Friday, July 2, 2021

நற்பொழுதாக்கம்: கவிஞர் தணிகை

 நற்பொழுதாக்கம்: கவிஞர் தணிகை



சிறு வயதில் தந்தை ஆண்டியப்பனின் தந்தையை அழைத்து வந்து வீட்டின் செடிப்பக்கம் முடி திருத்தச் செய்வார்

அந்தக் காலம் போன பின் ஆண்டியப்பனின் கடையில் சென்று செய்து வந்தோம். அங்குதான் குமுதம் கல்கண்டு படிக்க ஆரம்பித்து சாண்டில்யனின் யவனராணி, கடல்புறா ஆகிய சரித்திர நாவல்களில் மூழ்கினோம் அது வேறு கதை


எனது காலத்தில் மகன் சிறு வயது ஆக இருந்த போது பூப் போல வளர்த்து வந்தோம். கீழே விழுந்து அடி படக்கூடாது என முழங்கை வரை மேல் சட்டை, முழங்கால் வரை அரைக்கால் சட்டை எல்லாம் போடுவதுடன் அவருக்கு முடி திருத்தும் வேலை தந்தையான என்னுடையதுதான் ஏன் எனில் கடை எல்லாம் அவ்வளவு சுத்தம் பத்தமாக இல்லை என்பதாக கருதியதால்...அது அவன் இளைஞராக மாறும் வரை தொடர்ந்தது அதன் பின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவரும் அவரது தாயும் அவர் கடைக்கே சென்று செய்து கொள்ளட்டும் என மாற்றிக் கொண்ட போதும் ஏன் இன்றும் கூட எனக்கு நானே செய்து கொண்டுதான் வருகிறேன் தேவை ஏற்பட்டால் குடும்பத்தின் பிறர் உதவியுடன்...


மகாத்மா தென் ஆப்பிரிக்காவில் இங்கிலாந்தில் முடிதிருத்தம் செய்து கொள்ள செல்லும்போது ஆங்கில முடி திருத்தும் தொழில் செய்வோர் அவருக்கு செய்ய மறுக்கும் போது அவர் அதை தாமே செய்து கொண்டு நீதிமன்றத்தில் அதைப் பார்த்து அனைவரும் சிரிப்பார்களே அந்த செயல் ....


அவருக்கு அவரது ஆடையை சலவை செய்து தர மறுத்த நிலையில் அவரே அவர் வழக்கறிஞர் கோட் முதற்கொண்டு சலவை செய்து ஆரம்பத்தில் தீய்ந்து போய் கிழிந்து போய் எல்லாம் போட்டுச் செல்ல நீதிமன்றத்தில் அனைவரும் பார்த்து சிரிப்பார்களே அந்த செயல் ....இவை எல்லாம் எங்களுக்கு 11 ஆம் வகுப்பு பாடத்தில் இருந்தன...நானும் பயன்படுத்திக் கொண்டேன்.



முதலில் தமிழ் ஆசிரியர் இராசசேகரன் அவர்களின் வீட்டில் இருந்து நெருப்பு மூட்டி சலவை செய்யும் ஒரு சலவைப் பெட்டியை இரவலாக வாங்கி வந்து எனது மூத்த சகோதரனுக்கு சலவை செய்து கொடுப்பேன்; அவர்கள் எத்தனை முறை கேட்டாலும் சலவைப் பெட்டியை சலிக்காமல் கொடுப்பார்கள் மேலும் ஆசிரியரின் மறையாத சிரிப்பு என்னுள் இன்றும்....அது வேறு கதை 


தந்தை சலவை எல்லாம் செய்யச் சொல்ல மாட்டார், கையில் மட்டும் நீவி மடித்து வைக்கச் சொல்லி போட்டுக் கொள்வார் பெரும்பாலும்..


நானும் எனது காலத்தில் சலவை செய்து போடும் துணிகளை அணியாமல் டீ.சர்ட், ஜீன்ஸ் பேண்ட் என சேவை நிறுவனத்தில் பணி புரிந்ததால் ட்ரெஸ்ஸிங் கோட் எதுவும் தேவைப்படாததால் அணிந்து வந்தது, கல்லூரிக்கு பணிக்குச் செல்லும் போது அவசியம் ட்ரெஸ்ஸிங் கோட் தேவைப்பட...எப்போதோ கிடப்பில் போடப்பட்ட ஆட்டோமேட்டிக் அதிலேயே தண்ணீர் ஊற்றி தெளிக்கும் ( எதை வாங்கினாலும் சிறந்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கிய சலவைப்பெட்டி) சலவைப் பெட்டி செயல்படாததால் அதை சரி செய்வதற்கு பதிலாக கணேஷ் சைக்கிள் மார்ட்காரர் அதெல்லாம் சரி வராது சார் ஒரு குறைந்த விலையில்  500 ரூபாய் இருக்கும் என நினைக்கிறேன்...சரியான விலை மறந்து விட்டது...இப்போது ஆண்டு ஆறான நிலையிலும் கை கொடுக்கிறது அதை வைத்துதான் எனது துணிகளை சலவை செய்து போட்டு வருகிறேன் கல்லூரிக்கு...


காந்தியம் படிக்கும் போது அவர் வேப்ப இலை சாப்பிடுகிறார் என நானும் ஒரு கைப்பிடி சாப்பிட்டது எல்லாம் நினைவில் வருகிறது.


வாழ்க்கை என்பது குறுகியது அதில் அதிக பட்சம் அல்ல அல்ல உச்ச பட்சம் எவ்வளவு அந்த வாழ்க்கையை பருக முடியுமோ அவ்வளவு பருகி தீர்ப்பது என்ற எண்ணத்தில் உங்களிடம் சில நேரம் அதிகம் பேசி விடுகிறேன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.






No comments:

Post a Comment