக பேப்பர் கிடைத்தாலும் சரி, துணியாக இருந்தாலும் சரி கிழி கிழியென்று கிழித்து, எல்லாவற்றையும் கீழே தள்ளி,  நாசம் பண்ணி வைத்து விடுகிறது. அதை அடித்தாலோ நமக்கு வலிக்கிறது.

ஆனால் அதற்கு எல்லா விவரமும் தெரிகிறது. குழாயில் தண்ணீர் வந்தால் சத்தமிட்டு அறிவித்து விடுகிறது எவராவது வண்டியில் வந்தால் நாமறியும் முன்னே  தயாராகி குரைக்க ஆரம்பித்து அறிவிப்பு செய்து விடுகிறது.

இதை எல்லாம் பார்த்தால் நாயும் பூனையும் மனிதரை விட விழிப்புணர்வு அறிவில் அதிகம் நுட்பம் உள்ளவை என்று விளங்குகிறது. பாம்பு கூட மிகவும் சுறுசுறுப்புடன் கூர்மையான அறிவுடன் இருக்கிறது என்பதை அதன் எதிரிகளான மனிதரைப் பார்த்து அவை ஓடிச் செல்வதைப் பார்க்கும்போது அறிய முடிகிறது. பறவை பற்றி சொல்லவே வேண்டாம். அவ்வளவு எச்சரிக்கை உணர்வும் சுறு சுறுப்பும்.

கண்ணுக்குத் தெரிகிறது எனச் சொல்லுமளவுதான் இருக்கிறது அந்த எறும்பு. அதைப் பிய்யெறும்பு என்று சொல்வார்கள் .சிட்டெறும்பை விட மிகச் சிறிது. ஆனால் கடிக்கிறது. அதற்கு ஒரு வயிறு, செரிமான உறுப்புகள், தலை , கண்  கை கால்கள் இதெல்லாம் இருக்கிறதா என உருப்பெருக்கி கொண்டுதான் பார்க்க முடியும் அது போல கொசுவும். இந்த மழைக்காலத்தில் எப்படி எல்லாம் வியாதிகள் மனித குலம் மடியத்தான்.

இவைக்கெல்லாம் ஓய்வு இல்லை. அட நமக்கும்தான்.

இந்தக் கல்லூரிப் பணிக்கு சேர்ந்ததிலிருந்து நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் விடுமுறை என்று விட்டாலே அதற்கும் முன் ஏதாவது பணிகள்  வந்து முன் கூட்டியே காத்திருக்கின்றன. அதைத்தான் சொன்னேன் எனக்கு விடுமுறையும் ஓய்வும் கிடையாது என. நான் எடுத்துக் கொண்டிருக்கும் பணிகள் அப்படி. சேவைக்கு எங்காவது எப்போதாவது ஓய்வு கிடைக்கப் போகிறதா என்ன...எழுதுவது படிப்பது பிறர்க்கு நன்மை செய்வது என வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்து விட்டால் அவர்க்கு விடுமுறையோ பணி ஓய்வு என்பதோ இருப்பதற்கான வழிகளே இல்லை.

தியானம், நடைப்பயிற்சி, என கழிக்கலாம் என்றிருந்தால் போயே ஆக வேண்டிய பெரிய காரியம் அதாங்கா உயிர் நீத்தாரை கடைசியாக போய் பார்க்க வேண்டிய வேலை வந்து நின்றிருக்கும். அதற்கு சென்று விட்டாலே எல்லா நினைவுகளும் எட்டிப் பார்க்க, நிலையாமை எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடும்

Image result for no leave and rest

அத்தோடு நமது குடும்பப் படமும் ஓட ஆரம்பித்து வாழ்வின் இன்றைய நிலை நேற்றைய நிலை நாளைய விளைவுகள் அதன் விலைகள் எல்லாமே வந்து சேர்ந்து கொள்ள சில  இரவுகளில் உறக்கமே பிடிக்காமல் விடியும். நாய்க்கு வேலையும் இருக்கிறது...உறங்கவும் நேரமிருக்க உறக்கம் தான் வரவு வைக்காமல் நாள் கணக்கை வரவில் செலவில் வைத்துக் கொள்ளும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. சேவையில் ஈடுபடுவோருக்கு விடுமுறை கிடையாதுதான் நண்பரே
    தங்களின் தொண்டு தொடரட்டும்

    ReplyDelete
  2. thanks sir. for your feedback on this post. vanakkam.

    ReplyDelete