Sunday, September 3, 2017

NEET நீட் எனது சில சந்தேகங்களும் பார்வைகளும்: கவிஞர் தணிகை

நீட் எனது சில சந்தேகங்களும் பார்வைகளும்:கவிஞர்  தணிகை.

Image result for anitha died on neet

நீட் தேர்வு பற்றி கட்சி கட்டிக் கொண்டு இரு வேறு தரப்புகள் சரிதான் சரியில்லை என நாடெங்கும் வாதப் பிரதி வாதங்கள் போய்க் கொண்டிருக்கின்ற நிலையில் எனக்கும் குழப்பம் அது சரியா இல்லையா என அதை அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டே எழுதும் இப்போதைக்கு என்னுள் எழும் எண்ண அலைகளைப் பொறுத்து எழுதி முடிவதற்குள் அது முடிவுக்கு வரச் செய்யும் என்ற நம்பிக்கையில் மட்டுமே எனக்கு நானே ரியலைஸ்...உணர்ந்து தெரிந்து கொள்ள மட்டுமே இந்த பதிவு.( அதை நீங்களே படித்துக் கொள்ளலாமே இங்கு ஏன் எழுத வேண்டும் என்ற ஒரு குரலும் எனக்கு கேட்கிறது.)


தமிழ் நாட்டில் மட்டும்தான் எதிர்க்கிறார்கள் என்ற கேள்விக்கு அனில் சடகோபன் என்னும் பேராசிரியர் இவர் நாடு முழுதும் நீட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர், சென்னையில் தமிழ் நாடு தான் கல்வி விழிப்புணர்வு பெற்றுள்ளது எனவே இந்த மாநிலம்தான் நாட்டுக்கே இந்த கேள்விகேட்டு வழி நடத்துகிறது என்றும் எப்படி வட கிழக்கு மாகாணமான அஸ்ஸாம் மாணவனும் டில்லி மாணவனும் ஒரே தேர்வை எழுதி ஒப்பிட்டு மதிப்பெண் அடிப்படியில் தீர்மானிப்பது ? அது சரியா? என்றும் கேள்வி எழுப்புகிறார். இவர் கேள்வி மிகச் சரியாக இருப்பதைப் பார்க்கும்போது நீட் தவறு என்றுதான் தோன்றுகிறது.மேலும் இவர் சொல்வது: இது அமெரிக்கா போன்ற நாடுகளின் கூட்டு சதி, இந்த நாட்டில் சுகாதாரத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கப்  பார்க்கும் முயற்சியின் விளைவே இந்த நீட் தேர்வு. ஏன் எனில் ஏழைகள் மருத்துவரானால், அல்லது உள்ளூர் மாணவர் மருத்துவரானால் அந்த அந்த இடங்களுக்கு பிரதேசங்களுக்கு பயன்படுவார் ஆனால் இந்த நீட் தேர்வில் தேறிய அனைவருமே பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இவர்கள் மருத்துவத்தை ஒரு வியாபாரமாகவே கருதி இலாபம் சம்பாதிப்பதையே தமது நோக்கமாகக் கொள்வார்கள் என்றும் சொல்கிறார்.

தமிழ் நாட்டில் கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு சுயநலத்தின் அடிப்படையில் அரசியல் பண்ணப் பார்க்கிறார்கள். இந்த நீட் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இவர்களும் இவர்கள் கட்சி சார்ந்தாரும் இவரது உறவினர்களும் இவரது பினாமிகளும் தான் தனியார் கல்லூரி நடத்தி வருகிறார்கள் அதில் கல்லா கட்டவே நீட் வேண்டாம் என அடம் பிடிக்கிறார்கள். நீட் அடிப்படையில் எடுக்கும்போது அவ்வளவு பணம் பெயராது அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் தேறிய மாணவர் மட்டுமே உள்ளே அதுவும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்துடன் மட்டுமே உள்ளே வருவார்கள் .
Image result for anitha died on neet


இந்த இறந்து போன பெண்ணும் கால் நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்தான், இவரது படித்த தனியார் பள்ளியில் (ஆம் இவரது பத்தாம் வகுப்பு மார்க் 478க்காக இவரது மேனிலைக் கல்வியை கட்டணமின்றி கொடுக்க இந்த தனியார் பள்ளி இவரை தம் பள்ளியில் சேர்த்துக் கொண்டு கல்வி கொடுக்க தர்மம் செய்ய முன் வந்ததாக தகவல்) மேனிலைக் கல்வியில் ப்ளஸ் டூவில் முதலாண்டை சரியாக கற்றுக் கொடுக்காத விளைவுதான் இவர் நீட் தேர்வில் தேறாததன் காரணம். அந்தப் பள்ளிகளை அரசே நடத்துமாறு கேட்க வேண்டியதுதானே, மேலும் எந்த பள்ளியிலுமே ப்ளஸ் டூவின் முதலாமாண்டை சரியாக நடத்தாதபோது அதை ஒழுங்காக நடத்த நிர்பந்தம் ஏற்படுத்துவதுதானே அதற்கு இந்த கட்சிகள் ஏன் கூட்டு சேரவில்லை அதைக் கேட்க ஏன் முன் வரவில்லை? அப்போது எங்கே போனார்கள்?
Image result for anitha died on neet


ஆம் எனக்குத் தெரிந்த ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய மாவட்ட அளவில் முதல் 3ஆம் மாணவராக வந்த  முன்னால் மாணவர் கூட மருத்துவப் படிப்பில் இடம் பெற்று முதலாம் ஆண்டு முதாலாம் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தார் காரணம் ப்ளஸ் டூ பாடங்களில் முதலாம் ஆண்டு படிப்பை அந்தப் பள்ளி நடத்தாததும், அந்த மாணவர் படிக்காததும் என்பது நானறிந்த உண்மை கூட . இது போன்ற விவரங்களை ஒரு பள்ளி தாளாளாராய் இருக்கும் பி.ஜே.பி நண்பர் சொல்கிறார் அதையும் நம்மால் மறுக்க முடியவில்லை. இவரது வாதம் நீட் தேர்வு சரியனது தான் என்கிறாஅர்.

ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது ராம நாதபுரம், போன்ற உள் கடைக்கோடி  மாவட்டங்களிலும் கிராமப் புறங்களிலும் படித்து வரும் மாணவரும் சென்னையில் ஒரு சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்து நீட் எழுதும் மாணவரையும் நாம் ஒப்பிடவே முடியாதுதான்.

இந்தியாவில் எல்லாமே குழப்பமாக இருக்கிறது. ஒரு கல்வியில் தெளிவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு அணுகுமுறைகள்  தமிழ் வழியில் கல்வி முறைகள் படித்த நம்மையே குழப்பும் விதமாக. எங்கே கிராமத்தில் இருக்கும் ஒரு கூலித் தொழிலாளிப் பாமரன் அதை புரிந்து கொள்ள முடியும்  தம் பிள்ளைகளை அப்படி படிக்க வைக்க முடியும்?

ஒரு பக்கம் சி.பி.எஸ்.இ படிப்பவர்தான், ஜே.ஈ.ஈ தேர்வாணையம்தாம் இந்த தேர்வு முறைக்கு ஏற்று விளங்குகிறது அந்தப் பிள்ளைகள்தாம் தேறமுடியும் என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவு. மெட்ரிக் பள்ளி, மாநில அரசுப் பள்ளிகள், அதிலும் ஆங்கில தமிழ் வழிக் கல்வி முறைகள், சமச்சீர்க் கல்வி, மத்திய அரசின் நேரடிப் பார்வையில் உள்ள கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளிகள், வொகேஷனல் தொழில் சார்ந்த படிப்புடன் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள். இன்னும் எனக்குத் தெரியாத பள்ளி முறைகள் நிறைய ஏன் சைனீஸ் பள்ளி என மிலிட்டரிக்கு ஆபீசர் உருவாக்கும் பள்ளி இப்படியாக....
Image result for anitha died on neet


இதெல்லாம் இப்போதுதான் கற்றல் கேட்டல் வழிக் கல்வி முறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன எனச் சொல்லும் மாநில துவக்க வழிக் கல்விக் கொள்கைகள்...ஆனால் இவை யாவுமே ஆங்கில மெக்காலே கல்வி முறைக்குள் மாண்டிச்சேரி பள்ளிகள் முறைக்குள், ஒரு பள்ளியில் கண்ணைக் கட்டிக் கொண்டு பயிலும் முறைகள் ஒரு பள்ளியில் ஒரு மிலிட்டரிக்காரர் பிள்ளை தமது முடியை ஒண்ட வெட்டி வந்தார் என அவருக்கு தண்டனை, இன்னொரு பள்ளியில் ஒண்ட முடியை வெட்டி வரவில்லை என உடற்கல்வி ஆசிரியரும் தமிழாசிரியர்களும், தலைமை ஆசிரியர் கட்டளையின் பேரில் அடித்து வெயிலில் முட்டியிடச் சொல்வதும் அதைக் கண்ட பெற்றோர்கள் வெகுண்டெழுந்து பள்ளி மேல் படை எடுப்பதும்

என்ன கல்வி முறைகளா மானிடா...எத்தனை பிரிவுகள்...கொஞ்சமோ பிரிவினகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப...

மனிதரை உருவாக்குவதே கல்வி என்பார் மகாத்மா, வினோபா கல்வி சிந்தனையும் காம்ராஜ் கல்வியை விற்பது என்பது தாய்ப்பாலை விற்பதற்குச் சமம் என்பார்.

இந்த தனியார் பள்ளிகள் அனைத்துமே அரசு முறைப்பள்ளிகளாகவேண்டும். அங்கே ஒரே சீரான ஒரே முறையிலான அனைவர்க்கும்,ஆம் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் உடல் உழைப்புக் கல்வி, அறிவியல் ஆற்றல் சொல்லி பொருட்களை கண்டு பிடிக்கும் கல்வி, நாட்டுப் பற்றுடன் ஆன கல்வி, பொது இடங்களில் சாலை விதிகளை கற்றுக் கொடுத்து நீதிபோதனை செய்யும் கல்வி, இப்படி கல்வி முறைகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு அவரவர் மொழியில் கற்கலாம் அவரவர் மொழியில் தேர்வு எழுதலாம், தேர்வுக்கான வினாத் தாள் அவரவர் மொழியில் ஆனால் அனைத்து கேள்விகளும் ஒரேமாதிரி கேட்கப்படும் என்ற பொதுக் கல்வியை எட்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு அப்புறம் தான் இந்த நீட்டு மடக்கு எல்லாம் வந்திருக்க வேண்டும். ஒரே வினாத்தாள் மட்டுமே நாடெங்கும் கொடுக்கப்பட்டால் தான் அது நுழைவுத் தேர்வு இல்லாவிட்டால் அது ஏமாற்றே.

நாடு முழுதும் ஒரே கல்வி என்பது தவறான கொள்கையல்ல. ஆனால் இந்த நாடானது பல்வேறுபட்ட மதம், கலாச்சாரம், நாகரீகம், மொழி, பிரதேசம், ஆறுகள் இப்படி வேறுபட்டுக் கிடக்கும்போது இந்த நீட் நாடு முழுக்க ஒன்றுதான் என்று பொதுவான தேர்வை நடத்தும் முன் அரசு அதைப்பற்றி நிறைய கொள்கை முடிவெடுக்கும் முன் கல்வி சிந்தனையாளரை வைத்து முன் தாயாரிப்புகள் செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ் படித்தவர் அந்த அந்த வட்டார மொழியை சில ஆண்டு கற்றுக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய் தமது பணிச் சேவையை செய்வது வேறு...அப்படி மருத்துவர் எல்லாம் செய்ய முடியாது....

இங்கு கிராம சேவை செய்யவே எந்த மருத்துவரும் தயாராய் இல்லாத போது மொழியறிவே இல்லாத ஒரு மருத்துவர் ஒரு குக்கிராமம் சென்று நோயாளிகளுக்கு எப்படி சேவை செய்வார் என்று நாம் எதிர்பார்க்க முடியும் அனைவருமே அன்னை தெரஸாவாக முடிவதில்லையே... இதை எல்லாம் பார்க்கும்போது மருத்துவம் சுகாதாரத்தை தனியார் மயம் செய்ய அனில் சடகோபன் சொல்வது சரியாக இருக்குமோ என்றே தோன்றுகிறது.

ஜப்பானில் சீனாவில் தமது தாய் மொழிக் கல்வியில் பயின்றவர்களே உலக அளவில் முன் நிற்கும்போது, இந்த ஆங்கிலம் இல்லை என்றால்  எதுவுமே இல்லை என்ற மனப்பான்மையுடன் இருக்கும் இங்கு இருக்கும் மருத்துவ படிப்பு எப்படி கீழ் இறங்கி சேவை செய்ய முடியும்? நானறிந்த ஒரு மருத்துவர் ஏழையாய் இருந்து படித்தவர் இவர் கை எழுத்து போடுவதற்கே காசு வாங்கிக் கொண்டுதான் போடுவார் அது அட்டஸ்டடு கை எழுத்து ஆக இருந்தாலும், எல்லாம் 50 , 100 வாங்கினால் கன்சல்ட்டிங் பீஸே 150தான் உள்ளூரீலேயே வாங்குவார் இன்று மாடான மாடி கோடான கோடிக்கதிபதி. அவர் ஒரு எம்.டி.

வீடும் கேடும் உயர வளர்ந்து  கொண்டே இருக்கும்போது

இந்த நீட் பற்றி மிக கவனமாக ஆராய வேண்டி உள்ளது. இது எதையும் கவனத்தில் கொள்ளாது உச்ச நீதிமன்றம் அமல் படுத்தியே தீருவது மாற்று தீர்வு ஏதுமில்லை என ஒரே தீர்ப்பை ஒரே போடாக போட்டு விட்டது. அதை எவருமே இப்போது மதிப்பதில்லை கர்நாடகாக் காரர்கள் தண்ணீர் தரவேண்டிய உத்தரவை தூக்கி எறிந்தது போல, ஜல்லிக்கட்டில் தமிழகம் தூக்கி எறிந்தது போல இப்போதும் கட்சிகள் தூக்கி எறிவது போல...என்றாலும் அவர்கள் அந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்வதுதானே அமல்படுத்துவதாய் நிற்கிறது,... அலுவலக ரீதியாய். ஆனால் பொதுநல ரீதியில் பூஜ்யமாய்.

பொருளாதார அடிப்படையில் செல்லாமல் இந்த நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டு முடிந்த பின்னும் இன்னும் ரிசர்வேசன் தேவையா என்று ஒரு பக்கமும், தேவைதான் என்று மறுபக்கமும் வாதம் பிரதிவாதம் இருப்பது போல... இந்த நீட்டும்.

அனைத்துக்கும் இந்த கேடு கெட்ட அரசும் அரசியலும் தாம் காரனம். இவர்கள் சரியாக சுயநலப் பிசாசுகளாய் இல்லாதிருந்திருந்தால் இந்த நாட்டில் பொருளாதார அடிப்படையில் எல்லாவற்றையும் நிர்ணயிக்குமளவு நாடு முன்னேறியிருக்கும். இன்னும் சாதி வாக்கூ வங்கி, மக்களுக்கு வாக்கூ கேட்கும்போது பணம், அதை மறுக்காத மாறாத மக்கள் குணம் என...இப்படியே நாட்டை நாறடித்து விட்டு நாசமாக்கி விட்டு விளம்பரம் தேடிக்கொள்ள சசிபெருமள் பாடைக்கு இருபக்கமும் தோள் கொடுத்து தூக்குவார்கள், இப்போது அனிதா அனிதா என்பார்கள் இன்னும் அது மறந்து அடுத்த ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை..

கலைஞர் கருணாநிதி சமச்சீர் கல்வி என்று தனியார் பள்ளிகளை ஒரு கட்டுக்குக் கொண்டு வரலாம் என்று முயற்சி செய்வதற்குள் அவரை ஆட்சியை விட்டுத் தூக்கி அம்மாவைக் கொண்டு வந்தார்கள் இன்றும் என்றும் அம்மா ஆட்சிதான் நிரந்தர முதல்வர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்... பேடி கேடி ஆட்சி முறை வழிகளில் எல்லாம் நடக்கும் எதுவும் நடக்கும்...

நீட் தேர்வையே ரத்து செய்திருக்க வேண்டும் எப்போது ஒரு மாநிலத்தில் ஒரு கேள்வி வினாத்தாள், மறு மாநிலங்களில் வேறு மாதிரியான வினாத் தாள்கள் என்னும்போதே, அந்த தேர்வு எழுதும் மாணவ மாணவியரை  எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்தாமல் கை வெட்டு, முடி வெட்டு, ஆடை மாற்று, கடிகாரம் கழட்டு, ஆடை கழற்று என்னும் போது அமைதியான சூழல் அமைதிப் பூங்காவாகத் தானே இந்த தமிழகம் இருந்தது நிர்பயா ஒரு பெண்ணுக்காக டில்லி மாநகர் கொதித்தெழ, இந்த தமிழ் மண்ணில் கிராமத்தில் ஆயிரம் ஆயிரம் அக்கிரமங்கள் நடந்தேறியபோதும் அவரவர் வேலையை அவரவர் பார்க்கவே நேரம் இல்லையே...அதன் பின் நாடு எப்படி இருக்கும்?

எனவே தயாரிப்புக்கென்று எல்லா மாநிலத்துக்கும் கால அளவு வரையறை செய்யப்பட்டு அனைவர்க்கும் நாடு முழுதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கை கல்வி முறைகளுடன் அவரவர் மொழி சார்ந்து ஒரே வினாத் தாள் கொடுத்து தேர்வு எழுத வைத்திருந்தால் மட்டுமே இந்த நீட், நேஷனல் எலிஜிபிலிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் சரி....அல்லாதவரை இது வரை எலியும் பூனையும் புலியும் புல்லுக் கட்டும் மனிதருமான விளையாட்டு போன்றதுதான் ஏமாந்தால் எல்லாம்தான் செய்வங்க இந்த நாட்டில் திருமா பேரைச் சொல்லிக் கொண்டு பிறந்த நாளுக்கு  நன்கொடை தரவில்லை என ஒரு கடைக்கார இளைஞர்களை ஒரு சிலர் அடிப்பதாக ஒரு வீடியோ படம் வாட்ஸ் ஆப்பில் உலவுகிறதே அது நிஜம்தானா? நியாயம் தானா? இங்கு ஒப்பந்தாரராய் பெரும் கம்பெனிகளில் எல்லாம் இருப்பது கட்சிக்காரர்கள் மட்டுமே அல்லது அவரது ஆதரவு பெற்றொர் மட்டுமே என்பது உண்மைதானா? அவரது பினாமிகளுக்குள்ளே பொருளாதார மோதல்கள் எல்லாம் வருவது வருகிறது என்பதெல்லாம் உண்மைதானா?  அதனால் கட்சிகள் பிளவு சேர்க்கை எல்லாம் என்பது உண்மைதானா?

எல்லாம் சுயநலம் , இலஞ்சம் ஊழல் எல்லாவற்றுக்கும் அடிப்படை சுயநலம்.

சுயநலம் பொது நலம் அல்லது பிறர் நலம் என்ற இரண்டுக்கும் ஒரு நூல் இழை வேறுபாடு ஆனால் விளைவுகளோ கடல் அளவு, உலகளவு...
நான் இப்படித்தான் பார்க்கிறேன் நீட்டையும் மடக்கையும், மோடி ஜல்லிக்கட்டு போல இதை சமாளிக்க உத்திகள் கையாண்டார் , ஆனால் நீட் விடயத்தில் உச்ச நீதிமன்றம் கை விரித்துவிட்டது. பிரதமர் சீனாவுடன் நல்லுறவு பேண பிரிக்ஸ் மாநாட்டுக்கு சீனாவுக்கு போய்விட்டார் இங்கு அனிதா ஆனா என்ன போனா என்ன...

ஒரு நாள் வரும் மும்பையில் சிவசேனாக்காரர்கள் மற்ற மாநிலக்காரர்களை எல்லாம் விரட்டுவது போல மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்லிக்க் கொண்டு இந்த இந்திய மண்ணிலும் வடக்கத்தியரை தெற்கத்தியரும், இந்திக்காரரை தமிழ்க்காரரும் விரட்டி விரட்டி அடிப்பார்கள். அந்த நிலை வரும் வரை இந்த அரசும் அரசியலும் விடாது போலும் அரசின் மேல் துவேஷம் பாராட்டமுடியாது ஒருவருக்கொருவர் சகோதரராய் இருப்பார் மேல் அந்த வெறியும் கோபமும் துவேசமும் அறியாதாராய் இருப்பார் பாராட்டுவார் பாருங்கள் இங்கிலாந்து போல, அமெரிக்கா போல, அரபு நாடுகள் போல, ஆஸ்திரேலியா போல அதுவரை விடாது கருப்பு..ஐ மீன் அதுவரை விடாது அரசு, அரசியல், உச்ச நீதிமன்றம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment