Sunday, February 12, 2023

நுப்பது அல்ல அது முப்பது (முப்பத்து= மூன்று பத்து)முப்பதின் பிரோஜனமல்ல பிரயோஜ‌னம்: கவிஞர் தணிகை

 நுப்பது அல்ல அது முப்பது (முப்பத்து= மூன்று பத்து)முப்பதின் பிரோஜனமல்ல பிரயோஜ‌னம்: கவிஞர் தணிகை



ஊடகவியலாளர்கள், தொ(ல்)லைக் காட்சி தொடர் நடிகர்கள்,மிகவும் பிரபலமானவர்கள் கூட. முக்கியமாக வசனங்கள் எழுதுவோர் மற்றும் பேச்சாளர்கள் கடைப் பிடிக்க வேண்டும் சரியான வெளியீடுகள் செய்வதற்காக பின் சொல்வதை கவனித்து சீர் படுத்தல் வேண்டியது அவசியம் . இங்கு இந்த இரண்டு இது போல எண்ணிறந்தன...


1. நுப்பது என்கின்றனர் முப்பது என்று சொல்வதற்கு மாறாக‌

 அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் அது மூன்று பத்தில் இருந்து விளைந்த சொல் முப்பத்து முப்பது என்பதை...


2. நிறைய பேர் பிரோஜனம் என்கின்றனர். பிரயோஜனமே இல்லை பயனே இல்லை என்ற பொருள் பட.

  பிரயோஜனம் என்பதை ப்ரோஜனம் என்றே சொல்லி வருவதை கவனித்து இருக்கிறேன்.


இது ஒன்றும் தூய தமிழ் சொல் அல்ல,  இருப்பினும் சொல்லாடல் மிகவும் தவறாகவே சென்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன்.


நான்ழகரம் பற்றியோ ளகரம் பற்றியோ கரம் பற்றியோ இங்கு ஏதுமே குறிப்பிடவில்லை.


நிறைய பதாகைகள், கூட்டங்கள் எல்லாவற்றிலும் சொல்லாடல்கள் மிகவும் தவறாகவே உருவாக்கப் படுகின்றன.

இங்கு யாம் சொல்லப் புகுவது ஆசிரியர்கள் , பெரியவர்கள், சமூக எடுத்துக் காட்டாக இருப்போர் யாவருக்கும் பொருந்தும்


இங்கு வேரே காய்ந்து, அழுகி, தமிழ் கருக ஆரம்பித்து விட்டது இனி கிளை, பூ, இலை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment