Sunday, January 31, 2021

cinema சினிமா cinema:ஷிண்டலர்ஸ் லிஸ்ட்: கவிஞர் தணிகை


ஷிண்டலர்ஸ் லிஸ்ட்: சினிமா  கவிஞர் தணிகை

ஸ்டீபன் பீல்பெர்க் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (Schindler"s List )என்ற உலக திரைப்பட வரலாற்றில் முதல் நூறு படங்களில் 8 வது படமாக இருக்கும் இந்தப் படத்தைப் பற்றி உங்களுடன்  ஒரு பகிர்வு

எனைப் பாதித்த படங்களுள் முதலாவது இருக்கும் படம் இதுதான்

இது இரண்டாம் உலகப் போரின் போது உண்மையாக நடந்த சம்பவத்தை வைத்து சிண்ட்லர்ஸ் ஆர்க் என்ற நாவலை அப்படியே முழுமையாக படமாக்கிய முயற்சி...

முயன்று பாருங்கள் 3 1/4 அதாவது 195 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் 
மூழ்கி அமிழ்ந்து ஆங்கிலப் படத்தில் இப்படி ஒரு படமா என்று கேட்க வைக்கும் படம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, January 30, 2021

வாஸ்து:" கவிஞர் தணிகை"


வாஸ்து:" கவிஞர் தணிகை"

பூமி ஒரு கோள வடிவானது அதன் மேல் தட்டில் நாம் இருக்கிறோம்
அது போகும் வேகத்தில் அது போகும் போக்கில் விண்வெளியில் ஓடிக் கொண்டிருக்கிறோம்
வியப்பாக இருந்தாலும் அதுதானே உண்மை

இருக்கும் இடத்தை இப்படி இருந்தால் அப்படி இருக்கும் என்ற வியாபார யுக்திகள்
இயற்கையின் முன் எவ்வளவு தூரம் பலிக்கும்?
அது சுனாமியாக புயலாக கனமழையாக நில நடுக்கமாக எரிமலையாக‌
பெருங் காற்றாக 

ஏன் ஒரு நல்லாட்சியாக இருந்தாலும்...
வாஸ்து என்பதெல்லாம் வெறும் வர்ணம்தான் வானவில் போல‌
பொய்த் தோற்றம் தான்
கவிஞரின் 5 நிமிடச் சுருக்க உரை வாஸ்து பற்றி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Friday, January 29, 2021

ஊழல் : கவிஞர் தணிகை


ஊழல் : கவிஞர் தணிகை

இலஞ்சத்தின் திறவு ஒரு ஊழல் ஆட்சி நிலவுவது
தலைமை சரியாக இருந்தால் கீழ் மட்டத்தில் தவறு செய்ய அஞ்சுவார்கள்
தண்டனை கடுமையாக இருந்தால் ஊழல் செய்யும் மனிதர்கள் மாறுவார்கள்

5 நிமிடச் சுருக்க உரை
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, January 28, 2021

இலஞ்சம்: கவிஞர் தணிகை


இலஞ்சம்: கவிஞர் தணிகை

இன்றைய தலைப்பு இலஞ்சம் என்று இருக்கிறது ஆனால் அதற்கு எதிராக போராடுவது என்பது
எளிதானதில்லை.
காலம் காலமாக தொடர்ந்து வருகிறது
நல்ல மனிதர்கள் உறுதியாக ஈடுபடாதவரை இது போராடாதவரை இதை எந்த நாட்டிலிருந்தும் 
துடைத்தெறிவதென்பதே முடியாத ஒன்றாகத் தான் இருக்கும்

5 நிமிடங்களில் ஒரு அலசல்..வேரிலிருந்து நுனி வரை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, January 27, 2021

உணவு உண்ணுதல்: கவிஞர் தணிகை


உணவு உண்ணுதல்: கவிஞர் தணிகை
உணவு உண்ணுதல்: கவிஞர் தணிகை உணவை உமிழ் நீரோடு கலந்து கரைத்துக் குடியுங்கள் நீரை நன்றாக மென்று வாயுள் அசைத்து கொப்பளித்து உள்ளே அனுப்புங்கள் உணவு உண்ணுதலுக்கான நேரம் என்பது தனியாக ஒதுக்கப் பட்டாக வேண்டும் அப்போது நாம் வேறெந்த வேலை பற்றியும் கவனம் செலுத்தக் கூடாது 5 நிமிடச் சுருக்கத்தில் நீங்கள் சாப்பிடுவது பற்றிய ஒரு சிறு காணொளி நீங்கள் பயன் பெற‌ நீடித்த ஆயுளுடன் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ‌ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்ற நோக்குடன் மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

Tuesday, January 26, 2021

நடைப் பயிற்சி உடலுக்கு சிறந்த மருந்து : கவிஞர் தணிகை


நடைப் பயிற்சி உடலுக்கு சிறந்த மருந்து : கவிஞர் தணிகை

நடைப்பயிற்சியின் முழுப் பரிமாணங்கள்
5 நிமிடச் சுருக்க உரையில்
தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில்
கவிஞர் தணிகையின் ருசிகரமான பயனுள்ள தகவல்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, January 25, 2021

பாம்புகள்: கவிஞர் தணிகை


பாம்புகள்: கவிஞர் தணிகை

பாம்புகளை கடவுளாக அல்லது கடவுளுடன் சேர்த்து வணங்கும் நாடு இது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா என்ற பாடலே உள்ளது

எல்லாம் ஒரு நேரம் என்பார்கள்: அதை எல்லாம் கருதாமல் எல்லா நேரங்களிலும் நாம் நமது வீரத்தையே காண்பித்து நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை 

கேளுங்கள் சுவையாயிருக்கும் இந்த பாம்புக் கதை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.