Tuesday, April 4, 2023

உண்மையான பாஹுபலி இந்த மஹா வீரர்தான்: கவிஞர் தணிகை

 உண்மையான பாஹுபலி இந்த மஹா வீரர்தான்: கவிஞர் தணிகை



கட்டியிருந்த இடுப்பு பட்டுத் துண்டைக் கூட இடது கையால் அவிழ்த்துக் கொடுத்து விட்டு சிலையாய் நின்றவர் மேல் செடிகொடிகள் கூட மேல் ஏறிச் செல்ல முக்தி அடைந்தவர் இந்த பாஹுபலி. இவருடைய கதை, கதையல்ல, வாழ்வு படித்தறிய மிகவும் ருசிகரமானது ஆர்வத்தை தூண்டி கதையைப் போல சிந்திக்க வைக்கக் கூடியது.

  இஷ்வாகு குலம் சார்ந்து அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரச குலம், தந்தை ரிஷபானந்தா என்றும் முதல் தீர்த்தங்காரர் என்னும் பேருடன் ஜைன மதத்தாரால் அழைக்கப் பெற்ற இவருக்கு இரண்டு மனைவிகள் இரண்டு மகன்கள். இரண்டு மகன்களுக்கும் தமது இராச்சியத்தை பிரித்துக் கொடுத்து விட்டு துறவு பூண்ட பின்,மூத்த சகோதரர் பரத சக்ரவர்த்தி உலகை வெல்வதே வீரம் என்று எல்லா தேசத்தாரையும் வென்ற பிறகு சொந்த தம்பியையும் விட்டு வைக்காமல் அவர் இராச்சியத்துக்காகவும் மண்ணாசையுடன் போரிட்டு தமது வீரம் யாவற்றையும் விட பெரியது என்று நிரூபிக்க விரும்பி அது பலிக்காமல் தம்பியிடம் தோற்ற பிறகு....

அண்ணனை வென்ற பின் உலகை வெல்வதல்ல வீரம் , தன்னை வெல்வதே வீரம் என்று எல்லாவற்றையும் வெறுத்து விட்டு வென்ற பின்னும் இராஜ்ஜியத்தையும் அண்ணனுக்கே விட்டுக் கொடுத்து விட்டு தர்மத்தால் இராஜாவாக இருந்த நிலை வேண்டாம் என்று அனைவர்க்கும் எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில் துறவு நிலைக்குச் செல்லும் போதும் தன்னிடம் தர்மம் கேட்டார்க்கு இதுதான் மிச்சம் என்ற நிலையில் தனது இடுப்பு பட்டு வேட்டியையும் இல்லை என்று சொல்லாமல் அவிழ்த்து கொடுத்து விட்டு சென்று தவக் கோலம் பூண்டவர் மேல் செடி கொடிகள் எல்லாம் கூட படர்ந்த பின்னும் நின்றவர் நிர்வாணக் கோலத்தில் நின்றவராகவே இருக்கிறார் என்ற சரித்திரச் சான்றுகள்:

( இவருக்கும் முன்பே இவருடைய 98 சகோதரர்களும் துறவு பூண்டதாக எல்லாம் ரிஷபானந்தாவுக்கு 100 குழந்தைகள் என்றெல்லாம் செய்திகள் இருக்கின்றன அவை பற்றி எல்லாம் சரியாகத் தெரிய வில்லை. பரதர் என்னும் சகோதரர்க்கு அயோத்தி முதலான வட பகுதியையும் பாஹுபலிக்கு தென்பகுதியும் பிரித்தளிக்கப் பட்டன என்றும் இந்த வாழ்வின் சரித்திரம் சுமார் 10 ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கின்றன என்பதான செய்திகளும் இருக்கின்றன).

சிரவண பெலகோலா,தர்மதஸ்லம், மற்றும் கர்நாடகா ஆந்திரப் பகுதிகளில் இவருக்கு நிறைய இடங்களில் சிலை காணப் படுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment