பொங்கல் திருவிழா கருப்பு ரெட்டியூர் பேச்சுப் போட்டி: கவிஞர் தணிகை
கருப்பு ரெட்டியூர் பொங்கல் திருவிழாவில் பேச்சுப் போட்டி.
எங்கு பார்த்தாலும் பொங்கல் திருவிழா மகத்தாக இந்த ஆண்டு 2026ல். அவரவர் வேட்கைக்கேற்ப. பூக்களுடன் பொங்கல் விழாக்கால பூத்திடும் வாழ்த்துகள் என எமது சுவர் எழுத்துகளில் வித்திட்டிருந்தோம்.
ஒரு உற்ற சகோதரியின் வீட்டில் நாங்கள் இருந்த போது "தமிழ் பசங்க" என்னும் கருப்பு ரெட்டியூர் இளைஞர் கதிரவனிடமிருந்து அழைப்பு. ஒரு உதவி அய்யா, பேச்சுப் போட்டி நடத்துகிறோம் நடத்தித் தர வேண்டும் என.உங்களைக் கேட்காமலேயே அறிவிப்பு செய்து விட்டோம் நீங்கள் தாம் நடத்தி தருவதாக என்றார். உங்களுக்கு உரிமை இருக்கிறது அது பற்றி ஒன்றும் தடையில்லை. நடைப்பயிற்சி முடித்து அப்படியே வந்து விடுகிறேன் எனக்காக எந்த முயற்சியும் வருவதற்கும் போவதற்கும் செய்ய வேண்டாம் என மறுதலித்து விட்டேன். அந்த மண்ணில் தாம் பன்னெடுங்காலமாக மக்கள் தொடர்புடன் நடைப் பயிற்சி செய்து வருகிறோம் அவர்களுக்கு இல்லாமலா?
கரும்பு தின்ன கூலியா? இல்லை . தலைப்பு இல்லாமலேயே சும்மாவே இரண்டு முதல் 3 மணி வரை கூட உரைவீச்சு செய்யத் தெரிந்த நமக்கு அது ஒரு இன்பமான சேவைப் பணி.அனைவர் பாராட்டும் அறிமுகமும் கிடைத்திட்ட வாய்ப்பு.
தமிழ் இளைஞர்கள் என்று சொல்லலாம்...இனி ஏன் தமிழ் பசங்க என்றே சொல்லி வருகிறீர்கள் எனக் கேட்டேன் அவர்கள்தாம் அந்த நிகழ்வை உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உதவியுடன் செய்து வருவதாகச் சொன்னார்.
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் நிலை வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அடுத்த 2 ஆம் பிரிவும், மேனிலைப் பள்ளி முதல் மூன்றாம் பிரிவாகவும் குழந்தை மாணவர்களனைவரையும் பிரித்தோம். 19 பள்ளிப் பிள்ளைகள் கலந்து கொண்டனர். ஊர் முழுதும் திரண்டு ஆதரவு கொடுத்து பாராட்டி மகிழ்ந்தனர்
பரிசளிப்பு விழா மிக இனிதாக நடந்தேறியது. மகிழத் தக்க விழாவாக அது இருந்தது இனி ஆண்டு தவறாமல் அதை நடத்துவதாக நடத்த இருப்பதாக அந்த பதிவு இருந்தது. அடுத்த முறையில் இருந்து தலைப்பு தந்து அதன் வழிச் செல்ல ஆலோசனை வழங்கப் பட்டது.இம்முறை உடனடி ஏற்பாடு என்றதால் கலந்திருந்த குழந்தைகள் அவரவரே தலைப்புகளை முடிவு செய்து பேசினர். காமராசர், திருப்பூர் குமரன், பொங்கல் திருநாள், இராமாயணம், போன்ற தலைப்புகள் பெரும்பாலும் இருந்தன.
ஜித்தேஷ் மாரி என்ற ஒரு சிறுவன் மிகச் சிறப்பாக பேசி அனைவரின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றார். அவர் ஒரு 3 ஆம் வகுப்பு மாணவர் என்றே நினைவுக்கு (இப்போது இந்தப் பதிவு எழுதும் போது நினைக்கிறேன்)
எனது 3 புத்தகம் கூட முன்னணி பரிசு பெற்ற மாணவர்க்கு ஊக்கமளிக்க அளித்தேன். ஊர் பொது மக்கள் நல்ல ஊக்கமளித்தனர். ஒரு சிறு குழந்தை வந்து பொங்கல் வாழ்த்துகள் என்ற தம் மழலையில் அறிவித்து அனைவரையும் மகிழ வைத்தது நெஞ்சுக்கு நிறைவான நிகழ்வை மேலும் நெகிழ வைத்தது மனம் மகிழ வைத்தது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment