Sunday, January 15, 2017

பொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்: கவிஞர் தணிகை.

பொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்: கவிஞர் தணிகை.



கிரிக்கெட் மட்டையும் கைகளில் மதுப் புட்டியுமாக தமிழனமும் மாறி விட்ட சூழலில் 2017 துவங்கி இருக்க பொங்கல் பொலிவிழந்து நியாயவிலைக் கடை இலவசப் பொருட்களில் மாறி இருக்க,ஜல்லிக் கட்டு என்று சொல்லாமல் ஏறு தழுவுதல் என்று சொல்லி தடையை மீறுங்கள் என தமிழ் நாட்டின் பெரும்பாலான எண்ணக் குவியல்கள் குவிந்து கிடக்க...அறுவடை இல்லாத பொங்கலாய் இந்தப் பொங்கல்.... மழையின்றி, நீரின்றி, விளைச்சலின்றி...நிலமெல்லாம் மலடாய், காய்ந்து ,பிளந்து கிடக்க...

எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் போட்டிகள் , ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று அல்லது 4 இளைஞர்கள் இது போல சில மோட்டார் சைக்கிள்களில் ஒரு டீம் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் பல இடங்களிலும் சென்று விளையாடியபடியே சென்று கொண்டிருக்கிறது ஏதாவது பரிசு கிடைக்குமா என்று முயற்சி. கடைசியில் இரவானதும் மதுப் புட்டிகளுடன் உல்லாசம். நல்ல வியாபாரம் மதுக்கடைகள் வழக்கம் போல.

பல்லாயிரக்கணக்கான பரிசு மழைகள். எங்கோ ஒரு இடத்தில் மட்டும் கபடிப் போட்டி நடத்துவதாக விளம்பரப் போஸ்டர் இருந்ததை கவனிக்க முடிந்தது. மற்றதெல்லாம் கிரிக்கெட்தான்.

இந்நிலையில் அறுவடைத் திருநாளான பொங்கல் எப்படி எனப் பார்த்தால், நீரில்லா தமிழகத்தில் எப்படி நிலம் பூ பூக்கும்,காய் காய்க்கும், பயிர் முளைக்கும் எங்கும் வறட்சி நிவாரண நிதி வழங்கக் கோரி மக்களின் கோரிக்கைகள். மந்திரியை இடைமறித்தும் கேட்கப் பட,அவர் உரிய ஆவணங்கள் இருந்தால் தாமாக கிடைக்கும் என பட்டும் படாமல் பதில் சொல்லியவண்ணம் பயணத்தை தொடர்ந்தாக செய்திகள்

போகிப்பண்டிகையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் இந்த ஆண்டு வெண்ணிற பூளைப் பூக்கள் அறவே இல்லை. வெறும் ஆவார மொட்டுகள் கொஞ்சம், மீதி எல்லாம் வேப்பிலை வைத்து ஆசையை போக்கிக் கொண்டனர் மக்கள் கிராமங்களில் கூட வீட்டின் வாயிலில் கொஞ்சம் வேப்பிலையை வைத்து ஓரிரு இடங்களில் செருகி வைத்திருந்ததோடு சரி.காலம் மாற மாற எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு போகி அன்று இந்தப் பழக்கம் மறைந்து விடும். ஒரு கட்டு இந்த இலைகள் 10 ரூபாய், நானறிந்த ஒருவர் கொஞ்சம் வைத்திருந்தார் ரூ.40க்கும், 60க்கும் வாங்கினேன் என்றார். எனக்கு வழக்கம்போல இயற்கை நன்மை செய்ய காசுக்கு வாங்காமலே நடைப்பயிற்சியின் போது அரிதாக ஓரளவு சமாளிக்கும் அளவில் கிடைத்தி விட்டது. ஆனாலும் பூளைப்பூ அரிதாகவே கிடைத்தது.

இந்த ஆண்டு நாம் தனிப்பட்ட முறையில் கிழிந்திருந்த காலணியின் உறைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, புதுக் காலுறைகளை உபயோகிக்கப் படுத்த ஆரம்பித்ததும், உடல் என்ற உறை தமது 3 ஆம் சுழற்சியை ஆரம்பித்ததை நினைவு படுத்த உப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, குடல் புண், மூலம், நிறமி அணுக் குறைபாடு எல்லாம் சேர்ந்திருக்கும் உடலை இன்னும் ஆயுள் நீட்டிப்பு செய்ய இந்த ஆண்டு முதல் பேக்கரி ஐட்டம், கேக், ஸ்வீட், விருந்து, கிழங்கு வகைகள்ஆகியவற்றை உண்பதில்லை என்ற  புதிய முடிவை அமலாக்கி விட்டேன், அதன்படி நமது பொங்கல் பொங்கலை வாயில் வைக்காமலே கரும்பு கூட கடிக்காமலே சென்று விட்டது, போகி அன்று வேகவைத்த சர்க்க்ரை வள்ளிக் கிழங்கையும் கையாலும் தொடவில்லை.  மேலும் அரிசி உணவையும் குறைத்து, உடற்பயிற்சியை மேலும் சீராக்கவும் செய்ய ஆரம்பித்தேன்.அப்போதும் எண்ண நெருடல்களும் வாக்குவாதங்களும் தொடர்ந்த படியேதான் இருக்கின்றன அதையும் சீர் படுத்த வேண்டும் என்ற அவா உள்ளது. மேலும் கடமை இருக்கிற படியால் இன்னும் இந்த உலகில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

Related image


எல்லாமே தமிழகத்துக்கு ஏறுக்கு மாறாக இந்த மத்திய பி.ஜே.பி அரசு செய்து வருவது யாவரும் அறிந்தது.காவிரியில் நீர் இல்லை என தமிழகத்துக்கு தரவேண்டிய பங்கை தராத பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஒன்றும் செய்ய முடியவில்லை அதற்கு மத்திய அரசும் எந்த வழியும் செய்ய வில்லை. இந்நிலையில் நடுவர் மன்றம் அமப்ப்பது பற்றியும் உச்ச அமைப்புகள் எதுவும் செய்யவில்லை.ஆனால் ஜல்லிக் கட்டு என்ற பேரில் பொலி எருதாட்டம், (இளமி என்ற படம் இன்று பார்க்க வேண்டிய படம் அதில் மாடு பிடித்தலின் 3 வகையும் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது) மாடு விரட்டிப் பிடிப்பது, அதை விடுத்து ஏறு தழுவி அதன் திமலைப் பிடித்து அடக்குவது என தமிழரின் வீர விளையாட்டுகள் பொங்கல் அன்று நடைபெறுவது எருது, காங்கேயம் காளை, கோயில் காளை போன்றவற்றிற்கு ஒரு அற்புத பயிற்சி.

அந்தக் காலத்தில் வீர விளையாட்டுக்கு ஒர் மரியாதை உண்டு பெரும்பரிசுகளும் உண்டு ஏன் திருமண நிகழ்வுக்கே பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பதுமுண்டு.இந்த போட்டிகளில் வெல்லும் இளைஞர்க்கு.

ஆனால் இப்போது யாவும் மறைந்து வருகிறது. மதுரை  , திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் மட்டும் இந்த அவா இன்னும் இளைஞர்களிடம் ஊறிக் கிடக்கிறது. மற்றைய தமிழகப் பிரதேசங்களில் எல்லாம் அது மறைந்து விட்டதுதான்.

ஆனால் அதற்காக மத்திய அரசு தடை செய்வதில் ஒரு அர்த்தமும் பொருளும் இல்லை . எனவேதான் கமல் முதற்கொண்டு அனைவரும் கேட்கின்றனர் மாட்டுக் கறி சாப்பிடுவது தடை செய்யப் படாத போது இதற்கு எதற்கு தடை என்று...? நியாயமான கேள்விகள்.பிரியாணையைத் தடை செய்து விட்டு இதை தடை செய்திருக்கலாம் என்பது சரிதான்.
Related image


மதுவைத் தடை செய்யாத அரசு
புகைப்பதை தடை செய்யாத அரசு
சிவப்பு விளக்கு பாலியல் தொழிலை தடை செய்யாத அரசு

தேர்தலில் பணவிளையாட்டுகளை தடை செய்து சீரான ஒழுங்கான தேர்தலை நடத்த அருகதை அற்ற அரசு,
பொது இடத்தில் சிறு நீர் கழிப்பதை,அசுத்தம் செய்வதை , குப்பை போடுவதை தடுக்க முடியாத அரசு
பாலியல் படங்களை இணையத்தில்  தடை செய்ய முடியா அரசு
புதிதாக வரும் சினிமாப் படங்களை இணையத்தில் வெளிவருவதை தடை செய்ய முடியா அரசு

தம் நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர முடியா அரசு

அறக்கட்டளை வழியே மக்களின் செல்வங்களை ஓரிடத்தில் குவித்து தனி மனிதர்களை கோடிகளில் புழங்க வைக்கும் அரசு

தமிழகத்தில் அரசியலில் கால் உன்ற முடியாது என்று அறிந்த நிலையில் கர்நாடகா அரசை வரும் தேர்தலில் வெல்ல வேண்டும் என அனைவரும் அறியும் வண்ணமே கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்தை நெருக்கியும் பல செயல்கள் செய்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஜல்லிக்கட்டுப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராமல் செய்வதும்...

மாடுகளுக்காக இவர்கள் கவலைப் பட்டால் அடிமாடுகளாக கேரளா கொண்டு செல்லப்படும் மாடுகளை சரணாலயம் கட்டி பாதுகாக்கலாம் புண்ணியம் கிடைக்கும் அதை எல்லாம் விட்டு விட்டு வருடத்தில் ஒரு முறை ஆங்காங்கே செய்து வந்த இந்த இளைஞர் விளையாட்டை தடை செய்தது சிறு துளியும் நெறியுடையதல்ல....

ஒரு வழியாக தமிழகத்தின், இந்தியாவின் மண் வள ரகங்களான கால் நடைச் செல்வங்களை முடித்து சீமை பசு, சீமைக் கோழி, இப்படி எல்லாம் வீரியமற்ற இனங்களை உண்டு பண்ணி விட்டார்கள் மனிதர்கள் உட்பட...

எல்லாமே ஆங்கிலம் ஐரோப்பிய மேனாட்டு கலாச்சார முறைகளுக்கு மாறி விட்டது, இந்தியக் கலாச்சாரம், தமிழின முறைகள் எல்லாம் மாறி கடைசித் தருவாயில் உள்ள நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டது.

எங்களது தலைமுறைக்காவது கொஞ்சம் தெரியும், இனி வரும் தலைமுறைகளுக்கு எல்லாம் நமது மண்ணின் வளம்,மணம், உயிர் யாவுமே தெரியாமலே மறைந்து போகும்...

போராடும் வீரர் யாவருக்குமே நாம் நன்றிக் கடன் பட்டவர்களாவோம். ஆனாலும் அதையும் மீறிய வளர்ந்த இராமலிங்க வள்ளலின், புத்த, ஜைன மதக் கொள்கை யாவும் உயிர் ‍ஹிம்சை பற்றி பேசுவது யாவும் உயர்ந்தது. கிறித்தவம், முகமதியம், போன்றவை உயிப்பலி செய்து உண்பது தவறு எனக் கருதுவதில்லை. இந்து மதப் பிரிவுகளில் இவை பேசப்படுவதுண்டு. ஆனாலும் இந்த அரசுகளுக்கு எல்லாம் இவை பற்றி பேச எந்த அருகதையுமே இல்லை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Wednesday, January 11, 2017

மோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்கோட்டை கட்டினார்? கவிஞர் தணிகை

மோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்கோட்டை கட்டினார்? கவிஞர் தணிகை

Related image


மோடி வங்கிகளை எல்லாம் மக்கள் பின்னால் ஓடி வரச் செய்ய இந்த திட்டம் கொண்டு வந்தாராம், 50 நாளில் நிலை சரியாக வில்லை என்றால் தற்கொலை செய்வாராம் தூக்கு இட்டுக்க் கொள்வாராம், இந்த திட்டம் தோற்றும் 50 நாள் ஆன பின்னும், மக்கள் வங்கி முன் பழியாய்க் கிடக்கும்போது...இப்போது அயல் நாட்டு வியாபாரிகளை  ஈர்க்க 3 டி டெமோகிராபி, டெமாக்ரஸி டிமான்ட் உள்ள இந்தியநாடு பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் எனப் பேசிக் கொண்டிருந்தார், ஜியோ அம்பானியை அடியோடி இந்தியாவை அள்ள விட்டு பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனத்தை காங்கிரஸ் கொன்றது போதாது என்று செத்த பாம்பை அடிப்பது போல அடித்துக் கொண்டு...


வங்கியில் கூட்டம் குறைந்த பாடில்லை. இன்று மறுபடியும் நான் பாரதீய ஸ்டேட் வங்கிக்கும் நிலவரித் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று வர நேர்ந்தது. அதை சுருக்கமாக சொல்கிறேன் . நாம் எப்போதும் சொந்த அனுபவம், உண்மைகளின் அடிப்படையிலேயே எதையும் எழுதுகிறோம். சேரிட்டி ஸ்டார்ட்ஸ் ஃப்ரம் ‍ஹோம் என்பது போல...

நிலவரித் திட்ட அலுவலகத்திற்கு சென்றேன் இன்றா வரச் சொல்லி இருக்கிறார்கள்,எனப் பார்த்து விட்டு சரி 11 மணிக்கு வாருங்கள் என ஒரு உதவியாளர் சொன்னார் அப்போது மணி 10.43. என்ன இன்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார், என்ன இன்னைக்கி எல்லாம் வரச் சொல்லி இருக்கிறார் என்று பேசியபடியே என்னை அனுப்பி வைக்க குறியாய் இருந்தார் அந்த கீழ் நிலை ஊழியர்.

அந்த நிலவரித் திட்ட வட்டாட்சியரின் கடிதத்தில் இருந்த நாள் குறித்த இடத்தில் இருந்த கோடுகள் 11.கோடு 1 கோடு 17 என்னும்படியாக இருந்தது கண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு மிகவும் சீரிய தன்மையுடன் தேவையான எல்லா ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் , குடிநீருடன் சென்று சேர்ந்தேன். ஒன்றும் பெரிய அளவில் கூட்டம் இல்லை

எப்போது இந்தக் கடிதம் கொடுத்தார்கள்? எந்த ஏரியா என்றெல்லாம் கேட்டார்கள் பதில் கொடுத்தேன்.

  சரி இன்னும் 11 மணி ஆகவில்லை அதனிடையில் வங்கிக்கு செல்லலாம் விண்ணப்ப படிவம் 60 கொடுப்பது பற்றி எல்லாம் விசாரித்தேன், அது பற்றி பெரிய அக்கறையோ விழிப்புணர்வோ இன்னும் அங்கு அவசியமாக எழவில்லை. காலம் போன கடைசியில் பிப்ரவரி 28 வரும்போது எல்லாம் பற பற வென பறப்பார்களோ? நடப்பு எப்படி என விசாரித்தேன், எந்த வித செயல்பாடுகளும் பெரிதாக இல்லை மோடியின் வீழ்ச்சி செயல்பாடு தவிர என்றார்கள். இன்னும் வரிசையில் நின்றவர்க்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி பணம் போடவோ பணம் எடுக்கவோ எந்த இயந்திரமும் பணி செய்யவில்லை.
Image result for veerapandiya kattabomman statue


எப்போதும் வங்கி பாஸ் புத்தகத்திற்கு வரவு செலவு பதிவுகளை பிரிண்ட் செய்வது உள்ளே தமது வேலையை செய்யவில்லை, காரணம் ஊழியர் குறைவாகவும் காரணம் இருக்கலாம். வெளியே பாஸ் புத்தகத்தில் என்ட்ரி போட ஒரு வரிசை. அதற்கு ஒரு செக்யூரிட்டி என்ட்ரி போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். சலித்துக் கொண்டு. ஃஅங்கலாய்த்தபடி நிறைய பேருக்கு நிறைய என்ட்ரி போட வேண்டியதிருக்கிறதே என்று.. போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அது அவரது வேலை, பணி என்பது என்று இருந்தும்

விவரம் அறிந்த என் போன்றார் தாமே என்ட்ரி போட்டுக் கொள்ள முடியும்,ஏன் கடந்த முறை நானே தான் போட்டுக் கொண்டேன்,எல்லாரும் ஏ.டி.எம் என்றானபின் வரவு செலவுக் குறிப்பை நெட் பேங்கிங் மொபைல் பேன்க்கிங் வழி தெரிந்தபடி இருக்க பாஸ்புக் என்ட்ரி போடுவது அரிதுதான் அதற்காக என்ன செய்ய முடியும் என நிலையை தெளிவுபடுத்தினேன் அவருக்கு.

மற்றொரு வங்கியில் இந்த மோடியின் செயல்பாடு ஆரம்பத்ததில் இருந்து அதாவது நவம்பர் 8 முதல் எந்த பாஸ்புக்குக்கும் என்ட்ரி போட்டுத் தருவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இது ஒரு நிலை வங்கியில்... நாம் நமது நிலவரித்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சரியாக 11 மணிக்கு அவர்கள் சொன்னபடி திரும்பினோம்
சொன்னவுடன் மற்றொரு ஊழியர் அனேகமாக அவரும் அலுவலக உதவியாளர், அட்டன்டர் அல்லது பியூன் என்ற நிலையில் இருப்பவர், போங்க போங்க இன்னைக்கு இல்லை நாளைக்குத்தான் என்றார், இன்று வரச்சொல்லி தபால் கொடுக்கப்பட்டு இருக்கிறது வட்டாட்சியர் பச்சை இங்கில் கையொப்பமிட்டு எனக் காண்பித்தேன்,

அட அது மாசம் இன்னைக்கு எங்க போட்டிருக்கு, ஓ.சி,யில் நாளைதான் போட்டது,  /1/17என்றுதானே மாதம் தானே உள்ளது தேதி எங்கே உள்ளது? இதில் போடவில்லையா என உடனே வாங்கி சரியாக கோடுகளுடன் இருந்த இடத்தில் டக்கென 12 என தேதி எனப் போட்டுவிட்டார்.

அதாவது இவர்கள் அலுவலகம் எனக்கு அனுப்பிய கடிதத்தில் தேதியைக் குறிப்பிடாமல் மறந்து விட்டு அலுவலக நகலில் மட்டும், ஓ சி..ஆபீஸ் காபி...12/ ஜனவரி 2017 எனக் குறிப்பிட்டுள்ளார், அதைப் பார்க்காமல் வட்டாட்சியரும் 06.01 17ல் தேதியிட்டு, கையெழுத்திட்டு கொடுக்கச் சொல்லி உள்ளார் .எங்கே இவரது தவறு வட்டாட்சியருக்கும் தெரிந்து விடுமோ என்று அவசரமாக சரி செய்துவிட்டு என்னை நாளைக்கு வா , தாசில்தார் இல்லை என துரும்பாக வெளியேறச் சொல்லுகிறார் என்னவோ அரசு அலுவலகம் இவன் அப்பன் வீட்டு சொத்து போல, தீவிர எண்ணம் தலைதூக்கியது, குடும்பம் இன்றைய நிலை எல்லாம் என்னை சாந்தப்படுத்தியது.

ஒன்று சிறை செல்ல வேண்டும் புத்தி புகட்டிவிட்டு, அல்லது கைகலப்பாக மாறி பிரச்சனை திசை திரும்பியாக வேண்டும் எனவே காந்தியவாதியாக பொறுத்துக் கொண்டு இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு இதற்காக வந்திருக்கிறேன், நீ செய்தது தானே தவறு என்ற என் பார்வையை நியாயத்தை புரிந்துகொண்ட ஒரு பெண் அலுவலர், எனது ஆவணங்கள், நான் ஏற்கெனவே இப்படி எல்லாம் நடக்கும் எனத் தெரிந்து துணைவியாரின் பேருக்கு கடிதம் எழுதிக் கொண்டு அவரே ஆவணங்களை எல்லாம் கொண்டு வருவார் சரி பார்த்து பட்டா வழங்கவும் என்றிருந்ததைப் படித்து விட்டு இது போதும் சார், நீங்கள் நாளை வரவேண்டாம், நீதிமன்ற வில்லை 2 ரூ மதிப்புக்கு மட்டும் ஒட்டி, அழைப்புக் கடிதத்தை நகல் எடுத்து அனுப்பி வையுங்கள் என்றார். ஒரிஜினல் எல்லாம் உள்ளது பார்ப்பதெல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள் என எல்லா ஆவணங்களை எல்லாம் காட்டத் தயாரானேன். இல்லை சார் வேண்டாம் என்றவர், நாளை வரும்போது ஒரிஜினல் எல்லாம் தேவையா என்று கேட்டதற்கு கொடுத்தனுப்புங்கள் என்றார்.

எங்களது உரையாடல் நிகழும்போதே மற்றொரு பெரியவர் வந்து கெஞ்சிக் கொண்டிருந்தார் அந்த சிறு அறையில் உள்ள சில டேபிள்களும் சில சேர்களும் காலி 3 இருக்கைகளில் மட்டும் அலுவலர்கள் இருந்தனர், இந்த வீணாய்ப்போன எடுபிடிகள் வெளியே சென்று விட்டனர்...

அந்தப் பெரியவரிடம் நீங்கள் அடிக்கடி போன் பண்ணிக் கேட்கிறீர்கள் என்றார்கள், அதற்கு அவர் மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என இறைஞ்சிக் கொண்டிருந்தார், சரி போங்கள் என்றார்கள் அவர் வெயிலில் வந்தது சற்று சிரமமாக உள்ளது, பெஞ்சில் அமர்கிறேன் சற்று என அமர்ந்து கொண்டார்.... இப்போது வங்கிகளுக்கு மக்கள் ஓடி வரட்டும், பின்னால் வங்கிகள் எல்லாம் மக்கள் பின்னால் ஓடிவரும் பாருங்கள் என்ற மோடியின் திருவாசகம் ஒருவாசகம் எனது கண்ணில் காதில் தேனினும் இனிய கீதமாய் ஒலித்தது.

Image result for indian economy


இத்தனைக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட கட்சித் தலைவர் பத்திரிகைச் செய்தியில் பட்டா வழங்கல் பற்றியும் போட்டோவுடன் பட்டா தருவது பற்றியும் சிறப்பாக பேட்டி கொடுத்தது வெளி வந்தது சிரிப்பாக சிரிக்கிறது. அந்த அலுவலகம் இன்னும் 6 மாதமோ ஒரு வருசமோ இருக்கும் அதற்குள் இந்த பட்டா எல்லாம் கொடுக்கப்படுமா என பாமர மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனராம். அந்த வதந்தி வேறு உலவ விடுவது அந்த அலுவலகத்தில் பணி செய்யும் கீழ் மட்ட ஊழியர்களேதானாம்.


இந்தியா போன்ற ஒரு பெரிய  நாட்டின் ஒட்டு மொத்த சீர்பாடுகளில் இது போன்ற சிறிய பாதிப்புகள், தனிமனித இடர்ப்பாடுகள் இருக்கும்தான் என சிலர் சப்பைக் கட்டு கட்டலாம் அவனவன் சம்பாதிக்கும் பணத்திற்கு அவனவன் தேவைக்கு செலவு அளிக்க வழி இல்லாமல் இதெல்லாம் என்ன ஒரு தேசம் என்ன ஆட்சி...அதற்கு சரியான திட்டம் இடப்பட வேண்டுமல்லவா?துன்பங்களே தொடர்கதையானால் எவருக்குமே விரக்தி தானே வரும்..இத்தனைக்கும் மோடிக்கட்சிக்கு இடைத்தேர்தலில் இந்த பாதிப்புகளுக்கு இடம் இருக்காதாம்...இங்க இந்த நாட்டில எவனுமே வேலை செய்யத் தயாரில்லை திருட மட்டுமே தயாராக இருக்கிறான் அரசு அலுவலங்களில் அவனை வைத்துக் கொண்டு நல்லவர் அரசாண்டாலே கஷ்டம், மோடி போன்ற ஆட்கள் என்ன செய்ய முடியும்?

இப்படிப்பட்ட வங்கிகளையும், அரசு அலுவலகங்களையும் வைத்துக் கொண்டு தப்புக் கணக்கு போட்டு விட்டு கிராமங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த அறிவு கெட்ட மடையனோ சொன்னது போல அமெரிக்க நாட்டு பாணியில் அம்பானியிடம் பணம் பெற்று தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என நின்று ஜெயித்து விட்டு மக்களை எல்லாம் கொல்லாம கொல்கிறார்கள் இந்த ஆட்சி என்னும் பேய் அரசான்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் மூலம்...

ஆக மோடி வங்கிகளை எல்லாம் மக்கள் பின்னால் ஓடி வரச் செய்ய இந்த திட்டம் கொண்டு வந்தாராம், 50 நாளில் நிலை சரியாக வில்லை என்றால் தற்கொலை செய்வாராம் தூக்கு இட்டுக்க் கொள்வாராம், இந்த திட்டம் தோற்றும் 50 நாள் ஆன பின்னும், மக்கள் வங்கி முன் பழியாய்க் கிடக்கும்போது...இப்போது அயல் நாட்டு    வியாதிகளை   Sorry

வியாபாரிகளை  ஈர்க்க 3 டி டெமோகிராபி, டெமாக்ரஸி டிமான்ட் உள்ள இந்தியநாடு பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் எனப் பேசிக் கொண்டிருந்தார், ஜியோ அம்பானியை அடியோடி இந்தியாவை அள்ள விட்டு பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனத்தை காங்கிரஸ் கொன்றது போதாது என்று செத்த பாம்பை அடிப்பது போல அடித்துக் கொண்டு...

நீங்கள் எல்லாம் என்ன நாயா பேயா உங்களுக்கு எல்லாம் எதற்கு வாய்? ஒரு கேடாய்...இன்னும் ஏன் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஒருவர் முயற்சி செய்தாராம் கைது செய்யப்பட்டு விட்டாரம்
Image result for indian economy


ஜெய் பாரத மாதாகீ ஜே...
தண்ணி இல்லாமல் சாவோம் தமிழ் நாட்டுக்கும் சசி நாட்டுக்கும் ஜே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
one day to decide about jallik kattu verdict.

Image result for indian economy

Monday, January 9, 2017

இதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை

இதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை

Image result for alert to hear


காதில் கேட்டது நடைப்பயிற்சியில்: அவளுக்கு ஒரு நாளைக்கு அடி உண்டு,மேல இருக்கற நாலு பேருதான் தூக்கி வைச்சிருக்கான்,வேற சப்போர்ட் இல்ல...ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சசி கலா பற்றி

ஒட்டுப் பள்ளம் சென்று திரும்பு முன் அவிழ்ந்திருந்த காலணியின் நாடாவைக் கட்ட ஒரு பாலத்தின்ன் மேல் கால் வைத்தேன், அதற்கு முன்பே நமது ஒரு குடிமகன் ஒரு ட்ராக்டரை நிறுத்த முயன்று தள்ளாடிக் கொண்டிருந்தார், அவர் என் பின் வந்து நின்றார், காலணி நாடாவைக் கட்டிக் கொண்டே கவனித்தேன், நம்ப முடியாது, குடி மகன்கள் எதையும் செய்வார்கள் என்பது தெரிந்ததால் சற்று எச்சரிக்கையாகவே இருந்தேன்,

அவர் உடனே ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார், பரவாயில்லை முடிந்தால் செய்வோம் உதவிதானே கேட்கிறார் என நினைத்தேன், ஒரு பத்து ரூபா கொடுங்கள், வீட்டில தங்கச்சி கொத்துமல்லி தழை வாங்கச் சொல்லிச்சி என்றார், ஒரு பைசாக் கூடக் கிடையாது என்றபடி இடத்தை விட்டு நகர ஆரம்பித்திருந்தேன்.உண்மையிலேயே ஒரு பைசாக் கூட எனது கால்பையில் இல்லை என்பதை அவரால் நம்பியிருக்க முடியாது. ஆனால் அதுதான் உண்மை.

அவசியம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும், மகன் படிப்பு செலவை ஏற்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் . 9மாதம் முடிந்து 10 ஆம் மாதம் ஆரம்பம், ஏற்கெனவே இருக்கும் குடல் புண், உயர் இரத்த அழுத்தம், யூரியா எனப்படும் உப்பு வியாதி, மூலம், குடல் வால் தழற்சி, நிறமி அணுக் குறைபாடு அத்துடன் இப்போது சர்க்கரையின் அளவு 300 என்றாகிவிட்டது எனவே நான் அவசியம் நடைப் பயிற்சி செய்தே ஆக வேண்டும்

அப்படி போகும்போதுதான் முன் சொன்ன இரண்டு பேச்சு வார்த்தை ஒன்று கேட்டது , ஒன்று செய்தது..

Related image

மகன் விடுதிக்கு சென்று படித்து வருவதால், உணவில் கவனமில்லாதது, எதைப் போட்டாலும் மறுப்பு சொல்லாமல் சாப்பிட்டது, விருந்துக்கு சென்றது,ஐஸ்க்ரீம், பனிக் குழைவா அதன் தமிழ் பேர், கிடைத்த போதெல்லாம் கேக், சாக்லெட்,பேக்கரி ஐட்டம் இப்படி எல்லாமே சிறுபிள்ளை போல சாப்பிட்டது, நம்மை ஒன்றும் செய்ய முடியாது என இறுமாப்பு காரணம் நல்ல உடற்பயிற்சி செய்பவர் என்ற தெம்பு.

ஆனால் பணி விட்டு திரும்பவே இரவு சுமார் 7 மணி ஆகி விடுவதால், சேலம் ரெயில் நிலையத்திலேயே கிடைக்கும் நேரத்தில் நடைமேடையிலேயே நடைப்பயிற்சி செய்து வருவது ...அது போதவில்லை என்று தெரிந்தது...

உண்ணும் உணவில் அதிகம் இனி அரிசிச் சோறு ஏற்கக் கூடாது, இந்த ஆங்கிலப் புத்தாண்டு முதல் இனிப்பு, சாக்லெட், பேக்கரி ஐட்டம் , விருந்துணவு எதையும் உண்பதில்லை எனத் தீர்மானித்தேன். அதன் படி நடந்து செல்வேன்,

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தியானம், இவை இவற்றுடன் உள்ளுக்கு சாப்பிட வேண்டிய சித்த மருந்து ஆகியவற்றை கொஞ்சம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு பல நாட்களாக அமல் படுத்தப்படுகிறது.

முதலில் கைகள் இரண்டும் தோள்பட்டையிலிருந்து பல நாளாக‌ வலியுடன்....பின் முதுகில் படியும் தோள்பை இன்றைய இளைஞர் தூக்குவது போலத் தூக்கிச் செல்வது காரணமாக இருக்கும் என்றார் குடும்ப நண்பர் வேலாயுதம் சென்னை, என்ன ஒரு ஐந்திலிருந்து பத்து கிலோ கனம் இருக்கும் எனப் பேசிக் கொண்டோம்

அடுத்து ஒரு சித்த மருத்துவர் சர்க்கரையாக இருக்கும் என்றதற்கு அதெல்லாம் சரியாகவே இருக்கிறது என சமாளித்தோம் பேச்சளவில்

குளிர் காலம் குடிக்கும் நீர் அதிகமாக குடிப்பதால் சிறு நீர் அதிகமாக வெளியாகிறது என அதையும் மறுத்து விட்டோம்,


Related image

முன் பின் செத்திருந்தால் தான் சுடுகாடு தெரியும் என்பது போல சர்க்கரை வியாதி பற்றி நாம் கேள்விப் பட்டிருப்பதுண்டு ஆனால் அனுபவித்ததில்லை எனவே தெரியாது...

ஆனால் நமது பெற்றோர்களுக்கு இருந்தாலே கூட போதும் நமக்கும் வரலாம் என செவிலியர்கள் கூற்று.

எனது துணைவியிடம் நீ கொடுத்த மதிய சாப்பாடு அதிகம் இருந்தது பற்றி அப்போதே சொன்னேன் அதை எமது கல்லூரி குளத்து மீன்களுக்கு இட்டேன் என்றெல்லாம் சொன்னதற்கு பதில், நீங்கள் சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக் கிழமையிலும் கூட நீங்கள் நடைப்பயிற்சி செய்யாமல் இணையத்தில் அமர்ந்திருந்தது காரணம் என்று வந்தது...

ஆக நோயைக் கண்டறிவதே ஒரு வாய்ப்பு, அதன் பின் அதை சுலபமாக வெட்டிச் சாய்த்து விடலாம் என்பது எனது கருத்து.


பெற்றோர்களுக்கிருந்த இந்த நோய் வளையத்துள் எல்லாம் நாம் போகவே கூடாது ,சர்க்கரை வியாதி மட்டும் வரவே கூடாது அது பெரும்பிசாசு என்று சொல்லி வந்தேன் அந்த பிசாசு என்னையும் பிடித்து விட்டது. இது போன்ற வலையத்தில் சிக்காமல் மீளவே முடியாதோ....மகனே நீயாவது எட்டிப் போ கிட்ட வராமல் இந்த வட்டத்துள் எல்லாம் சிக்காமல்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, January 8, 2017

தமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு + Kavignar Thanigai.

தமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு- KAVIGNAR THANIGAI.
_______________________________________________________________________________

Image result for RELATIONS collapses in India

சினிமாச் சிறைக்குள்ளே சிக்கி இருந்த நாடு தமிழ் நாடு
ரஜினிகாந்தை வெற்றிடம் நிரப்ப அழைக்குது பாரு
எம்.ஜி.ஆரைப் பார்த்து விசிலடிச்சது நம்ம கூட்டங்க‌
ஜெயலலிதாவுக்கு கிரீடம் வைச்சதும் நாமதானுங்க  ‍....(சினிமாச்...)

Related image


சசிகலாவை சின்னம்மாவாக்கியதும் அவங்கதானுங்க‌

சினிமாவுக்கு சண்டையிட்டா நல்ல பேருங்க‍ _ இங்க‌
 நெஜமாலும் சண்டை போட்டா ஜெயிலுதானுங்க..
சினிமாவுல‌ ஸ்டைலு செஞ்சா சூப்பர்மேனுனுங்க‌
யதார்த்ததில் நல்லது செஞ்சா பாப்பர்தானுங்க!         ....(சினிமாச்...)

வசனம் பேசி வசனம் எழுதி கலைஞர் வந்தாரு_ இங்க‌
வாரிசுங்க வந்ததுமே வளைஞ்சுப்புட்டாரு
இலஞ்சம் வாங்கி திருடிதாங்க நாட்டை ஆளுறான் _ இங்க
சாரயக்காரன் தாங்க கோட்டை போகிறான்               ...(சினிமாச்..)

கோணல் புத்திதாங்க இங்க கொடியை ஒசத்துது
குரங்கு போல தாவி யிங்கே சேட்டை செய்யுது
மானங்கெட்ட பிழைப்புதாங்க மனுசன் நடத்தறான் _‍இங்க‌
மசிரு கூட உசந்து விட்டா வீரம் பேசுது...             ...(சினிமாச்...)

சாதிமத பேதமில்லை சாசனம் சொல்லும்  _ இங்கு
தேர்தலொன்று வந்து விட்டா மெஜாரிட்டி செல்லும்
குடி கெடுக்க அரசியலு அடிவரை செல்லும் _ இங்கு
கோர்ட்படி ஏறிவிட்டா பணமொன்றே வெல்லும்........(சினிமாச்...)

சட்டம் நீதி நேர்மையெல்லாம் பேருலதாங்க  _ இங்க‌
நியாயம்னு பார்க்கப் போனா சைபர்தானுங்க‌
திட்டம் போட்டு திட்டம் போட்டு கடனை வாங்கரறான் _ இங்க\
வட்டம் போட்டு சுரண்டி திங்க கமிஷன் போடறான்     ..(சினிமாச்...)


Related image

ரொக்கமில்லா வர்த்தகமுன்னு மோடி சொன்னாரு_ இங்க‌
ரொக்கமில்லாம போய்ட்டு வந்தா வெக்கமே மிஞ்சும்
மிசினுக்கு எல்லாம் எல்லா நாளும் சொல்லா லீவுதான்
பேங்க் மேனஜரும் கூட்டுக் களவில பங்கு போடவே... (சினிமாச்...)

ஒளிஞ்சு கெடக்கும் உண்மையெல்லாம் வெளியில வரனும் _ இங்க‌
ஓஞ்சு போன தியாகமெல்லாம் மறுபடி எழனும்
குவிஞ்சு கெடக்கும் கந்தல் யாவும் சுட்டுப் பொசுக்கணும்,_ இங்க‌
குன்று போல நாம் எல்லாம் நிமிந்து நடக்கனும்!...((சினிமாச்...)

ஊருக்குப் பத்துப் பேரா ஓடி வாங்களேன்
உலகுக்கால நாட்டுக்காக உங்களையே பூத்து தாங்களேன்
வேருக்கு நீரூற்றி பாத்தி கட்டுவோம் _ இங்க‌
வெறும் பயலுங்க எல்லாரையும் சேர்த்துக் கட்டுவோம்....(சினிமாச்...)

        எப்போதோ கவிஞர் தணிகையால் எழுதப்பட்டு நோட்டீஸ் அடித்து விநியோகிக்கப்பட்டதில் ஒர் நோட்டீஸ் இப்போது கண்ணில் பட அதில் ஒரு இடைச் செருகலுடன் இந்தப் பதிவுக்காகிறது.

Image result for jallikattu marina beach crowd
     

ஜல்லிக்கட்டு வேண்டி வாசன் மதுரையிலும் டி .ராஜேந்தர் கரடிக்கல் மதுரையிலும் இலட்சிய இளைஞர்கள் சென்னை மெரீனாவிலும் எழுச்சி பெற்று கோரிக்கை நோக்கி கோஷம் எழுப்பும்போது இப்படியும் ஒரு கோஷம் மறுபடியும் பூக்கும் தளத்தில் ஏற்கெனவே எழுதியதை பதிவு இட ஆர்வமாகியது...

ஒரு பக்கம் இரண்டு  எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பார்க்கு நியாய விலைக்கடை அரிசி இனி நிறுத்தம் என்றும், மத்திய அரசின் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை நடவடிக்கையின் ஒரு நடவடிக்கையாக வங்கியில் பணம் வைத்திருப்பார் மீது இனி வரி கட்டச் சொல்லிப் பாயும் என்று நாட்டின் நிதி மந்திரி சொல்லியுள்ளதும் பாதிப்பு ஏற்படுத்தும் சமுதாயத்தில்...இன்னும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Image result for jallikattu marina beach crowd

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.







Saturday, January 7, 2017

மோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை

மோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை

Image result for no cheque book no atm no money no service in banks in india


தப்பில்லாமல் அச்சடிக்க வேண்டும் அல்லவா பணத் தாள்களை, காசோலைகளை, வரைவோலைகளை அச்சுக் கலை என்பது அரிய கலையாயிற்றே....அதற்கு கால அவகாசம் சற்று அதிகம் பிடிக்கும்தான் அதெல்லாம் மோடிக்குத் தெரிய வாய்ப்பில்லை...உடனடியாக எல்லாமே கேட்டால் அந்த தேவைக்கான ரொக்கம், காசோலை புத்தகம், எல்லாம் மோடி மஸ்தான் வித்தையிலா விளைந்து விடும்...? வெட்கம்...பழைய 100 ரூ பணத்தாள் எவ்வளவோ பரவாயில்லை இப்போது அச்சடித்துள்ள புதிய 500, 2000 தாள்களுக்கு பதிலாக...

Image result for no cheque book no atm no money no service in banks in india

வங்கிக்கு சென்றிருந்தேன். அவர்களுடைய டிவிஷனிலிருந்து மேலாண்மை பிரிவிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது 2ஆம் தேதியே.உங்களுக்கு காசோலை புத்தகம் கிடைக்க தயார் நிலையில் உள்ளது வங்கிக் கிளையை அணுகச் சொல்லி, ஆனால் இன்று 7 ஆம் தேதி சென்று கேட்டால் இன்று விட்டு விடுங்கள் வேறு எப்போதாவது வாருங்கள், ஒரு மாதமாவது ஆகும், அப்படித்தான் செய்தி அனுப்புகிறார்கள், கூரியர் வரவில்லை, தேடிப் பார்க்க வேண்டும், இன்று விட்டு விடுங்கள் ப்ளீஸ் என்கிறார்கள் மருத்துவ சேவைப் பணியில் உள்ள எனக்கோ முதல் சனிக்கிழமை மட்டுமே விடுமுறை மற்ற நாட்கள் எல்லாம் வேலை நாட்கள் வங்கிக்கு செல்ல முடியாது. ஏன் எனில் உங்களுக்கேத் தெரியும் 2 ஆம் 4 ஆம் சனிக்கிழமை அவர்களுக்கு விடுமுறை,நமக்கு வேலை நாள்தான்,ஏ.டி.எம்கள் இன்னும் சாதாரண நிலையை எட்டவில்லை.எல்லாம் 24 மணி நேரமும் பூட்டியே கிடைக்கிறது ஒரு காலத்தில் 24 நேரச் சேவை என்று வைத்த விளம்பர போர்டு வாய் கிழிய இளித்தபடி கிடக்க...
Related image


மேலும் அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை வந்து விடும் அவர்களுக்கும் விடுமுறை நமக்கு சனி, ஞாயிறு, திங்கள் 3 நாளும் விடுமுறை, அரசு விடுமுறையான குடி அரசு தினம் போன்றவை அவர்கள் நமக்கு குடிமகன்களுக்கு யாவர்க்கும் விடுமுறை இப்படி இருக்க... கட்ட வேண்டிய கடனை, கட்டணத்தை பெற்றோர் கட்டித் தானே ஆக வேண்டும், கணக்கு மாறுதல் செய்து கொள்ளலாம், நெட் பேங்கிங் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வது காதில் விழுகிறது. ஆனால் அவை யாவுமே அந்தளவு இன்னும் எல்லா இடங்களிலும் சென்று சேரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இது போல பல வாடிக்கையாளர்கள் நெருடல்களை சுமந்திருந்தார்கள்,அந்த அலுவலரும் நல்ல மென்முகம் உடைய பணியாளர்தான், ஆனால் அவரால் சமாளிக்க முடியவில்லை சற்று தடித்த வார்த்தைகளை பயன்படுத்துமளவு அவருக்கும் முடியாமை....எல்லாமே மோடி மஸ்தான் விளைவு.

எப்படியோ நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது பணத்தை எடுக்க காத்திருக்காமல் இருந்தால் சரி என்ற மனநிலை பணம் கிடைத்தார்க்கு, காசோலை இருந்தால் கல்லூரிக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகை கேட்பு வருவதற்குள் தயார் நிலையில் இருக்கலாமே என்ற தற்காப்பு உணர்வு நமக்கு...
Related image


ஆனால் அன்பர்களே நான் இன்னும் கண்கூடாக கண்டு வருகிறேன், ஓமலூர், வேம்படிதாளம், நல்லாம்பள்ளி போன்ற சில புறநகர் பகுதிகளில் அல்லது செமி அர்பன் ஏரியாக்களில் அல்லது கிராமங்களில் ஒரே ஒரு வங்கி இருக்கும் இடங்களில் எல்லாம் நீண்ட வரிசை காத்திருப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது... வருத்தப்பட வேண்டியதாயும் அனுதாபப் படவேண்டியதாயும்.

ஒரு நண்பர் எழுதுகிறார்,சென்ற இடமெல்லாம் ரொக்கம் இல்லையெனில் நாறி நட்டாற்றில் அனாதையாக விடப் படுவோம் என்று, ஸ்வைப் வைத்து ஸ்கிராச் செய்தால் இவர் கணக்கில் குறைந்து விடுகிறதாம், அவர்கள் கணக்கில் ஏறாமல் அவர்கள் பணம் ரொக்கம் கேட்கிறார்களாம், நல்ல வேளை தயாராய் எடுத்துச் சென்று இருந்ததால் தப்பித்தேன் என்கிறார், வங்கி மேலாளரைக் கேட்டால் அந்தப் பணம் உங்கள் கணக்கிற்கு வரும் அனால் இப்போது வராது சில பல நாட்கள் ஆகும் என்கிறாராம்.

நிலை இப்படி எல்லாம் இருக்க எனக்கு காரசாரமாக எழுத மனமில்லை. மத்திய, மாநில ஆட்சி, நிலவரம், சசி மோடி  சேகர் ரெட்டி போன்ற ஆட்கள், வங்கித் திருடர்கள் மேலாளர்களாய் இருந்தவர்கள்,இடைத்தரகர்கள்,ஓ.பி இவர்கள் பற்றி எல்லாம் சொல்ல எண்ணைல்லை அது பற்றி அதன் பக்கமே திரும்ப ஆர்வமில்லை. எனக்கு கிடைக்கும் நேரம் குறைவாகத் தெரிகிறது...உடல் பிணி சார்ந்து குடும்ப உறவுகள் பிரச்சனைகள் சார்ந்து,,, நிறைய நேரம், செலவாகிக் கொண்டு இருக்கிறது. எனவே இந்தக் காலக் கட்டத்தில் இவ்வளவுதான் முடிகிறது எனவே மிகக் குறைவான வருகையாளர்தான் எனது வலைப்பூவுக்கு வருவதை இந்த நாளடைவில் பார்க்க முடிகிறது...அது எனக்கும் வருத்தமே...தோனிக்கும் வயது ஏறிவிட்டது. நல்ல முடிவெடுத்து விட்டார். மாமனிதராகி விட்டார். அட எவ்வளவு ஆண்டுகள் தான் மனித உடல் நம்மோடு ஒத்துழைக்க முடியும்?

Image result for no cheque book no atm no money no service in banks in indiaRelated imageRelated image

மாலை 7 மணிக்கும் மேல் உடல் சோர்ந்து ரயில் பயணம் முடித்து பணி முடித்து வந்து ஏதோ என்னால் எழுத முடிந்தால் உண்டு , உறங்கிய நேரம் தவிர செய்து வருகிறேன்.

ஒத்துழைப்பை நல்குவார்க்கு நன்றியும் வணக்கமும்.

இவண்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
அன்புடன்.



Friday, January 6, 2017

அறிவியல் விந்தைக்குள் ஒளி(ர்)ந்திடும் மனித ஆற்றல்: கவிஞர் தணிகை

அறிவியல் விந்தைக்குள் ஒளி(ர்)ந்திடும் மனித ஆற்றல்: கவிஞர் தணிகை


Image result for isro 103 pslv - c37
103 செயற்கைக் கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி  சி 37 பிப்ரவரியில் விண்ணில் பாயும்,மனித உடலில் இது வரை தெரியாமல் இருந்த குடல் உறுப்பு அடி வயிற்றில் கண்டறிந்தது,விண்வெளி ஆய்வுக் கூடத்தை வியாபார நோக்கில் பயன்படுத்தல்,359 மில்லியன் ஒளி ஆண்டுக்கும் தொலைவில் கேலக்ஸி என்னும் நட்சத்திரத் தொகுதி,வானின் வடக்குப் பக்கத்தில் அதிகாலையில் ஒரு வால் நட்சத்திரத்தை தென் கிழக்கில் பார்க்கலாம், செவ்வாயில் 2030க்குள் குடியேற வீடு கட்ட ஆரம்பம், இப்படி அடுக்கடுக்கான அறிவியல் விந்தை செய்திகள் கணக்கிலடங்காமல் கொட்டிக் கொண்டிருக்கின்றன கடந்த இந்த 2 நாட்களில்.

Image result for isro 103 pslv - c37


எண்ணற்ற அறிவை பயன்படுத்தும் ஆற்றல் பெற்ற மனிதம் மேலும் மேலும் அறிவியல் அறிவுடன் வளர்ந்தபடியே இருக்கிறது.

இதை கடந்த இரண்டு நாளாகவே படிக்க படிக்க வியப்பெய்தினோம். இன்னும் மனித உடலைப் பற்றியே அதிகம் அதுவும் முழுதாக தெரியவில்லை என்னும் ஒரு அறிதலை இந்த குடல் உறுப்பு அடிவயிற்றில் கண்டறிந்தது நமக்கு கொடுக்க...

Image result for galaxy found 359 million light years away

359 மில்லியன் ஒளி ஆண்டுக்கும் அப்பால் உள்ள நட்சத்திரத் தொகுதியை கண்டிடும் மனித ஆற்றல், மேலும் செவ்வாயில் வீடு கட்டும் பணி ஆரம்பம்,
நமது தற்போது இருக்கும் விண்வெளி ஆய்வுக் கூடம் அதன் பயனை இழந்த பின் சீனாவின் விண்வெளி நிலையம் பயன்படும் என்றும் அதை விட வியாபார நோக்கத்தில் கூட தனியார் விண்வெளிக்கூடம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் இப்படி ஏராளமான அறிவியல் நடப்புகள்.

Image result for galaxy found 359 million light years away

இதை எல்லாம் பார்க்கும்போது இதை எல்லாம் படிக்கும்போது மனித ஆற்றலை கண்டு வியப்பதா, அல்லது மனிதம் எவ்வளவு மீச்சிறிது என எண்ணி அடங்குவதா என்ற கேள்விகள் ஒன்றுக்குள் ஒன்றாக...கலந்தே காணப்படுகிறது.

அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாட்டை விட மனித குலத்தை படிப்படியாக பல மடங்கு ஏற்றி வைக்கும் இது போல கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட மாமனிதங்களுக்கு நன்றி சொல்வோம் என்றும்.

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, January 2, 2017

அச்சமின்றி: கவிஞர் தணிகை

Image result for achamindri wiki

அச்சமின்றி: கவிஞர் தணிகை

30 டிசம்பரில் சென்ற ஆண்டில் வெளியான அச்சமின்றி ஒரு நல்ல படம்தான். பார்க்கலாம். கல்வி சார்ந்த முடங்கல்களை அலசுகிறது. சரண்யா அம்மா வேடம் விட்டு வில்லியாகி நீதிமன்றத்தில் சவால் விடுகிறார் சவுண்ட் பார்ட்டியாக...விஜய் வசந்த் என்னும் வசந்த் அன் கோ வசந்தகுமாரின் வாரிசு சினிமாவில் பிரபலமடைய புகழடைய இம்முயற்சி பயன் பட்டிருக்கிறது.

சமுத்திரக் கனி என்றாலே கல்வி ஏய்ப்பு, போராட்டம் என்ற முத்திரை குத்தப் பட்டு விட்டாலும் காரண காரியத்தோடு பொருள் பொதிந்த படம் என்பதால் பார்க்க முடிகிறது.

Image result for achamindri wiki

ஆரம்பத்தில் மந்திரியாக நடிக்கும் இராதா இரவியை நாம் அனைவரையும் போல சந்தேகிக்கிறோம். வில்லனாக. ஆனால் வில்லி சரண்யா கொஞ்ச நேரம் ஆனாலும் நல்ல நடிகையால் எந்த பாத்திரத்தை வேண்டுமானாலும் செய்ய முடியும் என ரா ரா சந்திரமுகி ஜோதிகா போல  பச்சைக்கிளி முத்துச்சரம் போல கடைசியில் வில்லியாகி தமது சினிமா கேரீரை முடித்துக் கொண்டது போல சரண்யா முடித்துக் கொள்கிறாரா, முகம் எல்லாம் முதுமை காட்டுகிறது அல்லது ஜோதிகா போல 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்பது போல திரும்பி விடுவாரா என்பதை பொறுத்துப் பார்க்கலாம்

கதைக்கு வருவோம்: சமுத்திரக் கனி மணமுடிக்கும் ஊமைப் பெண்ணை கொன்று விடுகிறார்கள், அந்த ஊமைப் பெண்ணின் தம்பி மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவரும் அடித்துக் கொல்லப் படுகிறார். தேர்வன்று கேள்வித்தாளை வெளியிடுவதிலிருந்து தடுத்து நிறுத்தும் தலைவாசல் விஜய் மாவட்ட ஆட்சித் தலைவர் கொல்லப் படுகிறார். நன்றாகப் படிக்கும் பிக் பாக்கெட் அடிக்கும் விஜய் வசந்தின் காதலியின் தெரிந்த பெண் முதல் மதிப்பெண் பெற வேண்டியவர் மருந்து குடித்து மருத்துவ மனையில் கிடக்க, காதலி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க, அவரையும் கொல்ல முயல...கொலைகாரக் கும்பலின் முக்கியக் குற்றவாளியின் பர்ஸை விஜய் வசந்த் அடித்துவிட அவரையும் கொல்லத் திட்டமிடுகிறது கூட்டம், நண்பராக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமுத்திரக் கனியை இடைஞ்சல் என என்கவுண்டர் செய்யத் துடிக்கிறார். இதில் இருந்து பிக்பாக்கெட் விஜய் வசந்த், சமுத்திரக் கனி, விஜய் வசந்த்தின் காதலி, சமுத்திரக்கனியின் டிரைவர் ஆகியோர் எப்படி தப்பித்து நீதியை நிலை நாட்டுகிறார்கள் என்பது கதை.

கடைசியில் சிறிது நேரம் ஆனாலும் வழக்கறிஞர் ரோகினி நன்றாக டயலாக் டெலிவரி செய்கிறார். இராதா இரவி வழக்கம் போல தமது பங்கை சிறப்பாக செய்து நமது சந்தேகம் போக்கி ஒரு நல்ல மந்திரியாக இருக்கிறார்.

ஆனாலும் எல்லாம் மக்களிடம் தாம் மடமை இருக்கிறது அதுதான் சரியான  அரசுப் பள்ளிகள் அமையாமைக்கும், தனியார் பள்ளிகள் எழுச்சிக்கும் காரணம் எனத் தெளிவாக விளக்கி இருக்கும் படம்.

Image result for achamindri wiki

ராஜபாண்டி பாண்டி ராஜை நினைவு படுத்துகிறார். வாழ்த்துகள். சிறிய அளவு பட்ஜெட் படமானாலும் கடைசி வரை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது. பிக்பாக்கெட் ரோல் செய்யும் விஜய் வசந்த் பணக்கார வீட்டுப் பையன் கதாநாயகனாக முயற்சித்திருக்கிறார் வாழ்த்துகள். ஆனாலும் என்னவோ ஒன்று குறைகிறது அது என்னவென்று அவர் பார்த்தறிந்து அடுத்த படத்திலிருந்து சரி செய்து கொண்டால் முத்திரை பதிக்கலாம். நூற்றுக்கு 40 கொடுக்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.