Sunday, January 8, 2017

தமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு + Kavignar Thanigai.

தமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு- KAVIGNAR THANIGAI.
_______________________________________________________________________________

Image result for RELATIONS collapses in India

சினிமாச் சிறைக்குள்ளே சிக்கி இருந்த நாடு தமிழ் நாடு
ரஜினிகாந்தை வெற்றிடம் நிரப்ப அழைக்குது பாரு
எம்.ஜி.ஆரைப் பார்த்து விசிலடிச்சது நம்ம கூட்டங்க‌
ஜெயலலிதாவுக்கு கிரீடம் வைச்சதும் நாமதானுங்க  ‍....(சினிமாச்...)

Related image


சசிகலாவை சின்னம்மாவாக்கியதும் அவங்கதானுங்க‌

சினிமாவுக்கு சண்டையிட்டா நல்ல பேருங்க‍ _ இங்க‌
 நெஜமாலும் சண்டை போட்டா ஜெயிலுதானுங்க..
சினிமாவுல‌ ஸ்டைலு செஞ்சா சூப்பர்மேனுனுங்க‌
யதார்த்ததில் நல்லது செஞ்சா பாப்பர்தானுங்க!         ....(சினிமாச்...)

வசனம் பேசி வசனம் எழுதி கலைஞர் வந்தாரு_ இங்க‌
வாரிசுங்க வந்ததுமே வளைஞ்சுப்புட்டாரு
இலஞ்சம் வாங்கி திருடிதாங்க நாட்டை ஆளுறான் _ இங்க
சாரயக்காரன் தாங்க கோட்டை போகிறான்               ...(சினிமாச்..)

கோணல் புத்திதாங்க இங்க கொடியை ஒசத்துது
குரங்கு போல தாவி யிங்கே சேட்டை செய்யுது
மானங்கெட்ட பிழைப்புதாங்க மனுசன் நடத்தறான் _‍இங்க‌
மசிரு கூட உசந்து விட்டா வீரம் பேசுது...             ...(சினிமாச்...)

சாதிமத பேதமில்லை சாசனம் சொல்லும்  _ இங்கு
தேர்தலொன்று வந்து விட்டா மெஜாரிட்டி செல்லும்
குடி கெடுக்க அரசியலு அடிவரை செல்லும் _ இங்கு
கோர்ட்படி ஏறிவிட்டா பணமொன்றே வெல்லும்........(சினிமாச்...)

சட்டம் நீதி நேர்மையெல்லாம் பேருலதாங்க  _ இங்க‌
நியாயம்னு பார்க்கப் போனா சைபர்தானுங்க‌
திட்டம் போட்டு திட்டம் போட்டு கடனை வாங்கரறான் _ இங்க\
வட்டம் போட்டு சுரண்டி திங்க கமிஷன் போடறான்     ..(சினிமாச்...)


Related image

ரொக்கமில்லா வர்த்தகமுன்னு மோடி சொன்னாரு_ இங்க‌
ரொக்கமில்லாம போய்ட்டு வந்தா வெக்கமே மிஞ்சும்
மிசினுக்கு எல்லாம் எல்லா நாளும் சொல்லா லீவுதான்
பேங்க் மேனஜரும் கூட்டுக் களவில பங்கு போடவே... (சினிமாச்...)

ஒளிஞ்சு கெடக்கும் உண்மையெல்லாம் வெளியில வரனும் _ இங்க‌
ஓஞ்சு போன தியாகமெல்லாம் மறுபடி எழனும்
குவிஞ்சு கெடக்கும் கந்தல் யாவும் சுட்டுப் பொசுக்கணும்,_ இங்க‌
குன்று போல நாம் எல்லாம் நிமிந்து நடக்கனும்!...((சினிமாச்...)

ஊருக்குப் பத்துப் பேரா ஓடி வாங்களேன்
உலகுக்கால நாட்டுக்காக உங்களையே பூத்து தாங்களேன்
வேருக்கு நீரூற்றி பாத்தி கட்டுவோம் _ இங்க‌
வெறும் பயலுங்க எல்லாரையும் சேர்த்துக் கட்டுவோம்....(சினிமாச்...)

        எப்போதோ கவிஞர் தணிகையால் எழுதப்பட்டு நோட்டீஸ் அடித்து விநியோகிக்கப்பட்டதில் ஒர் நோட்டீஸ் இப்போது கண்ணில் பட அதில் ஒரு இடைச் செருகலுடன் இந்தப் பதிவுக்காகிறது.

Image result for jallikattu marina beach crowd
     

ஜல்லிக்கட்டு வேண்டி வாசன் மதுரையிலும் டி .ராஜேந்தர் கரடிக்கல் மதுரையிலும் இலட்சிய இளைஞர்கள் சென்னை மெரீனாவிலும் எழுச்சி பெற்று கோரிக்கை நோக்கி கோஷம் எழுப்பும்போது இப்படியும் ஒரு கோஷம் மறுபடியும் பூக்கும் தளத்தில் ஏற்கெனவே எழுதியதை பதிவு இட ஆர்வமாகியது...

ஒரு பக்கம் இரண்டு  எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பார்க்கு நியாய விலைக்கடை அரிசி இனி நிறுத்தம் என்றும், மத்திய அரசின் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை நடவடிக்கையின் ஒரு நடவடிக்கையாக வங்கியில் பணம் வைத்திருப்பார் மீது இனி வரி கட்டச் சொல்லிப் பாயும் என்று நாட்டின் நிதி மந்திரி சொல்லியுள்ளதும் பாதிப்பு ஏற்படுத்தும் சமுதாயத்தில்...இன்னும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Image result for jallikattu marina beach crowd

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.2 comments: