தியான வழிகாட்டிகள் விவேகானந்தரும் அரவிந்தரும்: கவிஞர் தணிகை
தியானம் செய்கிறேன் என்றாலே ஈஷாவா, வேதாத்திரியா,பிரம்ம குமாரிகளா,ரவி சங்கரா என கட்சி கட்டிப் பேசும் நிலையில் தியானத்தின் அடிப்படை ஒன்றுதான் அதில் இவர்கள் எல்லாம் சிறிது வசதிக்குத் தக்கபடி பிரணாயாமம், ஆசனம், போன்றவற்றை சிறிது சிறிதாக மிகைப்படுத்தி அல்லது குறைவு படுத்தி அல்லது வசதிப்படுத்தி வைத்து செய்து வருவதை எந்தக் கட்சி யாருக்கு பிடிக்கிறதோ அது போல இந்த தியானப் பயிற்சி முறைகளிலும் பிடிப்பவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள்.மற்றபடி இதன் நடுத் தண்டும் வேர்ப் பகுதியும் ஒன்றே ஒன்றுதான்.
இனி அரவிந்தர் சொல்வதை பார்ப்போம்:
தியானத்தின் போது எல்லாவிதமான எண்ணங்களும் வருவது பகைச் சக்திகளாலன்று; சாதாரண மனித மனத்தின் இயல்பே அதற்குக் காரணம். எல்லாச் சாதகர்களுக்கும் இந்தக் கஷ்டம் ஏற்படும்; பலருக்கு மிக நீண்ட காலத்திற்கு இருக்கும். அதை ஒழிக்கப் பல வழிகள் உள்ளன.
ஒரு வழி எண்ணங்களைக் கூர்ந்து பார்த்து, அவை காட்டும் மனித இயல்பைக் கவனித்து, ஆனால் அவைகளுக்குச் சம்மதம் கொடாமல், தாமகவே அவை ஆடி ஓய்ந்து அடங்க விடுவது===1.ஆற்றில் ஓடும் பொருள்களை ஓட விட்டு அமைதியாக அமர்ந்து பார்ப்பது போல,2.அறிவுக்கேற்ப ஒரு பொருள் பற்றி சிந்தித்து முடிவு கண்டு ஓய்ந்து போவது போல,3. சுவற்றில் அடித்த பந்து போல எண்ண அலைகளை அப்படியே திருப்பி அனுப்ப கற்றுக் கொள்வது....
இந்த வழியையே சுவாமி விவேகானந்தர் அவருடைய இராஜ யோகத்தில் சிபாரிசு செய்கிறார். இன்னொரு வழி, எண்ணங்களைத் தனதாகக் கருதாமல், சாட்சி புருஷனாகப் பின்னால் விலகி நின்று சம்மதம் மறுப்பது...எண்ணங்களை புறத்தே இருந்து அதாவது இயற்கையிலிருந்து வருபவைகளாகக்க் கருதப்பட வேண்டும். அவைகள் மனவெளியைக் கடக்கும் பிரயாணிகள் போன்றவை. நமக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லை.அவற்றில் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது போல உணரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் சிறிது காலத்திற்குப் பிறகு மனம் இரண்டு பாகங்களாகப் பிரிகிறது.
ஒரு பாகம் அமைதியாக சலனமின்றி சாட்சியாக எல்லாவற்றையும் பார்க்கிறது; இது எண்ணங்களை அலைந்து திரியும் பிரகிருதிப் பாகம்.
பிரகிருதிப் பாகத்தையும் அமைதியாக்க அல்லது மோனமாக்க முயலலாம்.
பிரகிருதி என்றால் மூலப்பகுதி /அடிப்படை அல்லது பிரதானப் பகுதி என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.
மூன்றாவது ஒரு வழி உள்ளது அது தீவிரமானது. இந்த முறைப்படி எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்று கவனித்து, அவை தன்னிடமிருந்து வரவில்லை, தலைக்கு வெளியிலிருந்தே வருகின்றன எனச் சாதகன் அறிகிறான். அவ்வாறு அவை வருவதைக் கண்டு பிடித்தால், அவை உள்ளே புகுமுன் அவைகளை அப்படியே அப்பால் எறிந்து விட வேண்டும். இதுவே எல்லாவற்றிலும் கடினமான முறை. இம்முறையை எல்லாரும் பின் பற்ற முடியாது; முடிந்தால் இதுவே மோனத்திற்கு மிகச் சக்தி வாய்ந்த சுருக்கு வழியாகும்.
ஆதாரம் நூல் : யோகத்தின் அடிப்படைகள்... ஸ்ரீ அரவிந்தர்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment