சசிகலா அல்ல இனி 9234: கவிஞர் தணிகை
விதியின் கைகள் மேலும் மேலும் எழுதிச் செல்லும். காலம் சில மணித்துளிகளுக்குள் எப்படி வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதற்கு அத்தாட்சி இந்த 21 ஆண்டு கால வழக்கின் முடிவு.
ஆனால் இந்த 9234 பற்றி மட்டுமே எல்லாமே 3 நீலச் சேலைஅல்ல வெள்ளைச் சேலை, சாப்பிடத் தட்டு, குடிக்க டம்பளர் களி, சப்பாத்தி, 400 கிராம் சாப்பாடு என தினமும் வழங்கி இவற்றுடன் ஊதுபத்தி தயாரிப்புக்கேற்ற டோக்கனில் கூலி இப்படித்தான் பார்ப்பன அக்ரஹார சிறை இந்த கைதிக்கும் எல்லாம் வழங்கும் என்றாலும் கூட அவர் தியானம் செய்ய, வாரம் ஒரு முறை அசைவம், சிறப்பு வசதிகள், தமிழ் நாட்டுச் சிறைக்கே மாற்றம் எனக் காலப்போக்கில் பெறுவார் தமிழக அரசு அவர்கள் கைவசம் வரும் என்ற நிலையில்.
ஆனால் இந்த வழக்கின் நாயகி முதல் குற்றவாளி ஜெவின் கல்லறையில் பழைய முன்னால் முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னையன் அணியினர் கதறி கதறி அழைத்து அழுத் ஒப்பாரி வைத்த காட்சியை லைவாக ஒரு டிவி ஒளிபரப்பியது.
இறந்ததால் செய்தது எல்லாம் மறைந்து விடுமா? என்ன? ஒரு முதல் குற்றவாளியை கடவுளாக வழிபடச் சென்ற பன்னீர் செல்வம் குழுவினர் பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் விதைக்க உறுதுணைப் புரிய முனைகிறார்கள் அது எப்பேர்ப்பட்ட விளைவை எல்லாம் ஏற்படுத்தும் என எதிர்காலம் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் அனுபவிக்கும் இன்றைய மத்திய ஆட்சி போலவே.
சொல்ல வந்தது கைதி எண்: 9234 என்ன இருந்தாலும் இரண்டாம் குற்றவாளிதான் முதல் குற்றவாளி கும்பிட வேண்டிய கடவுளல்ல...அவர்களை வணங்கி சபதம் செய்த எவரும், கும்பிடச் செய்யும் செல்லும் எவரும் நாட்டு மக்கள் நலனின் துளியும் அக்கறை இல்லாரே.
எல்லாம் இறந்தால் மறந்து விட வேண்டும் என்ற சித்தாந்தமும், சிந்தனையும் எந்த இரகத்தில் சேர்ந்தது என்றுதான் விளங்கவே இல்லை.தமிழ் நாட்டு மக்களில் ஒரு கட்சி சார்ந்த பிரிவினர்க்கு முதலில் அண்ணா, அடுத்து எம்.ஜி.ஆர், இப்போது ஜெயலலிதா எல்லாம் கடவுளே. இதில் ஒவ்வொருவரும் ஒரு இரகம். கடைசியில் இருப்பார் கடைத்தரமே.
இதை நீதிபதிகளும், இந்திய நீதியும், நீதிமன்றங்களும் சொல்லியபின்னும் ஏன் இந்த மக்களுக்கு விழிப்புணர்வே வராமல் இந்த பிச்சைக்காரத் தன ஓலமே இட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அரசியலை, ஆட்சியைல் நாட்டை முதல் தரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கமே இல்லையா வராதா?
எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு வரும் நாளை நோக்கி அரசியல் வரவேண்டும் அதுதான் நல்ல அரசியல். எனவே கைதி எண் 9234 பற்றி மட்டுமே எண்ணாதீர்கள் அத்துடன் முதல் குற்றவாளி பற்றியும் அவர் இருந்திருந்தால் அவருக்கும் இந்த தண்டனை இருந்திருக்கலாம், மோடி மாற்ற முனையாதிருந்திருந்தால், அல்லது அவர் இல்லாமல் போகாமல் இருந்திருந்தால்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

thanks sir vanakkam
ReplyDelete