Friday, August 4, 2023

வியப்பென ஒருவன் காண்கிறான்,வியப்பென ஒருவன் சொல்கிறான்,வியப்பென ஒருவன் கேட்கிறான்:கவிஞர் தணிகை.

 வியப்பென ஒருவன் காண்கிறான்,வியப்பென ஒருவன் சொல்கிறான்,வியப்பென ஒருவன் கேட்கிறான்:கவிஞர் தணிகை.



செவி வழிச் செய்தியாக நேற்று காலை இரு வேறு அதிர்ச்சிகளை ஒரு நண்பர் வழியாகப் பெற்றேன்.


1. ரூ.10,500 செலவில் வீடு தேடி பிணம் எரிக்கும் எந்திரம் வந்து சேர்கிறது என்றும் இது வரை அந்த சிறு கிராமத்தில் அப்படி 3 பேரின் சவங்கள் எரிக்கப் பட்டதாகவும். அதை வாகனத்தில் கொணர்ந்து 2 மணி நேரத்தில் 2 எரிவாயு உருளைகள் எரியும் செலவில் பணி முடித்து சாம்பலை கொடுத்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் இது நகர்ப்புற வாழ்வில் மிகவும் சுலபமாகவும் எளிதாகவும் நடந்து முடிந்து விடுகிறது என்றும் மேற்படி செய்திகள். அதை வேண்டுமெனும் இடத்தில் வைத்து செய்து கொள்வதாகவும் பெரிதாக துர்நாற்றமோ புகையோக் கூட வருவதில்லை எனவே அக்கம் பக்கத்தார் ஆட்சேபணைகளும் இல்லை என்பதும் கொசுறுச் செய்தி... மனிதம் மனித உடலை எரிக்கும் விடயத்தில் மிக முன்னேறி விட்டது...


2. அந்த மனிதர் சமூகத்தில் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் வாழ்ந்தவர், நிறைய சொத்து சுகம் உண்டு. ஊரில் ஆட்சி முறைகளில் கட்சியில் கூட சொல்லத் தக்க இடம்.சொன்ன சொல்லில் உறுதியாக நிற்பார், உதவி என்று தஞ்சம் அடைவார்க்கு பெரிதும் நம்பிக்கையுடன் உதவுவார் என்றெல்லாம் கேள்வி.ஒரு நாள் பேருந்தில் செல்கையில் அவர் இறப்புச் செய்தியை சொல்லியது கட்டப்பட்டிருந்த பதாகை. ஆனால் அத்துடன் மறந்திருந்தேன்

நண்பர் கூறினார்: அது எப்படி நிகழ்ந்தது தெரியுமா? அவர் அவர் வீட்டில் வண்டி செட்டில் ட்ராக்டருடன் யுத்தம் நிகழ்த்தியிருக்கிறார். மெக்கானிக்கை வரச் சொல்லாமல் இவரே,வண்டியை ஸ்டார்ட் செய்ய அந்த வண்டி இவரது உடலை இடுப்புக்கும் கீழே பாதிக்கும் மேல் எதுவும் இல்லாமல் அரைத்து தள்ளி விட்டதாம். ஒரே முறை அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறேன் ஒரு கோவில் நிர்மாண குட முழுக்கு விழாவுக்கு அழைக்க நண்பர்களுடன்.


3. முகலாயப் பேரரசர் ஹுமாயூன் மரணம் பற்றி செய்தியில்1. அவரது அணிந்திருந்த அங்கியில் அவரே கால் வைத்து படிகளில் உருண்டு விழுந்து இறந்ததாகவும் சுற்றிலும் உதவியாளர்கள் இருந்தும் பிடிக்க முடியாமல் காப்பாற்ற முடியாமல் போனது என்றும்,2. ஒரு நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை கையில் பிடித்தபடி இறாங்கிக் கொண்டிருக்கையில் தொழுகை அறிவிப்பு சத்தம் கேட்கவே அப்படியே மண்டியிட்டு அமர முயற்சி செய்து படிகளில் உருண்டு விழுந்து அடிபட்டதால் இறந்தார் என்றும் செய்திகள் உள்ளன...ஆச்சரியப்பட வைக்கும் மரணங்கள்...


வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்கிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான்...ஆன்மா உடல் விட்டுப் பிரிதலில்தான் எத்தனை இரகம்...ஆனால் பிறப்பதென்னவோ ஒரு சிறு கண்ணுக்கும் புலப்படா அணுவிலிருந்து விந்தணுவிலிருந்து...ஒரே வழியாக...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment