918986793967 குறித்துக் கொள்க இது ஒரு பக்கா ப்ராட் அன்ட் சீட்டிங் நெம்பர்: கவிஞர் தணிகை
This Number is not in functioning and exist our BSNL said like that.1.பி.எஸ்.என்.எல் என்ன பிடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை
அவசியமில்லாமல் மிஸ் யூ மிஸ் யூ கால் மீ என்ற எண் குறுஞ்செய்தியாக வருகிறது miss you/ miss you...
2. ரம்மி ஆடுங்கள் டேஷைப் பிடுங்குங்கள் என்றும் குறுஞ்செய்தி
3. நகைக் கடையிலிருந்து வெட்டிங் ஆல்பம் பர்ச்சேஸ் வருகை தர அழைப்பு வேறு
4. சார் வீட்டு மனை வாங்குங்க சார்
5. சார் சார் லோன் குடுக்கறோம் சார்... இப்படி... நிறைய முட்டாள் தனங்கள் தொலைத் தொடர்பில்...
6.உங்கள் கணக்கில் 93,990 ரூபாய் வரவு வைக்கப் பட்டுள்ளது. இணைப்புக்கு வாருங்கள் என்றும் உங்கள் ரம்மி ஆட்டத்தில் வென்றதற்கு என்றும்
எந்த வகையிலும் வங்கிஇணைப்பில் இல்லா செல்பேசி எண்களுக்கும் கூட உங்கள் வங்கிக் கணக்கு... எனவும்...
... துக்கிலியூண்டு, சில்லியூண்டு காசுக்கு வேண்டி நமது டேட்டாவை எண்களை எல்லாம் விற்கிற நாடு இது.
நமது எண்கள் எப்படி அந்த நாய்களுக்குப் போகிறது என்றுதான் தெரியவில்லை நிற்க
இனி சொல்வது மிகவும் தீவிரமானது அபாயகரமானது:
மேற் சொன்ன 91 8986793967 என்ற எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு,மற்றும் குறுஞ்செய்திகள்
1.உங்கள் வங்கியின் கணக்கு செயல்பாடு நிறுத்தப் பட்டு விட்டது...DE ACTIVATE (டி.ஆக்டிவேட்) நீங்கள் உங்கள் PAN பான் கார்ட் எண்களை இணைக்க வேண்டும் இந்த இணைப்புச் செயலிக்கு வாருங்கள்...நோ யுவர் கஸ்டமர் KYCஎன்ற விதியின் கீழ்...
2. உங்கள் YONO (Y0N0 They typed like this)யுனோ கணக்கு இடைநிறுத்தம்/நீக்கம் செய்யப்பட்டு விட்டது(suspended) சஸ்பெண்டட்) உங்கள் PAN பான் கார்டை விரைந்து இணையுங்கள் immediately (இம்மீடியட்லீ) தேங்க் யூ என வங்கியின் பேர் இட்டு:...... என்றும் ஒரு செய்தி link:https://rb.gy/5fynx7
3. அந்த எண்களை வேறு வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டேன்... அதன் விளைவாக அந்த திருட்டுப் பயல்கள் கேரள மற்றும் இந்தி வாடையில் மொழி விச முனந்ததை கண்டறிந்தேன்.
நீண்ட நாட்களாக வசவு அல்லது கெட்ட வார்த்தகளை பயன்படுத்தாமல் இருந்த இன்று அதை வெகுவாக பயன்படுத்தினேன்.
துணிச்சலுடன் அந்த எண்களை தொடர்பு கொள்ள வைத்திருக்கிறார்கள், சந்தேகம் வரும்போது எண்கள் இல்லை என்றும் அல்லது எடுக்காமலும் இருக்கிறார்கள்
CYBER CRIME PORTAL IS NOT USERS FRIENDLY TO RECEIVE COMPLAINTS சைபர் கிரைம் போர்ட்டல் புகார் பதிவுக்கு சென்றால் அது பயனாளிகளின் நட்பு முறையில் அல்லாமல் புகாரை எப்படி ஏற்காமல் இருக்கலாம் என்பதற்காகவே செயல்படும் செயலியாக காணப்படுகிறது.
முதலில் ப்ரொபைல், நமது விவரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டு அதன் பின் எல்லா தகவல்களையும் தந்தாலும் SUPPORT FILE சப்போர்ட் ஃபைல் இல்லாமல் ஏற்காமல் இருக்கிறது. WE TRIED AND TAKE SCREEN SHOT AND UTILIZED WITH MAIL AND FILE LINKS...
அதன் பின் புள்ளி சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்றே படுத்துகிறதே ஒழிய பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை.
இவை யாவும் தான் இந்த திருட்டுப் பயல்களுக்கு கை வரிசை காட்ட வழியாகிறது
தி.மலையில் இரவோடு இரவாக ஒன்றை முடித்து அடுத்தது என 4 வங்கிகளின் ATM ஏ.டி.எம்களை வெட்டி எடுத்து 20 இலட்சம், 33 இலட்சம் என கொள்ளை. அதில் 2 பாரதிய வங்கி SBI இந்தியாவின் பெரிய வங்கி. வெல்டிங் செய்து வெட்டி எடுத்து கொள்ளை அடிக்கும் வரை அலார வசதி இல்லையா? அதையும் வெட்டி விட்டார்களா? காவலாளி என்ன செய்தார்? காவல் துறை என்ன செய்கிறது போன்ற கேள்விகள் சாதாரண மனிதர்க்கு எழாமல் இல்லை.
இந்த வடக்கத்திப் பயல்கள் வக்கத்தப் பயல்களாக நல்லா வேலை செய்ய வரான்கள், என இங்கிருக்கும் சுயநலமிகள் பொது நலத்தை துளியும் நினைக்காமல் ஒத்து ஊதுகிறார்கள்
குற்றங்கள் பெருகி வருவது 1. மதுவால், 2. இந்த வடக்கத்திப் பயல்களால் மட்டுமே...
தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக் கட்டம் இது...
ஒன்று நூதன திருட்டு கொள்ளை
மற்றொன்று பகிரங்க கொள்ளை
இரண்டுக்குமே மக்களின் பணத்தை வங்கியில் இட்டே ஆக வேண்டும் எனச் சொல்லிய ஒன்றிய அரசே காரணம் என்று சொல்லலாம். எல்லாப் பணத்தையும் சுருட்டி கார்ப்ரேட் அதானி, அம்பானிகளுக்கு கடன் கொடுத்து வாராக் கடனாகச் சொல்லும் அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல வரவில்லை
எனது கணக்கில் பணமே இல்லை. அது வேறு...ஆனாலும் இந்த கொசுக்களை அடித்தே ஆக வேண்டும்... அதற்கு எனது கையும் உங்கள் கையும் இணைக்கவே இந்தப் பதிவு...எச்சரிக்கையாக இருங்கள் உங்களுக்கும் குறுஞ்செய்தியும் , போன் காலும், இணைப்புத் தூண்டல்களும் வரலாம்....மிகப்பெரும் ஆளுமைகள் கூட இந்த திருட்டுப் பயல்களிடம் ஏமாந்த கதையை நாம் செய்திகளாக கண்டதுண்டு எனவே தான் இந்தப் பதிவு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment