Wednesday, August 23, 2023

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்: கவிஞர் தணிகை

 சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்: கவிஞர் தணிகை



விக்கிரம் சாராபாய் உயிர் கொடுத்து உருவாக்கிய இஸ்ரோவில்,அப்துல் கலாம்,மயில்சாமி அண்ணாதுரை,சிவன்,இப்போது வீர முத்துவேல் ஆகியோர் தமிழர்கள். தமிழும் தமிழர்களும் எப்போதும் உலகை வழி நடத்துவார்கள்.


ரஷியா நட்பு நாடாக இருந்த போதும் போட்டி நாடாக சந்திரனில் தென் துருவத்தில் கால் பதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை ஈட்ட முடியவில்லை


இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு நிகழ்வதை மாலை 6.04 மணியளவில் நாம் காணப்போகிறோம். இல்லையேல் 27ஆம் தேதிக்கும் நாம் தயார்தான்.


அறிவியல் சாதனைகள் நிகழும் ஒவ்வொர் நொடியும் பிரமிப்பூட்டும் நிகழ்வுதான் அதிலும் இயற்கையின் இயற் கையின் விளையாட்டு அற்புதங்கள் உண்டு.கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்தின் நிகழ்வு போல.


மெய்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நமது வாழ்வுத் தத்துவங்கள் சொல்லி நிற்பது வியப்புக்கு உரியது. சொல்லி சொல்லி மாளாதது. சந்திரன் பூமியை வெகுவாக பாதிக்கும் ஒரு துணைக் கோள். சொல்லத் தெரியாமல் அதன் பாதிப்புகளை வைத்து நமது முன்னோர் அதையும் ஒரு கிரகம் என நினைத்து நவகிரகங்களில் ஒன்றாக வைத்து வணங்கச் சொல்லி இருக்கின்றனர். பாலச்சந்திரன் என்பதும், சிவன் நிலவையும் கங்கையையும் தலையில் பிறைசூடியாக வைத்துள்ளான் என்பதும் கேள்விக்குரியதாக சிறுவர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டிய காலக் கட்டம்.


ஏதாவது ஒரு விடயத்தில் நமக்கு ஆர்வம் பற்று வேண்டும்... அப்படி இருந்தால் தற்கொலைகள் நிகழாது படிக்கச் சொன்ன காரணத்தால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்யச் செல்வதும் அதைவிட கீழ் வகுப்பு 7 ஆம் வகுப்பு என நினைக்கிறேன், ரிமோட் கன்ட்ரோல் உடைந்து போனதால் அக்கா தங்கைக்கு பிடுங்கும் போது சண்டையில் கீழ் விழுந்து உடைந்ததால் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்தபடி வாழ்வை  முடித்துக் கொண்ட நிகழ்வுகளும், தந்தையும், மகனும் நீட் தேர்வுக்காக மாய்வதும் அதே தமிழகத்தில் இருந்துதான் வீர முத்துவேல் என்னும் அறிவுச் சுடரும் இன்று சந்திராயன் 3 இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வீர நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.


பாரதி சொன்ன சேதுவை முன்னிறுத்தி பாலம் அமைப்போம் இன்னும் ஈடேறாக் கனவு

சிந்து கங்கை இணைப்பு நிகழ்ந்து காவிரி வரை தமிழ் நாடு வரை வராதாது இன்னும் கனவு


ஆனால் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் வெறும் 610 கோடி செலவில் ஈடேறிவிடும் உலகின் பெரும் நிகழ்வு... ஒரு சினிமாவை அதை விட அதிகம் செலவு செய்து தயாரித்து வரும் இந்த நாட்டில் இது மாபெரும் சாதனை...


எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது...எனவே தான் இந்த பதிவும் பகிர்வும்...சாதனையை நானும் பார்க்க அந்த நிமிடங்களுக்காக அந்த நொடிகளுக்காக இப்போதிருந்தே இல்லை இல்லை அந்த செய்தி கேள்விப்பட்ட அப்போதிருந்தே நான் தயாராக இருக்கிறேன்....நான் தயார் நீங்களும் தயார்தானே?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: இதை எல்லாம் கூட பார்க்க கொடுத்து வைக்காமல் 48 வயது இளைஞர் ஒருவர் இரு நாளுக்கு முன் மறைந்த செய்தி கேட்டேன்.அதிர்ச்சி அடைந்தேன் பெயர் : குரு நாதன். எனது தம்பி போன்றவர். அவருக்கு எனது நீங்கா அஞ்சலிகளையும் இந்த பதிவு உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment