1969க்கும் பின் தமிழகத்தை ஆண்டவர்கள் எவருமே முதல்வராக இருக்க அருகதை அற்றவர்கள்: கவிஞர் தணிகை
மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி, மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி என்பதற்கேற்ப மக்களின் தராதரம், தரா தாரம் எல்லாம் மாறிக் கொண்டிருக்க அதற்கேற்ப கடையத்தின் அபிராம பட்டர் சொன்ன கோணாத கோல் என்பதும் கோணியபடியே இருக்கிறது தமிழகத்தில் மிக நீண்ட காலமாக...
கலைஞர் கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா , ஓ.பி.எஸ், இனி வர யத்தனிக்கும் சசிகலா எல்லாமே எத்தர்கள்.ஏதோ ஒரு வழியில் இல்லையெனிலும் ஒரு வழியில் ஏமாற்றுப் பேர்வழிகள். நாணயம் நேர்மை எல்லாம் இல்லாதார்.ஆளத் தகுதியற்றோர். மக்கள் நலம், அவர் தம் சீரிய வாழ்வுக்கான நோக்கத்தை ஒரு துளியும் சிந்தித்துப் பார்த்து செயல்படாத வெளிப்பகட்டுப் பேர்வழிகள்தான்.
இந்த நாடு தமிழ் நாடு மது அடிமையாக மாறி விட்டதும், சாதி, மதம், வாக்கு வங்கி, ஓட்டுக்கான விலை இதன் பின்னால் போய் ஜனநாயகம் மக்களாட்சி நாறி விட்டது.
உண்மையிலேயே இதை மாற்றிக் கொடுக்க நிறைய தியாகமுறைகள் எல்லாம் இருந்தன வெளித் தெரியா எத்தனயோ தியாகங்களும், தியாகிகளும் மேல் எழும்பாமலே வெளித் தெரியாமலே துர்ந்து போயின.
அவற்றில் சில வற்றை சிலரை அடையாளம் கொடுக்க இந்த பதிவு இனி உதவும் என நம்புகிறேன்.
நாங்கள் எனச் சொல்வது முற்றிலும் சுய நலம் கலக்க விரும்பாமல் ஆட்சி புரிய நினைக்கும் அதிகாரத்தை முற்றிலும் பரவலாக்கி, சமத்துவ நெறிகளை அனைவர்க்கும் நல்ல சிந்தனையுடன் வழங்கி நல்ல ஆட்சி தர நினைத்த எம் போன்றோரின் முயற்சிகள் எல்லாம் முடங்கிப் போயின சிறு சிறு சேவையாக அதிலேயே திருப்தி, அமைதி, மகிழ்வு அடையும்படியாக காலம் கடந்து போய்விட்டது.
எல்லாவற்றிற்கும் காரணம், புகழ், போதை, பணம் பொருளாதாரம் இவற்றின் அடையாளங்கள் இல்லாததாலும், அடியாட்கள் இல்லாததாலும் எதையுமே எவருக்குமே இலவசமாக தர முடியாததாலே...
பி என் ஐ.ஏ பில்டர்ஸ் ந்யூ இன்டியா அசோசியேசன், நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம்,
மகாத்மா காந்திய வழியில் ஊருக்கு பத்துப் பேர் இயக்கம்
தமிழக இலட்சியக் குடும்பங்கள்
என சில முயற்சிகள் செய்தோம் அதை எல்லாம் முழுதும் சொல்ல எனக்கு அவ்வளவு நினைவாற்றல் இல்லை எனிலும் சில நினைவோட்டத்தில் இடறுவதை மட்டும் சொல்ல அவாவுறுகிறேன்.
இனி தொடர்வேன்...அதில் சின்ன பையன், சசிபெருமாள், அடியேனாகிய நான், சிற்பி வேலாயுதம், இராஜாகிருஷ்ணன், செம்முனி, இராமமூர்த்தி நகர் இராமலிங்கம், விவேகானந்தன் என்ற பேரை சேக்ஸ்பியர் என மாற்றிக் கொண்ட சேக்ஸ்பியர், செங்கிஸ்கான், எஞ்சினியர் மணி, இப்படி இன்ன பிற நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் முன்னெடுத்துச் சென்ற இயக்கப் பேச்சாளர் கவிஞர் தணிகை, ஒருங்கிணைத்த நிறுவனர் சிற்பி வேலாயுதம் ஆகியோர் உண்மையிலேயே எந்த விதமான நிர்வாகத்தையும் செய்யும் இயல்புடையவர்கள் தான் ஆனால் அவர்கள் எல்லாம் இன்று இந்த நாட்டில் அடையாளம் தெரியாமல் நாட்டுக்கு உரமாக விதையாகி விட்டார்கள், விடுவார்கள்....இனி நேரம் கிடைக்கும்போது அசை போடுவோம், பதிவிடுவோம்.
எத்தனை பேர் படிக்கிறீர் என்பதை விட பதிவு செய்த திருப்தி எனக்கு(ள்) வேண்டும்.
கார்ல் மார்க்ஸ் குழந்தைக்கு துணைவி பால் கொடுக்க முயல மார்பகத்திலிருந்து தாய்ப்பாலுக்குப் பதிலாக சரியான ஊட்டச்சத்து உண்ணாமையால் இரத்தங் கசிந்தது என்று உண்டு. அது போன்ற சரித்திர நாயகர்கள் வாழ்விலேயே கூட வறுமை உண்டு. சொல்ல முடியா வறுமை உண்டு. நாங்களும் எங்கள் கைக் காசை இட்டு உழைப்பின் மூலதனத்தை இட்டு முயற்சித்தோம். அதற்குண்டான அறுவடை செய்தோம் அது எம் உடற் பிணிகளாக....
நன்றி
வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment