மியாஜகி: கவிஞர் தணிகை
மியாஜகி ஒரு மாம்பழ வகை. இது ஜப்பான் நாட்டில் இருந்து உலகெங்கும் பரவியுள்ள அரிய இரகம். இது சரியான ஒரு மாம்பழப் பருவ காலம்(சீசன்). அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் கனிகளை ருசித்து விடும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள். பலாப் பழம் சுவைக்க அறுத்து கிலோ கணக்கில் விற்கப்படுகிறது சுளைகளாக...நீண்ட நாள் கழித்து ரஸ்தாளி வாழைப் பழங்களைக் கண்டேன் பெரிய அளவு ஒன்றின் விலை ரூ.10 என்று அது இயற்கை விளைவா அல்லது உரத்தின் விளைவாய் கட்டி கட்டியாய் இருக்குமா என இனி தான் பார்க்க வேண்டும் 5 பழம் மட்டும் வாங்கி வைத்துள்ளேன் இன்னும் முழுதாக பழுக்க வில்லை... தேன் வாழை, பூ வாழை போன்ற பழங்களை குடல் புண் உபாதை உள்ளவர் உண்ணும் போது வயிறு மேலும் வேதனை செய்யும் என்பதையும் நினைவில் கொள்க.
நிறைய மாம்பழ விளைச்சல், நிறைய விலையாகாமல் அல்லது தரமில்லாமல் கீழே கொட்டுப் பட்டு வரும் நிலை பார்க்கிறேன் நடைப்பயிற்சிக்கு செல்லும் வழித் தோட்டங்களில்.நல்லவேளை ஒரு முக்கியமான வியாபாரி கடந்த காலத்தில் கடந்த ஆண்டில் மாம்பழம் விற்று கெட்ட பேரை சம்பாதித்துக் கொண்ட எங்கள் நடைப்பயிற்சி தோழர் ஒருவர் இந்த வருடம் மாம்பழம் விற்காமல் தான் உண்டு தன் தொழில் வேலை உண்டு என நல்ல பேரை எடுத்திருக்கிறார். விலை கிலோ 28 எனச் சொல்லப்பட்டாலும் இங்கே எல்லாம் கிலோ தோட்டக்காரர்களே ரூ. 50க்கு என விற்பனை செய்கிறார்கள்.
இந்த மியாஜகி மாம்பழம் ஒரு கிலோ ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேலாம். ஒரிஸ்ஸாவில் மல்க்கங்கிரி பகுதியில் (இந்திரா காந்தி பேசிய கடைசிக் கூட்டம் இந்த ஊரில் தாம் நடந்தது.) ஒரு ஆர்வமிக்க விவசாயி ஒரு சமூக சேவகர் வழங்கிய மரக்கன்றை பல வருடங்களாக அக்கறையுடன் சிரமப்பட்டு வளர்த்து இப்போது கனி கொடுக்க ஆரம்பிக்க அதன் மதிப்பு கருதி 24 மணியும் உறங்காமல் கூட பாதுகாத்து வருகிறாராம் திருட்டு போகாமல்.
ஆனால் பாருங்கள் ஒரு வேடிக்கை இந்தப் பழத்தை இவ்வளவு காசு கொடுத்து யார் வாங்குவார்கள்? இந்தியாவில் இங்கு எவரும் வாங்க வழி இல்லை என்பதால் சாதரணமான பழம் போல் போய் விடுமோ என்ற கவலை அவருக்கு... அப்படி என்னதான் அந்தப் பழத்தில் இருக்கிறது அவ்வளவு விலை கொடுக்குமளவு அதன் தரம் நீங்களும் தேடிப்பாருங்கள் இணையத்திலாவது...
நாய் பெற்ற தெங்கம்பழம்
சூரிய முட்டை என்ற ஒரு பேரும் உண்டு. EGG OF THE SUN
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment