Sunday, April 5, 2020

இராம ராஜ்ஜியம் அல்லது கிராம சுயராஜ்யம்/ ஸ்டேட்லஸ் கவர்ன்மென்ட்: கவிஞர் தணிகை

இராம ராஜ்ஜியம் அல்லது கிராம சுயராஜ்யம்/ ஸ்டேட்லஸ் கவர்ன்மென்ட்: கவிஞர் தணிகை

Heat-wave conditions forecast in parts of north Tamil Nadu for two ...

கொரோனா அலை பல்வேறுபட்ட முனையங்களில் விவாதங்களை நிகழ்த்த இடமளித்து வருகிறது. சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்கி வழிவதற்கு பதிலாக நினைத்ததை எல்லாம் எழுதலாம் பேசலாம் என்ற போக்கு சமூக வலை தளங்களில் எல்லாம் நிலவி வருகிறது.

சமூக வலை தளங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்க வேண்டியது அவசியம்.
நாம் முன்பே குறிப்பிட்டபடி எந்த துறையுமே நல்லதுமில்லை கெட்டதுமில்லை முழுதுமாக. அதில் ஈடுபட்டிருப்போரின் தனித்தன்மையைப் பொறுதே அந்த அந்த செயல்கள் செம்மை பெற முடிகிறது.

மனிதம் இன்னும் வளர வேண்டிய தூரம், செல்ல வேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது என்பதைக் காட்டவே அரசுகள், துறைகள், அதில் ஈடுபடும் மனிதர்கள் பற்றி எல்லாம் எழுத வேண்டி இருக்கிறது

ஜெர்மனியில் மற்ற முன்னேறிய நாடுகளை எல்லாம் விட கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் மிகவும் குறைவாக 1.4 சதவீதம் மட்டுமே இருப்பதாக தற்போதைய அறிக்கை.( அதுவே இத்தாலியில் 12%.ஸ்பெயின்,பிரான்ஸ் இங்கிலாந்தில் 10% 4% சீனா யு.எஸ் 2.5% தென் கொரியாவிலும் கூட 1.7%) மேலும் அவர்களின் அரசு மிகவும் சிறப்பாக இந்தப் பிரச்சனையை அணுகவது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. அதே வேளையில் அங்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படும் நபர்கள் வயதில் குறைவானவராகவே இருக்கின்றனர் என்பதும் வயது முதுமையில் இல்லை என்றும் இவர்களும் அதே போல வயது அதிகமில்லா நபர்களிடமிருந்து தொற்றி வந்திருக்கிறார்கள் என்பதும் ந்யூயார்க் டைம்ஸ் என்ற நாளேடு குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் அந்த நாட்டில் மட்டுமே மற்ற நாடுகளை விட தொற்றை வெகுவிரைவில் கண்டு பிடிக்க போதிய அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முன் கூட்டியே சுவாசக் கருவி (வென்டிலேட்டர்ஸ்) வைக்கப்படுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதில்லை என்றும் அந்தளவு அங்கு மருத்துவத் துறை மற்ற முன்னேறிய நாடுகளை விட  உதாரணமாக ஜெர்மனியில் மட்டுமே ஒரு இலட்சம் பேருக்கு 34 சுவாசக் கருவிகள் வென்டிலேட்டர்ஸ் இருப்பதாகவும் அதுவே நெதர்லாந்தில் 7 என்றும் இத்தாலியில் 12 மட்டுமே இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது 40,000 இன்டன்ஸிவ் கேர் படுக்கை வசதிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

சீனாவும் இந்தியாவும் உலகின் பாதிக்கும் மேலான மக்கள் தொகையுடைய நாடுகள்... அவை எப்படி செயல் பட வேண்டும் எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுகள் முன் மாதிரிகளாக விளங்கும்.

சீனா மாவோவின் காலத்திலேயே கடும் சுகாதாரக் குறைபாட்டை கண்டதால் பேர் பூட் மெடிகல் ஒர்க்கர் என ஓரளவு படித்த மனிதர்களை எல்லாம் பயன்படுத்தி காடு மேடு நாட்ட்டின் கடைக்கோடி மனிதர்களை எல்லாம் சுகாதாரமும் மருத்துவமும் சென்றடைய வைத்து விட்டது....மேலும் உக்கான் உலகக் கேடு ஆரம்பித்த இடமாக இருந்தாலும் அதிலிருந்து ஈடேறி வந்த கதையும் 9 நாட்களிலேயே மாபெரும் மருத்துவமனை ஒன்றையும் உலக சாதனை நிகழ்வாக நிகழ்த்திக் காட்டி விட்டது

என்றாலும் ஐக்கிய அமெரிக்கா சீனா தனது இழப்பின் புள்ளி விவரங்களை அவ்வளவு வெளிப்படையாக உலகுக்கு தெரிவிக்கவில்லை என்றும் சொல்லி வரும் நிலையிலும் அவர்கள் கிணறு தாண்டிவிட்டதாகவே படுகிறது மற்ற 202 நாடுகளும் இன்னும் குழியில் விழுந்து கொண்டும்  மேலும் ஆழத்தில் விழுந்து கொண்டும் தடுமாறிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் தான்
மகாத்மாவின்  சுயராஜ்ஜியம், அல்லது இராம ராஜ்ஜியம் அல்லது கிராம சுயராஜ்ஜியம் என்ற கனவும், அப்துல் கலாமின் 2020 கனவும், மார்க்ஸ் சொல்லிய ஸ்டேட்லஸ் கவர்ன்மென்டும் நினைவுக்கு வர வேண்டிய அம்சங்கள்

அதன் படி தங்களைத் தாங்களே ஆளுகின்ற இப்படிப் பட்ட வடிவங்களிலான ஆட்சி முறைமைகள் மட்டும் அமலுக்கு வந்திருந்தால் இங்கு மட்டுமல்ல எங்குமே காவலர், இராணுவம், மத்திய நிதி, மாநில நிதி, ஐநாவின் பில்லியன் கோடி நிதி உதவி ஆள்வோர் ஆளப்படுவோர் போன்ற எவற்றுக்குமே அவசியம் இருந்திருக்காது. சாமியார்கள் வேண்டுமானால் அவர்களுக்கு தேவையானபடி காவலரை ஒரு நேரத்தில் புகழ்வார் ஒரு நேரத்தில் இகழ்வார் ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றானபின்னே பாகிஸ்தான் இராணுவ வீரர் இறந்தாலும் நமது வீரர் இறந்தாலும் இறப்பு என்பது சமூக அடிப்படையில் உயிர் போகும் ஒரு போர் உத்தி. குடும்பத்தின் சோகம்.

நாடுகளின் கோடுகளை, எல்லைகளை எல்லாம் தாண்டி நீ யார் என்றால் நான் ஒரு மனிதம் என்று சொல்லக் கூடிய பக்குவ நிலை ஒவ்வொரு மனிதர்க்கும் வரவேண்டும் என்கிறார் தத்துவ அறிஞர் ஜே.கே. (ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி) அதுவே கலாமும் ஐநாவில் பேசியது அதுவே ஆயிரக் கணக்கான ஆண்டுக்கும் முன் கணியன் பூங்குன்றனாரும் போற்றி எழுதியது...

குடியரசுத் தலைவர் முதல் ஊராட்சியில் உள்ள பிரதிநிதி வரை அனைவருமே மக்களின் சேவகர்கள்தான்...மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் ஊழியர்கள் தாம்...இதில் எந்தவித மாறுபட்ட கோனங்களுக்கும் அவசியமில்லை...ஆனால் அந்த அளவு பொறுப்பையும் கடமையும் உணர்ந்த மக்களும் வேண்டும்...

மக்கள் தாம் அவர்களின் எஜமானர்கள், ஆள்வோர் எல்லாம் மக்களின் எஜமானர்கள் அல்ல என்ற குரல் ஏதோ வித்தியாசமானதாக கேட்க புதுமையாக இருப்பதாக எண்ணும் எண்ணமே தேவையில்லை. அந்தக் குரல் மட்டுமே உண்மையானதாக எல்லா ஜனநாயக முறைமைகளாலும் ஜனநாயகத்தை மக்களாட்சியை நிறுவ எண்ணும்  மக்கள் தலைவர்களாலும் எண்ணப்பட்டவை பேசப்பட்டவை ஆனால் அவை உருவாக்கம் பெறவில்லை என்பதுவே காலச் சூழல்

இது போன்ற மனோபாவம் ஆட்சி முறைமைகள் இல்லாதவரை ஆட்சி பற்றியும் காவல் பற்றியும் தண்டனை பற்றியும் இது போன்ற பிரமைகள் இருக்கவே செய்யும், நெறி முறை என்னும் ப்ரோட்டோக் கால் மக்களுக்குத் தேவையான வசதியான மேம்படுத்திக் கொள்ளுமளவில் மாற்றப் படுவதுதான் ஆட்சி முறைக்கு அழகு. அதன் உச்சமே அந்த சுயராஜ்ஜியம் அல்லது கிராம ராஜ்ஜியம் அல்லது ஆட்சி ஆளுமை இல்லாத ஸ்டேட்லெஸ் அரசு கவர்ன்மென்ட் ஆளுமை என்பது எல்லாமே...

அப்படி உருவாக்கும் கிராமிய அமைப்புகளில் அல்லது குழுக்களில் தங்களைத் தாங்களே நிர்வாகம் செய்து கொள்ள அதற்கு அதற்கு என்ற பொறுப்புள்ள குழுக்கள் இருக்கும் அவை யாவற்றையும் நிர்வகிக்கும்...ஆனால் அது உலக அளவில் இன்னும் இல்லை எனவே அது பற்றிய கற்பனையும் இன்னும் கிடைக்கவில்லை...ஒரு தலைவன் அல்லது தலைவர் வேண்டும் அவர் சொல்வதை நாம் அனைவரும் கேட்க வேண்டும்  எனவே ஏகப்பட்ட  தலைவர்கள் தலைமகள் கட்சிகள் வாக்கு வங்கிகள், சாதி மத பிரிவினைகள் எல்லாமே...

தங்களைத் தாங்களே ஆள , தமக்கு தாமே தலைமை ஏற்க ஒவ்வொரு மனிதரும் கற்கும்போது அந்தப் பொறுப்புணர்வையும், கடமையும் செய்ய ஆரம்பிக்கும் போது இது போன்ற கடமையை அரசுகள் நினைவூட்ட வேண்டிய அல்லது தேவைப்படும்போது தண்டிக்க வேண்டிய அவசியங்கள் எல்லாம் இருக்கவே வாய்ப்பில்லை...

ஆனால் அது போன்ற ஒரு அரசை நிறுவ அதன் வழியான கல்வி, ஒழுக்கம் போன்றவை வேண்டுமே அடித்தளமாக‌

எளிமையில் சொன்ன மார்க்ஸ்: கம்ப்யூனிசம் என்றால் என்ன என்பதற்கு: ஒரே வரியில் சொன்னால் : தனியார் என்பதே இல்லை என்றார். தனியார்  வசம் சொத்து இல்லை என்றால் முதலாளித்துவம் என்ற சொல்லே அங்கு அறுபட்டு விடுகிறது.ஒரே வரியில் சொல்லப்போனால் கம்யூனிசம் என்றால் தனியார் சொத்து என்பது இல்லாதது...என்பார்...
Erode District | Tamil Nadu | Turmeric City | India
இங்கு சினிமாவில் கூட ஒரு நாயகன் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறோம் அவனே ஆட்சி முறையிலும் வந்து காப்பாற்றுவார் என்றும் எண்ணங்களில் மூழ்கித் தவிக்கிற சிந்தனை உண்டு பண்ணுகிற அமைப்பு....முதலில் இவர்களை எல்லாம் படிக்க வைக்க வேண்டும்...அதில் எல்லா சித்தாந்தங்களும் வரட்டும் அதன் பின் அதில் எது சிறந்ததோ அதில் அவர்கள் பின் பற்றட்டும்...

எதற்குமே உதவாத படிப்பு, அல்லது பொருளாதார நோக்கமுடைய படிப்பு அல்லது வேலைக்கு சென்று ஏற்ற இறக்கமில்லாமல் உத்தரவாதமில்லா வாழ்க்கையில் உத்தரவாதத்துடன் ஊதியம் கிடைத்து பசி பஞ்சம் பட்டினி வறுமையில் இருந்து வெளியேற வேண்டிய படிப்பு இது இருந்தால் மட்டும் போதும் என்கிற இந்தியாவின் கல்வி முறை கற்றுத் தருவதே முதலாளித்துவ சிந்தனையில் ஊறிப்போன இங்கிலாந்து அமெரிக்க முறையிலான கல்வி  கலாச்சாரத்தை மட்டுமே...

எனவே சக மனிதராக அனைவரையும் மதிக்கத் தெரிவது அவசியம்...அவர் அந்த வேலையில் இருப்பவர் இந்த வேலையில் இருப்பவர் என அல்லாமல்...பணியைத் தேர்வு செய்வது அவர்கள் தனி மனிதப் போக்கு...மனிதர்களை மதிக்க வேண்டுவது சமுதாய நோக்கு...

12 Best love quotes in tamil images in 2020 | Tamil love quotes ...
எல்லா உயிர்களையும் நேசிப்பதும் இயற்கையை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது என்ற நிலை இருந்திருந்தால் இது போன்ற பேரிடர் எல்லாம் வந்தே இருக்காது..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

No comments:

Post a Comment