Sunday, September 9, 2018

ஓரினப் புணர்ச்சி இயற்கை மரபுக்கு எதிரானது, மனித குலத்தின் சீர் கேடானது: கவிஞர் தணிகை.

 ஓரினப் புணர்ச்சி இயற்கை மரபுக்கு எதிரானது, மனித குலத்தின் சீர் கேடானது: கவிஞர் தணிகை.

Related imageமங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு..
THIRUKKURAL ...THIRUVALLUVAR.இந்திய உச்ச நீதிமன்றம் மனித குலத்தின் இந்தியக் குடிமக்களின்  கலவி ஒழுக்கம் பற்றிய‌ சட்ட திட்டங்களுக்காக தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பை 6 வண்ணக் கொடி ஏந்தியவர்கள் பாராட்டி கொண்டாடி வரும் அதே காலக் கட்டத்தில் நான் மறுபடியும் ஒரு பாலியல் விழிப்புணர்வு நூல் 2 வெளியிட உத்தேசிக்கிறேன்.

ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண், மிருகங்களுடன் இப்படி வேறுபட்ட முறைகளில் பாலியல் கொள்வது இயற்கை விதிகளுக்கு முரணானது. அது மனிதகுலத்துக்கு மட்டுமல்ல மொத்த இயற்கைக்கே கேடு விளைவிக்கக் கூடியது. அடுத்து கன்றுகுட்டியை, எருமையை , பசுமாட்டை வன்புணர்ச்சி செய்வதும் கூட சரிதான் அந்த வட நாட்டு இளைஞர்களால் வேறு எப்படி தமது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட முடியும்>? சிறுமியரை, வேறு பெண்களை கற்பழிக்காமல் , வன்புணர்ச்சி செய்யாமல் இருந்தால் போதும் என்றும் கூட தீர்ப்புகள் எழுதப்படலாம்,.

சட்டமும் நீதியும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஒருநாட்டில் ஒருவனுக்கு ஒருத்திதான் மனைவி மேலும் மற்றொரு மனைவி என்றால் அது சட்டப்படி நீதிப்படி குற்றம் எனச் சொல்லும் அதே நாட்டில் மற்றொரு மதம் சார்ந்தார் எத்தனை மனைவி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் அதுவும் எத்தனை வயதில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது.  அதே போல குழந்தைகள் பெறும் எண்ணிக்கையிலும். அதே போல நாட்டுக்கு நாடு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம், தனிமனிதரிடம் துப்பாக்கி இருக்கலாம்,  பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம், மனைவிகள் வைத்துக் கொள்ளலாம்,  சொத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம் இலஞ்சம் வாங்கலாம் வாங்கக் கூடாது....இப்படி எப்படி வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கூட ஒழுங்காக அமல்படுத்துகிறதா என்பதுதான் கேள்வி. அவிக சிறுபான்மையினர் அவர்களுக்கு ஒரு சட்டம், இவிக பெரும்பான்மையினர் இவிகளுக்கு ஒரு சட்டம்.

குடும்பத்தில் தம்பிமார்களுக்கு சற்று கருணையை பெற்றோர் அதிகம் காண்பிப்பதும், அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு சலுகைகள் அதிகம் கொடுக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாட்டிலும் முன்பு சட்டஙகள் நீதி செய்தன.. ஆனால் இந்த பாலியல் கலவி முறைகளில் உள் புகுவது மாநிலத்தில் மட்டுமல்ல, குடும்பத்துள் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருள்ளும் புகுவது..

.ஒவ்வொருவரும் ஆடை, உணவு, வீடு இப்படித்தான் இருக்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது ஆனால் வழிகாட்டலாம் வழிகோல் வகுக்கலாம். இதெல்லாம் குலைந்து போகும் நிலையில்தாம் இயற்கை மீறிய நிலையில் வெள்ளப்பெருக்காயும், குளிர்காலம் வரும் காலத்தில் தகிக்க சகிக்க வொண்ணாத வெயிலுமாக மனிதர்களும் மற்ற உயிர்களும் அல்லாட வேண்டியதாகிறது. இயற்கையை அழிக்கும் பெரும் சக்தியாய் மனிதம் போய்விட்டது.இன்று இந்த செப்டம்பரில் வெயில் இப்போது சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்.

ஆணுடன் பெண் இணையும் வாழ்க்கை மறு உற்பத்திக்கும் உலகு வழி நடக்கவும் ஏற்றது. இதனிலிருந்து மாறுபட்ட உறவுகள் வேறு எந்த உயிரினத்திலும் இல்லை மனித இனத்தைத் தவிர.

எந்த மிருகமும் கற்பழித்ததாக இல்லை. மனித குலத்தில் மகா கேவலமான அயோக்யத்தனமான வார்த்தையில் கொண்டு வரமுடியா நிகழ்வுகள் இன்பம் துய்ப்பதாய் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண் நாயை பல ஆண் நாய்கள் தெருவில் புணர தயாராக இருக்கும், அதற்கான ஒரு நாய்கள் கூட்டம் இருக்கும் இதை தெருக்களில் கண்டிருக்கலாம்...அதை மனிதர் செய்தால் அதன் பேர் க்ரூப் செக்ஸ்.  அந்தக் காலத்திலேயே கீ  அதாங்க கார் சாவியை மாற்றிக் கொள்ளுதல் அதன் படி மனைவியை மாற்றிக் கொள்ளுதல் இருந்திருக்கிறது பொது விழாவாக என கண்ணதாசன் எழுதியிருப்பதைப் படித்த நினைவுகள் எல்லாம் இப்போது என் நினைவில் ஓடுகின்றன. அதன் படி மேலை நாட்டினரின் கலாச்சாரம் என்ற பேரில் நடிகர் நடிகையர், பெரும்பணக்காரர்கள், அரசியல்பிரமுகர்கள் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களில் எல்லாம் இவை தெளித்து விடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் எழுத்துகள் உள்ளன. மொத்தத்தில் பெரும் பணம் படைத்தவர்களின் கரைக்க முடியா கொழுப்பில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்... இவை சாதாரண மனிதர்க்குள்ளும் ஊடுருவி கலந்து பரவ இந்த தற்போதைய ஊடகங்களில் புழக்கமும் புழுக்கமும்,  அரசின் ஆட்சி முறை மற்றும் சட்டமும் நீதியும் பெரிதளவில் உதவுகின்றன. ஏழ்மை இல்லா நாடுகள் வரிசையில் இடம் பிடிப்பதுதானே இந்தியா...இதில் மட்டும் ஏன் இடம் பிடிப்பானேன்?

பெற்ற தகப்பனே மகளை, வயதான ஆண் , பெண் வயதுக் குறைவானவர்களை, ஏன் ஒரு மதத்தில் குழந்தைகளையே கூட மணம் கொள்ளலாம் என்றும், மருமகன் மாமியாரையும், மருமகள் மாமனாரையும், மாமனார் மருமகளையும் , மாமியார் மருமகனையும் , சகோதர் சகோதரிகளையும் இப்படி வரையறை விட்டு வெளியே உறவு முறை என்றெல்லாம் இல்லாமல் கற்காலத்தில் மனித குலம் நாகரீகம் அடையாக் காலத்தில் இருந்தாற்போல் ஆண் பெண் என்ற இரண்டு பார்வைகளுடன் மட்டுமே இயங்கி வர அவை எல்லாம் மனிதம் வளர வளர நீங்கி, மாசின்றி நல் முறைக்கு மாறி வரும் காலக்கட்டத்திலும் அரசல் புரசலாக இலை மறை காய் மறையாக குற்றம் தவறு என தப்பும் தவறுமான விதிவிலக்கான உறவு முறைகள் இருக்கவே செய்தன.

இதெல்லாம் தாய் வழிச் சமுதாயம் என்று பெண் தலைவியைச் சுற்றியே வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மனித குலத்தில் ஏற்பட்ட மாற்றம் தந்தை, தாய் சகோதர சகோதரிகள், அதன் மூலம் நிறைய உறவுகள் ஏற்பட வழிவிட்டன வழி வகுத்தன.

இதெல்லாம் தெரியாமல் இல்லாமல் இருக்கும் நிலையில் விதி விலக்காக  திரு நங்கை என்னும் ஆணும் பெண்ணுமல்லாத  3 ஆம் பால் ஏற்பட்டன அவைகூட வாழ்வின் போக்குக்காக எதையாவது ஒன்றி பற்றிக் கொண்டன.

ஆனால் பிறப்பிலேயே மனோபாவமே ஆணாக இருப்பார்க்கு பெண்ணாகவும், பெண்ணாக இருப்பார்க்கு ஆணாகவும் இருந்தன என்ற ஒரு பிரிவில் உறவின் திரிபுகள் திருகல்கள் ஏற்பட ஆரம்பித்தன.

இவை அமைதியாக இருந்து விட்டுப் போகட்டும் இவற்றை எவரும் தொந்திரவு செய்யாதிருக்கவே இந்த தீர்ப்பு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தீர்ப்பு சமுதாயத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டும்  அம்புக்குறியாக அமைந்து விடக்கூடாது. அமைந்து விட முடியாது.

ஆணும் ஆணும் மணந்து கொண்டு வாழ்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.  அதே போல பெண்ணும் பெண்ணும் மணந்து கொண்டு வாழ்வது என்பதும் தான். இதெல்லாம் பொதுவாக முன்னேறிய மேலை நாட்டிலிருந்து இறக்குமதியான பாலியல் ஊடகங்கள் திறந்து காட்டிய சமாச்சாரங்கள். அழிவை நோக்கிய பாலியல் படங்கள் முதலில் பார்க்க திறந்து விடப்பட்டன, அதன் பிறகு அதன் வக்ரமாக உச்சகட்டமாக ஆண் ஆணைப் பின் வழியாகப் புணர்தல், ஒரு ஆண் ஆணாக மற்றொரு ஆண் பெண் பாவத்துடன் இருப்பதாக பாவிப்பதாகவும் வக்ரமான பாலியல் செயலில் ஈடுபடுவதாகவும் இருப்பது இதெல்லாம் சுகம் தருவதல்ல...பிணி தருவது...அதேதான் பெண்ண்ணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் நிகழ்வுகளும்.

இவர்கள் தங்களது  பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் விளைவே இது. குழந்தை என்று ஒன்று பிறந்து விட்டால் அதற்காக வாழவேண்டும் அதை உருவாக்க தியாகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து கொண்டு அவற்றில் இருந்து எல்லாம் விடுபட்டுக் கொள்வது.

கேட்டால் நாங்களும் தத்து எடுத்துக் கொள்கிறோம் என்பார்கள், அல்லது வயிற்றில் வேறொருவர் கருவை அல்லது அடுத்தவர் கருவை அறிவியல் மருத்துவ உதவியுடன் உட் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதாகவும் கூறுவர். செயற்கை முறையில் கருத்தரித்தல் மனிதகுலத்திற்கு கிடைத்த உதவி அதையும் தவறான தங்கள் முறைக்கு மாற்றிக் கொள்வது யாவுமே மனித வரையறைக்கு மிஞ்சியது. வரம்பை மீறியது.

 இவர்களே இப்படி என்றால் இவர்கள் இயற்கைக்கு மாறாக உரிமை கொண்டாடும் இவர்களின் மறு தலைமுறை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது. மேலும் இவர்களுக்கு மறு தலைமுறை பற்றி எல்லாம் எந்த எண்ணமும் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் இன்று நாட்டில் சமூகத்தில் நடக்கும் அவலக்கேடுகள் பற்றி எல்லாம் மனிதராய் நின்று பார்க்கவும் பிறர் துயர் துடைக்க எண்ணவும் நேரமில்லை. அதை எப்படி ஒரு உறவு என்று சொல்கிறார்கள் என்பதே நல்லோர்க்கு புரியாத ஒன்று. அதற்கு தூபம் போட ஊடகங்கள் சினிமாக்கள் எல்லாம். நல்ல செய்தியைப் போடுங்கடா என்றால் போட மாட்டான்கள்... பிரியாணிக் கடைக்காரன் அவனும் ஏற்கெனவே மணமானவன் அவனுக்காக தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றவள் மகா செய்தியாகிறாள் ஊடகத்திற்கு....எல்லாமே திருட்டுத்தனம் செய்ய எண்ணுமளவு...மாட்டிக்கிட்டா திருட்டு...மாட்டாதவரை அனைவரும் உத்தமரே...பாலியல் வல்லுறவுகள் பற்றிய தெளிவு பிள்ளைகளுக்கு பெற்றோரால் கொடுக்கப்படல் வேண்டும்...

 தீ ...அனல்போல் காய்க...அளவுக்கு மிஞ்சினால்... இதையே விந்தை விட வேண்டாம் நொந்தும் கெட வேண்டாம் என சித்தர்களும், பிரமசாரி விரதம் என்றும், பெரியோர் உறவை மாதமிருமுறை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் முறைகளும் மறைகளும் சொல்லி வருகின்றன. தமிழ் வாழ்வியல் உலகுக்கே வழிகாட்டி.

இன்று உலகு தமிழ் மண்ணுக்கு அதன் மைந்தர்க்கு வழிகாட்டினால் அது அப்படித்தான் இருக்கும். எப்போதுமே உச்ச நீதி மன்றம் மக்களுக்கான இந்தியப் பெருநாட்டின் குடி மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்த நல்லதொரு தீர்ப்பை வழங்கியதாக இல்லை. ஜெ இறக்கும் வரை அவர் குற்றவாளி என்று சொல்லவே இல்லை . இதிலிருந்தே உச்ச நீதிமன்றத்தின் ஆளுமை என்ன எனத் தெரிந்து கொள்ளலாம். அதே உச்ச நீதிமன்றம் என்றாவது மனித குலத்தை மாட்சிமை படுத்துமளவு நெறிப்படுத்த தீர்ப்பு வழங்கி இருக்கிறதா, அப்படி வழங்கி அதை அமல் படுத்தா அரசுகளை அமல் படுத்த நெருக்கிப் பிடித்திருக்கிறதா? என்றால் இல்லை.

 பிறகு ஏன் இந்த தீர்ப்பில் இவ்வளவு நாட்டம். உலக அரங்கில் 25 நாடுகளில் இதுவும் பேராம். இன்னும் தூக்கு தண்டனை பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. இன்னும் இந்திய ஏழை மக்களின் துயர் துடைக்க என்ன என்ன வழி வகை செய்வது என வார்த்தை கொடுக்க் வில்லை. இன்னும் குடி நீருக்கும், மருத்துவத்துக்கும், வீடுகளுக்கும், ஆடைக்கும், கல்விக்கும் , வேலைவாய்ப்புக்கும் மனிதம் தடுமாறிக் கொண்டிருக்க இந்த தேவை எல்லாம் நிறைவேறி விட்டாற்போலவும் எல்லாம் காமக்க‌டலில் மூழ்கி நீந்தத் தெரியாம‌ல் இவர்களிடம் வழிகேட்டதால் இவர்களை அன்றி வேறு எவருமே இதற்கு வழி சொல்லத் தெரியாதார் போலும் உச்ச நீதிமன்றம் ஒன்று மட்டுமே வழிகாட்ட இருப்பதாகவும் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது...

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எவரும் பெரிதாக எடுத்த்க் கொள்ளத் தேவையில்லை.  கர்நாடகம் காவிரியில் நீர் விடுவது பற்றி எடுத்துக் கொள்வது போல...சாலையோரங்களில் மதுக்கடைகள் எடுப்பது பற்றி தமிழக அரசு கடைப்பிடிப்பது போல.

முதலில் பொருளாதார மேம்பாடு, இருக்க வீடு நல்ல உணவு, நல்ல மருத்துவம், நல்ல கல்வி மானம் காக்க ஆடை, குடி நீர் இவற்றிற்கு எல்லாம் உத்தரவாதம் செய்யும் நல்லாட்சி அதன் பின் காமம் பேசும் அமைப்புகள் அதுவும் அந்த மண்ணுக்கு அந்த நாட்டின் வரலாற்றுக்கு அந்த நாட்டின் பெருமக்கட் தொகைக்கு ஏற்ற நீதி செய்யட்டும்/.

புகைக்காதே, மது குடிக்காதே, முறையில்லா உறவு கொள்ளாதே என்றெல்லாம் சட்டம் நீதி செய்யாத அரசெல்லாம் அரசேயல்ல அந்த சட்டம் நீதி எல்லாம் நீதியல்ல...

விபச்சாரம் ஒரு இடத்தில் சட்டத்தின் அனுமதியுடன் நடக்கலாம். இன்னொரு இடத்தில் அது நடக்கக் கூடாது என்பது. நம் நாட்டில் சட்டம் நீதி யாவுமே ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், வேறுபட்டவை.

எனவே நல்ல மனிதராய் நீ சமுதாயத்தை வழி நடத்த வேண்டுமெனில் இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாதே.... நல்ல பெண்ணுக்கு நல்ல ஆண் கிடைத்து அவர்கள் வாழ்வு வாழையடி வாழையாக வளரட்டும் மலரட்டும் மனித உறவு என்பது மகத்தானது. இருக்கும் உயிர்களில் மனித உயிர்கள்தான் அபூர்வமானவை. பிரபஞ்சத்தில் இன்னும் இந்த நீலகிரகமான பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் கண்டறியப் படவில்லை. இந்த சட்டமும் நீதியும் அந்த பிரபஞ்ச விதிகளுக்கு இயற்கைக்கு முரணானவை. முன்னேற்றம்,  நாகரீகம் என்ற பேரில் செய்யும் மூடத்தனம், முட்டாள்தனம்.
இவை விதிவிலக்குகளுக்கு நீங்கலாக...

 இவை போன்ற வாழ்வில் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், விளையாட்டு வீராங்கனைகள் சிலர் தேர்ந்தெடுத்து வாழ்ந்ததாக உண்டு...ஆனால் அவை யாவும் விதிவிலக்குகள். சமூக நீரோட்டத்துக்கும் நல்ல‌ வாழ்வுக்கும் ஒத்து வராமல் வீழ்ச்சி செய்பவை. அதற்கு கலாம், காமராஜர், வாஜ்பேய், விவேகானந்தர் போன்ற பிர்மசார்ய வாழ்வு வாழ்ந்தோர் வாழ்வோர் கோடி மடங்கு உயர்ந்தோர்... தாம்பத்தியம் மிக உயர்ந்த வாழ்வின் ஒழுக்க மயமானது என்ற வள்ளுவரின் வாக்கே உலகுக்கு மூத்த வாக்கு.

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது...
THIRUKKURAL ...THIRUVALLUVAR.

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

என்னிடம் ஓரினப்புணர்ச்சி பற்றிய நீதியின் தீர்ப்பை ஊடகத்தில் பார்த்த எனது மகன் மணியம் கேட்ட கேள்விக்கு பதிலாக அவர்க்கும் அனைவர்க்குமான பதிவு இது.. அர்ப்பணம்.

12 comments:

 1. There are so many sexual actions human do which are NOT NATURAL. I am talking about heterosexual men and women. How are you going to correct them? YOU CAN NOT!

  How does it matter to you, how two people live inside the 4 four walls? F-F or M-F or M-M.

  There are lots of abnormal human beings, with genetic disorder and all sort of problems. What are you going to do with them?

  Abnormal is NATURAL! you better understand that, first!

  ReplyDelete
  Replies
  1. yes I understood varun. my main core point is not relevant what u wrote.

   Delete
 2. ***ஓரினப் புணர்ச்சி இயற்கை மரபுக்கு எதிரானது, மனித குலத்தின் சீர் கேடானது: கவிஞர் தணிகை***

  So you are the Authority for human race? How they should live and what they should do- you decide everything HUH??

  Grow up!!!

  You dont have any right to decide or judge how other human beings should live. Who the hell are you to tell others what is right for manidha-kulam??? How do you know???

  ReplyDelete
  Replies
  1. you read your above said your lines. that itself is answer.It is to yourself, you wrote

   Delete
 3. ****ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண், மிருகங்களுடன் இப்படி வேறுபட்ட முறைகளில் பாலியல் கொள்வது இயற்கை விதிகளுக்கு முரணானது***

  There is NO RULES set by Nature. The rules are set by humans. So many rules set by humans 1000 years ago are burnt today. Because human beings are growing up day by day.

  Saying anything as "this is against nature/natural" is only HUMANS. Human hardly knows what is natural and what is unnatural. They just believe in something. They belief is incorrect lots of times. This is one of them.

  சும்மா ஏதாவது இது இயற்கைக்கு புறம்பானது மண்ணாங்கட்டினு ஒளறக் கூடாது. நீங்க முடிவு செய்யக்கூடாது எது இயற்கை, எது செயற்கை என்றூ?

  ReplyDelete
  Replies
  1. Male and female is a common factors in all species .write with respect. dont argue with harsh words. It express your weakness.

   Delete
 4. தணிகை அவர்களுக்கு,, உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் கண்முன்னே நடக்கும் கேடு கெட்ட விடயங்கள முதலில் கண்டியுங்கள்.

  ReplyDelete
 5. தற்போது இந்தியாவில் தனது காதலை ஏற்க மறுத்த பெண்ணை ஆண் வெட்டி கொன்றார், பெண்ணை தீயிட்டார் என்று நடைபெறுவது போல்,எதிர்காலத்தில் தனது காதலை ஏற்க மறுத்த ஆணை ஆண் வெட்டி கொன்றார், அப்படி நடைபெறுமா என்று அச்சமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. yes sure.It might be...there is possibility. No differ in it. thanks for your feedback on this post. vanakkam. please keep contact

   Delete
 6. வாஜ்பாய் - போன்ற பிர்மசார்ய வாழ்வு வாழ்ந்தோர்- தவறு , அவரே சொன்னது நான் திருமணம் செய்யவில்லை ஆனால் பிரமசாரியுமல்ல! ஒரு பெண்னுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளார். விகடனில் அவர் மரணத்தின் பின் குறிப்பிட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. is it. ok. no problem. Thanks to indicate informations. it may differ.

   Delete