Saturday, July 8, 2017

பழைய நினைவுகளுடன் அதே சேலம் என்.ஜி.ஜி.ஓ கூடத்தில் மறுபடியும் நான்: கவிஞர் தணிகை

பழைய நினைவுகளுடன் அதே சேலம் என்.ஜி.ஜி.ஓ கூடத்தில் மறுபடியும் நான்: கவிஞர் தணிகை


Related image

நதிகளின் இணைப்பொன்றே இந்தியாவுக்கு விடிவு தரும் என்ற ஒரு 200 ஆண்டுக் கனவு, இல்லை இல்லை இணைக்கவே முடியாது, கூடாது என்ற சிலரின் கருத்து, இப்போது நதி நீர் இணைப்புக்கு பதிலாக நீர்வழிச் சாலை செய்யலாம் என்ற மற்றொரு கருத்து இப்படியாக காலம் கண்ணாடியாக நீர் இல்லா தேசத்துக்கு நீரின் மிகை தேசத்து நீரை பரிமாறுவது பற்றி பேசி வரும் காலம் நதி நீர் இணைப்பு நண்பர்கள் இயக்கம் சார்பாக கடந்த ஞாயிறு அதாவது 02.07.2017 அன்று சேலம் என்.ஜி.ஜி.ஓ கட்டடத்தின் கூட்ட அரங்கில் நதி நீர் இணைப்பு பற்றிய ஒரு கருத்தரங்கு நடந்தது. அது பற்றி இன்றுதான் என்னால் பதிவிட முடிந்திருக்கிறது. அப்படி ஒரு உடல் உழைப்பு. பிழைப்பு நமக்கு வாய்த்துள்ளது. எல்லாம் சேவைதான். எல்லாம் நல்லதுதான் ஆனாலும் சேவைக்கு என்றுமே முடிவில்லைதானே? நாம் முடிந்தபோதும்.

உடன் உடற்பிணி, அன்றாட நாளின் பயணத்துடன் பேருந்தின் இரயில் பயணங்களுடன் எனது நாட்கள்....

சுமார் 30 நபர்கள் மட்டுமே ஞாயிறு அன்று முகூர்த்த நாள் என்ற காரணத்தால் குழுமியிருந்தனர் எனச் சொல்லப்பட்டது. ஆனாலும் அத்தனை பேரும் மனித நல்மணிகள். உண்மையான நெல்மணிகள். நல்ல விதை மணிகள். எல்லாருமே கலந்துரையாடினோம். பல்வேறுபட்ட ஊர்களில் இருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர்.   ஆலோசனைக்கூட்டத்தை இளம் நண்பர் சந்திரகுமார் என்பவர் இதற்கு முன்னேற்பாடுகள் செய்திருந்தார். நாங்கள் அனைவருமே 3 மணிக்கு ஆரம்பித்த கூட்டத்திற்கு மதியம் 2 மணிக்கு மேல் தான் சென்று குழுமியிருந்தோம். அதிலும் சிலர் 4 மணி வாக்கில் வந்து கொண்டிருந்தனர். எனவே வரையறுக்கப்பட்ட வடிவில் கூட்டம் செல்வதற்கு மாறாக பின்னால் உள்ள கலந்துரையாடல் முன் வந்தும் துவக்க உரை மற்றும் அறிமுக கலந்துரையாடல் ஆரம்பித்தது அப்படியே தொடர்ந்தபடியும் நடந்தது.

இந்த கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நண்பன் குகன் வெகு தொலைவிருந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தார். நண்பர் சேகர் திருச்செங்கோடு பணிகளை விட்டு வந்து கலந்து கொண்டிருந்தார். எல்லாம் அவரவர் கருத்துகளை அவை முன் சொன்னார்கள். அறிவியல் கழக இராமமூர்த்தி கங்காவிரி இணைப்பு செயலர், நீர் மேலாண்மை நூல் எழுதிய  பெருமாங்குப்பம் சா.சம்பத்து தனது நூல் பற்றியும் தமது அனுபவம் பற்றியும் பகிர்ந்துரைத்தார்.

ஒருங்கிணைப்பாளர் குகன் தமது துவக்க உரையை அனைவரும் வந்து சேர்ந்த பின்னால் நிகழ்த்தி என்னை இந்த இயக்க நிறுவனராக தோற்றப்படுத்தினார்

பெருமாங்குப்பம் சா.சம்பத்து எழுதிய நீர் மேலாண்மை என்ற புத்தகம் பற்றிய குறிப்புகளை வாசித்து அதை அவைக்கு அறிமுகப் படுத்தும் வாய்ப்பும் என்னயே சார்ந்தது.

இந்த நூலுக்காக 10 ஆண்டுகள் உழைத்ததாக சொன்னார் இந்த நூலை ஆக்கிய சா.சம்பத்து. இவர் வாணியம்பாடியில் இருந்து அப்துல் ரஹ்மான் நினவேந்தல் கூட்டத்தைக் கூட விட்டு விட்டு சேலம் வந்திருந்தார். இவரின் நூலை பலரும் வாங்கிக் கொண்டனர்.

எனது சிறப்புரையில் 2002ல் அக்டோபரில் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன் நிகழ்த்திய உரையின் சிறு குறிப்புகளையும் டிசம்பரில் இராமமூர்த்தி நகரில் மாநிலத் தலைமைப் பொறுப்பு பயிற்சி முகாமி நிகழ்த்திய நதி நீர் இணைப்பு பற்றிய கவிதையையும் வாசித்தேன். சேலம் இளைஞர் குழு என்ற மரம் நடுவோர் மற்றும் சிறு நீர் நிலைகளை ப்யூஸ் மானுஸ் போல சுத்தம் செய்யும் இளைஞர் குழுவின் சார்பாக 4 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் நிறைவாக ஏ.சி.காமராஜ் அவர்களின் நதி நீர் வழிச் சாலை திட்டத்தை ஆதரிப்பதாகவும் அனைவரும் ஆதரிக்க வேண்டியும் ஒருங்கிணைப்பாளர் கூறி கூட்டம் இனிதே நிறைவுற்றது. இது ஒரு சிக்கனமான ,அதிகம் செலவுகளை அதிகம் யார் மேலும் திணிக்காத கூட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதை விட இதே என்.ஜி.ஜி.ஓ கூட்டத்தின் கூடத்தில் நான் பல ஆண்டுகளுக்கும் முன் பல முறை இதே இடத்தில் ஏற்கெனவே சந்தித்த மாறைந்த இன்குலாப்,கொ.வேலாயுதம் இவர் எனது சகோதர நண்பர் அப்போதய இயக்க நிறுவனத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார் இன்று இயக்க முறைமைகளை கைவிட்டு ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் உடல் நிலை தளர்ந்து இருக்கிறார், மறைந்த சசிபெருமாள் , மறைந்த சின்னபையன், போன்றோர் நினைவும் என்னுடன் கலந்தே கிடந்து எனது உரையில் அந்த சுவர்கள் எனைப்பார்த்து இப்போது வேறு ஒரு குழுவுடன் வ்ந்திருக்கிறாயா எனக் கேட்பது போல இருந்தது என்பதையும் குறிப்பிட்டேன்.

யார் எந்தக் குழுவினர் எப்படியாவது இந்த நீர் பிரச்சனைக்கு நாட்டில் முற்றுப் புள்ளி வைத்தாலும் அவருக்கு எங்கள் வணக்கங்கள் உரித்தாகும் அது காமராஜானாலும் மோடியானாலும், ஸ்டாலினானாலும், சந்திரபாபு நாயுடுவே ஆனாலும் ஸ்டாலினானாலும் எடப்பாடி ஆனாலும் ஆனால் யாரும் ஆகவே மாட்டேன் என்கிறார்களே அதுதான் எமது வருத்தம். நாங்களும் ஆக முடியாமல் , எங்களையும் ஆக விடாமால்... காலம் காலம் சென்று கொண்டே இருக்கிறது...

Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: