Wednesday, January 23, 2019

மேட்டூர் ஆர்.சி.பிளான்ட எனப்படும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலை முன் பல உயிர்கள் ஊசாலாடிக் கொண்டிருக்கின்றன: கவிஞர் தணிகை

மேட்டூர் ஆர்.சி.பிளான்ட எனப்படும் கெம்ப்ளாஸ்ட் சன்மார்  ஆலை முன் பல உயிர்கள் ஊசாலாடிக் கொண்டிருக்கின்றன: கவிஞர் தணிகை

Related image

தினமும் இந்த தை மாத அடர் குளிரில் நான் பணிக்கு பேருந்து பயணம் செல்கையில் இரத்தக் கண்ணீர் வடிக்க நேரிடுகிறது இந்த ஆர்.சி.பிளாண்ட் கேட் வாயிலில் பல பயிற்சி தொழிலாளர்கள் படுத்துக் கிடக்கிறார்கள். உண்ணாவிரதம் நடந்தபடியும் இருக்கிறது.... ஆனால் என்னைப் போன்ற மனிதர்கள் யாவரும் அவரவர் வாழ்வை பார்த்தபடி அவர்களைக் கடந்த படி இருக்கிறோம்...மனிதர் என்பதற்கே வெட்கப்படுகிறேன். நாடு ஆட்சி என்பதற்கே சொல்ல நா கூசுகிறது.மனம் வெறுக்கிறது...

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதற்கண்டும்
சிந்தை தெளியாரடி கிளியே
செம்மை மறந்தாரடி....பாரதி...

மேட்டூர் மண்ணை நீர்வளத்தை கெடுத்த இந்த பெருமுதாலாளியான நிறுவனம், இன்று இந்த சிறு இளைஞர்களை குறிவைத்து பந்தாடி வருகிறது இதற்கு அரசும் உடந்தை.

கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி கொளத்தூர் மேட்டூர் பிரிவு ஒன்றுதான் போஸ்டர் அடித்து தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

கடந்த நாடுதழுவிய அளவில் நடந்த வேலை நிறுத்தத்தில் இந்த பயிற்சி தொழிலாளார்கள் அதாவது அரசிடம் பாதி, ஆலையில் பாதி என ரூ. 8000 பயிற்சி ஊதியம்  பெற்ற‌ பெறும் ஓராண்டு பணி முடிவடைந்த இளைஞர்கள் வேலையை பணி நிரந்தரமாக்கக் கோரியதை மனதில் வைத்தும்
Image result for chemplast sanmar ltd mettur
ஏற்கெனவே இந்தக் கம்பெனியின் இரண்டாம் பிரிவு ஒரு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதன் எதிரொலியாக‌ எங்கே சங்கங்கள் வலுவடைந்து விடுமோ என்று பணக்கார ஆளும் வர்க்கம் குறிவைத்து காய்நகர்த்தி நாடு தழுவிய வேலை நிறுத்த நாளன்று தேர்வு வைத்து வராதவர்களை நீக்கி விட்டதாக அறிவித்து விட்டது. இந்த இளைஞர்கள் தொழிற்சங்கங்களை நம்பி அன்று சென்று தேர்வு எழுதுவதற்கு மாறாக வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டு தங்களது வாழ்வில் ஒரு பேரிடரை சந்தித்து விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு தங்களது தலைக்கே தாங்களே குறிவைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்களுடன் சேர்ந்து சாகவேண்டுமானால் துணிந்து சென்று சாகலாம்

ஆனால் இவர்களை நாம் செத்தால் கூட காப்பாற்ற முடியாமல் இருக்கும் நிலையே நிலவுகிறது. இந்நிலையில் தொகுதியின் மாபெரும் அரசியல் வாதிகள் எல்லாம் கூட செய்தி தெரிந்தும் தெரியாதார் போல இருந்து வருவதுதான் வேதனைக்குரிய துன்பம். ஏன் என்றால் அவர்கள் தேர்தலுக்கும் முன் இவர்களை எல்லாம் கண்டு கொண்டதுண்டு. இப்போதும் தேர்தல் வருகிற நேரம் காலம் வந்து விட்டதல்லவா?
Image result for chemplast sanmar ltd mettur
என்று தணியும் இந்த இளைஞர்களின் சோகம், இறந்த பின்னா?

அவர்கள் என்ன வேலைதானே கேட்கிறார்கள், நிரந்தரமாக‌
அவர்கள் என்ன ஊதியம் தானே அதிகம் கேட்கிறார்கள் வாழ்க்கை நடத்த‌

அதற்கா இந்த பெரும் தண்டனை ...அரசும் இவற்றுக்கு யாவும் உடந்தைதான்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment