Friday, January 30, 2026

DR.ARAVINDASAMY M.B.B.S.,D.C.H., மரு.அரவிந்தசாமி:கவிஞர் தணிகை

 டாக்டர் அரவிந்தசாமி: கவிஞர் தணிகை



ஒரு நல்ல மருத்துவரைக் கண்டால் என்ன செய்யத் தோன்றும்? வணங்கத் தோன்றும். அவர்கள் கடவுளின் மறு உருவங்களாகவும் பார்க்கிறார்கள் பயன் தெரிந்தார் பயன் பெற்றார். ஏன் எனில் அவர்கள் உயிரை மீட்டுத் தருகிறார்கள், உடல் நலத்தை மீட்டுத் தருகிறார்கள், ஏன் நல் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள், உலகை இனியதாக மாற்றி விடுகிறார்கள்.


அதிகமாக ஆங்கில மருத்துவம் பக்கம் நான் திரும்புவதேயில்லை அதன் பக்க விளைவு காரணமாக. ஆனால் அத்தியாவசியத்துக்கு செல்லத் தவறியதேயில்லை. ஆங்கில மருத்துவம் பயின்ற (அல்லோபதி) மருத்துவர்கள் எல்லாம் தேவர்கள் போலவும் மற்ற மனிதர்கள் எல்லாம் விலங்குகள் போலவும் அவர்கள் பார்ப்பதை அதிகம் கண்ட எனக்கு இந்த மருத்துவரின்  தீவிரத் தேடல் வித்தியாசமாகப் பட்டது. என்னைத் தேடி வருவார் அரிதானவர்களே.இவர் வசூல் ராஜா எல்லாம் இல்லை உண்மையான(ஆ)சாமி.


ஒரு மருத்துவர் எனை எனது சுவர் எழுத்துகளைப் பார்த்து விட்டு 2 முறை சந்தித்து தியான வகுப்புக்கு வர முயற்சி செய்து முடியாமல் 3 ஆம் முறை எனை சந்தித்து விட்டு தனது கோரிக்கையை வைத்தார்.அவர் ஒரு ஆங்கில இளநிலை மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலம் படித்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கான மருத்துவராக பணி செய்து வருகிறேன் என்றும் பணி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் தமது சேவையத் தொடரும் நிலையில் இந்த எழுத்துகளைப் படித்து விட்டு "உங்களிடம் மட்டுமே தியானம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்ற அவாவை வெளிப்படுத்தினார்.


அப்போது கோவில் பணி காரணமாக உடல் நலம் குன்றி இருந்தது. 2 மாதம் ஆகட்டும் அப்போதுதான் முடியும் என்றேன். அதற்கும் சரி என்றார். காத்திருந்தார். கற்றுக் கொண்டார்.தியானம் என்பதை கற்றுக் கொடுக்க முடியாதது கற்றுக் கொள்வது, என்றும் தியானத்துக்கு முன் தி.மு, தி.பி தியானத்துக்குப் பின் என வாழ்வை பிரித்துக் கொள்ளலாம்.


ஏன் என்னிடம் கேட்டதற்கு: கட உள் என்ற வாக்கியமே காரணம், இதை எழுதியவர் ஞானி என்றார்.கட்டணம் ரூ2000 கட்டினார், குரு காணிக்கை என பழம் பூ என ஒரே ஏக‌ தடபுடல் அன்பின் ஆரவாரம். பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல் என்ற தியான கொள்கையில் 5 ஆம் கொள்கை வேறு இடித்தது.


எல்லா தடைகளையும் தாண்டி, இடர்பாடுகளையும் தாண்டி, அவரது பணிச்சுமையையும் தாண்டி மனிதர் சரியாக 10  புகு முக வகுப்புகளுக்கும் வந்து கற்றுக் கொண்டார், இடையில் அவரது மைத்துனர் மணம் வேறு வந்திருந்தது. மகனுக்கு "குருதேவ்" எனப் பெயர் சூட்டி அழகு பார்த்து வருகிறார்.


என்ன சொல்வது மேலும் மேலும் எப்படி சொல்வது எனக்கு கிடைத்த அரிய மனிதர்களுள் இவரும் ஒருவர் இப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை, அப்போது மேட்டூர் அரசு மருத்துவமனை, துணைவியாரும் மருத்துவர் அவர் அம்மாப் பேட்டையில்  சொந்தமாக ஒரு மருத்துவ ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார். இவரை என்ன பாராட்டினாலும் எப்படி பாராட்டினாலும் தகும். சிறந்த தேசப் பற்று.மக்கள் பற்று. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இருந்து வந்த எனக்கு கிடைத்த‌ ஒரு நல் மணிமுத்து. அலட்டல் இல்லை காரம் இல்லை கசப்பு இல்லை இது ஒரு நல்ல எண்ணம்.மனிதர்  ஒரு மருத்துவர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் காட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக‌ இருப்பவர். ஆடை அணிகலன் பற்றி எல்லாம் கூட அலட்டிக் கொள்ளாமல்...


அவர் என் குடும்பத்தில் இப்போது ஒருவராக இருக்கிறார். அவர் மூலம் இப்போது கோம்பூரான்காடு ஆரம்ப சுகாதார  மையத்தின் மருத்துவர் திவ்யாவும் எனது மனதில் இடம் கொள்பவராக சேர்ந்திருக்கிறார். அவரிடமும் மக்களுக்கான உண்மையான சேவையாற்றும் நட்பை கவனித்ததால் இந்த வார்த்தை.


மறுபடியும் சில அரிய மனிதர்களுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment