Thursday, February 9, 2017

சசிகலாவுக்கோ,ஓ.பி.எஸ்க்கோ எந்த தகுதியும் கிடையாது சட்டசபையைக் கலைத்து விட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் இந்திய அரசே: கவிஞர் தணிகை

சசிகலாவுக்கோ,ஓ.பி.எஸ்க்கோ எந்த தகுதியும் கிடையாது சட்டசபையைக் கலைத்து விட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் இந்திய அரசே: கவிஞர் தணிகை

Image result for service minded people must come forward to rule the countryRelated image


எல்லாம் முதல்வர் கனவு எந்த தகுதியுமே இல்லாமல்,மோடி பிரதமர் ஆகும்போது இவர்கள் எல்லாம் முதல்வர் ஆகக் கூடாதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
Image result for tamilnadu empty assembly


நாட்டுக்கு சேவை புரிந்த மனிதர்களுக்கு மட்டுமே மக்களுக்கு ஆட்சி செய்ய அதிகாரம் கொடுக்கப் பட வேண்டும் அவர்கள் தன்னலம் இல்லாமல் உண்மையிலேயே எந்த ஊதியமும் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நிர்வாகத்தை கையில் எடுத்து தம்மால் ஆனதை எல்லாம் செய்ய முனைய வேண்டும். அவர்கள் தீவிர வாதிகளாகவும் இருந்திடக் கூடாது சர்வாதிகாரிகளாகவும் அமைந்து விடக் கூடாது.

Related image

மகாத்மா காந்திக்கு உலகையே அப்படி ஆள தகுதி இருந்ததாக அன்றைய காலக் கட்டம் சொல்லியது, மதர் தெரஸாவை, அப்துல் கலாமை அந்த நிலையில் வைத்து சிந்திக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது இல்லை. இப்போது இருப்பாரில் அப்படிப் பட்ட நல்லவர் எவராவது தட்டுப்பட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். அது போன்ற நாள் இந்தியாவில் தமிழகத்தில் வருமா? நல்லாட்சி மலருமா என்பதெல்லாம் கேள்விக் குறிகள்.கேலிக்கூத்தான பார்வையில் விழுந்தவை.
Image result for lesbian touches with J.Jayalalitha and sasikala\


Image result for lesbian touches with J.Jayalalitha and sasikala\



எல்லாம் சாதி, மதம், கட்சி, ஆட்சி, பணக் கோபுரங்களில் முடங்கி,அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மக்களை மடையர்களாக்க மது அடிமைகளாக மாற்றி சிந்திக்க விடாமல் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ? என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப பிரிந்து பட்டன. சாதாரண பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் கூட போலித்தனம், பொய்கள், பகட்டு மலிந்து விட்ட நிலையில் கற்பனைக்கெட்டா நிலை பற்றி நாம் எழுதிக் கொண்டிருப்பதாக உங்களுக்கும் படும். ஆனால் அவை மட்டுமே நல்லாட்சி தரும்.
Related image

கடைத்தட்டு மக்கள் பற்றி சிந்திக்கும். மக்களுக்கு எவை நல்லதோ அதை மட்டுமே செய்யத் தியாகம் செய்து துடிப்பார்கள். காவிரியில் 34 அடி மட்டுமே குடி நீர் இருப்பதைப் பற்றி கவலைப் பட வேண்டிய நேரத்தில் கோட்டை, கொத்தளக் கனவுகளுடன் நிலையாக இல்லாத ஆக்டிங் ஆளுனர் நோக்கி பதவி சுகத்துக்காக பதவி ஆளுமைக்காக பவருக்காக ஒரு கட்சிக்காரர்கள் இரு அணிகளாகி செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்க...

 ஆனால் சேவையாளர்கள் மட்டுமே அந்த பதவிக்கு வந்தால் அவர்கள் எல்லாம் எல்லா மக்களுக்குமே பொதுவாக இருந்து அல்லவை தேய அறம் பெருகச் செய்திருப்பார்கள். செய்வார்கள்.

நதி நீரைக் கூட இணைக்கப் போராடி நாட்டை வல்லமை உள்ளதாக்கி இருப்பார்கள்

Image result for service minded people must come forward to rule the country


1981 வாக்கில் பல வெளி நூல்களை கதைகளுக்கு அப்பால் இருந்தும் வாசித்து வந்தேன் ஆங்கில மொழி மூலம் இருந்த டாஸ் கேபிடல் , தமிழில் இருந்த மூலதனமும் அதில் ஒன்று. தன்னை தயார்படுத்திக் கொள்ள அறிவார்ந்த சபைகளில் எல்லாம் சென்று எனது கருத்துகளைப் பதிவு செய்தேன் , விவாதம் செய்து வந்தேன்... அப்போது எனது வயது:19.
Related image


அப்படி அறிமுகம் நடந்தபோது நேரு இளையோர் மைய செயல்பாடுகளும் அதில் அடங்கும். இன்று அது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையில் உள்ளது . அரசு சார்ந்த துறையில் என்ன பெரிதாக சாதித்து கிழித்திருக்க முடியும் என்ற கேள்விகள் சிலருக்கு எழக்கூடும். ஆனால் அன்றைய இளையோரை கொ. வேலாயுதம் என்னும் ஒருங்கிணைப்பாளர் நல்ல மார்க்கத்தில் வழி நடைப்படுத்தி வந்தார். உண்மையிலேயே இளையோருக்கு ஆட்சி அதிகாரம் நிர்வாகம் பற்றிய நல்ல சிந்தனையை விழிப்புணர்வை ஊட்ட ஒரு காரணமாக இருந்தார். எனவே அந்த அறிவார் சிந்தை உள்ள இளையோர் விவேகானந்தர் சொன்னபடி நல்ல நம்பிக்கை, துணிச்சல் , வீரியம்,முயற்சி உள்ள இளையோராய் நூற்றுக் கணக்கில் இருந்தனர், வந்தனர்

அப்படி இருந்தும் ஏன் ஒன்றுமே செய்ய முடியாமல் போயிற்று என்றுதானே கேட்டீர்கள், இல்லை நிறைய செய்தோம் ஆனால் எந்தவித விளம்பர ஒளியுமே அதன் பால் படவில்லை. சிறு சிறு செய்திகளாக வெளி வந்து அமிழ்ந்து போயின...


Image result for service minded people must come forward to rule the country

ஒரு செய்தி:குழந்தைத் தொழிலாளர் நலத்துக்காக பாடுபடும் கைலாஷ் சத்யார்த்தியின் நோபெல் பரிசு திருடு போய்விட்டது.


Image result for tamilnadu empty assembly

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Image result for lesbian touches with J.Jayalalitha and sasikala\

Related image



2 comments:

  1. தமிழகம் எதிர்பாராத இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது ந

    ReplyDelete
    Replies
    1. yes you are right sir. vanakkam.thanks for your comment and participation in this post

      Delete