Saturday, January 30, 2021

வாஸ்து:" கவிஞர் தணிகை"


வாஸ்து:" கவிஞர் தணிகை"

பூமி ஒரு கோள வடிவானது அதன் மேல் தட்டில் நாம் இருக்கிறோம்
அது போகும் வேகத்தில் அது போகும் போக்கில் விண்வெளியில் ஓடிக் கொண்டிருக்கிறோம்
வியப்பாக இருந்தாலும் அதுதானே உண்மை

இருக்கும் இடத்தை இப்படி இருந்தால் அப்படி இருக்கும் என்ற வியாபார யுக்திகள்
இயற்கையின் முன் எவ்வளவு தூரம் பலிக்கும்?
அது சுனாமியாக புயலாக கனமழையாக நில நடுக்கமாக எரிமலையாக‌
பெருங் காற்றாக 

ஏன் ஒரு நல்லாட்சியாக இருந்தாலும்...
வாஸ்து என்பதெல்லாம் வெறும் வர்ணம்தான் வானவில் போல‌
பொய்த் தோற்றம் தான்
கவிஞரின் 5 நிமிடச் சுருக்க உரை வாஸ்து பற்றி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment