Wednesday, April 12, 2023

மூவேந்திர பாண்டியனின் சிகரம் தொடுவதற்கே மற்றும் வர்தா சிவப்பு ரோஜா பேசுகிறேன்: கவிஞர் தணிகை

 மூவேந்திர பாண்டியனின் சிகரம் தொடுவதற்கே மற்றும் வர்தா சிவப்பு ரோஜா பேசுகிறேன்: கவிஞர் தணிகை



தமிழ்க் குயில் மூவேந்திர பாண்டியனின் இரண்டு கவிதை நூல்களையும் படித்தேன். 1. சிகரம் தொடுவதற்கே  150 பக்கங்கள்.2. வர்தா சிவப்பு ரோஜா பேசுகிறேன்  அட்டை உட்பட 292 பக்கங்கள். தனித்தன்மை,பெரிய எழுத்துகள் எவரும் சிரமமின்றி படிக்க சிறப்பான பதிப்பு. நல்ல தயாரிப்பு


தமிழையும் இவரையும் பிரிக்க முடியாத மதுரை தமிழ் சங்கத்துக்காரர். தமிழ் நெஞ்சங்கள்,தமிழ் உறவுகள், தமிழ் மண்... என்றே அதிர்வலைகள். கீழடி மேனிலைப் பள்ளி வேறு பக்க துணை...மண் வாசம் நன்றாக இருக்கிறது.


இவர் தம் கவிதைகளில் கவிச் செறிவை விட சமுதாயத்தை உயர்த்தும் நோக்கம் சிகரமாகி இலட்சியத்தை அடையாளம் காட்டுகிறது. 

 

சாக்ரடீஸ் தேடியது போல என் தேடலிலும் ஒரு உண்மையான மனிதரைக் கண்டறிந்துள்ளேன்,உண்மையிலேயே வீரியமான நல்ல விதை நமது மண்ணுக்கு கிடைத்திருப்பது நல் வாய்ப்பே.


இவரது வரிகளில், வார்த்தைகளில் வாழ்வின் உணர்தல். அதாவது உழைப்பு + அறிவு‍= மேன்மை ‍(கழித்தல் வறுமை)நன்றாகவே பலப்படுகிறது. 


கலாமுக்காவது சகோதரியின் வளையல்கள் கிடைத்தன மேற்படிப்பு தொடர இவருக்கோ அதுவுமின்றி எதுவுமின்றி பல்வேறுபட்ட சொந்த முனைப்பில் கடின உழைப்பில் எல்லாப் பணிகளையும் இளமையிலேயே படிப்பதற்காக செய்து அஞ்சல் வழி மூலம் கல்லூரிப் படிப்பை முடித்து தமிழக தேர்வாணைய பிரிவு நான்கின் கீழ் தேர்வு எழுதி பணி வாய்ப்பு பெற்று நிலை உயர்த்திக் கொண்டுள்ளார். வார்த்தையில் சிக்கா வாழ்வின் பயணம்.

 நிறைய சிட்டாள் வேலையெல்லாம் செய்து கல்வி தேவதையின் கரம் பிடித்திருக்கிறார்.இப்படி படித்த சுசீல் குமார் ஷிண்டே பற்றிய நிழலற்ற பயணம் என் நண்பர் சுபாஷ் ஹைதராபாத் செய்த நூல் நினைவு இவரது வாழ்விலும் ஆடியது. தாயில்லாமல் ஆதரவில்லாமல் மிக கடினமான காலத்தை கடந்துள்ளார். இனியெலாம் சுகமே...நிறைய அனுபவக் கல்வி உடையவராக இருக்கிறார்.

புகைப்படத்தில் கை கட்டிய அடக்கமான கம்பீரம் கை காட்டுவதோ இமாலயம்.


என்னை விட இவரிடம் உழைப்பும், பொறுமையும் அதிகம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். எனக்கு எப்போதுமே குழந்தைகளிடம் இருப்பது போன்ற சிறுபிள்ளைத் தனமான புத்தக‌ ஆர்வம் உண்டு எதையுமே உடனே படித்து விட வேண்டுமென... இவரை தொந்தரவு செய்து இவருடைய வேலை அழுத்தத்துக்கிடையே இந்த இரு நூல்களையும் வாங்கிப் படித்து விட்டே இந்தப் பதிவை செய்துள்ளேன்.


சரி இனி சுருக்கமாக புத்தகங்களை பேச வைப்போம்:


1. சிகரங்கள் தொடுவதற்கே:

புத்தகங்க‌ளை தமது செல்வங்கள் என்று குறிப்பிடுகிறார்...சான்றோர் அனைவரும் அப்படியே...

அமைச்சர் வருகையால் கட்டிய பேனர்கள் பின் வீட்டுக் கூரையான ஏழ்மை பறை சாற்றுகிறார்


உழைப்பாளி: எப்போதாவது நாங்கள் உழைக்காதிருந்தால் அப்போது மண்ணோடு மண்ணாக கலந்திருப்போம்


உங்க கல்யாணத்தப்போ நான் எங்கே அப்பா?

 என்னும் மகனுடைய கேள்விக்கு நான் 60 ஆம் திருமண நிகழ்வில் அவனை மட்டுமே முன்னிறுத்தி மேச்சேரி காளி கோவிலில்  எளிய ஒரு நிகழ்வை நடத்திக் காட்டினேன் என்பது எனக்கு நினைவுக்கு வர...குழந்தையாக ஒரு கவியூட்டல் 


சிம்பொனி...சிட்டுக் குருவியின் சிணுங்கும் கவிதை

இப்படி திறந்த வெளி வீடு, தலைப்புச் செய்தி, முரண்பாடு, சிக்கல் , தகுதி, ஆ(ண்) தவனே...ஆண்டவனே என்று எனக்குத் தோன்ற‌


அவள் கூட்டிச் சென்றதால் குப்பை என்னுள்...

இப்படி இளமையில்  எழுதியதை 2013ல் வெளியிட்ட நூல் சிகரம் தொடுவதற்கே...


அவரே 2017ல் வர்தா சிவப்பு ரோஜாவாக பேசுகையில்:



தொழுதோர் தொழாதோர் அனைவர்க்கும் கருணை செய் எனும் போது : எம் இறை எம் மதம் என்ப உயிர்த்திரள் அம்மதம் என்றருள்வாய் அருட்பெருஞ்சோதி என்னும் வள்ளலாரை நினைவு செய்கிறார். வாக்களித்தார்க்கும் வாக்களிக்காதார்க்கும் ஆட்சி பொது என்பது போல‌


சிகரம் தொட்ட ஹனுமந்தப்பா சியாச்சின் பனி மலை பள்ளதாக்கு பனிப் படுகையின் அடியில் 6 நாள் உயிர் மூச்சுடன் இருந்த நிகழ்வை அஞ்சலியாக தந்துள்ளார்.


பூதவுடல் போகும் போது அது புகழ் உடம்பாய் இருக்கும் உறுதி இருக்க வேண்டும் என்கிறார். நல்லோர்க்கு எல்லாம் அது வழிகாட்டும்


பூங்கற்கள்,மழை வரம், குளத்தை துர்த்து கட்டிய கோயிலில் முன் மழை வேண்டி பக்தர்கள் தொழுகை என்கிறார் .

மின் தடை : நிலவுக்கு அமாவாசை யன்று என்று சொல்லாமல் விட்டாரே என்பதற்கும் நிலவுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தம் என ஈடு கட்டி விடுகிறார்.


அறிவுத் திருக்கோயில் : நூலகம் என்கிறார்

நகர்மயமாதல் கிராமத்து விதவைக் கூவல் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது

ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தர் சிலை வாங்க ஆசை என்கிறார்

மாந்தர் சவ நிலையை அடைவதற்குள்ளாக  அதற்கு முன்பு சம நிலை அடைய வேண்டும் என்கிறார்

வார விடுமுறை இல்லாத நாட்காட்டி வேண்டும் அம்மாவுக்கு என்பதுடன் பெண்/மனைவி மார்களுக்கு என்றும் சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்


எம்.ஜி.ஆர் தனி மனிதராக நல்லவர்தாமே என்று இவர் சொல்லியபடியே நானும் சொல்ல ஒரு இளைஞரின் நட்பை இழக்க வேண்டியதாயிற்று...ஆனாலும் எல்லாம் நினைவுள்


நகைச்சுவை : நான் சிரித்து விட்டேன். நன்றாகவே இருக்கிறது  கவிதையின்  நாயகனாக மட்டுமே என்னை இவர்களுக்குத் தெரியும் எனக்கு மட்டுமே தெரியும் நான் கவிதாவின் நாயகன் என்பது...


பாவையின் கோவைக்கனி வயது வந்தோர்க்கு மட்டும் என்று சொல்லி விடலாம்


இரவு 10 மணி வரை கூட  பூ விற்பவர் காத்திருப்பார்களா சார், நான் மனைவியை சொல்லப் போகிறீர் என நினைத்தால் நீங்கள் பூக்காரி என்கிறீர்... சொல்ல முடியாது நகர் புறம் சார்ந்து இருக்கலாம்...


வாகை சூடலாம் ...அபாரம். சூப்பர் தீர்க்க தரிசனம்... நல்லவர்க்கு அறிவுரை...


இப்படி இரண்டு நூல்களுமே குறிக்கோள் பற்றி நிறைவுடன் இருக்கின்றன‌


படிக்கும் வாய்ப்பளித்து எங்கள் வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்தமைக்கு நன்றி. உண்மைதான் எனது மகனுக்கும் உண்மையிலேயே நான் சேர்த்து வைத்த செல்வங்கள் இந்த நூல்கள் தாம்.

 வணக்கம்.



மறுபடியும் பூக்கும் வரை

நன்றி.

கவிஞர் தணிகை

Writer can achieve more and many mile stones in his life time;

Best wishes and hearty greetings to the responsible person of our society.









No comments:

Post a Comment