Monday, May 11, 2026

எல்லா இடங்களிலும் பூனைக்காலி: கவிஞர் தணிகை

எல்லா  இடங்களிலும் பூனைக்காலி: கவிஞர் தணிகை



எல்லா வேலிகளிலும் பூனைக்காலி கொடிகளில் காய் காய்த்து பழம் வெளியில் புசுபுசுவென ஸ்பான்ச் போன்ற தாவர மூடியுடன் கிடைக்கிறது.பக்கத்தில் சென்று பார்த்தால் வெறும் பழத்தின் தோல் அப்படியே இருக்க, உள் இருக்கும் பழத்தின் கதுப்பு, விதைகள் எவையும் இருப்பதில்லை. எல்லாம் குருவிகளுக்கு உணவு.இந்தக் குருவிகளே இதன் பழத்தை உண்டு விதைகளை ஆங்காங்கே விதைக்கின்றன தமது எச்சங்கள் மூலம். என்னே இயற்கையின் விளைவு. எனவே எல்லா இடங்களிலும் பூனைக்காலி அல்லது பூனைப் புடுக்கு காய்களும் பழங்களும்.

விதைகளையும் மென்று தின்னலாம்  அல்லது அப்படியே  விழுங்கலாம் என்கிறார்கள் என்னுடன் நடைப் பயிற்சி உலா வரும் மைதிலி டீச்சரும், மணியும்(மணி வண்ணனும்). சிறு வயதில் நிறைய பழங்களை பறித்துச் சென்று டம்பளரில் போட்டுக் கொண்டு கலக்கி  குடிப்போம் அவ்வளவு பழங்கள் எங்கள் பாட்டி வீட்டு காடுகளில் இருக்கும் என்பது மணி...

ரோஸ் மில்க், அல்லது  பாதாம் கீர் போல அப்படி ஒரு ப்ளேவர்,நல்ல வாசனை. ஆனால் பால்போல் வரும் அதன் கதுப்பை உறிஞ்சி விட்டு தொல்லியையும், விதைகளையும் துப்பி விடுகிறேன். காடுகளில் சுற்றி குடிநீருக்கு அலையும் போது இது ஒரு அரிய தாகம் தீர்க்கும் மருந்தாகும்.

மேலும் ருசுப்பிக்கப் படாத செய்திகளாக: 1. புற்று நோயை மேற்கொண்டு பெரிதாக்காமல் கட்டுப் படுத்துவதாகவும்,2. இன விருத்திக்கான குழந்தைப் பேற்றுக்கான ஆண் தன்மையை அதிகப்படுத்துவதாகவும் செவி வழிச் செய்திகள். அது எப்படி இருந்தாலும் உட்கொள்வதற்கு இயற்கை அளித்த அரிய பழம் இது. இலந்தை ஒரு வகை என்றால் இது ஒரு வகை, அது முட்செடி மரங்களில், இது கட்கொடி வேலிகளில்...

பயப்படத் தேவையில்லை பக்க விளைவு ஏதும் இல்லை சுவைத்துப் பார்க்கலாம்.
இப்படி நாம் சுவைக்காத அரிய வகை தாவரங்கள் இலை,காய் கனிகள் எத்தனை எத்தனையோ... வாய்ப்பு வருவார்க்கு அனுபவம் தாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: நான் சொல்லி இருப்பது சிறு பூனைக்காலியாம் இதில் வேறு பூனைக்காலி என்ற இரகமும் உண்டாம். நான் சொல்லி இருப்பது நோகாமல் நோம்பி கும்பிடுவது. சிறு பூனைக்காலி பற்றியே.எவ்வித முயற்சியும் இன்றி பார்த்தவுடன் பறித்துச் சாப்பிடலாம்.


No comments:

Post a Comment