Sunday, September 17, 2017

இது ஒரு வியாதிக் காலம்: கவிஞர் தணிகை

இது ஒரு வியாதிக் காலம்: கவிஞர் தணிகை
Related image


வானம் மழையும் மப்பும் மந்தாரமாகவே இருக்கிறது. பூமியின் ஈரம் காயவில்லை.கொசுக்கள் ஏகமாக பெருகிவிட்டன.நிறைய சிறுவர் சிறுமிகளும், பெரியவர்களும் மாண்டுவிட்டனர் செய்தியாக வெளித்தெரியாமலே. நீர் இல்லை நீர் இல்லை என குடிக்கவே நீர் இல்லா நிலை மாறி இப்போது மழை வெள்ளமாக இல்லாமல் நிலத்தடி நீர் பெருகாமல் இந்த சிறு மழை நோய்க்கிருமிகளை பரவ வசதி அளித்து மக்களை நோகடித்து சாகடித்துக் கொண்டிருக்கிறது.

பல்லாண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற வியாதிகளின் காலம் வந்து மாந்தர்க்கு ஊறு செய்து பலவீனமாக இருக்கும் உடலை எடுத்து கசக்கிப் போட்டு உயிரைப் பறித்துச் சென்று விடுகிறது. எல்லா இடங்களிலும் சோகம் தவழ்ந்தாலும் திருவிழாக்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றன.

முதலில் விநாயக சதுர்த்தி என்பார்கள், அப்புறம் சரஸ்வதி பூஜை அதன் பிறகு தீபாவளி அதன் பிறகு ஆங்கிலப் புத்தாண்டு இப்படி சொல்லிகொண்டே போவார்கள் மேலும் நடப்பதை எல்லாம் மறக்க மறைக்க தொலைக்காட்சிகளில் எல்லாம் மக்களை ஒரு ஆழ்மன அடிமைகளாக சீரியல் தொடர்கள், சிறுபிள்ளைகளை வைத்தும் நல்ல வருவாய் ஈட்டும் தொலைக்காட்சிகள்...

ஆனால் கொசுவை நம் நாட்டில் இன்னும் பெருக வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் சுத்தமில்லை, எமது சேலம் புதிய பெண் மாவட்ட ஆட்சித்தலைவரைக் கண்டிருக்கிறது அவராவது புகை மூட்டத்தை மது நாற்றத்தை பொதுக் கழிப்பிட அசிங்கங்களை குப்பைக் கூள நாற்றங்களைப் போக்க ஏதும் செய்வாராக ...

முன்னால் சிக்குன் குனியா என்று வந்தது, அதன் பிறகு டெங்கு, அதன் முன் எலிக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் இப்படி எதெல்லாம் இருக்கிறதோ அதன் பேரில் எல்லாம் எவ்வளவு அறிவியல் முன்னேறிய போதும் இந்த நாட்டிலிருந்து கொத்துக் கொத்தாக மக்களை அள்ளிச் செல்லும் இந்த வியாதிகளிலிருந்து எல்லாம் மீட்க வழியே இல்லை.
இறந்தவர் வீட்டு சோகம் பற்றி எல்லாம் இருக்கும் எவருமே கவலைப்படுவதாய்த் தெரியவில்லை.

உலகம் அதன் போக்கில் போய்க் கொண்டே இருக்கிறது. அப்படியேதான் போகும் அதுதான் அதன் இயல்பு.

நான் சிறு வயது குழந்தையாக இருந்தபோதே இப்படித்தான் பஞ்சம் பசி பட்டினி பிணி என்று ஒரு முறை வந்தது என என் தாய் கூறுவார். அப்போது எவரும் நடக்க முடியாமல் தவழ்ந்து போகவேண்டி இருந்ததாம். ஏன் என் தாயே கூட அப்படி இருந்ததாக சொல்வார். அடுத்து சிக்குன் குனியாவே என் தாயின் மறைவுக்கு காரணமாக ஆயிற்று.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே கொஞ்சம் காலத்துக்கு ஒரு முறை இப்படிப்பட்ட கொடும் கொண்டு போகும் வியாதிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வரும் முன் காக்கும் அமைப்புகள் எதுவுமே கொண்டு போகப்படும் உயிர்களை தடுத்து நிறுத்தியதாகத் தெரியவில்லை.

வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் என்னும் இரத்த அணுக்கள் மிகவும் குறைந்து விடுவதாகவும் இதற்கு பப்பாளி இலைச்சாறும், நிலவேம்புக் குடிநீருமே தக்க உடனடி மருந்துவமாக சொல்லப்பட்டாலும் காலம் கடந்த வைத்தியத்தாலும் உரிய நேரத்தில் கவனம் எடுத்துக் கொள்ளாததாலும் தனியார் மருத்துவமனை நம்பிக்கையாலுமே பெரிய எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.


Related image

நீரில் காற்றிலேயே பாக்டீரியாக்கள் உருவாகி புழுக்களாகி, அவை கொசுக்களாக மாறி இரத்தம் உறிஞ்சுகின்றன. மேலும் ஒரு நோயாளியின் காற்றின் வெளிப்பாட்டு சுவாச அருகாமையே கூட அடுத்தவருக்கு இந்த நோயை பரப்பி விடுவதாகவும் கருத்துகள் இருக்கின்றன.

மிகவும் அபாயமான காலக் கட்டம். இந்த சூழலில்தான் பொதுக் கழிப்பகங்களும் பொது இடங்களிலும் மனிதக் கழிவுகள் இந்த ஈரத்தில் கிருமி பரப்பும் மையங்களாக விளங்கி வருகின்றன....குப்பை கூளங்கள், நாற்றம் பரப்பும் பொது இடங்கள்,,,பிளாஸ்டிக் பைகளின் நீக்க முடியா கழிவுச்சாக்கடைகள்... மனிதம் அறிவு பூர்வமாகப் பேசுவதோடு சரி...பொது இடத்தில் புகையை ஊதி அடுத்தவரை சுவாசிக்கச் செய்வதும், குடித்து விட்டு உமிழ்வதும்...பொது இடங்களில் எச்சில் உமிழ்வதும்...சொல்லத் தரமில்லா வாழ்க்கை இன்றைய தமிழகம் அனுபவித்து வரும் வேளையில் யார் ஆள்வது என்ற போட்டியில் ஜெவை இவர்கள் நல்லவராக்கி விட்டார்கள்.\

இந்நிலையில் பொது மக்களுக்கு தகவல் தொடர்பு சாதனத்திற்கு 15 சதம் வரி, சாப்பிடும் உணவுக்கு 40 ரூபாய்க்கு வாங்கிய உணவை ரூ.55க்கு வாங்கும் நிலை சாப்பிடும் சாப்பாட்டுக்கும் குடிக்கும் நீருக்கும் உண்டான அவல நிலையுடன் படித்த மாணவ இளையோர்க்கு மாதம் ஒன்றுக்கு பணி செய்தாலும் 2000 , எனச் சம்பளம், அந்த வேலையும் கூட கிடைக்காத சூழல்கள் இது நாடல்ல காடு சுடுகாடு என்ற நிலைக்கு மக்களின் வாழ்வு நிலை வந்து விட்டது. ...இனி காலம் எப்போது எப்படி மாறப்போகிறது என கொடுத்து வைத்தவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதும் பயிர்களை விட களைகளே வேகமாகவும் அதிகமாகவும்  வளர்ந்து விடுகின்றன. போல கிருமிகள்...பெருகி...அரசியல் மனிதம் என்றும்...


2 comments:

  1. இது நாடல்ல காடு சுடுகாடு என்ற நிலைக்கு மக்களின் வாழ்வு நிலை வந்து விட்டது. .

    உண்மை
    உண்மை

    ReplyDelete
  2. thanks for your feedback on this post vanakkam sir.

    ReplyDelete