Sunday, February 19, 2017

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர்: கவிஞர் தணிகை

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர்: கவிஞர் தணிகைImage result for edappadi palanisamy caste

பன்னீர்செல்வம், செம்மலை, ஸ்டாலின், காங்கிரஸ், தமிழிசை எல்லாமே இதை எதிர்க்கிறார்கள், எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி, நல்ல குளிர், கெட்ட குளிர், நல்ல வெயில் ,கெட்ட வெயில், நல்ல அரசியல் கெட்ட அரசியல் என்றெல்லாம் இருக்கிறதா? எரிக்கிறதா? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை பாட்டுக்கு வாய‌சைத்த ரஜினிக்கு சந்திரமுகி படத்திலிருந்தே கட்டிய பல் செட்தான் .சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சூப்பற குழந்தையும் சொல்லும், கெட்டப்பை ஏத்துங்க, செட்டப்பை மாற்றுங்க....சினிமாப் போலிகளில் இருந்து விளைந்த முத்துகளும் சிப்பிகளும். எம்.ஜி.ஆரும், ஜெவும், கருணாநிதியும், பன்னீரும் இப்போது எடப்பாடியும்....

இரகசிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லும் ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பே இல்லையோ...என்று தி.மு.க பொங்கி எழுந்துள்ளது,அப்பாதான் முதல் எதிரி, அண்ணன் அழகிரிதான் இரண்டாம் எதிரி இவருக்கு முதல்வாராகும் வாய்ப்பைக் கெடுக்க...குடும்பத்திடம் தி.முக கட்சியை வைத்துக் கொண்டு இவர்கள் ஜனநாயகம் பேசுவது வேடிக்கைதான்...

பன்னீர்செல்வம் இன்று ஞானோதயம் பெற்று ஜெவின் சமாதியில் புனிதமடைந்து இவரும் இரகசிய வாக்கெடுப்பு , எடப்பாடிக்கு எதிர்ப்பு, புத்தருக்கு போதிமரம், பன்னீருக்கு ஜெ சமாதி....

சசியை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு ஜெ இறந்து புனிதமாகிவிட்டார்.

ஜெவின் வாழ்க்கை முறையை திரும்பிப் பாருங்கள்,அந்த குற்றவாளிக்கும் 4 ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது, இறந்ததால் தப்பித்துக் கொண்டார், ஆனால் இருந்திருந்தால் மோடி இவரை அங்கே அனுப்பி இருப்பாரா அல்லது தீர்ப்பையே இன்னும் வரவிடாமலும் தடுத்திருக்கலாம்.

எல்லாமே அரசியல்ல நடக்குமய்யா, எதுதான் நடக்காது என்று வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்...சந்திரமோகன் என்ற ஒரு நண்பர் எழுதுகிறார், எடப்பாடி கட்சியின் பணத்தை பத்தாயிரம் கோடி பணத்தை காப்பாத்தக் கொடுத்து வைக்கப்பட்டிருந்தார், இவரது உறவுகளுக்குத்தான் சேலம் ஸ்மார்ட் சிட்டி பாலம் அமைப்பு இன்பிரா ஒப்பந்தம் எல்லாம்

....ஆக இவர் தமது தொகுதியில் எம்.எல்.ஏ தேர்தலில் எப்படி வெல்ல மாட்டார் எனச் சொல்லிய காரணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி 2 வாக்குக்கு அரை பவுன் தங்கம் எனக்  கொடுத்து வென்றாரோ அதே போல இந்த முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று விடுவார் என வெற்றி பெறும் முன்பே கூறினேன் ஏன் எனில் இன்னும் மக்களுக்காக எம்.எல்.ஏ என நினைக்கும் கூட்டம் ஆங்காங்கே இருக்கிறது.அது முற்றிலும் தவறானது. செம்மலை மேட்டூர் தொகுதிக்கு ஏதும் நல்ல திட்டங்களை வர விடாமல் செய்து விடுவார் போலிருக்கிறது. பன்னீரோடு இருக்கிறார். சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 பேர் அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ என வெற்றி வாகை சூட வைத்த பெரும் அரசியல் சூதாட்டம் தெரிந்த இந்த மனிதர் முதல்வர் என்ற வரலாறு எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

ஆனால் எல்லா எம்.எல்.ஏக்களுமே கோடிகளுக்காக , தங்கத்துக்காக விலை போய் கேடிகளாகவே இருக்கிறார்கள் என்பதை நாடறியும். யார்தான் முதல்வராக தகுதியுடையோர், ஸ்டாலினா, பன்னீரா, தமிழிசையா , எல்லாமே அரசியலை முடித்து விட்டார்கள், சசிகலா பினாமி என அழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி இந்த பந்தயத்தில் வென்றிருக்கிறார்.

எங்க பக்கத்து ஊருக்காரர். நான் கூட ஒரு கபாலீஸ்வரர் கோயில் குட முழுக்கு விழாவின் போது அவரை அழைக்க 2 முறை சந்தித்து பேசியிருக்கிறேன் அப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்ச்ச்ச்ர், இப்போது
Image result for edappadi palanisamy caste

முதல்வர்

அட நம்ம பக்கத்து ஊர்க்கார(ர்) முதல்வரு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: