Friday, June 14, 2019

மேட்டூர் ரயில் என்னாயிற்று? பவானி தொப்பூர் நெடுஞ்சாலை என்ன ஆயிற்று? கவிஞர் தணிகை

மேட்டூர் ரயில் என்னாயிற்று? பவானி தொப்பூர் நெடுஞ்சாலை என்ன ஆயிற்று? கவிஞர் தணிகை

Image result for salem to mettur train cancelled?

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் சேலத்திலிருந்து மேட்டூர் 5 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலை ரத்து செய்தார்கள் மறுபடியும் அந்த ரயிலை ஓட்டவே இல்லை.

வெறும் கூத்துக்கு மீசை வைப்பது போல காலை சேலத்திலிருந்து எடுத்து வந்து மேட்டூரில் பகல் முழுதும் நிறுத்தி விட்டு இரவு 7 மணிக்கு மேட்டூர் ரயில்வே நிலையத்தில் நிறுத்த இடம் இல்லாதது போல சேலத்துக்கு கொண்டு சென்று நிறுத்தி வருகிறார்கள். சரியான அரசியல் பம்மாத்து.

இதைப் பற்றி புகார் ஏதும் வரவில்லை என்கிறார்கள். ஆனால் எந்தவித புகாரையும் மேலே அனுப்ப மறுக்கிறார்கள் என்பதுவே உண்மை. மேல் அனுப்பினாலும் எந்தவித பொறுப்பான வினையாற்றுவதும் இல்லை என்பதெல்லாம் வேறு விடயங்கள்

மாநில வருவாய்த்துறைக்கே பிப்ரவரி 7 ஆம் தேதி வாக்கில் ஆன்லைனில் கொடுத்த புகாருக்கு உங்கள் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற பதில் நேற்று அதாவது ஜூன் 13ல் கிடைத்திருக்கிறது. இவ்வளவு விரைவாக அரசுப்பணி நடந்து வருகிறது. ஜெ உடல் நலக்குறைவால் அரசு ஸ்தம்பித்த்ததுபோல  ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தவித்துக் கொண்டிருக்கவே நேரம் போதவில்லை ஆட்சியாளர்களுக்கு.

இந்நிலையில் ரயில்வே பற்றி சொல்லவே வேண்டாம்.

இதில் பெருத்த அரசியல் மோசடி இருக்கிறது. எல்லா தனியார் பேருந்துகளும் சேலம் பேருந்து நிறுத்தத்திலேயே ஓவர் லோடாக ஸ்டேன்டிங்கில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தியை புதிய தலைமுறை தனியார் தொலைக்காட்சி கூட கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒளிபரப்பியது அந்தக் காணொளியின் எனது உரை வீச்சு இடம் பெற்றிருந்தது அது முன்னால் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கொ.க.மணி மற்றும் இப்போதைய சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் முன்னிலையில் இடம் பெற்றிருந்தது.

அதுவும் அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகளுக்கு எதற்கிந்த மௌஸ் எதற்கிந்த கிராக்கி என்றுதான் தெரியவில்லை. கேட்டால் ஒரு விவசாயி சொல்கிறார் சில நகர பேருந்துகளின் கட்டணத்தை விட இந்த தனியார் பேருந்துகளின் கட்டணம் ஓரிரு ரூபாய் குறைவு என்கிறார். எனவே 15 கி.மீ போவதற்கும் கூட நகர பேருந்தில் ஏறுவதை விட இந்த நெருக்கியடிக்கும் தனியார் பேருந்தில் ஏறி வருகிறார்கள். பின்னால் அரசு நகரப் பேருந்து காலியாக வரும்போதும்

Image result for thoppur to bhavani new highway map


மேட்டூருக்கு நேரடியான புக்கிங்க் வசதி சென்னையில் இருந்து இல்லை சேலம் வரைதான் என்பதும் ஆம்னி சொகுசு பேருந்துகளில் என்பதும் அடிக்கடி சென்னை சென்றுவருவார் பகிர்ந்து தரும் செய்திகள்.

சரி இதுதான் இப்படி என்றால் தொப்பூர் முதல் பவானி வரை தேசிய நெடுஞ்சாலை ஆக்கப்படும் 4 வழிப் பாதையாகும் என்று நிதின் கட்காரி அடிக்கல் நாட்டியதாக எல்லாம் செய்திகள் வந்து ஆண்டுகள் சில ஓடினாலும் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது.

அப்போதைய மத்திய மாநில நெடுஞ்சாலைத் துறைகள் சாலையோரத்து கடை முதலாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக் கொண்டு அந்த திட்டத்தை அப்படியே இருக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்ற ஆதாரம் இல்லா செய்திகளாக சொற்கள் உலவி வருகின்றன.

எதற்கும் ஆதாரம் வேண்டுமே...ஆதாரம் இல்லாமல் தேர்தல் நிதி 500 கோடி  வாங்கினாலும் தொண்டர்களே கேட்பார்களே நீங்கள் பார்த்தீர்களா எப்படிச் சொல்கிறீர் அதற்கான ஆதாரம் உண்டா என்றெல்லாம்...எனவே இயற்கையும் காலமும் அதற்கான ஆதாரங்களை தோண்டி எடுத்து தண்டனையாய் மாற்றித் தரும் வரை இவர்களை எல்லாம் தண்டிக்க மனித அமைப்புகளுக்குள் வழி இல்லை...

தற்போது சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பியும், தர்மபுரி எம்.பி. மரு. செந்தில்குமார் அவர்களும் இதற்கு எல்லாம் வழி செய்தால் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக வாக்களித்த மக்கள் மகிழ்வார்கள்.
Related image




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment