Saturday, May 30, 2026

வைபவ் சூரிய வன்சி வரலாற்று நாயகன்: கவிஞர் தணிகை

 வைபவ் சூரிய வன்சி வரலாற்று நாயகன்: கவிஞர் தணிகை




உலகமே கொண்டாடுகிறது, நாமும் கொண்டாடுவோமே. கவாஸ்கர், விஸ்வநாத், கபில்தேவ் போன்ற கனவான்கள் ஆட்டத்தை கேட்டு, பார்த்து இரசித்து அது தொடர வழியில்லாமல் பின் எம்.எஸ்.தோனி வழியாக ஒரு ஆர்வம் ஏற்பட்டு இப்போது மட்டைப் பந்து விளையாட்டைப் பார்க்க ஈர்ப்பு வருகிறதெனில் அது இந்த 15 வயதேயான பால் முகம் கூட மறையாத இந்த வைபவ் சூரிய வன்சியின் ஆட்டம் தான். பார்ப்பது ஒரு வைபவம்தான் இவர் விளையாடுகிறார் என்றாலே அது வைபவம் தான்.


நேற்றும் குஜராத் டைட்டனை வென்று இறுதி ஆட்டத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வென்றெடுப்பார் என எதிர் பார்த்தேன். அது நடக்கவில்லை. அது தான் மட்டைப் பந்தின் தனித்துவம். நாம் எதிர்பார்க்கிறபடி எல்லாம் இந்த விளையாட்டு நடக்காது.


இந்த விளையாட்டை 10 ஓவருக்குள் கொண்டு வர வேண்டும் என வெகு காலத்திற்கு முன்பிருந்தே எழுதியிருக்கிறேன்.


துளி கூட கர்வம் இல்லாமல் எல்லா பந்தையுமே கோட்டுக்கு வெளியே அடித்துப் பார்க்க வேண்டும் என்ற முடிவிலேயே விளையாடுகிறார். பயமறியா இந்த இளம் கன்று. கிறிஸ் காயல் போன்ற மாபெரும் நெடிய உருவமே இவரை ரன் மெஷின் எனும் போது நாம் என்ன சொல்லிதான் பாராட்டி புகழ வேண்டும் எனத் தோன்றவில்லை.


அவருக்கு தமிழ் தெரியாது என்றாலும் நமது ஆவலை வெளிப்படுத்திக் கொண்டு விட்டேன். அவர் தமது வாழ்நாளில் டான் பிராட்மேன் போன்றோரின் சாதனைகளை எல்லாம் முறியடிப்பார், மேலும் இன்னும் சுமார் 20 அல்லது 30 ஆண்டுகள் வரை கூட‌ இவரால் விளையாட முடியும் என நம்புகிறேன்.


வாழ்க...வைபவ் சூரியவன்சி...இவர் விளையாட்டைப் பார்ப்பதே ஒரு இன்பம்.

நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment