Thursday, January 29, 2026

இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை

 இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை



முட்டைக்கார கிருஷ்ணனை மேல் மேட்டூரில் தெரியாதார் சிலரே இருக்கக் கூடும். எனக்கும் இந்த நபருக்கும் சுமார் 14 ஆண்டுகள் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது தொடர்கிறது.எப்படி எனில் சகோதரர்கள் போல‌ பங்காளிகள் போல.ஆன்மீகத்தால் அரசியலையும் வென்று எடுக்கும் நோக்கம் அவருடையது. சேவை வழி இதயம் தொடு என்பது எனது.காலம் ஒரு பற் சக்கரத்தின் பற்களாக மேலும் கீழும் பதிந்து சுழற்றியபடியே எங்களையும்  கடத்தி வந்து கொண்டிருக்கிறது.


என்னை விட அவரை எவருமே விவாதப் பொருளுடன் தாக்கி விமர்சித்து இருக்க முடியாது நேருக்கு நேர் நாங்கள் கீரியும் பாம்பும் போல்.மற்றபடி ஒரே நேர்க்கோட்டில் இணையான வழிகளில் பயண‌ம் செய்யும் செயல் கர்ம வான்கள். அவரும் நானும் இரவில் சரியாகத் தூங்காதவரே.ஏன் எனில் இந்த உலகு உய்ய ஏதாவது நம்மால் ஆனதை செய்ய வேண்டுமே என்ற அப்துல் கலாம் போன்றோரின் ஏக்கத்தால்.


இப்போது என்ன இந்த‌ அங்கலாய்ப்பு என்கிறீர்களா? மனிதன் தனியாகவே நின்று எல்லா எதிர்ப்புகளையும் ஊதித் தள்ளி கோம்பூரான் காட்டில் நாங்கள் எல்லாம் சேர்ந்து 2012ல் கட்டி குடமுழுக்கு செய்த‌ அருள் மிகு புவனேஸ்வரி உடனமர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை வருகிற மாசி 10 தமிழ் அல்லது ஆங்கிலத் தேதி 22.02.2026 ஞாயிறு அன்று நடக்க எடுத்து வரும் அசாத்திய முயற்சி பற்றித் தான். ஈடு இணையிலா உழைப்பு.


மனிதர் எப்படி வேண்டுமானாலும் இரசாயனத் தொழில் நடத்தி வந்த தொழில் அதிபராக இருக்கலாம். ஆனல் இப்போது ஞானம் பெற தமது ஆத்மாவை அலைக்கழித்து வரும் ஒரு நல்ல ஜீவனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். துறவு நிலை கூட.


இதென்ன பெரிய சாதனையா? என்று பலரும் கேட்க வாய்ப்பு இருக்கிறது, செய்து பார்த்தால் தாம் அதில் உள்ள வாய்ப்புகளும், நுட்பங்களும், நுணுக்கங்களும், சிரமங்களும் தெரியும் அனுபவம் மலரும்.


ஒரு தனி ஆளாக நின்று எல்லாப் பொறுப்புக்ளையும் தமது தோளிலேயே தாங்கிக் கொண்டு செய்து வருகிறார்.இந்த குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்குப் பின் செயல் நடவடிக்கை எல்லாம் துறந்து ஓய்வு பெறப் போவதாகவும் சொல்கிறார். ஆனால் இந்த மனித ஆத்மா சுழலும் வரை அந்தக் கோவிலை விட்டுப் பிரிய மாட்டார் , ஏன் உடல் எனும் கருவியை விட்ட பிறகும் கூட அந்தக் கோவிலிலேயே சமாப்தி ஆகி விடுவார் என்றே வெளிப்பாடு எல்லாம் இருக்கிறது.


ஒரு வேளை அப்படித்தான் எல்லாம் புகழ் சொல்லுமோ? அட இந்த மனிதரிடம் நாம் இத்தனை கறாராக உரத்த தொனியில் கருத்து மோதல் செய்திருக்கக் கூடாதோ என்ற எண்ணமெல்லாம் அந்த காலம் கொடுக்குமோ?

சமூக அமைப்பில் எல்லாருக்கும் ஏதோ செய்ய நினைக்கிறார் அது இந்த வழியில் இருக்கிறது.பேர் விளங்கட்டும்.


அனைவரையும் ஒருங்கிணைக்க எல்லா வித்தைகளையும் காட்டி வருகிறார் இந்த கிருஷ்ணனும். எனவே அனைவரும் வந்து புதுசாம்பள்ளி இடுகாட்டருகே உள்ள கோம்பூரான் காட்டில் உள்ள அருள் மிகு கபாலீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பு செய்வீராக. நன்றி . வணக்கம் .என்றும் அன்புடன் உங்கள் நண்பனாக எனது அழைப்பும். 


இவருடைய செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவும் வெகுவாக இருக்கிறது என்பதை மக்கள் தமது உழைப்பால் கிடைத்த செல்வத்தை நிதியாக, நன்கொடையாக இந்த கோவிலின் வளர்ச்சிக்கும், இந்த நிகழ்வின் வெளிச்சத்துக்கும் வாரி வழங்கி வருவது இவரது வெற்றியையும் இவருக்கான அங்கீகாரத்தையும் மக்களுக்கு கடவுள் பக்தியில் இன்னும் நம்பிக்கையும் நாட்டமும் இருப்பதைக் காட்டுகிறது.


முட்டை முதலா கோழி முதலா என்ற அறிவியல் ஆய்வில் கோழிதான் பரிணாம வளர்ச்சியில் முதலில் என்று தற்கால அறிவியல் விடை சொல்லிய அறிக்கைகள் உள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment