Tuesday, April 7, 2020

பதிலடி கொடுப்போம்: கவிஞர் தணிகை

பதிலடி கொடுப்போம்: கவிஞர் தணிகை

The chilling impact of the rise of Donald Trump and Narendra Modi ...

காலையில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் சொன்ன இந்த வார்த்தைக்கு பதிலடியாக மதியம் சுமார் 2 மணியளவிலேயே நமது இந்திய தேசம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா மூலம் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஹைட்ரோக்ஸி குளோரோக்யின் மாத்திரைகளை வழங்க உள்ளோம். என  தெரிவித்து விட்டார்.

அடல் பிஹாரி வாஜ்பேயி காலத்தில் அமெரிக்கர் விதித்த பொருளாதாரத் தடை பற்றி எல்லாம் கருத்தில் கொள்ளாது இந்தியா பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது...

அதே போல இந்திராகாந்தி, இராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்க் போன்ற பிரதமர்கள் எல்லாம் கூட தங்களது காலத்தில் அமெரிக்காவின் மேலாண்மைத் தனத்தைக் கண்டு அஞ்சாத நிலை இருந்தது என குறிப்புகள் இருக்கின்றன.

இல்லை இல்லை இதுதான் வியாபார யுக்தி மற்றும் அகில உலக ராஜதந்திரம் இப்போது இப்படித்தான் நடந்து கொண்டு பணிந்து போயிருக்க வேண்டும் என ஊதுவார் ஊதிக் கொண்டேதான் இருக்கின்றனர்.

கலாம் பணிந்து போகவில்லை என்றதும், இரண்டு முறை அவரது ஆடை களைந்து விமான நிலையத்தில் சோதனை செய்த போதும் அவர் அவர்களது பணியைச் செய்கின்றனர் அதில் என்ன என சிரித்துக் கொண்டே சொல்லி விட்டார் மாமனிதர்.

அமெரிக்கர்கள் அடுத்த நாடுகளை அண்டிப் பிழைத்து வந்த போதிலும் இப்படி அகங்காரமாக நடந்து கொள்வதில் குறைச்சல் இல்லாமலே நடந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இந்த ட்ரம்ப் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை.

தனக்கு மிஞ்சினால் தானே தானம்...அல்லது வியாபாரம் என்பது போல இங்கு உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு அதாவது 30 கோடி பேருள்ள ஒரு நாட்டுக்கு 130 கோடி மக்கள் தொகைக்கும் மேல் உள்ள ஒரு நாடு மருந்துப் பொருட்களை தருகிறேன் என விதிகளைத் தளர்த்தி தருகிறது...

இங்கிருக்கும் மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன அங்குள்ள பணக்கார உயிர்கள் போகாமல் தடுத்தாக வேண்டும் அதுதான் மனிதாபிமானம்.

அந்த நபர் வருவதற்கு ஏழை மக்கள் வாழ்வாதார நிலை தெரிந்து விடக்கூடாதே என மதில் சுவர் எழுப்பி மறைத்த  அரசு தானே இது...

இப்படி எந்நிலை குலைந்த போதும் ஆணவப் போக்கு குறையாத அந்த நாட்டுக்கு இயற்கை எப்படி வேட்டு வைத்தாலும் அவர்கள் திருந்துவதாகக் காணோமே....அதற்கு இந்தியா போன்ற நாடுகள்  பணிந்து போவது பெரும் வெட்கக் கேடான விடயம்.

இதை ஒரு குடிமகனாகவே எழுதுகிறேன். அப்படி எனது கருத்துகளை கூற எனக்கு உரிமை உண்டு எனக் கருதுகிறேன்

இங்கு இருக்கும் ஏழ்மையை தீர்க்க முயல்வதை விட்டு, இங்கு பரவிக் கொண்டிருக்கும் கோவிட் 19 பிடியிலிருந்து எப்படி விலகுவது தப்பி பிழைக்க வைப்பது என்றெல்லாம் யோசனை சிறிதும் இல்லாமல்  பார்வை பயணம் செயல்பாடு எல்லாம் உயர இருப்பார் உள்ளத்தை எல்லாம் எப்படி குளிர வைக்கலாம் என்பதிலேயே இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இருப்பது தான் வேடிக்கை...
VIDEO: Donald Trump, Narendra Modi shake a leg to 'Rashq-e-Qamar ...
இந்த நிகழ்வு காலையில் அந்த செய்தி பார்த்தவுடனேயே எனைப் பாதித்தது...புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொன்ராஜ் இது குறித்து எனது கருத்து ஒட்டியே தமது கருத்தை பதிவு செய்தமை கண்டு அவரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

சீனர்கள் வியாபாரம் செய்து பொருளீட்டுகிறார்கள்...இந்தியாவின் இந்த வாய்ப்புகளும் தொழில் சார்ந்து தமது பொருளாதாரம் மேம்பட பயன்படுத்தும் வாய்ப்பாக மாறவேண்டும் ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment