Wednesday, January 23, 2019

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மேலான தடையும் மக்கிய மனிதர்களும்: கவிஞர் தணிகை

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மேலான தடையும் மக்கிய மனிதர்களும்: கவிஞர் தணிகை

Image result for usage of one time using plastic carry bags


பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்ற ஒரு அரசின் தடை எந்நிலையில் இருக்கிறதோ

பொது இடங்களில் பான் பராக், குத்கா, பான் மசாலா பயன்படுத்த தடை என்ற ஒரு அரசின் தடை எந்நிலையில் இருக்கிறதோ

அதை விட கேவலமாக ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மேலான தமிழக அரசின் தடையும் இருக்கிறது.

நீலகிரியில் நெகிழிப் பைகள் உல்லாசப் பயணிகளிடம் காண் நேர்ந்தால் ரூபாய் இருநூற்று ஐம்பது அபராதமாம்

ஆனால் சேலத்தில் நான் சென்று வரும் இடங்களில் அதாவது மேட்டூர் முதல் சேலம் மற்றும் அரியானூர் வரை நான் இந்த சில நாட்களில் கண்டது இந்த மக்கிப் போகும் மனிதரிடம் இந்த மக்காத பைகள் புழக்கத்தில் இருப்பதாகவே.

ஒரு மருத்துவர் இப்படிப்பட்ட நெகிழிப்பையில் தாம் சிற்றுண்டி வாங்கிச் சென்றார் நானே கண் கூடாகவே பார்த்தேன்

சேலம் சந்திப்புக்குச் செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் இன்னும் தேநீர் நெகிழிப்பைகளில் தயாரிக்கப்பட்டு ஊற்றி கட்டிக் கொடுக்கப்படுவதை கண் கூடாகவே கண்டேன்.

எனது துணைவியார் நேற்று சென்று வாங்கி வந்த மளிகைப் பொருட்களில் இரண்டு பொட்டலங்கள் செய்தித் தாள்களில் பழைய மாதிரி கட்டப்பட்டு சணல் கயிறுகள் மூலம் பிரியாமல் இருக்கக் கட்டப்பட்டிருந்தன என்பது வரவேற்கத் தக்கதாகவே இருந்தாலும் மற்ற பாக்கெட்கள் அதாவது பெரிய கம்பெனிகளின் பாக்கெட் பைகள் அப்படியேதான் இருந்தன...
Image result for usage of one time using plastic carry bags
நான் எனது விலாசத் தொடர்பு அட்டையை ஒரு நெகிழிப்பையில் போட்டு வைத்திருப்பது வேர்க்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக வைத்திருப்பதைக் கூட எடுத்து விட்டேன்...நான் மாறி விட்டேன்...ஏன் எந்தப் பொருளையுமே நெகிழிப்பைகளில் வாங்குவதை அறவே பல ஆண்டுகளாகவே தவிர்த்தே வருகிறேன்.

இந்நிலையில் ஒரு நாள் புகைவண்டிப் பயணத்தின்போது ஒரு ரயில்வே ஊழியர் அல்ல அலுவலர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து விட்டு மேடையில் அவர் எம்.ஜி.ஆர் பாடலுக்கு நடனமும் ஆடியதை அவரே விவரித்தபடி மற்ற இருவரிடம்,,.என்னுள் உள்ளே புகைந்து கொண்டிருக்க...அவர் சொல்கிறார் என்ன ஆட்சி இது...குஸ்கா முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கினேன்  பைக்கு கட்டிக் கொடுக்க என ஐந்து ரூபாயாம் ஆக மொத்தம் நாற்பது ரூபாய் எடுத்துக் கொண்டான் கடைக்காரன் பிளாஸ்டிக் பையாக இருப்பதே பரவாயில்லை...நாசமாகட்டும் இந்த தடை ...என்றெல்லாம் பேசியபடி வந்தார் அந்த அறிவு ஜீவி.

அரசு இந்த விவகாரத்தில் பெரும் அறுவடை ஒன்றை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஏன் எனில் மது பான வியாபாரத்தை தடை செய்யாத அரசு, இந்த நெகிழிப்பை விசியத்தில் மட்டுமென்ன ஒழுங்காகவா நடந்து கொள்ளப் போகிறது>?

இல்லை இல்லை இருக்கவே போவதில்லை

ஏன் எனில் ஒரு நல்லாட்சி புரியும் ஒரு அரசு எனில் மதுபான ஆலைகளை எல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் மூடிவிட்டால் பிரச்சனைக்கு எளிதான முற்றுப் புள்ளி
Image result for usage of one time using plastic carry bags
ஒரு நல்லாட்சி புரியும் அரசு எனில் நெகிழிப்பைகள் தயாரிக்கும் அத்தனை ஆலைகளுக்கும் மூடு விழா நடத்தி விட்டால் ஒரு எளிதான முற்றுப்புள்ளி

பான் பராக், குத்கா,பான் மசாலா கம்பெனிகள்,
சிகரெட் பீடி கம்பெனிகள் இவற்றுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தி விட்டால் இந்த கண்துடைப்பு சட்டஙக்ளும் ஏமாற்று திட்டங்களும் தேவைப்படுமா என்ன?
Image result for usage of one time using plastic carry bags
ஆக எல்லா இடங்களிலும் சட்ட ஒழுங்கு கடைப்பிடிக்கப் படுவதாக ஒரு பாவனை நிலவுகிறது...ஆனால் எல்லா இடங்களிலுமே கடுமையான சட்டம் அமல்படுத்தப் படுவதாக எல்லாம் எவரும் நினைக்க முடியாது...ஏன் எனில் எல்லா இடங்களிலும் இந்த அழிக்க முடியா அரக்கன் நெகிழிப்பை பூமி அழிப்பான் உயிர்கள் கொல்லி வழக்கம்போல் புழக்கத்தில் பழக்கத்தில் பயன்பாட்டில் இருந்தபடிதான் இருக்கிறது... அதன் ஆபத்தைப் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் சொல்லப் புகுவது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல...எனவே அது பற்றி தனியே அறிந்து கொள்ளுங்கள்...
Related image
இதனால் பெரும் பயன் பெற்றார் எவரோ அவருக்கே வெளிச்சம்...

ஹெல்மெட் தலைக்கவசம் சட்டம் அவ்வப்போது வந்து போய் எவர் எவரோ பைகளை நிரப்புவது போல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment