Thursday, June 20, 2019

ஒரே நாடு ஒரே தேர்தல்: கவிஞர் தணிகை.

ஒரே நாடு ஒரே தேர்தல்: கவிஞர் தணிகை.

Image result for one country one election


நாடாளுமன்றத் தேர்தலையும் சட்ட மன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்திட ஆலோசனைக் கூட்டம் மத்திய அரசால் நடத்தப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கது. இதில் கலந்து கொள்ளாத சில எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மக்கள் சார் அக்கறை இல்லாதது. அதை யார் நடத்தினால் என்ன அது மக்களுக்கான ஒரு திட்டம் நாடு சார்ந்த நல் விளைவை ஏற்படுத்தும் திட்டம் அதற்கு அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்துக் கட்சிகளும் சபாநாயகரை எதிர்ப்பின்றி கொண்டு வந்தது போல கொண்டு வந்திருக்க வேண்டும். அதுதாய் நாட்டின்ன் மேல் அதன் மக்கள் பால் உள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கும்.

அதை விட்டு விட்டு அதில் எல்லாம் அரசியல் பார்த்துக் கொண்டு கலந்து கொள்ளாமல் விட்டவர்கள் மக்கள் சக்திக்கு எதிராக அடையாளம் காணப்பட வேண்டியவர்கள்தான். இந்த அம்சத்தைப் பொறுத்தவரை.

தெலுங்கான முதல்வர் தாம் கலந்து கொள்ள வில்லை என்றாலும் அதற்கு தமது பிரதிநிதியை அனுப்பி தமது நிலையை உறுதிப்படுத்தி பதிவு செய்துகொண்டது மாதிரியாவது அனைத்துக் கட்சிகளும் செய்திருக்க வேண்டும்.

மமதா, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்றோர்தாம் அதில் கலந்து கொள்ள முக்கியமாகச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் கலந்து கொள்ளச் செல்லாதது சரியான போக்கும் அல்ல‌

மேலும் இது குறித்து ஒரு ஆய்வுக் குழுவை அமைப்பதாக பிரதமர் செய்திருப்பதும் அந்த கூட்டம் மகாத்மாவின் 150 வது பிறந்த நாள், நாட்டின் 75 வது சுதந்திர தினம் பற்றி எல்லாம் கலந்தாலோசிக்கப்பட்டது என்ற செய்திகள் வந்துள்ளன.

மேலும் அ.இ.அ.தி.மு.க சார்பில் அமைச்சர் சண்முகம் மற்றும் நவநீதகிருஷ்ணன் எம்.பி ஆகியோர் கலந்து கொள்ளச் சென்றதாகவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதும்....இன்று துணை முதல்வர் நிதி வரவு செலவுக் கூட்டத்திற்கு சென்று மந்திரிகளை சந்திக்கவும் டில்லி செல்வதாகவும் செய்திகள்...ஏன் இதையே அந்தக் கூட்டத்திலும் கலந்து கொண்டு கையோடு இந்த நிகழ்வையும் இணைத்திருந்தால் அது தமிழக அரசுக்கு  நல்ல பேரை விளைத்து வலு சேர்த்திருக்குமே ...அது பற்றி எல்லாம் எவரும் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. எப்படியானாலும் அதிலும் அரசியல் கலந்திருக்கிறது

மேலும் இந்த சட்ட திருத்தம் வர அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இரு பாராளுமன்ற சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்றும் இருக்கிற படியால் இவை எல்லாம் நாட்டுக்குத் தேவை என்னும்போது அனைவரும் ஆதரிப்பதுதான் சரி.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் மக்களுக்கான திட்டத்தில் கலக்குவது போலவும் மந்திரிகளுக்கு 30 மாதங்கள் கெடு வைத்திருப்பது போலவும்

இதைப் பற்றி எல்லாம் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் அல்லது காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம் அல்லது தமிழக இலட்சியக் குடும்பங்கள் தேர்தல் சீர்திருத்தம், திரும்பவும் அழைக்கும் உரிமை பற்றி எல்லாம் 1980களில் இருந்தே எழுதியும் பேசியும் பிரச்சாரம் செய்தும் வலியுறுத்தி வந்தது.

தேர்தல் மாறுதல்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் இருந்தாவது நல்ல மாறுதல்கள் மக்களுக்கு நிகழட்டுமே...

இது பற்றி 2002ல் அத்வானி மன்மோகன் காங்கிரஸ் அரசிடம் கொண்டு சென்று போதிய ஆதரவு இல்லாமல் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் நிலவுகின்றன‌

ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற ஏன் ஊராட்சி மன்ற தேர்தலையும் கூட சேர்ந்து நடத்திட வகை செய்யவேண்டும் ஏன் எனில் அப்போதுதான் ஒரு நிலையான ஆட்சியை மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு சேர்க்க உண்மையான அரசியல் ஆர்வலர்களால் ஈடுபட முடியும் அது மட்டுமல்லாமல் அப்படி அவர்கள் செயல்பட வில்லை எனில் அவர்களை திரும்பப் பெறும் அல்லது திரும்ப அழைக்கவும் வகை செய்யப்படவேண்டும்

இப்படிப் பிரித்து பிரித்து தனித்தனியாக நடத்திக் கொண்டே இருந்தால் தான் அந்த தேர்தல்களில் எல்லாம் மக்களை  சந்திக்கிறோம் என்று சொல்லி ஊழலின் ஊற்றுக் கண்கள் கூட்டணி சாதிய வாக்கு வங்கி போன்றவற்றில் கவனம் செலுத்தவும் ஒரேயடியாக எல்லா இடத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று பயம் கொண்டே இவர்கள் தவிர்த்து வருகிறார்கள்.


Image result for one country one election

இதே போல மூன்றுக்கு இரண்டு பங்கு மெஜாரிட்டி இருசபையிலும் காட்டி நதி நீர் இணைப்பையும் செய்து முடிக்கும் அரசே நாட்டுக்கான அரசாக அமையும்.

நீரில்லாக் கோடையில் எங்கள் வீட்டின் கெம்ப்ளாஸ்ட் இரசாயன நீர் விட்டு ஊரை நிலத்தடி நீரை நிலத்தைக் கெடுத்த கழிவு நீர் ஓடையருகே குடி இருப்பார் சர்வே எண் சொல்லுங்கள் என நேற்று ஊராட்சி மன்ற ஊழியர்களோடு சிலர் வந்து கேட்டனர். அரசுக்கு இது ஏற்கெனவே உள்ள புள்ளிவிவரம். எந்த வித முன்னறிவிப்புமின்றி இப்படி நில அளவை எண் கேட்டால் அதை யார் நினைவில் வைத்து சொல்லிவிட முடியும்...இப்படி திடீர் திடீர் என கண்ணாமூச்சு ஆடாமல் புள்ளிவிவரம் சேர்க்க வருவார் தாங்கள் யார் என்று சொல்லி, எதற்காக இந்த புள்ளிவிவரம் சேகரம் என்று சொன்னால் எல்லா மனிதர்களுமே உரிய கால அளவு கொடுத்தால் எல்லா புள்ளி விவரமும் தரவும் முடியும் திட்டங்களும் நிறைவேற்றவும் முடியும்.

அப்படித்தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலும். எல்லா நேரங்களிலும் மாற்றி மாற்றி தேர்தல் தேர்தல் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நாட்டில் எந்தப் பணிதான் நடக்க முடியும்...பாராளுமன்றத் தேர்தல் இப்போதுதான் முடிந்தது இப்போது ஊராட்சி மன்றத் தேர்தல் வருகிறது இது முடிந்த கொஞ்ச காலத்தில் சட்ட மன்றத் தேர்தல் என்பார்கள் இப்படியே 5 ஆண்டு சுழற்சிக்குள் 3 தேர்தலும் மக்களை சுழலில் ஆழ்த்தி நாட்டை குழப்பத்திலேயே கொண்டு சென்று விடுகின்றன. அதை எல்லாம் எடுத்து கூட்டுறவு சங்க தேர்தல் என்பார், தொழிற்சங்கத்தேர்தல் என்பார் இப்படி மக்களாட்சி தத்துவம் நாராக கிழிபடுவதை விட தேர்தல் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு திட்டத்தின் அடிப்படையில் மக்களுக்கு என்ன பணி நிறைவேற்றப்படுகின்றன என்ற ஆய்வுப் பணியின் அடிப்படையில் மறு தேர்தல்கள் வர அவகாசாம் இருக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment