Saturday, June 8, 2019

மொழியை கற்றல் பிழையல்ல கட்டாயப்படுத்தல் முறையல்ல: கவிஞர் தணிகை

மொழியை கற்றல் பிழையல்ல கட்டாயப்படுத்தல் முறையல்ல: கவிஞர் தணிகை

Image result for learning language and learning through language

படிக்கும் தருவாயில் மேலும் அவர்கள் மேல் மொழிச்சுமையை ஏற்படுத்தல் அவசியமற்ற பிணி.

சுவாமிநாதன் எம்.எஸ் அறிக்கை அல்லோகலப்பட்டு கடைசியில் என் போன்ற கடையனும் கூட எழுத வேண்டி நேரிட்டு விட்டது. மொழியை கற்பது என்பது ஒரு போதும் தவறாகாது அதே சமயம் கட்டாயப்படுத்தல் என்பதும் நெறியாகாது.

சி. என் அண்ணாத்துரை எம்.பி. நேருகாலத்தில் பாராளுமன்றத்தில் அதிகம் காகம் இருப்பதால் அதை ஏன் தேசியப்பறவையாகக் கொள்ளாமல் மயிலை தேசியப் பறவை என்கிறோம் என்ற பேச்சு பிரபலமானது. அனைவருமே அதை இரசித்து கை தட்டி வரவேற்றார்கள் என்பது சரித்திரம்.

அதிலிருந்து பெரிதும் காலம் விலகித் தள்ளிப் போனாலும் நிலை என்னவோ அப்படியே ஒரு சுழற்சியில் மறுபடியும் வந்து நின்று கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மத்திய அரசு ஊழியரை அறிக்கை அனுப்ப சென்ற மோடியின் ஆட்சி நியமித்து பணித்திருந்தது. அது பலருக்கும் தெரியாது அப்போதே அது மாநில ஆட்சியின் உள் ஊடுருவி விட்டது.

1983 வாக்கிலேயே மத்திய நேரு யுவக்கேந்திரா நிறுவனத்தில் பணி புரியும் போது இந்திக் கடிதங்களும், இந்தியில் கடித வாசங்களும் இடம் பெறுவதை நான் கவனித்ததுண்டு. அதே போல வானொலி, தொலக்காட்சி அழைப்புக் கடிதங்களில் கூட இந்தி இடம் பெற்றே இருந்து வருகிறது. செய்தி ஒலிபரப்புத் துறையில் இந்திராவும் வாஜ்பேயி போன்றொரும் மத்திய காபினட் அமைச்சர்களாக இருந்தவர்கள். வாஜ்பேயி ஐ.நா சபையில் முதன் முதலில் இந்தியைப் பேசி பெருமையுற்றிருந்தார்.

இரு மொழி தெரிந்தால் இருவருக்குச் சமம் என்பார்.
தெலுகு பேசும் மாநிலத்தில் இருக்கும்போது நாம் தெலுங்கை கற்றுக் கொண்டே ஆகிறோம். கன்னடம், மலையாளம், ஒடிஸா இப்படி எல்லா இடங்களிலும் அந்த மாநிலத்தின் மொழியின் ஆதிக்கம் அவசியம் இருக்கின்றன‌

ஆனால் தமிழகத்தின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலும் உத்தரவாதமில்லை வாழ்வாதாரமும் இல்லை அடுத்து இப்போது மொழி.இந்தியவை ஔரங்க சீப் முழுதாக ஆல நினைத்தபடி ஆள முனைகிறார்கள். ஆனால் அப்போதும் போல இப்போதும் தமிழகம் தனித்தே நிற்கிறது

இதெல்லாம் சரிதான். நீதிமன்ற மொழியில் ஏன் இன்னும் தமிழ் இல்லை, தமிழகத்தின் ஆட்சி மொழியாக , தமிழக அல்வலகங்களிலும் முழுமையாக தமிழ் இடம்பெறவில்லை. ஏன் பள்ளிகளில் அவசியம் தமிழை ஒரு மொழியாக எல்லா பள்ளிகளிலும் பயிற்றுவித்தாக வேண்டும் என்ற சட்ட திட்டம் இல்லை இதெல்லாம் நாம் கவனித்தாக வேண்டும். சும்மா ஒரு சாலையோரம் முன்னால் உள்ள ஒரு அலுவலகத்தின் வாசலில் தமிழ் வாழ்க என எழுதி விட்டல் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. தமிழ் மிகவும் சொல்லத் தரமில்லாமல் தாழ்ந்தபடி ஆகி பல்லாண்டு ஆகி ஓடி மறைந்தபடி உள்ளது. நன்றி, வணக்கம் என்றாலும் கேவலமாகப் பார்க்கப்படுகிறது.டேங்க்ஸ் என்ற வார்த்தையை தேங்ஸ் என்று கூட சொல்லத் தெரியாமல் பலரும் பயன்படுத்தி வரும்போதே ஆங்கில மோகத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது ஆங்கில அறிவு என்பதை பெரிய பூச்சாண்டியாக கோவிலில் சமஸ்கிருத பூச்சாண்டி காட்டுவது போல காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ் மட்டுமே தெரிந்த எனக்கு நாடு முழுதும் சுற்றும் வாய்ப்பும் பணி புரியும் வாய்ப்பும் கிடைத்தது. சில பிரதேச மொழிகளைக் கற்றுக் கொண்டோம்.ஆனால் இந்தி மொழி முழுதாகத் தெரியாது. தோடா தோடா. ஆனால் கேரளத்து, ஆந்திரத்து, கன்னடத்து  தென்னிந்திய இளையோர் அனைவருமே இந்தியை ஓரளவு தெரிந்து வைத்து சமாளித்து விடுகிறார்கள்.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் ஒரிஸ்ஸாவில் பிரதேச மொழியும் இந்தியும் தெரியாமல் இறங்கத் தெரியாமல் ஓரிரவை கோரபுட் மாவட்டத்தில் காளி மேளா என்ற கிராமத்துக்கு சென்றடைய வேண்டியவர்ன் அதைக் கடந்து சென்று அந்த இரவை அந்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனருடன் தங்கி மறுபடியும் திரும்பி அதே பேருந்தில் திரும்பி வந்து இறங்கிய அனுபவம் எல்லாம் எனக்குண்டு.

அந்த வடபுறத்து மக்களுக்கு இந்தி தொடர்பு  மொழியாக உள்ளது தாய்மொழியாக இல்லாவிட்டாலும், அதே போல தென்னிந்தியாவில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தினர் இந்தியை தொடர்பு மொழியாக பயன்படுத்த தெரிந்து கொண்டுள்ளனர்.

நம்ம பாடுதான் எப்போதும் திண்டாட்டம்தாம்.

ஆனால் அதற்காக இவர்கள் சொல்கிறார்கள் என்று நாம் அந்த மொழியை கற்றுக் கொண்டேயாக வேண்டுமென்பதெல்லாம் தேவையில்லை அவசியமான  ஒன்று இல்லைதான். எதுவுமே தெரியாத அவர்கள் மொழி மட்டுமே தெரிந்த ஜப்பான்காரர்களும் சீனாக்காரர்களும் மலேசியன்களும் இன்று இந்தியாவுக்கு வந்து தங்கள் தேவையை செம்மையாக நிறைவு செய்து கொண்டே செல்கின்றனர்.

ஆனால் இது போன்ற காரணத்தை வைத்துக் கொண்டு நமது இளையவர்க்கு வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்துவது, தேர்வுகளில் பம்மாத்து,ஏமாற்றுவது கோல்மால் செய்து தமிழ் தெரியாதாரை தமிழ் பாடங்களில் தேர்ச்சி பெறுவதாக திருத்தி மதிப்பெண் தருவது, நமது தேர்வாணையக் குழுக்களில் எவர் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்று அனுமதித்து அவர்களுக்கு வேலை தந்து நமது இளைஞர்கள் கண்ணில் மண்ணைத் தூவுவது எல்லாம் ஒரு நாளைக்கு தமிழ் மாந்தர்க்கே தமிழ் மண்ணில் வேலை என்ற ஒரு போராட்ட குணத்தை கையில் எடுத்து பிற மாநிலத்தில் நடப்பது போல இந்த வெளித்தெரியாத வன்முறைக்கு எமது தமிழ்க்குலம் சா மாணி அடிக்கும். நமக்கு இன்னல்களைத் தருவது போன்றவற்றை ஏற்படுத்த இந்த அரசியல்காரர்களுக்கு துளியும் அருகதை கிடையாது . ஆட்சியாளர்கள் இந்த விடயங்களில் தலையிட துளிகூட உரிமை கிடையாது
Related image
மொழியைக் கற்பது என்பது அவரவர் சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது.

நம்ம நாட்டில் வடக்கே எல்லாம் போக வேண்டுமெனில் இந்தியைக்  கற்றுக் கொள்வது நல்லது என்பேன். ஏன் எனில் நாம் தொடர்பு மொழி இல்லாமல் ஆகிவிடுகிறோம். நம்மிடம் இருக்கும் ஆங்கில தொடர்பு மொழி அங்கே பலனளிக்காது. பயனாகாது . ஏன் எனில் அவர்களுக்கு ஆங்க்கரேஜ் அதிகம் தெரியாது. அதிகம் என்ன அறவே தெரியாது.

பொதுவாகவே நமது ரயில்வே, வங்கி, இன்னபிற அரசு சேவைப்பணிகளில் தற்காலத்திய காலக்கட்டத்தில் பிற மாநிலத்து இளைஞரை அதிகம் காணமுடிகிறது. மேலும் ஆலைகள், கட்டத் தொழில், அபாயகரமான பால உயரமான டவர் வேலைகள் ஓட்டல் இப்படி எல்லாவற்றிலும் வடக்கத்தியார் வந்து நுழைந்து விட்டனர் நம்மாட்களுக்கு கொடுப்பதில் பாதி சம்பளமும், உணவுக்கான ஊதியமும் ஒரு சாக்கடை அருகே தங்க இடம் கிடைத்தாலும் அவர்கள் வாழத் தயார்தான். அதே நேரம் மிகவும் சுலபமாக எளிதாக குற்றமும் நிகழ்த்தி விட்டுச் செல்கிறார்கள் என்பதையும் எவரும் மறந்து விடக்கூடாது.

இவை எல்லாம் தற்காலத்தில் நிகழ்ந்து வரும் பரிமாற்றங்கள் இவை திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவா அல்லது காலத்தின் கோலத்தில் இந்தியாவின் நிலைப்பாடே இப்படி ஆகிவிட்டதா என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

இவர்கள் எல்லாம் சொல்லாமலே எல்லா மெட்ரிக் பள்ளிகளிலுமே இந்தியை ஒரு கட்டாயப் பாடமாகவே பிள்ளைகள் படித்து வருவதும் அதை மேல் நிலைப்பள்ளி வரும்போது வேண்டுமானால் தொடர்வதையும் வேண்டாம் என்றால் விட்டு விடுவதையும் பார்த்தே வரும்போது புதுக்கரடிகள் தேவயில்லைதாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment